திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு குர்ஆன் வகுப்பு
ஒரே நாளில் குர்ஆன் கற்போம் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மகத்தான நிகழ்ச்சி
இமாம்கள் சக்தி பெறுவோம்! சமூகத்தை சக்தி படுத்துவோம்!!
என்கிற உன்னத முழுக்கத்தொடு பயணிக்கும் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்
அல் ஹம்துலில்லாஹ்
திருவள்ளூர் மாவட்ட AIIC
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் சார்பில் ஓரே நாளில் குர்ஆன் கற்போம் நிகழ்ச்சி திருத்தணி இஸ்லாம் நகர் அஹ்மத் பின் ஹன்பல் பள்ளிவாசலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது
இதில் ஆரம்பமாக ஹாபிழ் காரி யூசுப் ஹஜ்ரத் அவர்கள் கிராஅத் ஓதினார்
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மகத்தான பணிகளை மக்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எடுத்துரைத்தார்
மாநில செயலாளர் மெளலவி J முஹம்மது இப்ராஹிம் ஃபாஜில் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள்🕌"ஓரே நாளில் குர்ஆன் கற்போம்"🕌 பாடத்தை சாமானிய மக்களுக்கு நடத்தினார்
அல் ஹம்துலில்லாஹ்
அனைத்து மக்களுக்கும் அல்லாஹ் திருக்குர்ஆன் எந்த அளவுக்கு இலகு என்பதை காட்டித்தந்தான்
அனைத்து மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி நாங்கள் இனி அல்லாஹ்விடம் பேசுவோம் என்று உறுதியளித்து சென்றார்கள்
அல் ஹம்துலில்லாஹ்
திருத்தணி இஸ்லாம் நகர் பள்ளி வாசல் இமாம் மெளலவி ஹாபிழ் முஹம்மது இலியாஸ் ஹஜ்ரத் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்
இறுதியில்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மெளலவி ஹாபிழ் H. அப்துல் காதிர் ஜைனி ஹஜ்ரத் அவர்கள் துஆவோடு கூட்டம் நிறைவுற்றது
You need to login to Post a comment