மதரஸாவை மூட முயற்சி! தேனி காவல்துறையும்,சமூக நலத்துறையும் யாருடைய தூண்டுதலால் வேலை செய்கிறது?

 

மதரஸாவை மூட முயற்சி!
தேனி காவல்துறையும்,சமூக நலத்துறையும் யாருடைய தூண்டுதலால் வேலை செய்கிறது?
இமாம்ஸ் கவுன்சில் மாநில செயலாளர் மௌலவி அபுபக்கர் சித்திக் ரஷாதி கேள்வி?

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில செயலாளர் மௌலவி அபூபக்கர் சித்திக் ரஷாதி அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கையில் தேனீ மாவட்டம் பெரியகுளத்தில் சுமையா பெண்கள் மதரசா என்ற பெயரில் இஸ்லாமிய மார்கத்தை போதிக்கும் பெண்கள் மதரசாவும்,பெண்களின் காப்பகமும் நடைபெற்று வருகின்றது இதில் பல நூறு பெண்கள் படித்து தங்களுடைய வாழ்கையை ஒழுக்கமான முறையில் இஸ்லாமிய மார்கத்தை கடைபிடித்து வருகின்றனர்

இந்த மதரசாவின் மீது அவதூறு ஏற்படுத்தும் விதமாகவும்,மக்களுக்கு மத்தியில் பதற்றத்தை உண்டு பண்ணும் விதமாகவும் நேற்றைய தினம் காலையிலிருந்தே காவல்துறை குவிந்து மக்களை பீதியில் ஆழ்த்தினார்கள் எதற்காக இந்த திடீர் நடவடிக்கை? இந்த தேசத்தில் முஸ்லிம்கள் தாங்கள் சார்ந்த மார்கத்தை சொல்லி கொடுக்க கூட உரிமையில்லையா?

காவல் துறையும் சமூக நலத்துறையும் மக்களுக்கு சேவை செய்வதற்காக உள்ளதா?அல்லது சமூக அமைதியை சீர்கெடுக்க நினைக்கும் சமூக விரோதிகளுக்கு சேவை செய்யவா? காவல்துறை மற்றும் சமூக நலத்துறையின் நடவடிக்கையில் பலத்த சந்தேகங்கள் எழுகின்றது.

இஸ்லாமிய சட்டதிட்டங்களை கற்றுக்கொடுக்கும், ஒழுக்க விழுமியங்களை போதிக்கும் மதரசாக்களை சுதந்திரமான முறையில் நடத்துவதற்கு இடையூறாக இருந்தால் இந்த தேசத்தில் நீதியின்பால் ஒன்றினையக்கூடிய அனைவரயும் அணிதிரட்டி ஜனநாயக அடிப்படையில் நீதி கிடைக்கும் வரை போராடுவோம் . என தனது அறிக்கையில் கூறினார்.

மௌலவி செய்யது முஹம்மது உஸ்மானி 
மாநில செய்தி தொடர்பாளர் 
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ் நாடு

You need to login to Post a comment
 • எம்மைப் பற்றி

  சமுதாயத்தின் வழிகாட்டிகளான இமாம்களை ஒன்றிணைத்து சக்தி படுத்துவதின் மூலம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வலிமைப்படுத்து எமது நோக்கமாகும்.

 • தொடர்பு கொள்ள

  எங்களை தொடர்புகொள்ள கீழ்காணும் தொலைபேசி அல்லது மினஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

  (+91) 9894603500

  info@imamscounciltn.com

 • Recent Menu