ஜனநாயகத்தின் அடையாளச் சின்னத்திற்கு நீதி வழங்கக் கோரி குரல் எழுப்புவோம்.

 

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ் மாநில செயற்குழு கூட்டம் 26-11-2019 அன்று மதுரையில்  மாநில தலைவர் மௌலவி M.S ஷம்சுல் இக்பால் தாவூதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் மௌலவி S. அப்துல் காதிர் ஹஸனி இறைவசனம் ஓதி துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக தேசிய பொதுச்செயலாளர் மௌலவி முஹம்மது பைசல் அஷ்ரஃபி, மற்றும் தமிழகத்தின் தேசிய பொறுப்பாளர் மௌலவி ஷிஹாப் ஸஆதி அவர்களும் கலந்து கொண்டனர். கலந்துக் கொண்ட அனைவரையும் மாநிலப் பொதுச்செயலாளர் ஆபிருத்தீன் மன்பயீ வரவேற்றுப்பேசினார். இக் கூட்டத்தில் கீழ் காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் - 1

 ஆலிம்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல்

கடந்த வருடங்களை போன்று இந்த வருடமும் தமிழகம் முழுவதும் பெறப்பட்ட விண்ணப்பங்களை பரீசீலித்து  தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு  கல்வி உதவித் தொகைகளை  டிசம்பர் 10ம் தேதிக்குள் வழங்கிட வேண்டும்.

 

தீர்மானம் - 2   உஸ்வத்துர் ரஸுல் தேசியளவிலான பிரச்சாரம்

 

 இஸ்லாமிய மாதங்களான ரபியுல் அவ்வல் மற்றும் ரபியுல் ஆகிரில் இஸ்லாத்தை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் தேசம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் உஸ்வத்துர் ரஸுல் என்ற தலைப்பில் தேசியளவிலான பிரச்சாரம் நவம்பர் 25 முதல் டிசம்பர் 25 வரை நடத்த தீர்மானிக்கப்பட்டது . அதனடிப்படையில் தமிழகத்தில் பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள், தெருமுனைக்கூட்டங்கள், மஹல்லா கூட்டங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள்  நடத்த வேண்டும்.

 

தீர்மானம் -3  ஜனநாயகத்தின் அடையாளச் சின்னத்திற்கு  நீதி வழங்கக் கோரி குரல் எழுப்புவோம்.

 

பாபர் மசூதி பள்ளிவாசல் விஷயத்தில் கடந்த நவம்பர் 9 ஆம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது .அந்த தீர்ப்பில் ஜனநாயகத்தின் அடையாளச் சின்னமான பாப்ரி மஸ்ஜித் ராமர் கோயில் இருந்த இடத்தில் கட்டப்படவில்லை என்றும் பாப்ரி மஸ்ஜிதை இடித்தது வரம்பு மீறிய குற்றச் செயல் என்றும் அறிவித்தது. எனினும் பாபரியின் இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்காக  தாரை வார்த்துக் கொடுத்தது . எனவே வருகிற டிசம்பர் 6ம் தேதி ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஜனநாயகத்தின் அடையாளச் சின்னத்திற்கு  நீதி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும்

 தமிழகம் முழுவதுமுள்ள கதீப்களின் மூலமாக பாபரிக்கான எனது குரல் என்ற பிரச்சாரத்தை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் தீர்மானிக்க பட்டது.

நிகழ்ச்சியின் இறுதியில் மாநில செயலாளர் மௌலவி அர்ஷத் அஹமது அல்தாஃபி நன்றியுடன் கூட்டம் நிறைவுற்றது.

You need to login to Post a comment
 • எம்மைப் பற்றி

  சமுதாயத்தின் வழிகாட்டிகளான இமாம்களை ஒன்றிணைத்து சக்தி படுத்துவதின் மூலம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வலிமைப்படுத்து எமது நோக்கமாகும்.

 • தொடர்பு கொள்ள

  எங்களை தொடர்புகொள்ள கீழ்காணும் தொலைபேசி அல்லது மினஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

  (+91) 9894603500

  info@imamscounciltn.com

 • Recent Menu