மாபெரும் வக்பு மீட்பு ஆர்பாட்டம்

 

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பில் இன்று 28-09-2016 காலை 10:00 am மணிக்கு தமிழகம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்பு சொத்துக்களை உடனடியாக மீட்டெடு, வக்பு வாரியத்தை முறைப்படுத்தி வக்பு சொத்துக்களை முஸ்லிம் சமூகத்திற்கு முழுமையாக பயன்படுத்து என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில தலைவர் மௌலவி Dr.A.ஆபிருத்தீன் மன்பஈ அவர்கள் தலைமை தாங்கினார்கள். மாநில பொதுச்செயலாளர் மௌலவி J.முஹம்மது இப்ராஹிம் மிஸ்பாஹி வரவேற்புரை நிகழ்த்தினார்கள்  இதில் சிறப்பு அழைப்பாளராக தேசிய பொதுச்செயலாளர் மௌலவி A.ஷாகுல் ஹமீது பாகவி அவர்களும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் ஜனாப் A.காலித் முஹம்மது B.com B.L அவர்களும் மற்றும் SDPI கட்சியின் மாநில செயலாளர் ஜனாப் S.அமீர் ஹம்ஸா ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள் மேலும் அதிகமான ஆலிம்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு செயல்படாத வக்பு வாரியத்தை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.

தேசிய பொதுச்செயலாளர் மௌலவி A.ஷாகுல் ஹமீது பாகவி அவர்கள் பேசும் போது இந்தியா முழுவதும் பல லட்சம் ஏக்கர் வக்பு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டும், பராமரிப்பு இல்லாமல் வீணடிக்கப்பட்டும், இருக்கின்றது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் வக்பு கட்டிடங்கள் மிக குறைந்த வாடகைக்கு பெரும் பண முதலைகளின் கைகளில் உள்ளது. இது மட்டுமல்லாமல் வக்பு இடங்களில் அதிகமானவை ஆக்கிரமிக்கபட்டு தவறாக பயன்படுத்தப்படுகின்றது. வக்பு சம்பந்தமாக தகவல் உரிமை சட்டத்தில் கீழ் எந்த எந்த ஊரில் எத்துனை வக்பு நிலங்கள் உள்ளது? அது எவ்வாறு பராமரிக்கப்படுகின்றது? என்ற தகவலை கேட்டால் அதற்க்கான சரியான பதில் இதுவரையிலும் தரப்படவில்லை வில்லை அது பற்றிய தகவல்கள் எங்களிடத்தில் இல்லை என்று பதில் தருகிறார்கள் இந்த நிலையை தமிழக அரசு மாற்றவேண்டும் வக்பு சொத்துக்கள் முறைப்படுத்த படவேண்டும் அதன்மூலம் வரும் வருமானத்தை முஸ்லிம் சமூகத்திற்கே முறையாகவும்,முழுமையாகவும் பயன்படுத்தவேண்டும் வேண்டும் என்று கூறினார்.

இறுதியில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில செயலாளர் மௌலவி R.M.அபூபக்கர் சித்திக் ரஷாதி நன்றியுரையுடன் ஆர்பாட்டம் நிறைவுற்றது.

 

     இப்படிக்கு:

மௌலவி A.R.செய்யது முஹம்மது உஸ்மானி

       மாநில செய்தி தொடர்பாளர்

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ்நாடு

You need to login to Post a comment
 • எம்மைப் பற்றி

  சமுதாயத்தின் வழிகாட்டிகளான இமாம்களை ஒன்றிணைத்து சக்தி படுத்துவதின் மூலம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வலிமைப்படுத்து எமது நோக்கமாகும்.

 • தொடர்பு கொள்ள

  எங்களை தொடர்புகொள்ள கீழ்காணும் தொலைபேசி அல்லது மினஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

  (+91) 9894603500

  info@imamscounciltn.com

 • Recent Menu