முன்னேற்பாடும் முஸ்லிம் உம்மத்தும்

முன்னுரை:

யா அல்லாஹ் ரஜப் மாதத்திலும் ஷாபான் மாதத்திலும்  பரக்கத் செய்வாயாக  ரமலான் மாதத்தை எங்களுக்கு அடையச்செய்வாயாக! இந்த துஆவை அதிகமாக இந்த மாதத்தில் கேட்போம் நாமும் அதிகமாக ஓதுவோம். இந்த துஆ நமக்கு பல செய்திகளை சொல்லி கொடுத்தாலும் மிக முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயம் மிகபெரும் நன்மைகளை அள்ளித்தரும் ராமலானிர்க்காக முன்னமே தயாரிப்பு நம்மிடம் வேண்டும் அதற்க்கான திட்டமிடுதல் மிகவும் முக்கியமானது அவ்வாறு திட்டமிடாமல் இருப்பது ரமலானை வீணாக்கி விடுவதற்கு காரணமாகிவிடும் இன்று நம்மில் பலநபர்கள் முன்னமே அதற்க்கான ஏற்பாடுகள் செய்யாததின் விளைவே ரமலானை வீணாக்கி விடுகிறார்கள்

முன்னேற்பாடு என்பது வெறுமன ரமலானுக்கு மட்டுமல்ல மாறாக நமது வாழவின் எல்லா நிலையிலும் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான ஒன்று இஸ்லாம் அனைத்திலும் திட்டமிடுதலை வலியுறுத்துகின்றது நமது வாழ்வில் ஒவ்வொரு செயலுக்கும் முன்பாக  திட்டமிடுதல் வேண்டும் அவ்வாறு செய்யாத போது மிகப்பெரும் பாதிப்பை இந்த சமூகம் சந்திக்கும்.

இஸ்லாம் வலியுறுத்தும் முன்னேற்பாடு

 1.  ரமாலன்

நம்மை நோக்கி மிக சமிபத்தில் இருக்கும் ரமலானை முதலில் பார்போம்

ரமலானின் சிறப்புகள்

v  நரகத்தின் கதவுகள் மூடப்படும். அதில் ஒரு கதவும் திறந்திருக்காது.(திர்மிதீ)

v  சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும், அதில் ஒரு கதவும் மூடப்பட்டிருக்காது. (திர்மிதீ)

v  ரமளான் (மாதம்) வந்துவிட்டால் அருள்களின் வாசல்கள் திறக்கப்படுகின்றன.(நஸயீ)

v  ரமளான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜின்களுக்கும் விலங்கிடப்படும்.(திர்மிதீ)

v  ஒரு இறை அழைப்பாளர் “நன்மை செய்பவர்களே! முன் வாருங்கள், பாவம் செய்பவர்களே! நிறுத்திக் கொள்ளுங்கள்!” என்று உரக்கச் சொல்வார். (திர்மிதீ)

v  அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும்.(புகாரி)

v  நோன்பு மாதத்தில் உம்ராச் செய்வது ஹஜ் செய்வதற்குச் சமமாகும். (நஸயீ)

v  ஆயிரம் மாதங்களை விட மகத்துவமிக்க ஓர் இரவு (லைலத்துல் கத்ர்) இம்மாதத்தில் தான் இருக்கிறது.

v  ரமலானின் கடைசி இரவில் நோன்பாளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படுகின்றது

v  ரமலானின் ஒவ்வொரு இரவிலும் அல்லாஹ் நரகிலிருந்து சிலரை விடுதலை செய்கின்றான். (இப்னுமாஜா)

 இத்தகைய சிறப்புகள் இருப்பதினாலே நபி ஸல் அவர்கள் இரண்டு மாதத்திற்கு முன்பே அதற்க்கான திட்டமிடுதலை செய்கிறார்கள்

முன்னேற்பாடு செய்யாததின் விளைவு

காலம் முழுவதும் நோற்றாலும் ஈடாகாது 

அல்லாஹ் அனுமதித்த காரணங்களின்றி எவர் வேண்டுமென்றே ரமழானின் ஒரு நோன்பை விட்டாலும் அதற்குப் பகரமாக காலம் முழுதும் நோன்பு நோற்றாலும் அதற்கு ஈடாகாது. ஆதாரங்கள்: அபூதாவூத்,திர்மிதி, இப்னுமாஜ்ஜா

வேண்டுமென்றே நோன்பை முறிப்பவர்

வேண்டுமென்றே நோன்பை முறிப்பவர்கள் அந்த நோன்புக்கு ஈடாக ஒரு அடிமையை விடுதலை செய்யவேண்டும். இயலாதவர்கள் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்கவேண்டும். அதற்கும் இயலாதவர்கள் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

என்னிடம் வானவர் ஜிப்ரயீல் (அலை) வருகை தந்தார். வந்தவர், “யார் ரமலான் மாதத்தை அடைந்தும் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட வில்லையோ அவர் நரகம் நுழைவார்; அல்லாஹ்வின் அருளை விட்டும் அவர் தூரமாகிவிடட்டும்” எனக் கூறிவிட்டு, ”ஆமீன்” கூறுங்கள் என்றார். எனவே, நான் முதல் முறை “ஆமீன்” கூறினேன்.

முன்னேற்பாடுகள் குறித்த சிறிய ஆலோசனைகள்

இத்தகைய நன்மைகளை இழந்துவிடாமல் இருக்க நாம் கட்டாயம் முன் திட்டதீட்ட வேண்டியது அவசியம்.

 1.  நோன்பிற்கு இடையூறு வராதவண்ணம் நமது வேலைகளை மாற்றி அமைத்தல்
 2.  ராமலன் முழுவதும் நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்ற ஷெடியூல் நாள் கணக்கிலும்,மணிக்கணக்கிலும் தயார் செய்ய வேண்டும்
 3.  வீட்டிற்கு பெயிண்டிங் பெருநாளிற்கு செய்யும் வழக்கம் இருந்தால் அதனை ரமலான் மாதம் வருமுன்னே முடித்து விடவேண்டும்
 4.  புதிய ஆடைகள் நமக்கும் நம்முடைய குழந்தைகளுக்கும் மற்றும் நம்முடைய பொறுப்பில் உள்ள நபர்களுக்கும் இப்போதே (ரமலான் மாதம் வருமுன்னே)எடுத்தது தைப்பது உள்ளி ட்ட அனைத்தையும் முடித்து விடவேண்டும்
 5.  ஜகாத்,சதக்கா செய்வதற்கான முன்னேற்பாடுகளை செய்துவிடுதல் அவசியம்

மொத்தத்தில் ரமலானின் ஒருநிமிடத்தை கூட நாம் அறிந்து வீணடித்து விடக்கூடாது

முன்னேற்பாட்டில் உடல் ஆரோக்கியம்

பொதுவாகவே, இன்று நோய்கள் பெருகிவிட்டது. முஸ்லிம் சமூகத்தைத் தாண்டி வெகுவாக மனித சமூகம் அனைத்தும் மருத்துவமனை வாழ்க்கைக்கு பழகிப் போய் விட்டது.

தமிழகத்தில் மருத்துவக்கல்லூரியுடன் இணைந்த பெரிய அரசு மருத்துவமனைகள் 28, இதர அரசு மாவட்ட மற்றும் தாலுக்கா மருத்துவமனைகள் 388, இது தவிர்த்து கிராம, பஞ்சாயத்து அரசு மருத்துவமனைகள் ஏராளம் இருக்கின்றன.

இவையெல்லாம் போக ஆயிரக்கணக்கான தனியார் மருத்துவமனைகள், இது போக தமிழ்நாட்டில் 1,047சித்தா மருத்துவமனைகளும், 100 ஆயுர்வேதா மருத்துவமனைகளும், 65 யுனானி மருத்துவமனைகளும், 107ஓமியோபதி மருத்துவமனைகளும், 56 யோகா மற்றும் இயற்கை மருத்துவமனைகள் என மொத்தம் 1,375மருத்துவமனைகள் செயல்படுகின்றன.

அதிகம் கவனிக்கப்படாத சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி மருத்துவமனைகளில் ஓராண்டில் சிகிச்சைப் பெற்றவர்களின் புள்ளி விபரத்தைப் பாருங்கள். அதிர்ச்சி அடைந்து விடுவோம்.

கடந்த 2013-14-ம் ஆண்டின் படி, சித்தா மருத்துவமனையில் 3 கோடியே 46 லட்சத்து 50 ஆயிரத்து 874 பேர் புறநோயாளிகளாகவும், 2 லட்சத்து 98 ஆயிரத்து 510 பேர் உள்நோயாளிகளாகவும், ஆயுர்வேதா மருத்துவமனையில் 21 லட்சத்து 87 ஆயிரத்து 132 பேர் புறநோயாளிகளாகவும், 46 ஆயிரத்து 886 பேர் உள்நோயாளிகளாகவும், யுனானி மருத்துவமனையில் 5 லட்சத்து 62 ஆயிரத்து 327 பேர் புறநோயாளிகளாகவும், 19 ஆயிரத்து 529 பேர் உள்நோயாளிகளாகவும், ஓமியோபதி மருத்துவமனையில் 29 லட்சத்து 80 ஆயிரத்து 699பேர் புறநோயாளிகளாகவும், 26 ஆயிரத்து 921 பேர் உள்நோயாளிகளாகவும், யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் 8 லட்சத்து 58 ஆயிரத்து 91 பேர் புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை மருத்துவமனைகளில் மொத்தம் 4கோடியே 16 லட்சத்து 30 ஆயிரத்து 969 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

புள்ளி விபரம் இப்படியானால், அலோபதி மருத்துவம் பார்த்தவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்துப் பார்த்தால் நடமாடுகிறவர்களில் எவருமே நோய்களை விட்டும் தப்பியதில்லை என்கிற முடிவுக்கு வந்து விடலாம்.

இதில் முஸ்லிம் சமூகத்தின் பங்கு சொல்ல முடியாதது ஆரோக்கியம் குறித்து இஸ்லாம் அதிகம் வலியுறுத்துகின்றது இன்று நமது சமூகம் அனைத்து விஷயத்திலும் குறிவைக்கப்படுகின்றது அதனை எதிர் கொள்வதற்கு உடல் வலிமையையும் மனவலிமையும் அவசியாமான சூழலில் நோயாளியாக கிடந்தோம் என்றால் வலிமையான நமது எதிரியை நம்மால் எவ்வாறு எதிர்கொள்ள முடியும்

وَمَا بِكُمْ مِّنْ نّـِعْمَةٍ فَمِنَ اللّٰهِ‌ ثُمَّ اِذَا مَسَّكُمُ الضُّرُّ فَاِلَيْهِ تَجْئَرُوْنَ‌ۚ‏ 

16:53. மேலும், எந்த நிஃமத் (பாக்கியம்) உங்களிடம் இருந்தாலும் அது அல்லாஹ்விடமிருந்து உள்ளதேயாகும்; பின்னர் ஏதாவது ஒரு துன்பம் உங்களைத் தொட்டு விட்டால் அவனிடமே (அதை நீக்குமாறு பிரலாபித்து) நீங்கள் முறையிடுகிறீர்கள்.

 

வஹப் இப்னு முநப்பஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “அல்லாஹ்வின் அருட்கொடைகளில் மிக உன்னதமானது மூன்று அருட்கொடைகளாகும். 1. இஸ்லாம் எனும் அருட்கொடை அது இல்லை எனில் வெறெந்த அருட்கொடைகளும் ஓர் அடியானுக்கு பூர்த்தியாக இருக்காது. 2. ஆரோக்கியம் எனும் அருட்கொடை அது இல்லை என்றால் மனித வாழ்வு அழகு பெறாது. 3. பொருளாதாரம் எனும் அருட்கொடை அது இல்லை என்றால் மனித வாழ்க்கை பூரணம் அடையாது”.

மஸ்ஜித்துன் நபவீயின் மிம்பரில் நின்று பிரசங்கம் செய்து கொண்டிருந்த ஃகலீஃபா அபூபக்ர் (ரலி)அவர்கள் “நீங்கள் லாயிலாஹா இல்லல்லாஹீ என்ற வார்த்தைக்குப்பிறகு ஆரோக்கியத்தைத்தவிர வேறு எதனையும் உங்களுக்குச் சிறந்த ஒன்றாக வழங்கப்பட வில்லை. எனவே, நீங்கள் அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தை கேளுங்கள்! என்று இதே போன்றதொரு நாளில், இதே மின்பரில் நின்று நபி {ஸல்} அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன் என்று கூறிய அபூபக்கர் சித்தீக் (ரலி)­ அவர்கள் மாநபி {ஸல்} அவர்களின் நினைவு சூழ்ந்து கொள்ளவே அழுதார்கள். ( நூல்: முஸ்னத் அபூ யஃலா, நஸாயீ  )

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِمِنْ الْمُؤْمِنِ الضَّعِيفِ

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “உடல் பலகீனமான இறை நம்பிக்கையாளரை விட ஆரோக்கியமான, பலம் நிறைந்த இறைநம்பிக்கையாளரே சிறந்தவரும், அல்லாஹ்வுக்கு அதிக விருப்பமானவரும் ஆவார்” என மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                            ( நூல்: திர்மிதீ )

 

 8:60. அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும்,திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்;அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது.

இந்தளவிற்கு உடல் ஆரோக்கியம் குறித்து இஸ்லாம் வலியுறுத்தும் போது நமது சமூகம் அதில் கவனம் செலுத்துவதே இல்லை ஆரோகியமான எந்த ஒரு பயிற்சியையும் கற்று கொடுப்பதில்லை

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்:

“உங்கள் குழந்தைகளுக்கு நீச்சல், அம்பெறிதல், குதிரையேற்றம் ஆகியவைகளைக் கற்றுக்கொடுங்கள்.”

நாம் நமது குழந்தைகளின் மீது அதிக பற்று உள்ள நபர்களாக இருந்தால் அவர்களின் ஆரோக்கிய எதிர்காலத்திற்கு நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுப்பது பெற்றோர்களின் மீது அவசியம் கடமையாகும்.

இதில் கவனம் செலுத்தலாமே

 1.  நீச்சல்
 2.  அம்பு எறிதல்
 3.  கராத்தே, குங்ஃபு, களரி
 4.  கால்பந்து
 5.  கைப்பந்து
 6.  கபடி
 7.  ஓட்டப்பந்தயம்
 8.  டென்னிஸ்

இதுபோன்ற அதிகமான அரோக்கியமான விளையாட்டுகள் உள்ளன இதில் ஏதாவது ஒன்றில் நமது குழந்தைகளை தேர்ச்சி பெற்றவர்களாக மாற்றுவதற்கு முயற்சி செய்யலாம்.

முன்னேற்பாட்டில் கவனம் செளுத்தவேண்டியவை பொருளாதாரம்

நமது சமூகம் பொருளாதரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது  வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் இஸ்லாம் நம்மை பொருளாதரத்தை சேமிப்பதற்கு எந்த தடையும் விதிக்க வில்லை ஆனால் நாம் ஒரு குறுகிய எண்ணத்துடன் வாழ்ந்து நமது பிள்ளைகளை யாசகம் கேட்கும் நிலைக்கு ஆளாக்கி விடுகின்றோம் இது ஆரோக்கியமான நிலை இல்லை என்பதை புரிந்து பொருளாதரத்தை சேர்பதில் கவனம் செலுத்த வேண்டும்

62:9. ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள்அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.

 

62:10. பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்துவெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்;அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள்.

 

இந்த வசனத்தில் தொழுகைக்கு முன்னும் பின்னும் அல்லாஹ் பொருளாதரத்தை தேடச் சொல்கின்றான் நாமும் நமது சந்ததிகளை யாசகம் கேட்கும் நிலைக்கு மாற்றாமல் முடிந்த அளவு பொருளாதாரத்தை சேர்த்து வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்

 

தனக்கு ஒரேயொரு மகள் உள்ள நிலையில் அவரும் செல்வ செழிப்புடன் உள்ள நிலையில் தனது சொத்தை இறைவழியில் செலவு செய்வது பற்றிய தீர்ப்பைஸஅது பின் அபீவக்காஸ்(ரலி) கேட்கிறார்கள்.

'இறைத்தூதர் அவர்களே! என் செல்வம் முழுவதையும் நான் மரணசாசனம் செய்து விடட்டுமா?' என்று கேட்டேன். அவர்கள், 'வேண்டாம்" என்று கூறினார்கள். நான், 'அப்படியென்றால் (என் செல்வத்தில்) பாதியை மரண சாசனம் செய்து விடட்டுமா?' என்று கேட்டேன். அதற்கும், 'வேண்டாம்" என்றே பதிலளித்தார்கள். நான், 'மூன்றிலொரு பங்கை(யாவது மரண சாசனம் செய்து விடட்டுமா?)" என்று கேட்டேன். அவர்கள், 'மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கே அதிகம் தான். நீங்கள் உங்கள் வாரிசுகளைத் தன்னிறைவுடையவர்களாகவிட்டுச் செல்வது, அவர்களை மக்களிடம் கையேந்தும்படி ஏழைகளாகவிட்டுச் செல்வதை விட நல்லதாகும். நீங்கள் செய்த (நல்ல) செலவு எதுவாயினும் தருமமேயாகும். நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் இடுகிற ஒருகவளம் (உணவு) கூட (தருமமேயாகும்.) அன்று அவருக்கு ஒரு மகளைத் தவிர வேறு (நேரடி வாரிசுகள்) யாரும்இருக்கவில்லை. (புகாரி பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2742 )

ஒருவன் தன் சொத்தில் தன் வாரிசுக்கு கிடைக்க வேண்டிய பங்கை கிடைக்காமல் செய்து இழப்புக்குள்ளாக்கி விட்டால் அல்லாஹ் தீர்ப்பு நாளில் சுவனத்தில் அவனுக்குரிய பங்கை இழக்க செய்து விடுவான் என்று நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள். (அனஸ்(ரலி) அறிவிக்கும் இந்த செய்தி இப்னுமாஜாவில் இடம் பெறுகின்றது.

 

முன்னேற்பாட்டில் மறுமை வாழ்வு

நாம் அதிகமாக முன்னேற்பாடு செய்ய வேண்டியது மருமைக்காகத்தான் அதுதான் நிரந்தரம் இந்த உலகம் அற்பமானது அழிந்துவிடக் கூடியது அதற்க்கு முன்னேற்பாடு செய்யாமல் சென்றால் நாம் மிகப்பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிவரும்

عن أبي يعلى شداد بن أوس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال : " الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله الأماني

ஹஜ்ரத் அபூ யாஃ லா ஷத்தாது பின் அவுஸ் [ரலி] அறிவிக்கிறார்கள்.. அறிவாளி , தன் மனத்தை கணக்குக் கேட்டும், மரணத்திற்கு பின்னுள்ள வாழ்விற்காக செயல்பட்டும் வருகிறானோ அவனேயாவான் .

الدنيا مزرعة الاخرة

இம்மை மறுமையின் விளைநிலம் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்

முடிவுரை: நமது வாழ்வின் ஒவ்வொரு செயலகளையும் திட்டமிட்டு முன்னேற்பாடுடன் செய்யவேண்டும் அதுதான் நமது இந்த உலக வாழ்விற்கும் மறுமை வாழ்விற்கும் சிறந்தது. இறுதியாக நபி ஸல் அவர்கள் கூறியதை முன்னேற்பாடுடன் நிறைவேற்றுவோம்

 

عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله (صلى الله عليه وسلم) لرجل وهو يعظه : " اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك

أخرجه الحاكم في المستدرك رقم ( 7846 ) 4 / 341

 

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் உபதேசம் செய்யுமாறு வேண்டி நின்ற ஒருவரிடம் ”ஐந்து வருவதற்கு முன்பாக ஐந்து அம்சங்களைப் பேணிக் கொள்ளுங்கள்!

1) முதுமை வருவதற்கு முன் உள்ள வாலிபம்

2) வறுமை வருவதற்கு முன் உள்ள செல்வம்

3) நோய் வருவதற்கு முன் உள்ள ஆரோக்கியம்

4) வேலை வருவதற்கு முன் உள்ள ஓய்வு

5) மரணம் வருவதற்கு முன் உள்ள வாழ்வு”. என மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்..                                       ( நூல் : முஸ்னத் ஹாக்கிம் )

You need to login to Post a comment
 • எம்மைப் பற்றி

  சமுதாயத்தின் வழிகாட்டிகளான இமாம்களை ஒன்றிணைத்து சக்தி படுத்துவதின் மூலம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வலிமைப்படுத்து எமது நோக்கமாகும்.

 • தொடர்பு கொள்ள

  எங்களை தொடர்புகொள்ள கீழ்காணும் தொலைபேசி அல்லது மினஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

  (+91) 9894603500

  info@imamscounciltn.com

 • Recent Menu