புனித குர்ஆன்

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.  (1:1)


الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.  (1:2)


الرَّحْمَٰنِ الرَّحِيمِ

(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).  (1:3)


مَالِكِ يَوْمِ الدِّينِ

(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.  (1:4)


إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ

நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!  (1:5)


اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ

(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.  (1:6)


صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

(அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.  (1:7)


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ الم

அலிஃப், லாம், மீ;ம்.  (2:1)


ذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ ۛ فِيهِ ۛ هُدًى لِلْمُتَّقِينَ

இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;, இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.  (2:2)


الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ

(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்.  (2:3)


 • எம்மைப் பற்றி

  சமுதாயத்தின் வழிகாட்டிகளான இமாம்களை ஒன்றிணைத்து சக்தி படுத்துவதின் மூலம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வலிமைப்படுத்து எமது நோக்கமாகும்.

 • தொடர்பு கொள்ள

  எங்களை தொடர்புகொள்ள கீழ்காணும் தொலைபேசி அல்லது மினஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

  (+91) 9894603500

  info@imamscounciltn.com

 • Recent Menu