நம்பிக்கையான எதிர்காலத்திற்கு நபிகளாரே முன்மாதிரி

நம்பிக்கையான எதிர்காலத்திற்கு நபிகளாரே முன்மாதிரி

நிராசைகளையும்,அவநம்பிக்கைகளையும் நோக்கிநகர்ந்து கொண்டிருக்கும் சமகால முஸ்லிம் சமூகத்திற்கு நபிகளார்{ஸல்} அவர்களது வாழ்வு எவ்வாறெல்லாம் நம்பிக்கை ஊட்டுகிறது அதற்கான வழிகள்என்னென்ன என்பதை பகிர்ந்து கொள்வதே இந்தஜும்மா உரையின் நோக்கம் ஆகும்.

நமது தேசத்தில் பாசிச  சங்கப் பரிவார சக்திகளின் அழிச்சாட்டியம்  நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது அதுவும் அவர்களது அனைத்து அஜண்டாக்களும் முஸ்லிம்களை முன்னிறுத்தியே அமைகின்றது இதற்காக அரசு இயந்திரங்கள் இயன்றளவு பயன்படுத்தப்படுகின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தேசத்தில் வாழும் இஸ்லாமியர்கள் மனோநிலை அச்சத்திலும் அவநம்பிக்கைகளிலும் அதிகப்படுத்திக் கொண்டே இருக்கிறது.  ஷரியத்திற்கு  எதிரான நடவடிக்கைகளை எதிர் கொள்வதில் கூட அனுசரிப்பு மனப்பான்மை வளர்ந்து வருகின்றது இக்கட்டான சூழலுக்கு இறுதி தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வளமான வாழ்வியலை அவர்கள் பிறந்த மாதத்தில் ஆய்வு செய்து அதில் கிடைக்கும் படிப்பினைகளையும் பாடங்களையும் நடைமுறைப்படுத்துவது இறைநம்பிக்கையாளர்கள் ஒவ்வொருவரின் மீதும் அதி முக்கிய கடமையாகும்.

பெருமானார் {ஸல்} அவர்களது வாழ்வில் பிரச்சனைகளும், தீர்வுகளும், 

அண்ணலார்{ஸல்} அவர்களது வாழ்வு ஆதி முதல்   அந்தம் வரை பிரச்சனைகள் நிறைந்ததாக  காணப்பட்டது. ஆனால் அவற்றையெல்லாம் அண்ணலார் எவ்வாறு எதிர்கொண்டு தீர்வுகண்டார்கள் என்பது  ஏககாலத்திற்கானமுன்மாதிரியாகும்.

 சத்திய பாதையில் பயணிக்கும் சமூகங்களுக்கு கடல் அலைகள் போன்று ஒன்றன்பின் ஒன்றாக பிரச்சனைகளும் சோதனைகளும் வந்து கொண்டேதான் இருக்கும் இதனை நமக்கான நல்லதொரு வாய்ப்பாக கருதவேண்டுமே தவிர  நமக்கு ஏற்பட்டுள்ள தடைக்கற்களாக எண்ணிவிடக்கூடாது எப்படி காற்றின் அழுத்தத்தால் பாய்மரக்கப்பல் கடலில்பயணிக்குமோ அதுபோல வேசாதனையான வாழ்க்கை பயணத்திற்கு பிரச்சனைகள் எனும்காற்று மிகவும் அவசியமானதே!

 காற்றுக்கு ஆங்கில வார்த்தை AIR  என்பதாகும் AIR  என்ற வார்த்தைக்கு ஃபுல் ஃபார்ம் இப்படியும் குறிப்பிடுகிறார்கள் ஐ அம் ரெடி am I ready நான் தயாராக இருக்கிறேன் நான் எதற்கும் தயார் என்கின்ற மனப்பான்மை ஏந்தல் நபியிடம் எப்போதும் இருந்த காரணத்தினாலேயே எண்ணற்ற பிரச்சினைகளிலும் எண்ணிலடங்கா சாதனைகளை நிகழ்த்த முடிந்தது. எனவே பிரச்சினையின் போது நபிகளார் கடைப்பிடித்த பண்புகளை பற்றிப் பிடித்து நடந்தால் நம்பிக்கையான எதிர்காலத்தை நம்மாலும் பெற்றிட முடியும் என்பதை ஆள்  மனதில் நிறுத்த வேண்டும்.

 பிரச்சனைகள் பலவீனப்படுத்துவதற்கல்ல  பலம் பெறுவதற்ககே!

 சத்திய இறைவிசுவாசியின் வாழ்வு சோதனைகளும் பிரச்சனைகளும் நிறைந்ததாக அமைவது அவன் பலம் பெறுவதற்குதான் என்பதற்கு பெருமானாரின் வாழ்வு மிகப்பெரும் எடுத்துக் காட்டாகும்.

 பிறக்கும் முன்பே தந்தையையும் பிறந்த சில காலத்திலேயே தாயையும் இழந்து அனாதையாக குடும்பத்தாரின் அரவணைப்பிலேயே வளர்ந்தார் அண்ணல் பெருமானார் பெற்றோரின்  அன்பும் அரவணைப்பும் அவர்களுக்கு அறவே கிடைக்கவில்லை. ஏழ்மையின் கடுமையை சிறுவயது முதலே எதிர்கொண்டு அவற்றை எல்லாம் தகர்த்தெறிய அண்ணலார் ஆடுமேய்த்த வரலாறுகள் கூட உண்டு.  அடுத்தடுத்துபிரச்சனைகள் வந்த போதிலும் வாடாத மனம் கொண்டு இன்முகத்துடன் தன் இளமைப் பருவத்தை மக்கள் பணியில் கழித்தார்கள் அதன் விளைவு தான் வயது 40தில்   நுபுவ்வத்  பொறுப்புகிடைக்கப்பெற காரணமானது.

 நுபவத்திற்கு பிறகுதூதுத்வ  பிரச்சாரத்தை தனியொரு ஆளாக நின்றுது வங்கினார்கள் நபியவர்கள் அதுவரை அமீன் என்றும் சாதிக்கு என்றும் கண்ணியப்படுத்தப்பட்ட  கருணை நபி சூனியக்காரர் பைத்தியக்காரர் என்று வசைபாடுதல்களுக்கு ஆளானார்கள். அவர்கள் மக்கள் முன் எடுத்து வைத்த ஏகத்துவ நெறி.  கட்டுக்கதைகளாக சித்தரிக்கப்பட்டன. சாந்த நபி அவர்கள் அவற்றை சகிப்புத்தன்மையுடன் எதிர்கொண்டார்கள்

 ஏகத்துவ இஸ்லாமிய நெறியான நெறியினை மக்கள் முன் எடுத்து வைத்தகாரணத்தினால் ஒட்டு மொத்த குறைஷிகளும் ஒன்றிணைந்து சமூகபரிஷ்காரம் செய்தார்கள்  அபூதாலிப் பள்ளத்தாக்கில் உணவுக்கு கூட வழியின்றி இலைகள் உண்டு இன்னல்களை பல சந்திக்கும் நிலைஏற்பட்டது.

 சுஜூதில் இருக்கும் போது பரிசுத்த நபியின் புனித மேனியில் ஒட்டகக்குடல்கள் போடப்பட்டன. அப்போதும் கூட அல்லாஹ்வை தியானிப்பது தளர்ச்சி காணவில்லை நபியவர்கள்.

 இஸ்லாமிய பிரச்சார பிரச்சாரத்திற்கு பக்கபலமாக திகழ்ந்த அபூதாலிப் அவர்களும் அன்னை கதீஜா ரலி அவர்களும் இவ்வுலகை விட்டுப் பிரிந்த சமயம் அதற்கான ஆறுதலை தேடி பயணித்தார்கள் தாயிப்  நோக்கி  ஆனால் அங்கே  தலைகீழான பிரதிபலனை   காணமுடிந்தது.  கல்லாலும் சொல்லாலும்    சொல்லொண்ணா  துயரங்களை தாங்கிக் கொண்ட பெருமானார் {ஸல்} தன் இயலாமையை பிரார்த்தனை மூலம் இறைவனிடம் முறையிட்டார்கள்.  இப்படிப்பட்ட கடின சூழ்நிலையிலும் சற்றும் நிராசை அடையவில்லை நபிகளார்.

 இதன் பிறகு ஏற்பட்ட ஹிஜ்ரத்தும் சரி  மதினாவின் அனைத்துப் போராட்டங்களும் சரி சத்திய தூதரின் சாதனைகளுக்கு வித்தாக அமைந்தன.

 ஏராளமான பிரச்சினைகளின் போதும் ஏந்தல் நபியவர்கள் நிலை குலையாது நின்று அவற்றை எதிர்கொண்டு சாதனைகளாக  மாற்றிட  அவர்கள் கடைப்பிடித்த அணுகுமுறைகள் முக்கிய காரணிகளாகும்.

 பிரச்சினைகளை எதிர்கொள்ள நாம் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள்

அச்சத்தை அடி பணியைச் செய்வோம்!

  அச்சம் மனதில் அண்டிக் கொள்ளும்போது ஆற்றல்கள் குன்றிப்போகும் அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே என்பது வார்த்தைகளால் மட்டும் சுருங்கி விடக்கூடாது நமது அன்றாட வாழ்வில் மிளிர வேண்டும்.

 உறுதிமிக்க நபிமார்களின் பட்டியலில் நபி மூஸா அலை அவர்கள் இடம்பெற இறைவன்   கற்பித்துத் தந்த  பண்பு “பயப்படாதே” என்பதுதான்.

يٰمُوْسٰى لَا تَخَفْ  

அல்லாஹ் கூறுகின்றான்    மூஸாவே  நீர் பயப்படாதீர் நீங்கள் உயர்வானவர்கள்

{அல்குர்ஆன் 27:10 }

 இறுதித்தூதர் முஹம்மது ஸல் அவர்களது வாழ்விலும் இதற்கு எடுத்துக்காட்டு உண்டு. ஹிஜ்ரத்தின் போது  ஹிரா குகையில் தங்கியிருந்த சமயம் எதிரிகள் தங்களை நெருங்கிய சமயத்தில் நிலைகுலையாமல் அவற்றை எதிர் கொண்டார்கள்.

 நீ மரணிக்க  ஆசைப்பட்டால் வாழ்க்கை உனக்கு பரிசாக வழங்கப்படும் என்ற ஒரு அறிஞனின் கூற்று நிகழ்காலத்திலும் நிஜமாகுவதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு.

  சமீபத்தில் மத்தியபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த சம்பவத்தை நாம் முகநூல் வாட்ஸ் அப்பில் படித்திருக்கலாம் #அஸ்லம்  என்ற இருபத்தி மூன்று வயது  இளைஞர் தியாகத் திருநாளை கொண்டாடுவதற்காக தன் உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். உறவினர்களுடன் அருகிளிருந்த அணைக்கட்டுக்கு சென்ற போது சில இளைஞர்களால் அஸ்லம் மற்றும் அவரது   சகோதரிகளை தகாத வார்த்தைகளால் அந்த இளைஞர்கள் பேசியுள்ளனர். இதனால் அஸ்லமிற்கும்    அந்த இளைஞர்களுக்கு மத்தியில் தர்க்கம்  ஏற்பட்டுள்ளது.

 வீட்டிற்கு திரும்பிய அஸ்லத்தை  பின்தொடர்ந்து வந்து பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர் அந்த இளைஞர்கள் பிறகு வீட்டிற்கு திரும்பிய அஸ்லத்தின்  ஆட்டோவை வழிமறித்து தாக்க முயன்றுள்ளனர் என்னை விட்டுவிடுங்கள் என அஸ்லம்  கெஞ்சியும் அந்த அக்கிரமக்கார இளைஞர்கள் அவரை  அடித்து கொல்ல முனைந்துள்ளனர் . தான் கொல்லப்படுவது  என்பது உறுதியான போது குர்பானி கொடுப்பதற்கு தான் வைத்திருந்த உபகரணங்களைக் கொண்டு திருப்பித் தாக்கி உள்ளார் அந்த கும்பலில்   மூன்று பேர் படு காயம் அடைகின்றனர் இருவர் சம்பவ இடத்திலேயே  மரணம் அடைந்தனர் இதனை கண்ட அந்த  கும்பல்   சிதறி ஓடியது,

 இச் சம்பவம் நமக்கு உணர்த்துவது உண்மை நம் பக்கம் இருக்கையில் அச்சப்படாமல் நமது ஆற்றல்களைப் பிரயோகித்தால் எத்தகைய பிரச்சினைகளையும் எளிதில் நம்மால் வென்றெடுக்க முடியும் என்பதை உணர்த்துகின்றது.

 ஆற்றல்களை நிறைவாக வளர்த்துக் கொண்டால்  பாரதூரமான பிரச்சனைகளையும் வலிமையுடன் எதிர்கொள்ள முடியும் அதனால் தான் “பலவீனமான மூமினை விட பலம் உள்ள மூமிமீன் அல்லாஹ்விடத்தில் மிகப் பிரியமானவன்” என்ற உத்வேகத்தை ஏந்தல் நபியவர்கள் கூறினார்கள்

 மேலும் ஒரு நபி மொழியில் “மக்கள் சுரங்கங்கள் ஆவார் தங்கம் மற்றும் வெள்ளி சுரங்கங்களை போல” என்று கூறினார்கள் சாதாரண மக்களிடமே சுரங்கங்கள் உண்டு என்கிற போது ஏகத்த்துவத்தையும் ஈமானிய  உணர்வுகளையும் சுமந்து கொண்டுள்ள சத்திய விசுவாசிகளிடம் எத்தகைய சுரங்கம் பொதிந்து கிடக்கும் என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும்.

 தன்னுள் வைத்துக் கொண்டு அற்ப சொற்ப தங்க வெள்ளிக்காக  அலைந்து திரியலாமா?  என்ற கேள்வி நம் ஆள்  மனதில் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

 துல்லியமான திட்டமிடல் நம்மிடம் இருந்தால் எத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கும், நம்மை தற்காத்து கொள்வதற்கும் வாய்ப்பாக இருக்கும். நபி ஸல் அவர்கள் காலத்தில் நடந்த பல்வேறு யுத்தங்கள் தெளிவான திட்டமிடுதல் இருந்த்தனாலேதான் வெற்றிகள் கிடைத்தது.

 அண்ணலார் (ஸல்) வகுத்த தற்காப்புத் திட்டம்

நபி (ஸல்) தங்களது படையைக் கட்டமைத்தார்கள். பல அணிகளாக அவர்களை நியமித்த பின்பு திறமையாக அம்பெய்வதில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்த 50 வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் தலைவராக பத்ர் போரில் கலந்து கொண்ட அவ்ஸ் கிளையைச் சேர்ந்த அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் இப்னு நுஃமான் அல் அன்ஸாயை (ரழி) நியமித்தார்கள். பின்பு அவர்களை ‘கனாத்’ என்ற பள்ளத்தாக்கின் வடக்குப் பக்கம் அமைந்துள்ள மலையில் நிலையாக தங்கி, முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டுமென்று பணித்தார்கள். இம்மலை முஸ்லிம்களின் ராணுவ முகாம்களிலிருந்து தென் கிழக்கில் சுமார் 150 மீட்டர் தொலைவில் இருந்தது.

 நபி (ஸல்) இந்த அம்பு எறியும் வீரர்களுக்குக் கூறிய அறிவுரைகளிலிருந்து இப்படையினரை அங்கு நியமித்ததின் காரணத்தைத் தெரிந்து கொள்ளலாம். நபியவர்கள் தளபதிக்குக் கூறிய உபதேசம் வருமாறு: “எதிரிகளின் குதிரைப் படை எங்களை நெருங்கவிடாமல் அம்பெய்து அவர்களை நீர் தடுக்க வேண்டும். எதிரிகள் எங்களுக்குப் பின்புறத்திலிருந்து வந்துவிடக் கூடாது. போர் நமக்கு சாதகமாக அல்லது பாதகமாக அமைந்தாலும் நீர் உனது இடத்தில் நிலையாக இருக்க வேண்டும். உமது வழியாக எதிரிகள் எங்களை தாக்கிவிடக் கூடாது.” (இப்னு ஹிஷாம்)

 இவ்வாறு தளபதிக்கு உபதேசம் செய்த பிறகு, மற்ற வீரர்களுக்கு நபி (ஸல்) பின்வருமாறு அறிவுரை கூறினார்கள்: “நீங்கள் எங்களின் முதுகுப் பக்கங்களை (பிற்பகுதியை) பாதுகாத்து கொள்ளுங்கள், நாங்கள் போரில் கொல்லப்படுவதைப் பார்த்தாலும் நீங்கள் எங்களுக்கு உதவ வராதீர்கள் நாங்கள் வெற்றி பெற்று பொருட்களைச் சேகரிப்பதைப் பார்த்தாலும் அதிலும் நீங்கள் எங்களுடன் இணைந்து விடாதீர்கள்.” (முஸ்னது அஹ்மது, முஃஜமுத் தப்ரானி)

 மூஃதா போர் வெற்றிக்கு (ஸல்) அருமையான திட்டம்

 படைத் தளபதிகள்: நபி (ஸல்) அவர்கள் இப்படைக்கு முதலாவதாக ஜைது இப்னு ஹாஸாவை (ரழி) தளபதியாக ஆக்கிவிட்டு “ஜைது கொல்லப்பட்டால் ஜஅஃபர் தளபதியாக இருப்பார் ஜாஃபரும் கொல்லப் பட்டால் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா தளபதியாக இருப்பார்”என்று கூறி வெள்ளை நிறக் கொடியை ஜைது இப்னு ஹாஸா (ரழி) கையில் கொடுத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)

قال رسول الله صلى الله عليه وسلم يوم مؤتة ـ مخبراً بالوحي، قبل أن يأتي إلى الناس الخبر من ساحة القتال : أخذ الراية زيد فأصيب، ثم أخذ جعفر فأصيب، ثم أخذ ابن رواحة فأصيب ـ وعيناه تذرفان حتى أخذ الراية سيف من سيوف الله، حتى فتح الله عليهم (بخارى-3063

 முஃதா போர்க்களச் செய்திகளை அல்லாஹ் வஹியின் மூலமாக நபியவர்களுக்கு உடனுக்குடன் தெரிவித்தான். போரின் போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “முதலில் கொடியை ஜைது ஏந்தினார் அவர் கொல்லப்பட்டார் இரண்டாவதாக ஜஅஃபர் ஏந்தினார் அவரும் கொல்லப்பட்டார் மூன்றாவதாக அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ஏந்தினார் அவரும் கொல்லப்பட்டார் -இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும் போது நபியவர்களின் கண்களிலிருந்து நீர் வழிந்தோடியது- இதற்குப் பின் கொடியை அல்லாஹ்வின் வாள்களில் ஒரு வாள் ஏந்தியது அல்லாஹ் அவர் மூலமாக முஸ்லிம்களுக்கு வெற்றியளித்தான்.” (ஸஹீஹுல் புகாரி-3063)

 மூஃதா போரில் காலிது பின் வலீதின் வெற்றித் திட்டம்.

 சண்டை ஓய்கிறது: முஸ்லிம் வீரர்கள் தங்களது முழு வீரத்தையும், திறமையையும், துணிவையும் வெளிக் கொணர்ந்தாலும் கடல் போன்ற மிகப் பயங்கரமான எதிரிப் படைகளைச் சமாளிப்பது மிகச் சிரமமாகவே இருந்தது. இதையறிந்த காலித் இப்னு அல்வலீது (ரழி) முஸ்லிம்களை ஆபத்திலிருந்து தந்திரமாகப் பாதுகாக்க சரியான திட்டம் ஒன்றைத் தீட்டினார்.

 போரின் முடிவைப் பற்றி பலவிதமான கருத்துகள் கூறப்படுகின்றன. அந்த அனைத்து அறிவிப்புகளையும் ஒன்று திரட்டி நாம் ஆய்வு செய்யும்போது நமக்குப் புலப்படுவதாவது: கொடியை ஏந்திய அன்றைய தினம் மாலை வரை ரோம் நாட்டுப் படைக்கு முன்பாக மிகத் துணிச்சலாக காலித் (ரழி) எதிர்த்து நின்றார். முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்கு ஒரு போர் தந்திரத்தைக் கையாண்டார். அது ரோமர்களின் உள்ளங்களில் கடுமையான பயத்தை உண்டு பண்ணியது. அதாவது, முஸ்லிம்கள் பின்னோக்கிச் செல்லும்பொழுது ரோமர்கள் விரட்ட ஆரம்பித்தால் அவர்களிடமிருந்து தப்பிப்பதென்பது மிகக் கடினமே என காலித் (ரழி) நன்கு விளங்கியிருந்தார்.

 எனவே, மறுநாள் படைக்கு முற்றிலும் ஒரு புதிய தோற்றத்தை உருவாக்கினார். படையின் முற்பகுதியை பிற்பகுதியாகவும், வலப்பக்கத்தில் உள்ளவர்களை இடப்பக்கத்திலும் மாற்றி அமைத்தார். மறுநாள் காலை போர் தொடங்கியபோது முஸ்லிம்களின் புதிய அமைப்பைப் பார்த்த எதிரிகள் தங்களுக்கு முன் நேற்று இல்லாத புதிய படை இருப்பதைப் பார்த்தவுடன் இவர்களுக்கு உதவிப்படை வந்திருக்கின்றது என்று கூற ஆரம்பித்தனர். சிறுகச் சிறுக அவர்களது உள்ளத்தை அச்சம் ஆட்கொண்டது.

 சிறிது நேரம் இரு தரப்பினரும் சண்டையிட்டு கொண்டிருக்கும் போதே தனது படையில் எவ்வித மாற்றமும் ஏற்படாத அளவிற்கு முற்றிலும் பாதுகாப்புடன் படையை பின்னோக்கி அழைத்துச் சென்றார். முஸ்லிம்கள் ஏதோ சதி செய்ய நாடுகின்றனர் என்று எண்ணிய ரோம் வீரர்கள் முஸ்லிம்களைப் பின்தொடர்வதை விட்டுவிட்டு அவர்களும் பின்வாங்கினர். இவ்வாறு முஸ்லிம்களை விரட்டும் எண்ணத்தை கைவிட்டுவிட்டு தங்களது நாடுகளுக்கு எதிரிகள் திரும்பி விட்டனர். இவ்வாறு முஸ்லிம்கள் எவ்வித ஆபத்துமின்றி மதீனா வந்து சேர்ந்தனர். (ஃபத்ஹுல் பாரி, ஜாதுல் மஆது)

 நபி ஸல் அவர்களிடம் சோதனைகளை எதிர்கொள்ளக்கூடிய உறுதியான மனவலிமை இருந்தது. இன்று நாம் சந்திக்கும் சோதனைகள் அனைத்தும் இறைவன் நாட்டத்தால் நாளை நமக்கு வெற்றியாக மாறும் என்ற நம்பிக்கை நமது மனதில் உறுதியாக இருக்க வேண்டும்.

 

3:140 اِنْ يَّمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ الْقَوْمَ قَرْحٌ مِّثْلُهٗ ‌ؕ وَتِلْكَ الْاَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِۚ وَلِيَـعْلَمَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَيَتَّخِذَ مِنْكُمْ شُهَدَآءَ‌ؕ وَاللّٰهُ لَا يُحِبُّ الظّٰلِمِيْنَۙ‏

 3:140. உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால், அதே போன்று மற்றவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது; இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம்; இதற்குக் காரணம், ஈமான் கொண்டோரை அல்லாஹ் அறிவதற்கும், உங்களில் உயிர்த் தியாகம் செய்வோரை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குமே ஆகும்; இன்னும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை.

 அல்லாஹ்வின் மீது  பேராதரவு வைத்தல்

எந்த சூழ்நிலையிலும் நாம் அல்லாஹ்வின் மீது ஆதரவு வைக்ககூடியவர்களாக நாம் இருக்கவேண்டும். அதுவே நமக்கு வெற்றியாகும் இதைத்தான் நபி ஸல் அவர்கள் ஒவ்வொரு சோதனையான நேரத்திலும் பின்பற்றினார்கள். மக்காவை விட்டு மதீனாவை நோக்கி பயணமாகும் போது எதிரிகளின் கண்களில் மண்ணை தூவும் நேரத்திலும்,பத்ரின் வெற்றிக்கும், இதுபோன்ற அனைத்து சூழலிலும் நபி ஸல் அவர்கள் அல்லாஹ்வின் பேராதரவை எதிர்பார்த்து இருந்ததினால் அல்லாஹ்வின் உதவி கிடைத்தது.

You need to login to Post a comment
 • எம்மைப் பற்றி

  சமுதாயத்தின் வழிகாட்டிகளான இமாம்களை ஒன்றிணைத்து சக்தி படுத்துவதின் மூலம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வலிமைப்படுத்து எமது நோக்கமாகும்.

 • தொடர்பு கொள்ள

  எங்களை தொடர்புகொள்ள கீழ்காணும் தொலைபேசி அல்லது மினஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

  (+91) 9894603500

  info@imamscounciltn.com

 • Recent Menu