• திருவள்ளூர் மாவட்த்தில் ஒரு நாள் குர்ஆன் வகுப்பு

 • ஆகஸ்ட் 22 மதுரையில் நடைப்பெற்ற ஆலிம்கள் சங்கமம் பத்திரிகை செய்தி

 • அந்நுபுவ்வா மக்தப் பாடத்திட்டத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டுள்ளது

 • ஆகஸ்ட் 22 மதுரையில் நடைப்பெற்ற ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் 2 வது மாநில மாநாட்டில் கலந்து கொண்ட உலமாக்களில் ஒரு பகுதியினர்

 • டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தங்களின் ஆதரவை தெரிவித்தார்கள்

இந்த வார ஜும்ஆ உரை : yelunthu vaa boraduகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா: தெளிவுகளும்,தீர்வுகளும்!-2019

      ஃபாசிச பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு அதன் கோர முகங்களை மசோதாக்களின் வழியாக தொடர்ந்து அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது;பாஜக அரங்கேற்றுகிறது என்று சொல்வதை விட ஆர்.எஸ்.எஸ் தனது இலக்கை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இதற்கு முன்னால் தாக்கல் செய்யப்பட்ட முத்தலாக் மசோதா,காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்,NIA,UAPA போன்றவைகளில் சட்டத்திருத்தம் இவை அனைத்துமே முஸ்லீம்களை குறிவைத்தே இயற்றப்பட்டது என்பதை நாம் மறுக்க முடியாது.இதன் தொடர்ச்சியில் முஸ்லிம்களை இரண்டாந்தர குடிமக்களாகவும், உரிமைகள் அற்றவர்களாகவும், சுதந்திரமாக வாழ முடியாதவர்களாகவும் மாற்றியமைக்கும் முயற்சிக்கான ஒரு அடித்தளம்தான் இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதா. இந்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது என்பதைவிட இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்பதே நிதர்சன உண்மையாகும். இந்திய அரசியலமைப்பின் முக்கிய பிரிவு 14 இல் குறிப்பிடப்பட்டுள்ள அனைவருக்கும் சம உரிமை என்கின்ற அடிப்படைகளுக்கும், பிரிவு 21 இல் கூறப்பட்டுள்ள சர்வதேச சட்டங்களின் அடிப்படைகளுக்கும் எதிரானதாகும் இந்த மசோதா. அண்டை நாடுகளிலிருந்து இந்துக்களும் பிற மதத்தவர்களும் குடியேறுவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள், முஸ்லிம்களைத் தவிர என்கின்ற மிகவும் வெறுப்புணர்வுமிக்க வரையறையை கொண்டதாகவே இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது.முஸ்லிம் என்றால் குடியுரிமைக்கு அனுமதி இல்லை என்கின்ற மதரீதியான வேற்றுமை என்பது இந்திய அரசியலமைப்பின் அடித்தளத்தை ஆட்டி பார்க்கக்கூடிய அம்சமாகும். இது வேடிக்கை பார்க்கக்கூடிய விஷயம் அல்ல;இதன்மூலம் உண்டாகப் போகும் அபாயங்களை இஸ்லாமியர்களுக்கும், இந்திய மக்களுக்கும் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம். அதன் ஒரு பகுதியாகவே குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்த சுருக்கமான அறிமுகத்தையும்,அதற்கு முஸ்லிம் சமூகம் முன்னெடுக்க வேண்டிய தீர்வுகளையும் பரஸ்பரம் உணர்த்தி கொள்வதே இந்த ஜும்ஆ உரையின் நோக்கமாகும். குடியுரிமை சட்டத் திருத்த மசோதா (citizenship amendment Bill)ஓர் அறிமுகம்! குடியுரிமைச் சட்டத்திருத்தம் 2019 அப்பட்டமான,அரசியலமைப்பிற்கு விரோதமான ஒரு சட்டம்.ஒரு நாடு தன் நாட்டின் குடிமக்களாக யார் இருக்க முடியும்? என்பதை வரையறுப்பதன் மூலம் தன்னை வரையறுத்துக் கொள்கிறது. ஏனென்றால் உண்மையில் குடியுரிமைதான் உரிமைகளைப் பெறுவதற்கான அடிப்படையாகும். இந்தியாவைப் பொறுத்தமட்டில் அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட1950 ஆம் ஆண்டிலேயே குடியுரிமை சட்டங்களும் வரையறுக்கப்பட்டுவிட்டன. குடியுரிமையைப் பற்றிய பிரிவு 2 இந்திய நிலப்பரப்பில் வசிப்பதன் அடிப்படையில் குடியுரிமை வழங்குகிறது.அரசியல் சட்டத்தின் பிரிவு 6 ன்படி பாகிஸ்தானிலிருந்து இந்திய நிலப்பரப்பிற்கே குடிபெயர்ந்தவர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டது.மதம் குடியுரிமை வழங்குவதற்கான ஒரு காரணியாக இருக்கவில்லை என்பது இதில் பளிச்சென்று விளங்கும். அதேசமயம் இந்திய அரசியலமைப்பு சட்டம் குடியுரிமையை வழங்குவது மற்றும் குடியுரிமையைப் பறிப்பது குறித்த சட்டமியற்ற நாடாளுமன்ற உரிமையை அங்கீகரித்திருந்தது.இதன் தொடர்ச்சியாகவே நாடாளுமன்றம் குடியுரிமைச் சட்டம் 1955ஐ இயற்றியது. அதிலும்கூட மதம் குடியுரிமை வழங்குவதற்கான ஒரு காரணியாக இல்லை. இதன் அடிப்படையிலேயே தற்போது பாஜக அரசும் பாராளுமன்றத்தின் வழியாக குடியுரிமைச் சட்ட திருத்தங்களை மாற்றுவதற்கு முயல்கிறது. இந்த மசோதாவில் பெரும்பான்மையான கேள்விகளும், விவாதங்களும் மதச்சார்பற்ற அரசியல் அமைப்பைக் கொண்ட இந்தியா போன்ற நாடு குடியுரிமை வழங்குவதற்கு மதத்தை அடிப்படையாக கொள்ளலாமா? மதச்சார்பின்மை அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கூறுகளில் ஒன்று என பல்வேறு தீர்ப்புகளில் அறுதியிட்டுக் கூறப்பட்டுள்ளது. அடிப்படையான இந்த விஷயத்துடன் அரசியல் சாசனத்திற்கு விரோதமான வேறுபல அம்சங்களும் இம் மசோதாவில் நிறைந்து கிடப்பதைக் நம்மால் காண முடிகின்றது.நாடுகள் மற்றும் குழுக்கள் சம்மந்தமான இந்த மசோதாவின் வகைப்பாடு சந்தேகத்திற்கு இடமானது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தை இணைப்பதற்கும், மற்ற அண்டை நாடுகளை விட்டுவிட்டதற்குமான அடிப்படை தெளிவற்றது.மேற்கண்ட மூன்று நாடுகளிலும் அரசில் மதங்கள் இருக்கிறது என்ற காரணத்தால் மதச் சிறுபான்மையினரை பாதுகாப்பதற்காக இம்மசோதா என்று சொல்லப்பட்டிருக்கிறது.இந்தக் காரணத்திற்கு எந்த வலுவும் இல்லை. பிறகு ஏன் பூட்டான் இந்தப் பட்டியலில் இல்லை.அது இந்தியாவின் அண்டை நாடு. வஜ்ராயனா புத்த மதத்தை தனது அதிகாரப்பூர்வ மதமாக ஏற்றுக் கொண்ட நாடு. இது ஏன் இந்தப் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளது. உண்மையில் பூடானிலுள்ள கிறித்தவர்கள் தங்கள் வீடுகளுக்குள் தனிமையில்தான் வழிபட முடியும். பூடானைச் சேர்ந்த பல கிறித்தவர்கள் இந்தியாவில் எல்லைப் பகுதியில் இருந்தால் ஒரு தேவாலயத்தில் வழிபாடு செய்வதற்காக இந்தியாவிற்கு வந்து செல்கிறார்கள்.ஆனால், அவர்களுக்கு குடியுரிமைச் சட்ட மசோதாவின் அடிப்படையில் இந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும், மதச் சிறுபான்மையினர் என்ற காரணத்திற்காக துன்புறுத்தலுக்கு அண்டை நாடுகளில் உள்ளாகிறார்கள் என்றால் இலங்கை ஏன் இதில் சேர்க்கப்படவில்லை?அது புத்த மதத்தினர் பெரும்பான்மையாக உள்ள நாடு. தமிழ் இந்துக்கள் துன்புறுத்தப்படுவது அந்த நாட்டின் வரலாறாக இருக்கும் போது அந்த நாடு ஏன் சேர்க்கப்படவில்லை? மியான்மர் ஏன் சேர்க்கப்படவில்லை? ரோகிங்கியா முஸ்லீம்களுக்கு எதிராக அந்த நாடு பல்வேறு கொடுமைகளை நிகழ்த்தியிருக்கிறது. அந்த மக்களில் பலர் இந்தியாவில் அகதியாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவு பாதிப்புக்குள்ளான அவர்கள் ஏன் சேர்க்கப்படவில்லை? குடியுரிமைச் சட்டத்தில் மூன்று நாடுகள் மட்டும் சேர்க்கப்பட்டிருப்பது நியாயமற்றது. இறை நம்பிக்கை அற்றவர்கள் இந்தச் சட்டத்தின் அடிப்படையில் குடியுரிமை பெற தகுதியற்றவர்கள் என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும். இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜைனர்கள், பார்சிக்கள் மற்றும் கிறித்தவர்கள் ஆகிய ஆறு மதப் பிரிவினருக்கு மட்டும் மதச் சிறுபான்மையினர் என்ற அந்தஸ்து அளித்து குடியுரிமை பெற வாய்ப்பளிப்பது கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியதாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவு எந்தவொரு மனிதனுக்கும் சட்டத்தின் முன் சமத்துவத்தையும்,பாதுகாப்பையும் இந்திய மண்ணுக்குள் மறுப்பதை முழுமையாக தடுக்கிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள மிகத் தீவிரமான பொருத்தமின்மைகளின் காரணமாக இந்தச் சட்டம் ஒரே மாதிரியான மனிதர்களுக்கு ஒரே மாதிரியான பாதுகாப்பு அளிப்பதிலிருந்து தவறுகிறது என்பதை யூகிப்பது கடினமல்ல. தன்னை மியான்மர் அரசாங்கத்தின் துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக இந்திய எல்லைக்குள் வந்தவர்கள் குடியுரிமை பெறும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களாகவும்,அதேசமயம் நேரடியான எந்த மதத் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகாமல் பொருளாதார காரணங்களுக்காக மட்டும் இந்தியாவிற்குள் வந்தவர்களுக்கு மதத் துன்புறுத்தல் காரணமாக குடிபெயர்ந்தவர்களாகக் கருதி குடியுரிமை வழங்குவதை வேறெப்படி விளங்கிக் கொள்ள முடியும்? இதேபோன்று யாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக தோணிகள் மூலம் இலங்கையில் அட்டூழியங்களுக்குப் பயந்து வந்த தமிழர்கள் தொடர்ச்சியாக சட்டவிரோத குடியேற்றக்காரர்களாகவும் ஒருபோதும் குடியுரிமை பெற வாய்ப்பில்லாதவர்களாக ஆக்கப்படுவதையும் எப்படிப் புரிந்து கொள்வது? இதேபோன்று ஏராளமான உதாரணங்களைக் குறிப்பிட முடியும். இந்தச் சட்டம் எந்த அளவிற்கு தானடித்த மூப்பாக கொண்டுவரப்பட்டிருக்கிறது என்பதற்கு. இதேபோன்று இந்திய குடியுரிமை பெறுவதற்கு இந்தியாவில் 11 ஆண்டுகள் தொடர்ந்து இருந்திருக்க வேண்டும் என்பது தற்போது 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டிருக்கிறது அப்பட்டமான சூழ்ச்சியாகும். குடியுரிமை திருத்தச் சட்டம் எந்த அரசியலமைப்பு தர்க்கத்திற்கும் உட்படாதது. ஆனால், அதற்கு அரசியல் ரீதியான கெட்ட உள்நோக்கம் இருக்கிறது என்பது தர்க்க ரீதியாக பொருந்திப் போகிறது. சட்ட ரீதியாக இந்துக்களுக்கு முன்னுரிமை அளித்து குடியுரிமை வழங்குவது இந்தியாவை இந்து நாடாக மாற்றுவதற்காக முயல்வதாகும். இதுதான் இந்தியாவை ஹிந்து ராஷ்டிரமாக மாற்றுவதற்கான பிள்ளையார் சுழியாகும். இந்தியர்களுக்கான நாடாக இந்தியா இருக்க வேண்டுமென்றால் அதாவது இந்து ஆப்கானியர்கள், இந்து பாகிஸ்தானியர்கள், இந்து வங்காள தேசிகள், இந்து ரஷ்யர்கள், இந்து அமெரிக்கர்கள் ஆகியோருக்கான நாடாக இந்தியா ஆகிவிடக் கூடாது என்றால் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை இந்திய மக்களும், அனைத்து அரசியல் கட்சிகளும் முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். இந்த சட்டத்தை அப்பட்டமான அரசியல் சட்டமீறல் என்கின்ற அடிப்படையில் இம்மசோதாவை நீதிமன்றம் முழுமையாக நிராகரிக்க வேண்டும். இல்லையேல் இது போன்ற வரம்பற்ற மசோதாக்கள் முடிவாக இல்லாமல் ஆரம்பமாக மாறிப்போகும்.காலப்போக்கில் இதுபோன்ற மசோதாக்களே இந்திய அரசியலமைப்பிற்கு சமாதி கட்டும் வேலையைச் செய்துவிடும். தற்போது முஸ்லிம்கள் முன்னெடுக்க வேண்டிய தீர்வுகள் என்ன? அநீதம் நடைபெறும்போது மௌனம் கூடாது. நபி ஸல் கூறினார்கள்; சத்தியத்தை ஒருவன் அறிந்திருக்கும் நிலையில் மக்களின் மீதுள்ள பயம் அவனை சத்தியத்தை சொல்வதிலிருந்து தடுத்துவிட வேண்டாம். இந்த நபிமொழி சம காலத்திற்கு தொதுவான பல்வேறு கருத்துக்களை நமக்கு உணர்த்திக் காட்டுகின்றது. அதாவது ஒருவன் சத்தியத்தை அறிந்த நிலையில் மௌனம் காத்தால் அது அவனது ஆன்மாவை பலவீனமடையச் செய்துவிடும்;மரணத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்தும்;உலக ஆசையை அதிகரிக்கச் செய்யும்;படைப்புகளுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும்; பிறருக்கு செய்ய வேண்டிய கடமைகளில் குறைவு உண்டாக்கும்;தன் அருகாமையில் உள்ளவருக்கு குற்றமிழைக்கும் சூழலை உண்டாக்கும். இதனால்தான் முதல் கலீபாவான அபூபக்கர்(ரலி)அவர்கள் கிலாபத் பொறுப்பை ஏற்றவுடன் மக்களிடம் பின்வருமாறு அறிவுறுத்தினார்கள்; மக்களே!நான் உங்களுக்கு பொறுப்பாளி ஆக்கப்பட்டுள்ளேன்;  நான் உங்களில் சிறந்தவரெல்லாம் இல்லை; எனவே என்னிடம் நலவானதைக் கண்டால் எனக்கு உதவுங்கள்; தீய விஷயங்களை என்னிடம் கண்டால் என்னை தடுத்து நிறுத்துங்கள்; உங்களில் உடலால் பலவீனமானவரும் சத்தியத்தை நிலைநிறுத்த முன்வரும் பட்சத்தில் அவர் பலசாலி தான்! உங்களில் உடலால் பலசாலியான ஒருவர் சத்தியத்தை விட்டும் விலகிச் சென்றால் அவர் பலவீனமானவரே! கலீஃபா அபூபக்கர்(ரலி)அவர்களின் அற்புதமான இந்த வரிகள் அநீதங்களைக் கண்டு ஒருபோதும் மௌனமாக இருந்துவிடக்கூடாது என்பதை அழுத்தந்திருத்தமாக உணர்த்தி காட்டுகின்றது அநீதங்களை தடுக்காவிட்டால் பூமியில் குழப்பங்கள்தான் நிகழும் என்பதை திருமறை குர்ஆன் நமக்கு எடுத்துக் கூறுகின்றது; فَهَزَمُوْهُمْبِاِذْنِاللّٰهِ ۙوَقَتَلَدَاوٗدُجَالُوْتَوَاٰتٰٮهُاللّٰهُالْمُلْكَوَالْحِکْمَةَوَعَلَّمَهٗمِمَّايَشَآءُ ‌ وَلَوْلَادَفْعُاللّٰهِالنَّاسَبَعْضَهُمْبِبَعْضٍلَّفَسَدَتِالْاَرْضُوَلٰـکِنَّاللّٰهَذُوْفَضْلٍعَلَىالْعٰلَمِيْنَ‏ இவ்வாறு இவர்கள் அல்லாஹ்வின் (அருள்மிக்க) அனுமதி கொண்டு ஜாலூத்தின் படையை முறியடித்தார்கள்; தாவூது ஜாலூத்தைக் கொன்றார்; அல்லாஹ் (தாவூதுக்கு) அரசுரிமையையும், ஞானத்தையும் கொடுத்தான்; தான் விரும்பியவற்றையெல்லாம் அவருக்குக் கற்பித்தான்; (இவ்விதமாக)அல்லாஹ் மக்களில் (நன்மை செய்யும்) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு, (தீமை செய்யும்) மற்றொரு கூட்டத்தினரைத் தடுக்காவிட்டால், (உலகம் சீர்கெட்டிருக்கும்.) ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் மீது பெருங்கருணையுடையோனாக இருக்கிறான். (அல்குர்ஆன் : 2:251) நபி ஸல் அவர்களுடைய பிரபலமான நபிமொழி இங்கே நினைவுகூரத் தக்கதாகும். உங்களில் ஒருவர் தடுக்கப்பட்ட ஒரு செயலைக் கண்டால் தனது கரத்தால் அதைத் தடுக்கட்டும்;அதற்கு அவர் சக்தி பெறாவிட்டால் தனது நாவால் அதனை தடுக்கட்டும்;அதற்கும் அவர் சக்தி பெறாவிட்டால் தனது உள்ளதால் அதனை வெறுக்கட்டும்;இதுவே ஈமானின் மிகத் தாழ்ந்த நிலையாகும் என விவரித்தார்கள் ஏந்தல் நபி ஸல் அவர்கள். அநீதங்களை இல்லாமலாக்க அர்ப்பணிப்புகள் மிகவும் அவசியமானது; அற்பணிப்பு மனப்பான்மை உருவாக வேண்டுமெனில் முதலில் அநீதங்கள் நிகழுவதை வெறுக்க வேண்டும்;அடுத்து அவை நிகழாமல் தடுப்பதற்கான எல்லா பலங்களையும் நம்மிடம் உருவாக்க வேண்டும்;அதன்பிறகு அநீதங்களை எதிர்த்து நிற்கும் ஆற்றலை முழுமையாக பெற்றுக் கொள்ள முடியும். அநீதங்களுக்கு எதிரான போராட்டம் என்பது பிறரை செயல்படுத்துவதற்காக மட்டுமல்ல;நம்மை சார்ந்தவர்களையும், நமது வளங்களையும் தற்காத்துக் கொள்ளவே! குறிப்பாக நமது வாழ்வாதாரங்களை வல்ல இறைவன் நிர்ணயித்திருக்க அவற்றை தகர்க்கும் விதத்தில்,நீ இங்கே வாழ வேண்டும்;வாழக்கூடாது என்பதை வலியுறுத்தக்கூடிய "குடியுரிமை சட்டத் திருத்த மசோதா" வை எதிர்ப்பது அதிமுக்கிய கடமையாகும். திருமறைக் குர்ஆன் அதனை வலியுறுத்துகின்றது; وَضَرَبَاللّٰهُمَثَلاًرَّجُلَيْنِاَحَدُهُمَاۤاَبْكَمُلَايَقْدِرُعَلٰىشَىْءٍوَّهُوَكَلٌّعَلٰىمَوْلٰٮهُۙاَيْنَمَايُوَجِّهْهُّلَايَاْتِبِخَيْرٍ‌ هَلْيَسْتَوِىْهُوَۙوَمَنْيَّاْمُرُبِالْعَدْلِ‌ۙوَهُوَعَلٰىصِرَاطٍمُّسْتَقِيْمٍ‏ மேலும், அல்லாஹ் இரு மனிதர்களைப் பற்றிய (மற்றும்) ஓர் உதாரணம் கூறுகிறான்: அவ்விருவரில் ஒருவன் ஊமை(யான அடிமை); எந்தப் பொருளின் மீது (உரிமையும்) சக்தியும் அற்றவன்; தன் எஜமானனுக்குப் பெரும் சுமையாகவும் அவன் இருக்கின்றான்; எங்கு அவனை அனுப்பினாலும் அவன் யாதொரு நன்மையும் கொண்டு வர மாட்டான்; மற்றவனோ, தானும் நேர் வழியிலிருந்து, (பிறரையும் நன்மை செய்யுமாறு) நீதியைக் கொண்டு ஏவுகிறான் - இவனுக்கு (முந்தியவன்) சமமாவானா?   (அல்குர்ஆன் : 16:76) தன்னம்பிக்கை நிறைந்த செயல்பாடுகள் வேண்டும். சிலுவை யுத்த வரலாற்றில் எவருமே நினைத்து பார்க்க முடியாத கொடுமைகள் அரங்கேறின; இலட்சக்கணக்கில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்; முஸ்லிம்களின் ரத்தம் கரைபுரண்டோடியது;ரத்தக்கரை மஸ்ஜிதுல் அக்ஸாவையும் விட்டுவைக்கவில்லை;சிலுவை கொடுமையாளர்களின் படுகொலையிலி ருந்து தப்பிக்க உயரமான சுவர்களில் இருந்தெல்லாம் முஸ்லிம்கள் குதித்து இறந்தனர். கொன்றவர்கள் எவ்வித அனுதாபமும் வருத்தமுமின்றி தொழிற்சாலை பணிகளை செய்வதைப் போன்று செய்தனர்;ஒரு கட்டத்தில் பிரபு ரெஜினால்ட் என்பவன் "நீங்கள் முஹம்மதை பெயர் கூறி கூக்குரலிட்டு அழைத்து உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்"என்று கூறினான். இப்படிப்பட்ட கொடுமைகளுக்கெல்லாம் விடை கண்ட ஒரு வரலாற்று நாயகர்தான் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி(ரஹ்)அவர்கள்.   இளமைப் பருவத்திலேயே குதிரையேற்றம்,போர் திறமை,அரசியல் நிர்வாகம் இவற்றை கற்றுக் கொண்டவர்; 20 வயது முதல் 40 வயதுக்குள் ராணுவ அனுபவமும்,வீர மனப்பான்மையும் மேலோங்கியிருந்தது. சிலுவைப் போரை எதிர்கொள்ள கொஞ்சமாக உண்டு வெற்றிக்காக நிறைய உழைத்தவர்.நமது ஜெருசலேம் நகரம் எதிரிகள் வசம் இருக்கும் போது சரளமாக உணவும்,உறக்கமும் உல்லாசமும் எப்படி வரும்? என்று கேட்டவர்.நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பிலிருந்த ஜெருசலத்தையும், மஸ்ஜிதுல் அக்ஸாவையும் மீட்டெடுத்தவர்;அப்படிப்பட்ட வரலாற்று நாயகர் சுல்தான் சலாஹுதீன் அய்யூபி (ரஹ்)அவர்கள் பல்வேறு சவால்களை தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டதன் விளைவுதான் வரலாற்றில் மாபெரும் வெற்றியாளராக,சாதனையாளராக திகழ்வதற்கு காரணமாக அமைந்தது. இந்த வரலாற்றுக்கேற்ப பல்வேறு சவால்களை எதிர் கொண்டிருக்கும் சமகால முஸ்லிம் சமூகம் ஃபாசிச சித்தாந்தத்தை எதிர்கொள்வதற்கு தன்னம்பிக்கையும்,தைரியமும் மிக மிக அவசியமானது என்பதை மறந்திடக் கூடாது. நமது நம்பிக்கையை வலுப்படுத்தும் விதமான பல்வேறு இஸ்லாமிய வரலாற்று நிகழ்வுகள் வரலாற்றில் நிறையவே நிரம்பிக் கிடக்கின்றன; அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் முஅத்தா போரில் நிகழ்ந்தது; நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரளி)அவர்கள் முஅத்தா போரில் களம் காணுவதற்கு முன்னால் பின்வரும் கவிதை வரிகளை பாடினார்கள்; என் ஆத்மாவே!நான் சத்தியம் செய்து கூறுகிறேன்; நீ இந்தப் போர்க்களத்தில் இறங்கித்தான் ஆகவேண்டும்; நீ ஏன் சுவனம் செல்வதை வெறுக்கிறாய்! ஆத்மாவே!நீ கொல்லப்படத்தான் போகிறாய்;மரணிக்கத்தான் போகிறாய்; இதோ மவ்துடைய நேரத்தை நீ சந்தித்து விட்டாய்! நீ எதனை ஆதரவைத்தாயோ அது உனக்கு கொடுக்கப்பட்டுவிட்டது; நீ இந்த இரண்டையும் (கொல்லப்படுதல்- மரணித்தல்)அடைந்துவிட்டால் நிச்சயமாக நீ நேர்வழி அடைந்திடுவாய்! இதுபோன்றுள்ள வரலாற்று நிகழ்வுகள் நமக்கு தன்னம்பிக்கையை ஊட்டுகிறது; அசத்தியங்களை எதிர்த்து நிற்கும் போது எண்ணிலடங்கா எதிரிகளின் சதிகளை எதிர்கொண்ட போதிலும் அவற்றை துணிவுடன் துவம்சம் செய்வதற்கு துணிவை தருகின்றன. இறுதியாக... இந்திய திருநாட்டில் வாழக்கூடிய சமகால முஸ்லிம்கள் தனது இருப்பை உறுதி செய்யவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்; நாம் இந்த தேசத்தில் வாழ்வதற்கான அத்தணை உரிமைகளையும் அரசியல் சாசனம் வகுத்துத் தந்திருக்கிறது; அதுமட்டுமல்ல;இந்த தேசத்தின் கடந்தகால அனைத்து வளர்ச்சிக்கும் அடித்தளமிட்டு பாடுபட்டவர்கள் முஸ்லிம்கள்; இவற்றையெல்லாம் மறக்கடிக்கச் செய்து இம்மண்ணிலிருந்து முஸ்லிம்களை துடைத்தெறிய நினைக்கும் ஃபாசிச சங்பரிவாரங்களுடைய எண்ணங்களை தவிடு பொடியாக்க வேண்டும்; இந்திய அரசியல் சாசனம் பாழாக்கப்படுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்ற எண்ணம் முஸ்லிம்களிடம் உறுதியாக இருக்க வேண்டும்;அப்போதுதான் முஸ்லிம்கள் கண்ணியத்தோடும்,கவுரவத்தோடும் இந்த தேசத்தில் வாழ முடியும் என்பதை என்றைக்கும் மறந்துவிடக்கூடாது!


ஜனநாயகத்தின் அடையாளச் சின்னத்திற்கு நீதி வழங்கக் கோரி குரல் எழுப்புவோம்.

  ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ் மாநில செயற்குழு கூட்டம் 26-11-2019 அன்று மதுரையில்  மாநில தலைவர் மௌலவி M.S ஷம்சுல் இக்பால் தாவூதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் மௌலவி S. அப்துல் காதிர் ஹஸனி இறைவசனம் ஓதி துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக தேசிய பொதுச்செயலாளர் மௌலவி முஹம்மது பைசல் அஷ்ரஃபி, மற்றும் தமிழகத்தின் தேசிய பொறுப்பாளர் மௌலவி ஷிஹாப் ஸஆதி அவர்களும் கலந்து கொண்டனர். கலந்துக் கொண்ட அனைவரையும் மாநிலப் பொதுச்செயலாளர் ஆபிருத்தீன் மன்பயீ வரவேற்றுப்பேசினார். இக் கூட்டத்தில் கீழ் காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானம் - 1  ஆலிம்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல் கடந்த வருடங்களை போன்று இந்த வருடமும் தமிழகம் முழுவதும் பெறப்பட்ட விண்ணப்பங்களை பரீசீலித்து  தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு  கல்வி உதவித் தொகைகளை  டிசம்பர் 10ம் தேதிக்குள் வழங்கிட வேண்டும்.   தீர்மானம் - 2   உஸ்வத்துர் ரஸுல் தேசியளவிலான பிரச்சாரம்    இஸ்லாமிய மாதங்களான ரபியுல் அவ்வல் மற்றும் ரபியுல் ஆகிரில் இஸ்லாத்தை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் தேசம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் உஸ்வத்துர் ரஸுல் என்ற தலைப்பில் தேசியளவிலான பிரச்சாரம் நவம்பர் 25 முதல் டிசம்பர் 25 வரை நடத்த தீர்மானிக்கப்பட்டது . அதனடிப்படையில் தமிழகத்தில் பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள், தெருமுனைக்கூட்டங்கள், மஹல்லா கூட்டங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள்  நடத்த வேண்டும்.   தீர்மானம் -3  ஜனநாயகத்தின் அடையாளச் சின்னத்திற்கு  நீதி வழங்கக் கோரி குரல் எழுப்புவோம்.   பாபர் மசூதி பள்ளிவாசல் விஷயத்தில் கடந்த நவம்பர் 9 ஆம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது .அந்த தீர்ப்பில் ஜனநாயகத்தின் அடையாளச் சின்னமான பாப்ரி மஸ்ஜித் ராமர் கோயில் இருந்த இடத்தில் கட்டப்படவில்லை என்றும் பாப்ரி மஸ்ஜிதை இடித்தது வரம்பு மீறிய குற்றச் செயல் என்றும் அறிவித்தது. எனினும் பாபரியின் இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்காக  தாரை வார்த்துக் கொடுத்தது . எனவே வருகிற டிசம்பர் 6ம் தேதி ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஜனநாயகத்தின் அடையாளச் சின்னத்திற்கு  நீதி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும்  தமிழகம் முழுவதுமுள்ள கதீப்களின் மூலமாக பாபரிக்கான எனது குரல் என்ற பிரச்சாரத்தை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் தீர்மானிக்க பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் மாநில செயலாளர் மௌலவி அர்ஷத் அஹமது அல்தாஃபி நன்றியுடன் கூட்டம் நிறைவுற்றது.


பெருமானாரும் போராட்டக் களமும்..

முன்னுரை :ஓர் இஸ்லாமிய அறிஞனின் கூற்று...... "நீ மரணிப்பதற்கு ஆசைப்படு;வாழ்வு உனக்கு பரிசாக வழங்கப்படும்" உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய்.(சுவாமி விவேகானந்தர்) நீங்கள் தைரியமாக எழுந்து நிற்காத வரை உங்களை யாரும் மதிக்கப் போவதில்லை;இங்கு பயத்திற்கு இடமில்லை பலத்திற்கே இடம் உண்டு.(APJ அப்துல் கலாம்) கனவுகள் எல்லாம் நனவாகும்; நிறைய காயங்களுக்கு பிறகு! (சார்லி சாப்ளின்) இது போன்றுள்ள பல்வேறு தரப்பினரின் கூற்றுக்களும் போராட்ட வாழ்வு மிகப்பெரிய வெற்றியை தேடித்தரும் காரணி என்பதை விளக்கிக் காட்டுகின்றன. அதனால் தான் இஸ்லாமும் போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களது வாழ்வியல் நடைமுறைகளை ஆய்வு செய்து பார்த்தால் போராட்ட குணத்திற்கு இஸ்லாம் எந்தளவு தூரம் முக்கியத்துவம் அளித்துள்ளது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். போராட்ட குணமும்,பரிசுத்த இஸ்லாமும்! போர் நிகழ்வதை இஸ்லாம் விரும்புவதில்லை;ஆனால் அதேசமயம் போர்க்குணம் எப்போதும் இருக்கவேண்டும் என்கிறது. நபி ஸல் கூறினார்கள்; أَيُّهَا النَّاسُ، لا تَتَمَنَّوْا لِقَاءَ الْعَدُوِّ، وَاسْأَلُوا اللَّهَ الْعَافِيَةَ فَإِذَا لَقِيتُمُوهُمْ فَاصْبِرُوا، وَاعْلَمُوا أَنَّ الْجَنَّةَ تَحْتَ ظِلالِ السُّيُوفِ மனிதர்களே!எதிரிகளை களத்தில் சந்திக்க வேண்டுமென்று ஆசைப்படாதீர்;அல்லாஹ்விடத்தில் நலவையே வேண்டுங்கள்;ஆனால் எதிரிகளை களத்தில் சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் உறுதியாக நில்லுங்கள்;அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக சுவனம் வாளின் நிழலின் கீழே இருக்கிறது. அரபு மொழியில் போராட்ட செயல்பாடுகளுக்கு முஜாஹதா என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது "ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக அர்ப்பணிப்பு மனப்பான்மையோடு தனது சக்தியை செலவழிப்பது"என்பதாகும் அதன் பொருள்.இஸ்லாமிய வழக்கில் இறை பொருத்தத்தை நாடி சத்தியப்பாதையில் கடுமையான உழைப்பை வெளிக்காட்டுவதாகும். அல்லாஹ் அருள்மறையில் குறிப்பிடுவது போல; وَجاهَدوا في سَبيلِ اللَّهِ بِأَمْوالِهِمْ وَأَنْفُسِهِمْ உங்கள் பொருட்களையும், உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள். (அல்குர்ஆன் : 9:41) وَجَاهِدُوْا فِى اللّٰهِ حَقَّ جِهَادِهٖ‌ هُوَ اجْتَبٰٮكُمْ இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். (அல்குர்ஆன் : 22:78) அல்லாஹ் உங்களை தேர்வு செய்திருக்கிறான்;எல்லா படைப்புகளை விடவும் உங்களை சிறப்பாக்கி இருக்கிறான்.எனவே நீங்கள் போராட்ட குணமுடையவர்களாக இருங்கள் என்பது மேற்கூறப்பட்ட வசனங்களின் கருத்தாகும். இன்று நபியவர்கள் இந்த தீனை நம்மிடம் கொடுப்பதற்காக அம்மக்களிடம் எவ்வளவு போராடினார்கள் என்பதை நாம் பெருமை கொள்ளும் அதே சமயம், பெருமானார் காட்டிய வழியில் நாம் தீனுக்காக என்ன போராடிக் கொண்டுள்ளோம்?என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இருக்கிறோம். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதுபோல வாழும் காலத்திலேயே உழைப்புகளால் நமது வாழ்வை மெருகூட்டி கொள்ள வேண்டும். மனிதனுக்கு வழங்கப்பட்ட தவணை காலம் வந்துவிடுமென்றால் மனிதன் செயல்பட விரும்புவான்;ஆனால் அதற்கான அவகாசம் இருக்காது என்கிறது அருள்மறை. حَتَّى إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ * لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: “என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான். “நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்)(அல்குர்ஆன் : 23:99,100) அதனால்தான் நபி(ஸல்)கூறினார்கள்; احرص علي ما ينفعك "உனக்கு பயனளிக்கும் ஒன்றை நீ ஆசைப்படு" அதாவது உனக்கு எது பயனளிக்கிறதோ அதற்காக, அதன் சுபச் செய்தியை அனுபவிப்பதற்காக நீ போராடு என்பதே அண்ணலாரின் கருத்தாகும். போராட்ட வாழ்வும்,பெருமானாரும்! நபி ஸல் பிறப்பின் துவக்கம் போராட்டத்தின் ஆரம்பம்;மக்காவில் கி.பி. 571 ஆம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்று அரபு மண்ணில் உயர்ந்த குலமாகக் கருதப்பட்ட குரைஷி என்னும் குலத்தில் பிறந்தார்கள். தாயின் வயிற்றிலிருக்கும் போதே தந்தை அப்துல்லாஹ்வையும், தமது ஆறாம் வயதில் தாயார் ஆமினாவையும் இழந்து அனாதையாக நின்றார்கள். பின்னர் பாட்டனார் அப்துல் முத்தலிபின் அரவணைப்பிலும், அவர் மரணித்த பின் பெரிய தந்தை அபூதாலிபின் பராமரிப்பிலும் வளர்ந்தார்கள். சிறு வயதில் யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என்பதால் ஆடு மேய்த்தார்கள். ஓரளவுக்கு விபரம் தெரிந்தவுடன் தமது பெரிய தந்தையுடன் சேர்ந்து சிரியா நாட்டுக்குச் சென்று வியாபாரம் செய்தார்கள். இதனால் இளமையில் கல்வி கற்பதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இதனால் எழுதவோ, படிக்கவோ அவர்களுக்குத் தெரியாது. தமது 25 வது வயதில் வியாபாரத்தைக் கற்றுத் தேர்ந்தார்கள். மக்காவில் மிகப் பெரிய செல்வச் சீமாட்டியாகவும், பெரும் வணிகராகவும் திகழ்ந்த கதீஜா அம்மையார் நபிகள் நாயகத்தின் ஒழுக்கம், பண்பாடு, நேர்மை மற்றும் வியாபாரத் திறமை ஆகியவற்றைக் கேள்விப்பட்டு நபிகள் நாயகத்தை மணந்து கொள்ள விரும்பினார். நபிகள் நாயகத்தை விட அதிக வயதுடையவராகவும், விதவையாகவும் இருந்த கதீஜா அம்மையாரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டார்கள். நபி ஸல் அவர்களின் பிரச்சார களம் போராட்டம் நிறைந்தது என்பதை அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு உணர்த்தினான். போர்வை போர்த்திக் கொண்டிருக்கும் (நபியே!) நீங்கள் எழுந்து நின்று (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்! உங்கள் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள்! உங்களது ஆடையை பரிசுத்தமாக்கி வைத்துக் கொள்ளுங்கள்! அசுத்தங்களை வெறுத்து விடுங்கள்! உங்கள் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக(க் கஷ்டங்களை) நீங்கள் பொறுத்திருங்கள். (அல்குர்ஆன் 74 : 1-5) “உங்களது ஆடைகளை பரிசுத்தமாக்கிக் கொள்ளுங்கள்” அல்லாஹ்வை மகிமைப்படுத்தி அவன் முன் நிற்பவர் அருவருப்பான தோற்றமின்றி அசுத்தமின்றி உடலையும் உடையையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அல்லாஹ் ஆடையில் தூய்மையை இவ்வளவு வலியுறுத்தும்போது கெட்ட செயல், தீய சிந்தனையிலிருந்து நாம் எவ்வளவு தூய்மை பெற்றிருக்க வேண்டும் என்பதை சொல்லத் தேவையில்லை. “அசுத்தங்களை வெறுத்திடுங்கள்” அதாவது, அல்லாஹ்வை வணங்கி அவனுக்கு மாறுசெய்வதைத் தவிர்த்து அல்லாஹ்வின் கோபத்திலிருந்து தூரமாகிவிடுங்கள். “நீங்கள் பிரதிபலன் தேடியவராக எவருக்கும் உதவி ஒத்தாசை புரியாதீர்கள்” அதாவது, பிறருக்கு உதவி செய்யும்போது அதற்குச் சமமான அல்லது அதைவிட அதிகமான பலனை எதிர்பார்க்காதீர்கள். “உங்கள் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக(க் கஷ்டங்களை) நீங்கள் பொறுத்திருங்கள்” நபி (ஸல்) அவர்கள் தங்களது கூட்டத்தாரை அல்லாஹ்வின் பக்கம் அழைத்து அவனது தண்டனைகளைக் கூறி எச்சரிக்கை செய்கையில் அவர்களால் துன்பங்கள் நிகழலாம், அவற்றை அல்லாஹ்வுக்காக ச கித்துக்கொள்ள வேண்டும் என்று இந்த இறுதி வசனத்தில் உணர்த்தப்படுகிறது. ஆரம்பமாக அல்லாஹ்வின் அழைப்பு நபி (ஸல்) அவர்களை ஓய்வு உறக்கத்தில் இருந்து தட்டி எழுப்பி, உடலை வருத்திக்கொள்ளவும், அனல் பறக்கும் போருக்கு ஆயத்தமாகவும், எதிர்காலத்தில் சமுதாயப் புரட்சிக்கு ஈடுகொடுக்கவும், எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும் என ஒரு ராணுவ உத்வேகத்திற்கு நபி (ஸல்) அவர்களை தூண்டுகிறது. போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! எழுக! அச்சமூட்டி எச்சரிக்கை செய்க! என அழைப்பது எங்ஙனம் உள்ளது என்றால்... ஓ!... தனக்காக வாழும் ஒரு சுயநலவாதிதானே சாய்வு கட்டிலில் ஓய்வு தேடுவார். தாங்கள் அப்படிப்பட்டவரல்லவே! தாங்கள் உயர்ந்த ஒரு பணிக்கு ஆயத்தமாக வேண்டியுள்ளதே! எதிர்காலத்தில் பெரும் சமுதாயச் சுமையை தாங்கள் சுமக்க நேரிடுமே! இந்தப் போர்வை சுகத்திற்காகவா புவியில் பிறந்தீர்கள்? தங்களின் உறக்கம் உசிதமானதா? மன நிம்மதியை உள்ளம் விரும்பலாமா? சுகம் தேடலாமா? கூடாது! கூடாது! கூடவே கூடாது! உங்களை மகத்தான பொறுப்பு இரு கரம் நீட்டி வரவேற்கிறது. உம்! எழுங்கள்! உங்களுடைய பாரத்தைத் தாங்கிக் கொள்ளத் தயாராகுங்கள். சிரமத்தையும் தியாகத்தையும் ஏற்றுக்கொள்ள எழுந்து வாருங்கள்! ஓய்வெடுக்க வேண்டிய காலம் ஓடிவிட்டது. இனி கண் துஞ்சாது விழித்து போராட வேண்டும். நீங்கள் அர்ப்பணிப்புக்கு ஆயத்தமாகுங்கள்! தயாராகுங்கள்! உண்மையில் அல்லாஹ்வின் இந்த வசனம் மிக அச்சுறுத்தலானது. இது நபி (ஸல்) அவர்களை இல்லத்தில் நிம்மதியாக படுத்துறங்குவதிலிருந்து வெளியேற்றி முழு வாழ்க்கையிலும் அழைப்புப் பணியின் சிரமங்களைச் சந்திக்கத் தயார்படுத்தியது. அல்லாஹ்வின் இக்கட்டளையை நிறைவேற்ற நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள்! அன்று எழுந்தவர்கள் இருபது வருடங்களுக்கு மேலாக ஓய்வு பெறவேயில்லை. தனக்காகவோ தமது குடும்பத்தினருக்காகவோ இல்லாமல் அல்லாஹ்வினால் ஒப்படைக்கப்பட்ட மாபெரும் பொறுப்பின் சுமையை தனது தோளில் சுமந்து இறையழைப்புப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்கள். அவர்கள் சுமந்தது ஏகத்துவப் போராட்டத்தின் சுமையாகும். அல்லாஹ்வினால் தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை செவியேற்றதிலிருந்து 20 வருடங்களுக்கு மேலாக ஓய்வு உறக்கமின்றி மாபெரும் தியாக வாழ்க்கையை மேற்கொண்டார்கள். இஸ்லாத்தின் மிக முக்கிய திருப்பு முனையாக அமைந்த ஹிஜ்ரத்தும் நபி ஸல் அவர்களின் போராட்டங்களுக்கு பின் கிடைத்த பலனே ஒரு நாள் இரவு மக்கா முழுவதும் நீண்ட அமைதி நிலவியது. நபிகளாரைக்கொல்ல எதிரிகள் திட்டம் வகுத்து காத்திருந்தார்கள். அப்போது, இரவின் பிற்பகுதியில் அண்ணலாருக்கு இறைவனின் கட்டளை வருகிறது. “நீங்கள் மக்காவை விட்டு மதினாவிற்கு ‘ஹிஜ்ரத்’ செய்யுங்கள்” (புலம் பெயர்ந்து செல்லுங்கள்) என்று உத்தரவு வருகிறது. உடனே எம்பெருமானார் (ஸல்) அவர்கள், அலி (ரலி) அவர்களை அழைத்து, “அருமை அன்பரே! எனக்கு அல்லாஹ்வின் கட்டளை வந்துவிட்டது. நான் இப்போதே மதினாவிற்கு பயணம் புறப்படப்போகிறேன். அதற்கு முன்னால் எனக்கு ஒரு கடமை இருக்கிறது. என்னிடம் மக்கா குரைஷியர்கள் பலர், எதிரிகளாய் இருந்தாலும் அமானிதமாய் பல உயர்ந்த பொருட்களை என்னிடம் கொடுத்திருக்கின்றனர். அத்தனைப் பொருட்களையும் உரியவர்களிடம் சேர்க்கின்ற பொறுப்பை உங்களுக்கு வழங்குகிறேன்.” “இன்ஷா அல்லாஹ், உடமைகளை உரியவர்களிடம் ஒப்படைத்து விட்டு, என்னை மதினாவில் இரண்டொரு நாளில் வந்து சந்தியுங்கள்” என்று பணித்தார்கள். அன்று இரவு அண்ணல் எம்பெருமானார் (ஸல்) வீட்டை விட்டு புறப்படுவதற்கு முன்பே மக்கத்து குரைஷிகள், ஏற்கனவே சதித்திட்டம் தீட்டியபடி, அண்ணலாரின் வீட்டைச் சூழ்ந்து கொண்டார்கள். வாள், வில் ஆயுதங்களுடன் எதிரிகள் நிற்பதைக்கண்டு அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்கள் சிறிதும் அஞ்சவில்லை. ‘நீங்கள் மதினாவிற்குப் புறப்படுங்கள்’ என்று அல்லாஹ் ‘வஹி’ (இறைச்செய்தி) அனுப்பியிருக்கிறான். அல்லாஹ் சொல்வது சத்தியம். அது நிறைவேறித்தான் ஆக வேண்டும். எத்தனை இடையூறுகள் ஏற்பட்டாலும் நாம் மதினா செல்வது உறுதி. அந்த பொறுப்பை அல்லாஹ் ஏற்றிருக்கும் போது எதற்கு அனாவசிய கவலை என்று எண்ணியபடி தைரியமாக வீட்டை விட்டு வெளியே வந்தார்கள். எதிரிகளும் அவர்களைப் பார்த்தார்கள். அப்போது, அண்ணலார் தன் கரங்களால் ஒரு பிடி மண்ணை எடுத்து எதிரிகளின் முன்னிலையில் வீசினார்கள். சூரா யாஸீனில் உள்ள இந்த வசனத்தை ஓதியவர்களாக முன்னேறினார்கள். “அவர்களுக்கு முன்புறம் ஒரு சுவரும் பின்புறம் ஒரு சுவருமாக ஆக்கி நாம் அவர்களை மூடி விட்டோம். ஆதலால் அவர்களால் எதையும் பார்க்க முடியாது” (திருக்குர்ஆன் 36:9) இந்த வசனத்தை கேட்ட உடனே, எதிரிகள் அனைவரும் அப்படியே உணர்ச்சியற்றவர்களாக ஸ்தம்பித்து நின்றனர். அல்லாஹ் திருமறையில் சொன்னது போல் அவர்கள் கண் திறந்திருந்தும் பார்க்க முடியவில்லை. கைகளில் வாள் இருந்தும் அவை அசையவில்லை. மிக மெதுவாக நிதானமாக அவர்களை கடந்து சென்றார்கள் நபிபெருமானார். நேரே அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் வீடு நோக்கி சென்றார்கள். என்ன ஆச்சரியம், வீட்டில் அகல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. கதவை தட்டுவதற்காக கை வைத்த உடன் அது தானாக திறந்து கொண்டது. அங்கே அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள் ஆவலாய் யாரையோ எதிர்பார்த்த வண்ணம் தயாராக இருப்பதை நபிகளார் கண்டார்கள். “அருமை நண்பரே! இந்த இரவு வேளையில் யாரை எதிர்பார்த்து காத்திருக்கிறீர்கள்” என்று நபிகளார் வினவினார்கள். “யா ரஸூலுல்லாஹ்! நீங்கள் சில தினங்களுக்கு முன், அபூபக்கரே இங்கே மக்காவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது. ஏற்கனவே ஈமான் கொண்டவர்கள் புலம் பெயர்ந்து மதினா சென்று விட்டார்கள். இங்கே பலரும் நம்மை ஏற்றுக்கொள்ள முன் வரவில்லை. நாம் வெகு சிலரே மக்காவில் உள்ளோம். இதனை விட்டு அகன்று மதீனாவில் நம் இறைச்சேவையை, ஏகத்துவத்தை எடுத்தியம்பினால் மக்களிடம் கொஞ்சம் மாற்றம் ஏற்படும் போல் தெரிகிறது. எனவே நீங்கள் தயாராக இருங்கள். அல்லாஹ்வின் கட்டளைக்காக நான் காத்திருக்கிறேன். கட்டளை கிடைத்ததும் உங்களை நாடி வருவேன். நாம் இருவரும் ‘ஹிஜ்ரத்’ செய்து மதினா செல்ல வேண்டும் என்று சொன்னீர்கள்” . “அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் உங்கள் அழைப்பிற்காக இரவு பகலாக காத்திருக்கிறேன். நீங்கள் உத்தரவிட்டால் தாமதிக்காமல் உடனே புறப்பட வேண்டும். அதற்காகத் தான் தயாராய் காத்திருக்கின்றேன்” என்றார் அபூபக்கர் சித்திக் (ரலி). பின்னர் இருவரும் அங்கிருந்து உடனே மதினா நோக்கி புறப்பட்டார்கள். அதேநேரத்தில், அண்ணலார் வீட்டை சுற்றி நிலைகுலைந்து நின்றிருந்த எதிரிகள் சிறிது நேரம் கழித்து சுயநினைவிற்கு வந்தார்கள். ‘என்னவாயிற்று நமக்கு, நபிகள் நம் முன் வந்தது போல் தெரிந்ததே? எங்கே அவர் போய் விட்டார்?’ என்று நினைத்தபடி வீட்டினுள் நுழைந்தனர். இதற்கிடையே அண்ணலாரின் கட்டளையை நிறைவேற்ற எண்ணிய அலி (ரலி) அவர்கள் எதிரிகளின் முற்றுகையைப் பொருட்படுத்தாமல் வீட்டினுள் சென்று அண்ணலார் வழக்கமாய் படுத்துறங்கும் இடத்தில் நன்றாக முகத்தை மூடி போர்வையை போர்த்தியவராக உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள். அலி (ரலி) அவர்கள் படுத்திருந்த நிலையைக் கொண்டு அவர்கள் தான் நபியாக இருக்கும் என்று எண்ணிய எதிரிகள் அவர்களைச் சுற்றி சூழ்ந்து, கொல்வதற்காக வாட்களை ஓங்கினார்கள். அப்போது, கூட்டத்தில் ஒருவர் சொன்னார், “முகத்தை மூடிய நிலையில் ஒருவரை கொல்வது அரேபியர் வீரத்திற்கு அழகல்லவே. போர்வையை விலக்கி முகத்தைப் பார்த்து அவரை கொல்வதே நமது வீரத்திற்கு சான்று பகரும் சாட்சி. எனவே போர்வையை விலக்குங்கள்” என்றார். போர்வையை விலக்கியவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே அலி (ரலி) அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள். எதிரிகள் ஆச்சரியம் மேலிட்டவர்களாக அவரைத் தட்டி எழுப்பி, “அலியே! நாங்கள் முகம்மதை கொல்வதற்காக பல நாட்கள் காத்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாதா? இருந்தும் என்ன தைரியத்தில் முகம்மது வீட்டில், அதுவும் அவரது படுக்கையில் எந்த வித அச்சமின்றி தூங்கிக்கொண்டிருக்கிறாய்?. போர்வையை விலக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் உன் உயிர் போயிருக்குமே?” என்று வினவினார்கள். அப்போது, அலி (ரலி) அவர்கள் மிக அலட்சியமாக, “அது எப்படி என் உயிர் போகும்? அண்ணல் நபிகளார் என்னிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்து, அதை நிறைவேற்றி விட்டு இரண்டொரு நாளில் என்னை வந்து சந்தி என்றல்லவா சொல்லிவிட்டு சென்றார்கள். எனவே எனக்கு நம்பிக்கை உண்டு. இரண்டு நாட்களில் நபிகளாரை நான் நிச்சயம் சந்திப்பேன் என்று சொன்னது நபிபெருமான். அவர் சொல்வது அனைத்தும் சத்தியம், உண்மை. அண்ணலின் வாக்கு என்றைக்குமே பொய்த்ததில்லையே? அதனால் தான் எந்தவித அச்சமின்றி தூங்கிக் கொண்டிருந்தேன்” என்றார்கள். வாயடைத்து நின்றனர் எதிரிகள். அண்ணல் நபிகளாரில் வாக்கில் எந்த அளவுக்கு அவரது தோழர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள் என்பதற்கு இந்த நிகழ்வுகள் சாட்சியாகும். அபூபக்கர் சித்திக் (ரலி) என்னவென்றால், ‘நாயகம் சொல்லிவிட்டார்கள். எந்த நிமிடமும் அவர்கள் வரலாம்’ என்ற எதிர்பார்ப்போடு இரவு பகலாக தன் வீட்டில் காத்திருந்தார்கள். அலி (ரலி) அவர்கள், ‘நபிகள் சொல்லி விட்டார்கள். நாளை அவர்களை உயிருடன் சந்திப்போம்’ என்ற நம்பிக்கையில் அச்சமின்றி இருந்தார்கள். நபி (ஸல்) தன் தோழர்களையும் போராட்ட வாழ்வை நோக்கி எவ்வாறெல்லாம் பயிற்றுவித்தார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டுகளாகும் மேற்குறிப்பிடப்பட்ட சம்பவங்கள். போராட்டங்களையும் அதன் வழியே அற்பணிப்பு களையும் வெளிப்படுத்துவதை தனக்கு மிகப் பிரியமான செயலாக நபி (ஸல்) கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! என்னை விட்டுப் பின்தங்கி விடுவதால் இறைநம்பிக்கையாளர்கள் சிலரது உள்ளங்களில் வருத்தம் உண்டாகாது என்றிருக்குமாயின் மேலும், அவர்களை ஏற்றிச் செல்ல வாகனங்களும் என்னிடம் இருந்திருக்குமாயின் அல்லாஹ்வின் பாதையில் போர் புரியச் செல்லும் எந்தச் சிறு படையையும் விட்டு நான் பின்தங்கியிருந்திருக்க மாட்டேன். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நான் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டு, பிறகு உயிராக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட்டு, பிறகு உயிராக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட்டு, பிறகு உயிராக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட வேண்டும் என்றே விரும்புகிறேன். (புகாரி) போராட்ட வாழ்வினால் நபிகளார் அடைந்து கொண்ட பலன்கள் என்ன? • 23 ஆண்டுகால பணி 230 வருடங்களுடைய சாதனையாக மாறியது. அசாதாரணமான சூழ்நிலைகளிலும் உறுதியுடன் களத்தில் நின்று நிறைவான வெற்றிகளை பெற முடிந்தது. அற்ப சுகங்களுக்கு பெயர்போன அவர்களது தோழர்களை அனைத்தையும் அர்ப்பணிக்கும் சீலர்களாய் மாற்றியது. கண்ணியமான பாதுகாப்பான வாழ்விற்கு போராட்ட குணம்தான் முதன்மையானது என்பதை உணர்த்திக் காட்டியது. வாழ்க்கைப்பயணத்தில் வலிகள் உள்ளளவும் உயர்வான இலக்குகளை அடைய முடியும் என்பதை படித்து கொடுத்தது. இறுதியாக..போராடும் குணத்துடன் வாழ்வோம்!மரணிப்போம்! சமகால உலகில் இஸ்லாத்திற்கு எதிராகவும் முஸ்லிம்களுக்கு எதிராக பாபரி பள்ளிவாசல் உட்பட பல்வேறு அநீதங்கள் நடைபெறக்கூடிய சூழலில் முஸ்லிம்கள் பெற வேண்டியது போராட்ட குணமே ஆகும். இந்த குணம் சமூகத்திடம் எந்தளவிற்கு நிறைவாக இருக்குமோ அந்தளவிற்குத்தான் அநீதங்களையும், அக்கிரமங்களையும் தகர்த்தெறிய முடியும். திருமறைக் குர்ஆனில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான் وَضَرَبَ اللّٰهُ مَثَلاً رَّجُلَيْنِ اَحَدُهُمَاۤ اَبْكَمُ لَا يَقْدِرُ عَلٰى شَىْءٍ وَّهُوَ كَلٌّ عَلٰى مَوْلٰٮهُۙ اَيْنَمَا يُوَجِّهْهُّ لَا يَاْتِ بِخَيْرٍ‌ هَلْ يَسْتَوِىْ هُوَۙ وَمَنْ يَّاْمُرُ بِالْعَدْلِ‌ۙ وَهُوَ عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏ மேலும், அல்லாஹ் இரு மனிதர்களைப் பற்றிய (மற்றும்) ஓர் உதாரணம் கூறுகிறான்: அவ்விருவரில் ஒருவன் ஊமை(யான அடிமை); எந்தப் பொருளின் மீது (உரிமையும்) சக்தியும் அற்றவன்; தன் எஜமானனுக்குப் பெரும் சுமையாகவும் அவன் இருக்கின்றான்; எங்கு அவனை அனுப்பினாலும் அவன் யாதொரு நன்மையும் கொண்டு வர மாட்டான்; மற்றவனோ, தானும் நேர் வழியிலிருந்து, (பிறரையும் நன்மை செய்யுமாறு) நீதியைக் கொண்டு ஏவுகிறான் - இவனுக்கு (முந்தியவன்) சமமாவானா?   (அல்குர்ஆன் : 16:76) அல்லாஹ் எடுத்துக்கூறும் இந்த உவமையில் நாம் எந்த தரத்தில் இருக்கிறோம்?என்பதை மீளாய்வு செய்ய வேண்டும். அநீதியிழைக்க கூடிய அரசனுக்கு எதிராக உண்மையை எடுத்துரைப்பது சிறந்த ஜிஹாத் ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதை நாம் எப்போதும் நினைவில் வைக்க கடமைப்பட்டுள்ளோம் அநீதிக்கு எதிரான சூழல்களிலும் சரி, அன்றாட வாழ்க்கைப் பயணத்திலும் சரி, போராட்டங்கள் பல சாதனைகளை நிகழ்த்துவதற்கு காரணமாகின்றன. எனவே போராட்ட குணம் வளர்ப்போம்! ஈருலகிலும் சாதனைகள் பல புரிவோம்!! இன்ஷா அல்லாஹ்!


பாபரி என்றும் நம் நினைவில் 15-11-2019

            நாடு இன்று ஒரு மௌனமான சூலலில் உள்ளது. இந்த மௌனம் ‘அமைதி / நிம்மதி’ எனக் கொள்ள இயலாத வகையில் ஒரு நெருக்கடியான செயற்கை அமைதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 450 ஆண்டுகால பாரம்பரிய பாபர் மசூதி இடிக்கப்பட்டு சுமார் 27 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட குழு மொத்த பாபரி நிலத்தையும் ராம் லல்லா விஜ்ரான் தரப்பிற்கு வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது. நாட்டின் பல தரப்பிலிருந்தும் வரவேற்பும், அதிருப்தியும் இத்தீர்ப்பிற்கு கிடைத்துள்ளது. முஸ்லிம் சமூகத்தில் தீர்ப்பிற்கு முன்பு அச்ச நிலையும், தீர்ப்பிற்கு பின்பு பெரும் விரக்தி நிலையும் காணப்படுகிறது. இழந்த பாபரி, ஒரு மஸ்ஜித் / பள்ளிவாசல். பள்ளிவாசல் கட்டிடம் அல்ல! ஆம். பள்ளிவாசல் என்பது கட்டிடம் அல்ல. அது அல்லாஹ்வை நினைவு கூறும் அடையாள சின்னம். அல்லாஹ் கூறுகிறான்; ذَٰلِكَ وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ   ‏எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தால் (ஏற்பட்டது) ஆகும். (திருகுர்ஆன்  22:32. )  முஸ்லிம்களின் கலாச்சார மையம் பள்ளிவாசல் நபி(ஸல்) அவர்கள்  ஹிஜ்ரத்தின் போது இடையில் தங்கிய இடமாக இருப்பினும் அங்கு ஒரு பள்ளிவாசலை நிர்மாணித்தார்கள். நபி (ஸல்) கூறினார்கள்; பூமியின் மேல் பரப்பில் அல்லாஹ்விற்கு விருப்பமான இடம் பள்ளிவாசல் ஆகும்.  பள்ளிவாசல் நீதியின் மையம்! நீதியை நிலைநிறுத்தும் இடமாக திகழ்வது பள்ளிவாசல். அல்லாஹ் கூறுகிறான்;   يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ ۖ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَىٰ أَلَّا تَعْدِلُوا ۚ اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَىٰ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ   முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான். (திருகுர்ஆன் 5:8 ) நபி (ஸல்) அவர்கள் ஏனைய தீர்ப்புகளை பள்ளியில் இருந்து அளித்துள்ளார்கள். பிரபலமாக அறியப்பட்ட நபிகளாரின் வாசகமான “எனது மகள் பாத்திமா திருடியிருந்தாலும் கை துண்டிக்கப்படும் “ என்பது அனைவரும் அறிந்ததே! நபிகளார் மட்டுமல்ல ,பின்னால் வந்த கலிபாக்களும் அதே நீதியை நிலைநிறுத்தினர். உமர் (ரலி) அவர்கள், தனது கவர்னரான அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்; உங்கள் பரிபாலனங்களில் நீதியை நிலைநாட்டுங்கள். இதனால், பலம்மிக்கவர் உங்களிடம் சிறப்பு சலுகைகள் எதிர்பார்க்காதிருக்கட்டும். பலவீனர் உங்கள் நீதி குறித்து அவநம்பிக்கை கொள்ளாதிருக்கட்டும்.” பள்ளியில் நீதி நிலைநாட்டப்படுவது மட்டுமல்ல, பள்ளியே நீதியின் படி தான் காட்டப்படும். எந்தப் பள்ளியும் ஆக்கிரமிப்பிலோ, அபகரித்தோ கட்டப்படுவது இல்லை. அநீதமான முறையில் அபகரிக்கப்படும் ஒன்றில் உருவாவது வழிபாட்டு தலமாக இருக்க இயலாது.மஸ்ஜிதுன்னபவி பள்ளிவாசல் இரண்டு அனாதை இளைஞர்களுக்கு சொந்தமானது. அதை விலைகுடுத்துப் பெற்றே பள்ளி அமைக்கப்பட்டது. ஒருமுறை அம்ர் இப்னு ஆஸ்(ரலி) தான் நிர்வகித்த எகிப்து பகுதியில் ஒரு பள்ளியின் விரிவாக்கத்தின் போது அருகில் இருந்த கிறிஸ்தவ பெண்ணின் வீட்டை இடித்துவிட்டு அதற்காக இழப்பீடு வழங்கினார்கள். இது உமர் (ரலி) அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது கட்டப்பட்ட அப்பள்ளியின் பகுதியை இடித்துவிட்டு மீண்டும் அப்பெண்ணின் வீட்டை கட்டிக்கொடுக்க உத்தரவிட்டார்கள். பள்ளி இழப்பின் பாதிப்பு பள்ளிவாசல் முஸ்லிம்களின் கலாச்சார மையம். ஒற்றுமைக்கான கேந்திரம். ஒரு பள்ளி இல்லையேல் அங்கு முஸ்லிம்களின் ஒற்றுமை ஏற்படாது. முஸ்லிம்களின் வாழ்வியலில் இஸ்லாம் பிரதிபளிக்காது. நபி (ஸல்) கூறினார்கள், “இறையில்லத்தோடு அதிக தொடர்பில் இருப்பவரைக் கண்டால் அவர் இறைநம்பிக்கை உள்ளவர் என சாட்சி சொல்லுங்கள் “ (திர்மிதீ) மற்றொரு ஹதீஸில், தனித்து செயல்படுவதை தவிர்ந்து கொள்ளுங்கள்.கூட்டாக இருப்பது, பொதுமக்களுடன் சேர்ந்து இருப்பது, இறையில்லத்தில் இருப்பதை அவசியமக்கிக் கொள்ளுங்கள். (அஹமத்) பள்ளி இழக்கப்படுவதும், இழிவாக்கப்படுவதும் எதிரிகளின் வெற்றியாகும். ஒவ்வொரு கால படையெடுப்பு மற்றும் தாக்குதலின் போது வழிபாட்டு தளங்கள் தகர்ப்பு என்பது எதிர் சமூகத்தை இழிபடுத்தும் ஒரு அடையாளமாக இருக்கிறது. இன்றும் அதன் எச்சமாக பள்ளிக்கு அருகில் கூச்சலிடுவது, பள்ளியில் அசுத்தங்களை எறிவது போன்றவை அதனை இழிவுபடுத்தும் நோக்கில் செய்யப்படுவதே! பள்ளிவாயில்கள் ஜமாஅத்தாக செயல்பட்டு முஸ்லிம்களின் ஒற்றுமையை, நம்பிக்கையை பறைசாற்றுகிறது. இழப்பின் மூலம் சமூகத்தின் நம்பிக்கை தகர்க்கப்படுகிறது. வரலாற்றின் நம்பிக்கை நபிமார்கள் வாழ்ந்த பூமியும் நபிகளார் தொழுத, புனித பூமியில் அமைந்த, முதல் கிப்லா அமைந்த பள்ளி தான் பைத்துல் முகத்தஸ். அல்லாஹ் கூறுகிறான்; سُبْحَانَ الَّذِي أَسْرَىٰ بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا ۚ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ “(முஹம்மதாகிய) தனது அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, நாம் சுற்றுப்புறச் சூழலைப் பாக்கியம் பொருந்தியதாக ஆக்கிய அந்த மஸ்ஜிதுல் அக்ஸா வரை இரவில் அழைத்துச் சென்றவன் தூய்மையானவன். நமது அத்தாட்சிகளிலிருந்து அவருக்கு நாம் காண்பிக்கவே (இவ்வாறே செய்தோம்) நிச்சயமாக அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.” (திருகுர்ஆன் 17:1) அபூதர்(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். “அல்லாஹ்வின் தூதரே! முதலாவது அமைக்கப்பட்ட மஸ்ஜித் எது? என்று கேட்டேன். (மக்காவில் அமைந்துள்ள) மஸ்ஜிதுல் ஹராம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அடுத்து எது? எனக் கேட்ட போது (ஜெரூஸலத்தில் உள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா எனப் பதிலளித்தார்கள்.” (புஹாரி)  “தபூக் போரின் போது நபி(ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் ஒரு தோல் கூடாரத்தில் இருந்தார்கள். அப்போது மறுமை ஏற்படுவதற்கு முன்னர் ஆறு (முக்கிய) நிகழ்வுகள் ஏற்படும். அவற்றை எண்ணிக்கொள் என்று கூறிவிட்டு,எனது மரணம். 2. பைதுல் முகத்தஸ் வெற்றி எனக் கூறினார்கள்.”அறிவிப்பவர்: அவ்ப் இப்னு மாலிக்(ரலி) (புஹாரி) கி.பி. 636 ஆம் ஆண்டு இரண்டாம் கலிபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் தளபதி காலித் இப்னு வலிது (ரலி) அவர்கள் தலைமையில் ரோமப் பேரரசின் பிடியில் சிக்கிச் சீரழிந்த ஜெருசலம் உள்ளிட்ட பாலஸ்தீனப் பகுதி இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது. அங்கு வசித்த கிறிஸ்துவர்களும், யூதர்களும் பகைமையை விட்டு விட்டு சுதந்திர காற்றை சுவாசித்தனர். கிருத்துவத் திருசபை ஒன்று கூடி கலிபா உமர் (ரலி) அவர்களை கம்பளம் விரித்து வரவேற்றனர். 450 ஆண்டுகளுக்கு பிறகு இஸ்லாமியர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பிளவின் காரணமாகவும் மார்க்கத்தையும், மஸ்ஜிதையும் பாதுகாக்க தவறியதின் காரணாமாக 1095 ஆம் ஆண்டு முஸ்லிகளின் முதல் கிப்லா யூதர்களின் கையில் சென்றது. பைத்துல் முகத்தஸை மீட்டெடுத்த மாவீரர் இழந்த இல்லத்தை மீட்க 40, 50 ஆண்டுகளாக தொடந்து சிறு சிறு போர்கள் செய்துக்கொண்டு இருந்தனர். கி.பி 1137ஆம் ஆண்டு பிறந்த ஒருவர் தனது இளம் பருவத்தில் சிலுவை படையினருக்கு எதிரான இராணுவத்தில் ஒரு சாதாரண வீரராக சேர்ந்தார். வீரமும், விவேகமும்,  இவரை படிப்படியாக தளபதியிலிருந்து எகிப்தின் ஆளுனராக பதவி உயர்த்தியது. அந்த வீரர் தான் சலாஹுதீன் அய்யூபி (ரஹ்). 36 வயதே ஆன சலாஹுத்தீனுக்கு இருந்த பெருத்த கவலை அல் அக்ஸா பள்ளிவாசலை மீட்பதாகத் தான் இருந்தது. பலம்மிக்க தலைவராக இருந்த அவர் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சிரித்ததை காணவில்லை என்று வரலாற்று அசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். அது பற்றி அவரிம் கேட்டபோது “அல் அக்ஸா பள்ளிவாசல் சிலுவை வீரர்களின் ஆக்கிரமிப்பில் இருக்கும்போதும் என்னால் எப்படி சிரிக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார். அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற வேண்டி களம் இறங்கிய இஸ்லாத்தின் போராளிகளுக்கு அல்லாஹ் மகத்தான வெற்றியை பரிசாக அளித்தான். கி.பி. 1095 பறிப்போன பைத்துல் முகத்தஸ் மாவீரர் சலாஹுத்தீன் அய்யூபி அவர்களின் முயற்சியால் கி.பி. 1187 மீண்டும் முஸ்லிகளின் கையில்வந்தது. கி.பி 1095 இல் சிலுவைப் படையினர் முஸ்லிம்களுக்கு செய்த கொடூரத்திற்கு எந்த பழிதீர்க்கும் நடவடிக்கையும் இல்லாமல் அங்கு வாழ்த்த கிறிஸ்துவர்களுக்கும், யூதர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. முஸ்லிம்களின் கைவசம் ஜெருசலம் ஒரு நாள் ஒரு வருடம் இல்லை 700 வருடங்கள் இருந்தது.. 19ஆம் நூற்றாண்டுகளில் மீண்டும் முஸ்லிம் நாடுகள் தங்களுக்குள் சண்டையிட்டனர். இதனை பயன்படுத்தி ஐரோப்பிய சிலுவை யுத்த வாரிசுகள் உதுமானியப் பேரரசை நயவஞ்சகமாக வீழ்த்தி விட்டு ஜெருசலத்தை முஸ்லிம்களிடமிருந்து கைபற்றினர். பிரான்ஸ் படை தளபதி ஹென்றி கொரோடு அடக்கஸ்தலத்தின் மீது கால் வைத்து: “Awake Salahudeen! We Have Returned, My Presence Here Consecrate The Victory Of The Cross Over Crescent”  “எழுந்திரு சலாவுதீன்! நாங்கள் திருப்பி வந்திருக்கிறோம்! என்னுடைய வருகையின் மூலம் சிலுவை, பிறையை வென்றது” என்றான். கடைசியாக 1924 ஆம் ஆண்டு ஜெருசலம் மீண்டும் யூதர்களின் கையில் சென்று விட்டது. இழப்பு இறுதியல்ல! முஸ்லிம்களின் கரங்களிலிருந்து அநீதமாக ஏதேனும் இழக்கப்பட்டால் நிச்சயம் அது இழப்பு அல்ல. அநீததிற்கு எதிரான முயற்சியில் இழந்ததை நாடும் எண்ணம் இருப்பின் அல்லாஹ் அதை திருப்பி அளிப்பான். நபிகளாரின் தாய் பூமியான மக்காவும், காஃபாவும் அவர்களுக்கு நிம்மதி, மகிழ்ச்சி அளிப்பது. அதனை பிரிந்து ஹிஜிரத் செய்யவேண்டிய தேவை ஏற்பட்ட போது நபிகளார் மிகவும் வருந்தினார்கள். “இவர்கள் என்னை வெளியேற்றவில்லை எனில் உன்னை நான் பிரியமாட்டேன் என “ கண்ணீர் வடித்தார்கள். அல்லாஹ், மக்கா வெற்றியை ஹிஜ்ரி எட்டில் அளித்தான். வெற்றி தளபதியாக மீண்டும் நுழைந்தார்கள். பைத்துல் முகத்தஸ் நபிகளாரின் முன்னறிவிப்புப்படி வெற்றி கொள்ளப்பட்டது. இழக்கப்பட்டது. மீண்டும் கரங்களில் வந்தது. இனி மறுபடியும் கரங்களில் வரும் இன்ஷா அல்லாஹ்! நினைவில் நிறுத்துவோம்! ⇒ நம்பிக்கை இழக்க மாட்டோம்! இஸ்லாம் எத்தனையோ இழப்புகளையும் அநீதங்களையும் சந்தித்துள்ளது. முஸ்லிம்கள் உறுதியும் நம்பிக்கையும் இழக்காது இருக்கும் போதே வெற்றி ஏற்பட்டுள்ளது. يَا بَنِيَّ اذْهَبُوا فَتَحَسَّسُوا مِنْ يُوسُفَ وَأَخِيهِ وَلَا تَيْأَسُوا مِنْ رَوْحِ اللَّهِ ۖ إِنَّهُ لَا يَيْأَسُ مِنْ رَوْحِ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْكَافِرُونَ   "அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்".(திருக்குர்ஆன் 12:87) ⇒ மஸ்ஜிதின் மகத்துவம் உள்ளத்தில் ஏந்துவோம்! பள்ளிவாசல்களின் மாண்புகளையும், அதன் கட்டமைப்பையும் வார்த்தைகளில் மட்டுமின்றி செயல்களால், இபாதத்துகளால் அலங்கரிப்போம். ⇒ பள்ளிகளை ஆவணப்படுத்துவோம்! பாபரியாகட்டும், வேறு பள்ளிகளாகட்டும் ஆவணங்களில் இருக்கும் குறைப்பாடு பிற்காலத்தில் அதனை எதிரிகளால் சர்ச்சைக்கு உள்ளாக்கபடுகிறது. இதே போன்று பல இடங்களில் இருக்கும் முஸ்லிம்களின் கபர்ஸ்தான் இடங்களும் ஆவணப்படுத்தப்படவேண்டியதே. ⇒அடுத்த தலைமுறைக்கு கற்றுகொடுப்போம்! தன் வரலாறு அறியாத சமூகம் வரலாறு படைக்க இயலாது. அதே போன்று நமக்கு எதிரான அநீதங்களையும் ,நாம் இழந்த உரிமைகளையும் நமது சந்ததிகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இது நடைபெறாது போயிருந்தால் சுதந்திர போரே நடந்திருக்காது. ⇒அல்லாஹ்வின் சொத்தை பாதுகாப்போம்! பள்ளிவாசல்கள் தனிநபர் சொத்தல்ல. எத்தனை தனி நபர்கள் கட்டிக்கொடுத்தாலும் அவை வக்ப்செய்யப்படுவதே! அல்லாஹ்வின் சொத்தில் தனி நபர்கள் சமரசம் செய்யவோ, விட்டுகொடுக்கவோ இயலாது. முஸ்லிம்கள் தான் அதனை பராமரிப்பவர்கள்; பாதுகாப்பவர்கள். நபிகளார் கூறினார்கள்; “நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.” يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ ۖ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَىٰ أَلَّا تَعْدِلُوا ۚ اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَىٰ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ   ‘விசுவாசிகளே! நீதியை நிலைநாட்டுவதில் அல்லாஹ்வுக்காக நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். மக்களில் ஒரு சாரார் மீது உங்களுக்குள்ள வெறுப்பும் பகையையும் அவர்களுக்கு அக்கிரமம்செய்வதற்கு உங்களைத் தூண்டாதிருக்கவும் (எவ்வளவு குரோதமிருந்த போதிலும்) நீங்கள் நீதியே செலுத்துங்கள். அதுதான் பரிசுத்தத் தன்மைக்கு மிகவும் நெருங்கியது. (அல்குர்ஆன் 5:8)  


நம்பிக்கையான எதிர்காலத்திற்கு நபிகளாரே முன்மாதிரி

நம்பிக்கையான எதிர்காலத்திற்கு நபிகளாரே முன்மாதிரி நிராசைகளையும்,அவநம்பிக்கைகளையும் நோக்கிநகர்ந்து கொண்டிருக்கும் சமகால முஸ்லிம் சமூகத்திற்கு நபிகளார்{ஸல்} அவர்களது வாழ்வு எவ்வாறெல்லாம் நம்பிக்கை ஊட்டுகிறது அதற்கான வழிகள்என்னென்ன என்பதை பகிர்ந்து கொள்வதே இந்தஜும்மா உரையின் நோக்கம் ஆகும். நமது தேசத்தில் பாசிச  சங்கப் பரிவார சக்திகளின் அழிச்சாட்டியம்  நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது அதுவும் அவர்களது அனைத்து அஜண்டாக்களும் முஸ்லிம்களை முன்னிறுத்தியே அமைகின்றது இதற்காக அரசு இயந்திரங்கள் இயன்றளவு பயன்படுத்தப்படுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தேசத்தில் வாழும் இஸ்லாமியர்கள் மனோநிலை அச்சத்திலும் அவநம்பிக்கைகளிலும் அதிகப்படுத்திக் கொண்டே இருக்கிறது.  ஷரியத்திற்கு  எதிரான நடவடிக்கைகளை எதிர் கொள்வதில் கூட அனுசரிப்பு மனப்பான்மை வளர்ந்து வருகின்றது இக்கட்டான சூழலுக்கு இறுதி தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வளமான வாழ்வியலை அவர்கள் பிறந்த மாதத்தில் ஆய்வு செய்து அதில் கிடைக்கும் படிப்பினைகளையும் பாடங்களையும் நடைமுறைப்படுத்துவது இறைநம்பிக்கையாளர்கள் ஒவ்வொருவரின் மீதும் அதி முக்கிய கடமையாகும். பெருமானார் {ஸல்} அவர்களது வாழ்வில் பிரச்சனைகளும், தீர்வுகளும்,  அண்ணலார்{ஸல்} அவர்களது வாழ்வு ஆதி முதல்   அந்தம் வரை பிரச்சனைகள் நிறைந்ததாக  காணப்பட்டது. ஆனால் அவற்றையெல்லாம் அண்ணலார் எவ்வாறு எதிர்கொண்டு தீர்வுகண்டார்கள் என்பது  ஏககாலத்திற்கானமுன்மாதிரியாகும்.  சத்திய பாதையில் பயணிக்கும் சமூகங்களுக்கு கடல் அலைகள் போன்று ஒன்றன்பின் ஒன்றாக பிரச்சனைகளும் சோதனைகளும் வந்து கொண்டேதான் இருக்கும் இதனை நமக்கான நல்லதொரு வாய்ப்பாக கருதவேண்டுமே தவிர  நமக்கு ஏற்பட்டுள்ள தடைக்கற்களாக எண்ணிவிடக்கூடாது எப்படி காற்றின் அழுத்தத்தால் பாய்மரக்கப்பல் கடலில்பயணிக்குமோ அதுபோல வேசாதனையான வாழ்க்கை பயணத்திற்கு பிரச்சனைகள் எனும்காற்று மிகவும் அவசியமானதே!  காற்றுக்கு ஆங்கில வார்த்தை AIR  என்பதாகும் AIR  என்ற வார்த்தைக்கு ஃபுல் ஃபார்ம் இப்படியும் குறிப்பிடுகிறார்கள் ஐ அம் ரெடி am I ready நான் தயாராக இருக்கிறேன் நான் எதற்கும் தயார் என்கின்ற மனப்பான்மை ஏந்தல் நபியிடம் எப்போதும் இருந்த காரணத்தினாலேயே எண்ணற்ற பிரச்சினைகளிலும் எண்ணிலடங்கா சாதனைகளை நிகழ்த்த முடிந்தது. எனவே பிரச்சினையின் போது நபிகளார் கடைப்பிடித்த பண்புகளை பற்றிப் பிடித்து நடந்தால் நம்பிக்கையான எதிர்காலத்தை நம்மாலும் பெற்றிட முடியும் என்பதை ஆள்  மனதில் நிறுத்த வேண்டும்.  பிரச்சனைகள் பலவீனப்படுத்துவதற்கல்ல  பலம் பெறுவதற்ககே!  சத்திய இறைவிசுவாசியின் வாழ்வு சோதனைகளும் பிரச்சனைகளும் நிறைந்ததாக அமைவது அவன் பலம் பெறுவதற்குதான் என்பதற்கு பெருமானாரின் வாழ்வு மிகப்பெரும் எடுத்துக் காட்டாகும்.  பிறக்கும் முன்பே தந்தையையும் பிறந்த சில காலத்திலேயே தாயையும் இழந்து அனாதையாக குடும்பத்தாரின் அரவணைப்பிலேயே வளர்ந்தார் அண்ணல் பெருமானார் பெற்றோரின்  அன்பும் அரவணைப்பும் அவர்களுக்கு அறவே கிடைக்கவில்லை. ஏழ்மையின் கடுமையை சிறுவயது முதலே எதிர்கொண்டு அவற்றை எல்லாம் தகர்த்தெறிய அண்ணலார் ஆடுமேய்த்த வரலாறுகள் கூட உண்டு.  அடுத்தடுத்துபிரச்சனைகள் வந்த போதிலும் வாடாத மனம் கொண்டு இன்முகத்துடன் தன் இளமைப் பருவத்தை மக்கள் பணியில் கழித்தார்கள் அதன் விளைவு தான் வயது 40தில்   நுபுவ்வத்  பொறுப்புகிடைக்கப்பெற காரணமானது.  நுபவத்திற்கு பிறகுதூதுத்வ  பிரச்சாரத்தை தனியொரு ஆளாக நின்றுது வங்கினார்கள் நபியவர்கள் அதுவரை அமீன் என்றும் சாதிக்கு என்றும் கண்ணியப்படுத்தப்பட்ட  கருணை நபி சூனியக்காரர் பைத்தியக்காரர் என்று வசைபாடுதல்களுக்கு ஆளானார்கள். அவர்கள் மக்கள் முன் எடுத்து வைத்த ஏகத்துவ நெறி.  கட்டுக்கதைகளாக சித்தரிக்கப்பட்டன. சாந்த நபி அவர்கள் அவற்றை சகிப்புத்தன்மையுடன் எதிர்கொண்டார்கள்  ஏகத்துவ இஸ்லாமிய நெறியான நெறியினை மக்கள் முன் எடுத்து வைத்தகாரணத்தினால் ஒட்டு மொத்த குறைஷிகளும் ஒன்றிணைந்து சமூகபரிஷ்காரம் செய்தார்கள்  அபூதாலிப் பள்ளத்தாக்கில் உணவுக்கு கூட வழியின்றி இலைகள் உண்டு இன்னல்களை பல சந்திக்கும் நிலைஏற்பட்டது.  சுஜூதில் இருக்கும் போது பரிசுத்த நபியின் புனித மேனியில் ஒட்டகக்குடல்கள் போடப்பட்டன. அப்போதும் கூட அல்லாஹ்வை தியானிப்பது தளர்ச்சி காணவில்லை நபியவர்கள்.  இஸ்லாமிய பிரச்சார பிரச்சாரத்திற்கு பக்கபலமாக திகழ்ந்த அபூதாலிப் அவர்களும் அன்னை கதீஜா ரலி அவர்களும் இவ்வுலகை விட்டுப் பிரிந்த சமயம் அதற்கான ஆறுதலை தேடி பயணித்தார்கள் தாயிப்  நோக்கி  ஆனால் அங்கே  தலைகீழான பிரதிபலனை   காணமுடிந்தது.  கல்லாலும் சொல்லாலும்    சொல்லொண்ணா  துயரங்களை தாங்கிக் கொண்ட பெருமானார் {ஸல்} தன் இயலாமையை பிரார்த்தனை மூலம் இறைவனிடம் முறையிட்டார்கள்.  இப்படிப்பட்ட கடின சூழ்நிலையிலும் சற்றும் நிராசை அடையவில்லை நபிகளார்.  இதன் பிறகு ஏற்பட்ட ஹிஜ்ரத்தும் சரி  மதினாவின் அனைத்துப் போராட்டங்களும் சரி சத்திய தூதரின் சாதனைகளுக்கு வித்தாக அமைந்தன.  ஏராளமான பிரச்சினைகளின் போதும் ஏந்தல் நபியவர்கள் நிலை குலையாது நின்று அவற்றை எதிர்கொண்டு சாதனைகளாக  மாற்றிட  அவர்கள் கடைப்பிடித்த அணுகுமுறைகள் முக்கிய காரணிகளாகும்.  பிரச்சினைகளை எதிர்கொள்ள நாம் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் அச்சத்தை அடி பணியைச் செய்வோம்!   அச்சம் மனதில் அண்டிக் கொள்ளும்போது ஆற்றல்கள் குன்றிப்போகும் அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே என்பது வார்த்தைகளால் மட்டும் சுருங்கி விடக்கூடாது நமது அன்றாட வாழ்வில் மிளிர வேண்டும்.  உறுதிமிக்க நபிமார்களின் பட்டியலில் நபி மூஸா அலை அவர்கள் இடம்பெற இறைவன்   கற்பித்துத் தந்த  பண்பு “பயப்படாதே” என்பதுதான். يٰمُوْسٰى لَا تَخَفْ   அல்லாஹ் கூறுகின்றான்    மூஸாவே  நீர் பயப்படாதீர் நீங்கள் உயர்வானவர்கள் {அல்குர்ஆன் 27:10 }  இறுதித்தூதர் முஹம்மது ஸல் அவர்களது வாழ்விலும் இதற்கு எடுத்துக்காட்டு உண்டு. ஹிஜ்ரத்தின் போது  ஹிரா குகையில் தங்கியிருந்த சமயம் எதிரிகள் தங்களை நெருங்கிய சமயத்தில் நிலைகுலையாமல் அவற்றை எதிர் கொண்டார்கள்.  நீ மரணிக்க  ஆசைப்பட்டால் வாழ்க்கை உனக்கு பரிசாக வழங்கப்படும் என்ற ஒரு அறிஞனின் கூற்று நிகழ்காலத்திலும் நிஜமாகுவதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு.   சமீபத்தில் மத்தியபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த சம்பவத்தை நாம் முகநூல் வாட்ஸ் அப்பில் படித்திருக்கலாம் #அஸ்லம்  என்ற இருபத்தி மூன்று வயது  இளைஞர் தியாகத் திருநாளை கொண்டாடுவதற்காக தன் உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். உறவினர்களுடன் அருகிளிருந்த அணைக்கட்டுக்கு சென்ற போது சில இளைஞர்களால் அஸ்லம் மற்றும் அவரது   சகோதரிகளை தகாத வார்த்தைகளால் அந்த இளைஞர்கள் பேசியுள்ளனர். இதனால் அஸ்லமிற்கும்    அந்த இளைஞர்களுக்கு மத்தியில் தர்க்கம்  ஏற்பட்டுள்ளது.  வீட்டிற்கு திரும்பிய அஸ்லத்தை  பின்தொடர்ந்து வந்து பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர் அந்த இளைஞர்கள் பிறகு வீட்டிற்கு திரும்பிய அஸ்லத்தின்  ஆட்டோவை வழிமறித்து தாக்க முயன்றுள்ளனர் என்னை விட்டுவிடுங்கள் என அஸ்லம்  கெஞ்சியும் அந்த அக்கிரமக்கார இளைஞர்கள் அவரை  அடித்து கொல்ல முனைந்துள்ளனர் . தான் கொல்லப்படுவது  என்பது உறுதியான போது குர்பானி கொடுப்பதற்கு தான் வைத்திருந்த உபகரணங்களைக் கொண்டு திருப்பித் தாக்கி உள்ளார் அந்த கும்பலில்   மூன்று பேர் படு காயம் அடைகின்றனர் இருவர் சம்பவ இடத்திலேயே  மரணம் அடைந்தனர் இதனை கண்ட அந்த  கும்பல்   சிதறி ஓடியது,  இச் சம்பவம் நமக்கு உணர்த்துவது உண்மை நம் பக்கம் இருக்கையில் அச்சப்படாமல் நமது ஆற்றல்களைப் பிரயோகித்தால் எத்தகைய பிரச்சினைகளையும் எளிதில் நம்மால் வென்றெடுக்க முடியும் என்பதை உணர்த்துகின்றது.  ஆற்றல்களை நிறைவாக வளர்த்துக் கொண்டால்  பாரதூரமான பிரச்சனைகளையும் வலிமையுடன் எதிர்கொள்ள முடியும் அதனால் தான் “பலவீனமான மூமினை விட பலம் உள்ள மூமிமீன் அல்லாஹ்விடத்தில் மிகப் பிரியமானவன்” என்ற உத்வேகத்தை ஏந்தல் நபியவர்கள் கூறினார்கள்  மேலும் ஒரு நபி மொழியில் “மக்கள் சுரங்கங்கள் ஆவார் தங்கம் மற்றும் வெள்ளி சுரங்கங்களை போல” என்று கூறினார்கள் சாதாரண மக்களிடமே சுரங்கங்கள் உண்டு என்கிற போது ஏகத்த்துவத்தையும் ஈமானிய  உணர்வுகளையும் சுமந்து கொண்டுள்ள சத்திய விசுவாசிகளிடம் எத்தகைய சுரங்கம் பொதிந்து கிடக்கும் என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும்.  தன்னுள் வைத்துக் கொண்டு அற்ப சொற்ப தங்க வெள்ளிக்காக  அலைந்து திரியலாமா?  என்ற கேள்வி நம் ஆள்  மனதில் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும்.  துல்லியமான திட்டமிடல் நம்மிடம் இருந்தால் எத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கும், நம்மை தற்காத்து கொள்வதற்கும் வாய்ப்பாக இருக்கும். நபி ஸல் அவர்கள் காலத்தில் நடந்த பல்வேறு யுத்தங்கள் தெளிவான திட்டமிடுதல் இருந்த்தனாலேதான் வெற்றிகள் கிடைத்தது.  அண்ணலார் (ஸல்) வகுத்த தற்காப்புத் திட்டம் நபி (ஸல்) தங்களது படையைக் கட்டமைத்தார்கள். பல அணிகளாக அவர்களை நியமித்த பின்பு திறமையாக அம்பெய்வதில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்த 50 வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் தலைவராக பத்ர் போரில் கலந்து கொண்ட அவ்ஸ் கிளையைச் சேர்ந்த அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் இப்னு நுஃமான் அல் அன்ஸாயை (ரழி) நியமித்தார்கள். பின்பு அவர்களை ‘கனாத்’ என்ற பள்ளத்தாக்கின் வடக்குப் பக்கம் அமைந்துள்ள மலையில் நிலையாக தங்கி, முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டுமென்று பணித்தார்கள். இம்மலை முஸ்லிம்களின் ராணுவ முகாம்களிலிருந்து தென் கிழக்கில் சுமார் 150 மீட்டர் தொலைவில் இருந்தது.  நபி (ஸல்) இந்த அம்பு எறியும் வீரர்களுக்குக் கூறிய அறிவுரைகளிலிருந்து இப்படையினரை அங்கு நியமித்ததின் காரணத்தைத் தெரிந்து கொள்ளலாம். நபியவர்கள் தளபதிக்குக் கூறிய உபதேசம் வருமாறு: “எதிரிகளின் குதிரைப் படை எங்களை நெருங்கவிடாமல் அம்பெய்து அவர்களை நீர் தடுக்க வேண்டும். எதிரிகள் எங்களுக்குப் பின்புறத்திலிருந்து வந்துவிடக் கூடாது. போர் நமக்கு சாதகமாக அல்லது பாதகமாக அமைந்தாலும் நீர் உனது இடத்தில் நிலையாக இருக்க வேண்டும். உமது வழியாக எதிரிகள் எங்களை தாக்கிவிடக் கூடாது.” (இப்னு ஹிஷாம்)  இவ்வாறு தளபதிக்கு உபதேசம் செய்த பிறகு, மற்ற வீரர்களுக்கு நபி (ஸல்) பின்வருமாறு அறிவுரை கூறினார்கள்: “நீங்கள் எங்களின் முதுகுப் பக்கங்களை (பிற்பகுதியை) பாதுகாத்து கொள்ளுங்கள், நாங்கள் போரில் கொல்லப்படுவதைப் பார்த்தாலும் நீங்கள் எங்களுக்கு உதவ வராதீர்கள் நாங்கள் வெற்றி பெற்று பொருட்களைச் சேகரிப்பதைப் பார்த்தாலும் அதிலும் நீங்கள் எங்களுடன் இணைந்து விடாதீர்கள்.” (முஸ்னது அஹ்மது, முஃஜமுத் தப்ரானி)  மூஃதா போர் வெற்றிக்கு (ஸல்) அருமையான திட்டம்  படைத் தளபதிகள்: நபி (ஸல்) அவர்கள் இப்படைக்கு முதலாவதாக ஜைது இப்னு ஹாஸாவை (ரழி) தளபதியாக ஆக்கிவிட்டு “ஜைது கொல்லப்பட்டால் ஜஅஃபர் தளபதியாக இருப்பார் ஜாஃபரும் கொல்லப் பட்டால் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா தளபதியாக இருப்பார்”என்று கூறி வெள்ளை நிறக் கொடியை ஜைது இப்னு ஹாஸா (ரழி) கையில் கொடுத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி) قال رسول الله صلى الله عليه وسلم يوم مؤتة ـ مخبراً بالوحي، قبل أن يأتي إلى الناس الخبر من ساحة القتال : أخذ الراية زيد فأصيب، ثم أخذ جعفر فأصيب، ثم أخذ ابن رواحة فأصيب ـ وعيناه تذرفان حتى أخذ الراية سيف من سيوف الله، حتى فتح الله عليهم (بخارى-3063  முஃதா போர்க்களச் செய்திகளை அல்லாஹ் வஹியின் மூலமாக நபியவர்களுக்கு உடனுக்குடன் தெரிவித்தான். போரின் போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “முதலில் கொடியை ஜைது ஏந்தினார் அவர் கொல்லப்பட்டார் இரண்டாவதாக ஜஅஃபர் ஏந்தினார் அவரும் கொல்லப்பட்டார் மூன்றாவதாக அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ஏந்தினார் அவரும் கொல்லப்பட்டார் -இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும் போது நபியவர்களின் கண்களிலிருந்து நீர் வழிந்தோடியது- இதற்குப் பின் கொடியை அல்லாஹ்வின் வாள்களில் ஒரு வாள் ஏந்தியது அல்லாஹ் அவர் மூலமாக முஸ்லிம்களுக்கு வெற்றியளித்தான்.” (ஸஹீஹுல் புகாரி-3063)  மூஃதா போரில் காலிது பின் வலீதின் வெற்றித் திட்டம்.  சண்டை ஓய்கிறது: முஸ்லிம் வீரர்கள் தங்களது முழு வீரத்தையும், திறமையையும், துணிவையும் வெளிக் கொணர்ந்தாலும் கடல் போன்ற மிகப் பயங்கரமான எதிரிப் படைகளைச் சமாளிப்பது மிகச் சிரமமாகவே இருந்தது. இதையறிந்த காலித் இப்னு அல்வலீது (ரழி) முஸ்லிம்களை ஆபத்திலிருந்து தந்திரமாகப் பாதுகாக்க சரியான திட்டம் ஒன்றைத் தீட்டினார்.  போரின் முடிவைப் பற்றி பலவிதமான கருத்துகள் கூறப்படுகின்றன. அந்த அனைத்து அறிவிப்புகளையும் ஒன்று திரட்டி நாம் ஆய்வு செய்யும்போது நமக்குப் புலப்படுவதாவது: கொடியை ஏந்திய அன்றைய தினம் மாலை வரை ரோம் நாட்டுப் படைக்கு முன்பாக மிகத் துணிச்சலாக காலித் (ரழி) எதிர்த்து நின்றார். முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்கு ஒரு போர் தந்திரத்தைக் கையாண்டார். அது ரோமர்களின் உள்ளங்களில் கடுமையான பயத்தை உண்டு பண்ணியது. அதாவது, முஸ்லிம்கள் பின்னோக்கிச் செல்லும்பொழுது ரோமர்கள் விரட்ட ஆரம்பித்தால் அவர்களிடமிருந்து தப்பிப்பதென்பது மிகக் கடினமே என காலித் (ரழி) நன்கு விளங்கியிருந்தார்.  எனவே, மறுநாள் படைக்கு முற்றிலும் ஒரு புதிய தோற்றத்தை உருவாக்கினார். படையின் முற்பகுதியை பிற்பகுதியாகவும், வலப்பக்கத்தில் உள்ளவர்களை இடப்பக்கத்திலும் மாற்றி அமைத்தார். மறுநாள் காலை போர் தொடங்கியபோது முஸ்லிம்களின் புதிய அமைப்பைப் பார்த்த எதிரிகள் தங்களுக்கு முன் நேற்று இல்லாத புதிய படை இருப்பதைப் பார்த்தவுடன் இவர்களுக்கு உதவிப்படை வந்திருக்கின்றது என்று கூற ஆரம்பித்தனர். சிறுகச் சிறுக அவர்களது உள்ளத்தை அச்சம் ஆட்கொண்டது.  சிறிது நேரம் இரு தரப்பினரும் சண்டையிட்டு கொண்டிருக்கும் போதே தனது படையில் எவ்வித மாற்றமும் ஏற்படாத அளவிற்கு முற்றிலும் பாதுகாப்புடன் படையை பின்னோக்கி அழைத்துச் சென்றார். முஸ்லிம்கள் ஏதோ சதி செய்ய நாடுகின்றனர் என்று எண்ணிய ரோம் வீரர்கள் முஸ்லிம்களைப் பின்தொடர்வதை விட்டுவிட்டு அவர்களும் பின்வாங்கினர். இவ்வாறு முஸ்லிம்களை விரட்டும் எண்ணத்தை கைவிட்டுவிட்டு தங்களது நாடுகளுக்கு எதிரிகள் திரும்பி விட்டனர். இவ்வாறு முஸ்லிம்கள் எவ்வித ஆபத்துமின்றி மதீனா வந்து சேர்ந்தனர். (ஃபத்ஹுல் பாரி, ஜாதுல் மஆது)  நபி ஸல் அவர்களிடம் சோதனைகளை எதிர்கொள்ளக்கூடிய உறுதியான மனவலிமை இருந்தது. இன்று நாம் சந்திக்கும் சோதனைகள் அனைத்தும் இறைவன் நாட்டத்தால் நாளை நமக்கு வெற்றியாக மாறும் என்ற நம்பிக்கை நமது மனதில் உறுதியாக இருக்க வேண்டும்.   3:140 اِنْ يَّمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ الْقَوْمَ قَرْحٌ مِّثْلُهٗ ‌ؕ وَتِلْكَ الْاَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِۚ وَلِيَـعْلَمَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَيَتَّخِذَ مِنْكُمْ شُهَدَآءَ‌ؕ وَاللّٰهُ لَا يُحِبُّ الظّٰلِمِيْنَۙ‏  3:140. உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால், அதே போன்று மற்றவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது; இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம்; இதற்குக் காரணம், ஈமான் கொண்டோரை அல்லாஹ் அறிவதற்கும், உங்களில் உயிர்த் தியாகம் செய்வோரை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குமே ஆகும்; இன்னும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை.  அல்லாஹ்வின் மீது  பேராதரவு வைத்தல் எந்த சூழ்நிலையிலும் நாம் அல்லாஹ்வின் மீது ஆதரவு வைக்ககூடியவர்களாக நாம் இருக்கவேண்டும். அதுவே நமக்கு வெற்றியாகும் இதைத்தான் நபி ஸல் அவர்கள் ஒவ்வொரு சோதனையான நேரத்திலும் பின்பற்றினார்கள். மக்காவை விட்டு மதீனாவை நோக்கி பயணமாகும் போது எதிரிகளின் கண்களில் மண்ணை தூவும் நேரத்திலும்,பத்ரின் வெற்றிக்கும், இதுபோன்ற அனைத்து சூழலிலும் நபி ஸல் அவர்கள் அல்லாஹ்வின் பேராதரவை எதிர்பார்த்து இருந்ததினால் அல்லாஹ்வின் உதவி கிடைத்தது.


கல்வி உதவி

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பில் வழங்கப்படும் ஆலிம் களின் குழந்தைகளுக்கான கல்வி உதவி திட்டம் விண்ணப்ப படிவம் பெறுவதற்கு இந்த லிங்கை சொடுக்கவும்   http://www.imamscounciltn.com/uploads/pdf/scholarship.pdf


விவசாயிகளின் போராட்டத்திற்கு இமாம்ஸ் கவுன்சில் ஆதரவு

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் சார்பாக டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தமிழகத்தைச் சேர்ந்த தேசிய செயலாளர் அப்துல் கபூர் மன்பயீ, தேசிய பொது செயலாளர் முஃப்தி ஹனீப் அஹ்ரார் காஸிமீ,தேசிய ஒருங்கினைப்பாளர் மெளலவி ஹாலிது ரஷாதி மற்றும் டெல்லியின் மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்  


திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு குர்ஆன் வகுப்பு

ஒரே நாளில் குர்ஆன் கற்போம் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மகத்தான நிகழ்ச்சி இமாம்கள் சக்தி பெறுவோம்! சமூகத்தை சக்தி படுத்துவோம்!! என்கிற உன்னத முழுக்கத்தொடு பயணிக்கும் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்அல் ஹம்துலில்லாஹ் திருவள்ளூர் மாவட்ட AIICஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் சார்பில் ஓரே நாளில் குர்ஆன் கற்போம் நிகழ்ச்சி திருத்தணி இஸ்லாம் நகர் அஹ்மத் பின் ஹன்பல் பள்ளிவாசலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது இதில் ஆரம்பமாக ஹாபிழ் காரி யூசுப் ஹஜ்ரத் அவர்கள் கிராஅத் ஓதினார் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மகத்தான பணிகளை மக்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எடுத்துரைத்தார் மாநில செயலாளர் மெளலவி J முஹம்மது இப்ராஹிம் ஃபாஜில் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள்🕌"ஓரே நாளில் குர்ஆன் கற்போம்"🕌 பாடத்தை சாமானிய மக்களுக்கு நடத்தினார் அல் ஹம்துலில்லாஹ்அனைத்து மக்களுக்கும் அல்லாஹ் திருக்குர்ஆன் எந்த அளவுக்கு இலகு என்பதை காட்டித்தந்தான் அனைத்து மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி நாங்கள் இனி அல்லாஹ்விடம் பேசுவோம் என்று உறுதியளித்து சென்றார்கள்அல் ஹம்துலில்லாஹ் திருத்தணி இஸ்லாம் நகர் பள்ளி வாசல் இமாம் மெளலவி ஹாபிழ் முஹம்மது இலியாஸ் ஹஜ்ரத் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார் இறுதியில்மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மெளலவி ஹாபிழ் H. அப்துல் காதிர் ஜைனி ஹஜ்ரத் அவர்கள் துஆவோடு கூட்டம் நிறைவுற்றது  


ஐந்து அம்ச கோரிக்கை தர்ணா போராட்டம்

                     


நான் அறிந்த நபிகள் நாயகம் ஆவணப்படம்

  நான்_அறிந்த_நபிகள்_நாயகம் ஆவணப்படம் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பில் ஆண்டுதோறும் முஹம்மது நபி (ஸல்)அவர்கள் பிறந்த மாதத்தில் முஹம்மது நபி ஸல் அவர்களின் வாழ்வியலை அனைவருக்கும் கொண்டு செல்லும் விதத்தில் தொடர்பிரச்சாரம் செய்து வருகின்றோம். அதனடிப்படையில் இந்த வருடமும் புரட்சித்தூதர் முஹம்மது ஸல் என்ற தலைப்பில் வருகின்ற டிசம்பர் 2௦-2௦16 முதல் ஜனவரி 15 -2௦17வரை தொடர் பிரச்சாரம் செய்வதற்கு முடிவு செய்துள்ளோம். இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தலைவர்களின் பார்வையில் முஹம்மது (ஸல்)அவர்கள் என்ற நோக்கத்தில் நான் அறிந்த நபிகள் நாயகம் என்ற தலைப்பில் ஆவணப்படம் தயாரிக்க முடிவு செய்து அதற்காகாக பல அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக தலைவர்களை சந்தித்து நபி(ஸல்) அவர்களைப்பற்றி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து அதனை ஆவணமாக்கபட்டு வெளியிடப்பட்டது  


நான் அறிந்த நபிகள் நாயகம் ஆவணப்படம்

  நான்_அறிந்த_நபிகள்_நாயகம் ஆவணப்படம் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பில் ஆண்டுதோறும் முஹம்மது நபி (ஸல்)அவர்கள் பிறந்த மாதத்தில் முஹம்மது நபி ஸல் அவர்களின் வாழ்வியலை அனைவருக்கும் கொண்டு செல்லும் விதத்தில் தொடர்பிரச்சாரம் செய்து வருகின்றோம். அதனடிப்படையில் இந்த வருடமும் புரட்சித்தூதர் முஹம்மது ஸல் என்ற தலைப்பில் வருகின்ற டிசம்பர் 2௦-2௦16 முதல் ஜனவரி 15 -2௦17வரை தொடர் பிரச்சாரம் செய்வதற்கு முடிவு செய்துள்ளோம். இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தலைவர்களின் பார்வையில் முஹம்மது (ஸல்)அவர்கள் என்ற நோக்கத்தில் நான் அறிந்த நபிகள் நாயகம் என்ற தலைப்பில் ஆவணப்படம் தயாரிக்க முடிவு செய்து அதற்காகாக பல அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக தலைவர்களை சந்தித்து நபி(ஸல்) அவர்களைப்பற்றி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து அதனை ஆவணமாக்கபட்டு வெளியிடப்பட்டது  


ஒட்டகம் குர்பானி தடையை கண்டித்து


மாநில பொதுக்குழு 2017


மதுரையில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாவட்ட செயற்குழு

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மதுரை மாவட்ட செயற்குழு மாட்டுத்தாவணி பள்ளி வாசலில் 11.04.2017 அன்று நடைபெற்றது அதில் ,1.வருகிற கோடைகாலத்தில் விளாச்சேரி, சர்வேயர் காலனி ஆகிய இரண்டு இடங்களில் கோடைகால பயிற்சி வகுப்புகள் நடந்துவது.2.இமாம்ஸ் கவுன்சில் சார்பாக செயல்படும் இப்னு ஸபீல் என்ற வழிபோக்கர்களுக்கு உதவி செய்யும் திட்டத்தை மாவட்டம் தோறும் அறிமுகம் செய்வது.3.டெல்லில் உள்ள ஜிந்தர்மந்தரில் போராடி வரும் தமிழக விவசாயிகளை பிரதமர் சந்திக்க வேண்டும். 4.ராஜஸ்தானில் பாலுக்காக மாடுகளை வாங்கியவர் பசு பாதுகாப்பு படை என்ற இந்துத்துவ வன்முறையாளர்களால் கொலை செய்ததைஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் வன்மையாக கண்டிக்கிறது. ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   இப்படிக்கு மெளலவி H.சிக்கந்தர் பைஜி செய்தி தொடர்பாளர் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மதுரை மாவட்டம் 


புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு

  ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தமிழ்நாடு மாநில பொதுக்குழு திருச்சி மௌலவி டாக்டர் A.ஆபிருத்தீன் மன்பஈ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆரம்பமாக இறைவசனம் மௌலவி S.அப்துல் காதர் ஹசனி அவர்கள் ஓதி துவங்கி வைத்தார்கள் வரவேற்புரை மாநில செயலாளர் மௌலவி R.M.அபூபக்கர் சித்திக் ரஷாதி அவர்கள் நிகழ்த்தினார்கள்.ஆண்டறிக்கையை மாநில பொதுச்செயலாளர் மௌலவி இப்ராஹீம் மிஸ்பாஹி அவர்கள் வாசித்தார்கள். அதன் பின்பு தேசிய பொதுச் செயலாளர் மௌலவி ஹனிஃப் அஹ்ரார் மற்றும் தேசிய செயலாளர் மௌலவி அப்துல் கஃபூர் மன்பஈ அவர்கள் புதிய மாநில நிர்வாகிகளை தேர்வு செய்வதற்க்காக எலக்சன் நடத்தினார்கள். இதில் கீழ் வரும் நபர்கள் பொறுப்பாளியாக தேர்வு செய்யப்பட்டார்கள். தலைவர்: மௌலவி A.ஆபிருத்தீன் மன்பஈ துணைத்தலைவர்: 1. மௌலவி மீரான் முஹைதீன் அன்வாரி 2. மௌலவி ஆதம் ஷஃபியுல்லாஹ் இல்ஹாமி பொதுச்செயலாளர்: மௌலவி M.S.ஷம்சுல் இக்பால் தாவூதி செயலாளர்: 1. மௌலவி j.இப்ராஹீம் மிஸ்பாஹி 2. மௌலவி k.அரசத் அஹமது அல்தாபி பொருளாளர்: மௌலவி R.M.முஹம்மது அபூபக்கர் சித்திக் ரஷாதி மாநில செயற்குழு உறுப்பினர்கள்: 1. மௌலவி செய்யது முஹம்மது உஸ்மானி 2. மௌலவி அப்துல் காதர் ஹசனி 3. மௌலவி முஹம்மது நாஃபி 4. மௌலவி நூர் முஹம்மது ரியாஜ் தாவூதி 5. மௌலவி முஹம்மது யஹ்யா தாவூதி 6. மௌலவி தமீமுல் அன்சாரி காஷிபி 7. மௌலவி செய்யது இப்ராஹீம் உஸ்மானி 8. மௌலவி முஹம்மது பைசல் மக்தூமி இந்த பொதுக்குழுவில் கீழ்காணும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம்:1 வக்பு வாரியத்தை முறைப்படுத்த வேண்டும். வக்பு சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். வக்பு வாரியத்திற்கு சேர்மன் நியமனம் செய்யவேண்டும்.என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் பல்வேறு போராட்டங்களும், ஆர்பாட்டங்களும் நடத்தி வருகின்றது ஆனால் இதுவரையிலும் தமிழக அரசு ஒரு முயற்சியை கூட எடுக்கவில்லை என்பது வேதனையான ஒன்று.வக்பு வாரியம் குறித்த முஸ்லிம்களின் கோரிக்கையை நடைமுறைப்படுத்த தமிழக அரசு உடனடியாக முன்வரவேண்டும். தீர்மானம்: 2 தமிழக நலனில் அக்கரை காட்டாமல் தொடர்ந்து பாரபட்சம் காட்டி வரும் மத்திய, அரசை கண்டிக்கிறோம். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுப் புறத்தையும் நாசக் காடாய் மாற்றிய வர்தா புயல் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி சென்றது தமிழக அரசு பிரதமரை சந்தித்து ஆயிரம் கோடி தமிழகத்திற்கு நிவாரணமாக தேவை கோரிக்கை வைத்தது ஆனால் அதற்க்கான முழுமையான எந்த ஒன்றையும் மத்திய அரசு வழங்க வில்லை விவசாயிகள் தங்களது வாழ்வாதார பிரச்சனைகளை முன்னிறுத்தி 22 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றார்கள் அனால் பிரதமர் அவர்களை முகம் கொடுத்து கூட பார்க்காமல் புறக்கணித்து வருகின்றார் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை ராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்டு வருகிறார்கள் இதனை கண்டித்து மத்திய அரசு சரியான நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்து வருகின்றது இதுபோன்று தமிழக நலனில் அக்கரை காட்டாமல் தொடர்ந்து பாரபட்சம் காட்டி வரும் மத்திய, அரசை கண்டிக்கிறோம். தீர்மானம்: 3 பாபர் மசூதியை கட்டி எழுப்புவதே நீதி! 500 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் அடையாள சின்னமாகவும் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலமாகவும் விளங்கி வரும் பாபர் மசூதி பாசிச பயங்கரவாதிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது அப்போதைய காங்கிரஸ் அரசால் நியமனம் செய்யபட்ட லிபர்ஹான் கமிஷன் 18 வருடம் கழித்து அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி உட்பட 67 நபர்கள் இந்த பாதக செயலுக்கு காரணம் என சொல்லியது ஆனால் அவர்கள் தண்டிக்கப்படவில்லை. முஸ்லிம்கள் நீதி மன்றத்தில் நீதியை எதிர்பார்த்தார்கள். அடுத்து 2009 ம் ஆண்டு செப்டம்பர் 3௦ ம்தேதி அலகாபாத் நீதி மன்றம் முஸ்லிம்களின் பூர்வீக சொத்தான பாபர் மசூதி நிலத்தை மூன்றாக பிரித்து ஒரு பங்கை முஸ்லிம்களிடத்தில் கொடுத்தது அப்போதும் இந்த முஸ்லிம்கள் உச்ச நீதி மன்றத்தை நாடி நீதியை எதிர் பார்த்தார்கள் ஆனால் இப்பொழுது நீதி மன்றம் நீதிமன்றத்திற்கு வெளியே இந்த பிரச்சனையை பேசி தீர்த்து கொள்ள சொல்வதில் என்ன அர்த்தம் உள்ளது என்பது புரிய வில்லை இத்தகைய அறிவிப்பு தேசத்தின் நீதியை அவமதிக்க கூடியதாக மாறிவிடும் எனவே உரிய நீதியை உச்ச நீதி மன்றம் வழங்க வேண்டும் லிபர்ஹான் சுட்டிக்காட்டிய குற்றவாளிகள் தண்டிக்கபடவேண்டும். தீர்மானம் -4 நமது இந்திய தேசம் பன்முகத்தன்மை கொண்ட மதசார்பற்ற அரசியலமைப்பு கொண்ட தேசம் இந்த தேசத்தில் வாழும் அனைவருக்கும் அவர்களன் விரும்பிய அடிப்படையில் மதத்தை பின்பற்ற ஷரத்து எண் 25 கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது ஆனால் அந்த சுதந்திரத்தை பறிக்கும் விதத்தில் மத்திய அரசு முஸ்லிம்களின் ஷரியத் சட்டமான முத்தலாக் விஷயத்தில் மூக்கை நுழைப்பது கண்டனத்திற்குரியது. இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும், மதசார்பற்றதன்மைக்கு எதிராகவும் செயல்படுவது தேசநலனிற்கு எதிரானது, தேசவளர்ச்சிக்கு எதிரானது எனவே மத்திய அரசு இத்தைகைய செயல்பாட்டினை விட்டுவிட்டு தேசத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்தவேண்டுமென கேட்டுக்கொள்கின்றது. தீர்மானம் – 5 விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு இந்தியாவின் முதுகுதண்டே விவசாயம் இன்றைய நமது உணவும்,நாளைய நமது சந்ததிகளின் உணவும்,விவசாயத்தின் மூலமே கிடைக்கப்பெறுகின்றது அத்தகைய விவசாயத்தை அழிக்கும் விதத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம் மீத்தேன் எரிவாயு திட்டம் என விவசாயத்தையும்,விவசாய நிலத்தயும்நாசமாக்கும் பல்வேறு திட்டத்தை நடைமுறைப்படுத்த எத்தனித்து வருகின்றது இதனை கண்டித்தும்,விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றது இத்தகைய போராட்டத்தை முழுமையாக வரவேற்பதுடன் இமாம்ஸ் கவுன்சில் ஆதரவையும் தெரிவித்து கொள்கின்றது மேலும் தமிழக நலனில் அக்கறையுள்ள அனைத்து கட்சிகளும் அமைப்புகளும்,ஆதரவையும்,ஒத்துழைப்பையும் வழங்குமாறு இந்த பொதுக்குழு கேட்டுகொள்கின்றது. மேற்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியில் மாநில செயலாளர் மௌலவி K.அர்ஷத் அஹமது அல்தாபி நன்றியுரை நிகழ்த்தினார்கள். இப்படிக்கு: மௌலவி A.R.செய்யது முஹம்மது உஸ்மானி மாநில செய்தி தொடர்பாளர் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ்நாடு


ஹுப்புன் நபி ஸல் (2016)ஷாகுல் ஹமீது பாகவி உரை


கடலூர் மாவட்ட ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் புதிய நிர்வாகிகள் தேர்வு

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் கடலூர் மாவட்ட பொதுக்குழு புதிய மாவட்ட மற்றும் வட்டார நிர்வாகிகள் தேர்தல் அல்லாஹ்வுடை மாபெரும் கிருபை யோடு மிகச்சிறப்பாக சேத்தியாத்தோப்பு பள்ளிவாசலில் இன்று 11-03-2017 நடைபெற்றது இதில் அடுத்த இரண்டு ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் மாவட்ட தலைவர் மௌலவி M.Y அப்துல் அலீம் சித்தீக்கி பாஜில் மன்பஈ மாவட்ட துனைத்தலைவர் மௌலவி P.முஹம்மது அப்துல் கனீ மன்பஈ மாவட்ட செயலாளர் மௌலவி R.A.முஹம்மது தய்யூப் பய்யாஜி மாவட்ட துனைச் செயளாளர் மௌலவி S.சலீமுத்தீன் மஃதனி மாவட்ட பொருளாளர் மௌலவி S. அலீ பாதுஷா காஷிஃபி தேர்வு செய்யப்பட்டார்கள்


திருவள்ளூர் மாவட்ட யூனிட் தேர்தல் மிகச்சிறப்பாக நடைபெற்றது

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் திருவள்ளூர் மாவட்ட யூனிட் தேர்தல் மிகச்சிறப்பாக நடைபெற்றது இதில் மாநில பொதுச்செயலாளர் மெளலவி J.முஹம்மது இப்ராஹீம் ஃபாஜில் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார் திருவள்ளூர் யூனிட் தலைவராக திருவள்ளூர் படே மக்கான் பள்ளி வாசல் இமாம் ஹாபிழ் S.கலீலுர்ரஹ்மான் ஹஜ்ரத் அவர்களும் செயலாளராக திருவள்ளூர் சின்ன பள்ளி வாசல் இமாம் மெளலவி ஹாபிழ் I.ஹிதாயத்துல்லாஹ் யூசுஃபி ஹஜ்ரத் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்


நெல்லை மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் நெல்லை கிழக்கு யூனிட் தேர்தல் இன்று 25.3.17 மேலப்பாலையத்தில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில செயற்குழு உறுப்பினர் மெளலவி அப்பாஸ் நாஃபிஈ ஹஜ்ரத் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது மேலப்பாளையம் யூனிட் தலைவராக மதரஸா இர்ஃபானுல் ஹுதா அரபிக்கல்லூரின் முதல்வர் மெளலவி ஹாபிழ் மீரான் முஹைதீன் அன்வாரி ஹஜ்ரத் அவர்களும் செயலாளராக மெளலவி ஹாபிழ் காஜா நிஜாமுதீன் தாவூதி ஹஜ்ரத் அவர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள்


கோவை மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் புதிய நிர்வாகிகள் தேர்தல் தேசம் முழுவதும் நடை பெற்று வருகின்றது அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தின் அடுத்த இரண்டு ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்   மாவட்ட தலைவர் மௌலவி M.S. ஷம்சுல் இக்பால் தாவூதி   மாவட்ட துணைத்தலைவர் :மௌலவி M.S. அபூபக்கர் சித்திக் சிராஜி   மாவட்ட செயலாளர்: மௌலவி R.M.சுல்தான் இம்தாதி   மாவட்ட துணைச்செயலாளர்: மௌலவி A.செய்யது இப்ராஹீம் புகாரி   மாவட்ட பொருளாளர்: மௌலவி M.S. முஹம்மது இப்ராஹிம் உலூமி


 • எம்மைப் பற்றி

  சமுதாயத்தின் வழிகாட்டிகளான இமாம்களை ஒன்றிணைத்து சக்தி படுத்துவதின் மூலம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வலிமைப்படுத்து எமது நோக்கமாகும்.

 • தொடர்பு கொள்ள

  எங்களை தொடர்புகொள்ள கீழ்காணும் தொலைபேசி அல்லது மினஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

  (+91) 9894603500

  info@imamscounciltn.com

 • Recent Menu