இரக்கம்‬ இறை நம்பிக்கையாளரின் பண்பு

بسم الله الرحمان الرحيم இரக்கம் இறை நம்பிக்கையாளரின் பண்பு   கடந்த வருடம் 2015 நவம்பர் 28ம் தேதி முதல் தொடங்கிய கடுமையான தொடர் மழையின் காரணமாக கடலோர மாவட்டங்களில்  வெள்ளம் ஏற்ப்பட்டு பயங்கரமான சேதத்தை உண்டாக்கிவிட்டது வெள்ள மீட்பு பணியில் அனைத்து தரப்பு மக்களுடைய சேவைகளும் பாராட்டும் வகையில் இருந்தது இதில் ஜாதி மத பேதமில்லாமல் மனிதம் மட்டுமே முன்னிலைப்படுத்தி அனைவருமே தங்களுடைய அர்ப்பணிப்புகளை  செய்தார்கள் அதிலும் குறிப்பாக முஸ்லிம்களின் முழுமையான அற்பனிப்புகளையும், சேவைகளையும்  யாரும் மறுக்க முடியாது, மறைக்கவும் முடியாது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலுள்ள பொருள்கள் மட்டுமல்லாது தங்களுடைய உயிர்களை பணையம் வைத்து பணிபுரிந்த  இலட்சக்கணக்கான தன்னார்வ தொண்டர்கள் இலட்சக்கணக்கான உணவு பொட்டலங்கள்,துணிவகைகள், வீட்டு உபயோகப்பொருட்கள் என முஸ்லிம்களின் இந்த சேவையை இந்திய தேசமுலுவதிளுமுள்ள மக்கள் வியந்து பாராட்டினார்கள் முஸ்லிம்களின் சேவை என்பது ஏதோ திடீர்னு இந்த மழையில் தோன்றி வேலை செய்தார்கள் என்பது இல்லை மாறாக எங்கெல்லாம் மக்களுக்கு பாதிப்பு எற்ப்படுகின்றதோ அப்போதெல்லாம் ஈகை கும் கொண்ட முஸ்லிம்களின் சேவை தொடர்ந்துள்ளது என்பதுதான் வரலாறு தானே புயல்,திருப்பூர் நொய்யல் ஆற்றில் ஏற்ப்பட்ட வெள்ளம்,திருச்சி வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்ட்டில் ஏற்ப்பட்ட வெள்ளம்,அசாமில் ஏற்ப்பட்ட வெள்ளம், காஷ்மீரில் ஏற்ப்பட்ட வெள்ளம்  2004ம் ஆண்டு உலகையே நடுங்கச்செய்த சுனாமி, சென்னை மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் இடிபாடு, கும்பகோணம் தீ விபத்து, கோவை அடுக்குமாடி குடியிருப்பு இடிபாடு, என எங்கெல்லாம் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றதோ அங்கெல்லாம் இஸ்லாமிய சமுதாயம் தங்களுடைய சேவைகளை முழுமூச்சாக செய்து வந்துள்ளது .   இரக்க குணமும் முஸ்லிம்களும்     مُحَمَّدٌ رَّسُوْلُ اللّٰهِ‌ ؕ وَالَّذِيْنَ مَعَهٗۤ اَشِدَّآءُ عَلَى الْكُفَّارِ رُحَمَآءُ بَيْنَهُمْ ‌ تَرٰٮهُمْ   முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள்   من كان في حاجة أخيه كان الله في حاجته   யார் ஒரு சகோதரனின் தேவையை நிறைவேற்றுவாரோ அவரது தேவையை அல்லாஹ் நிறைவேற்றுவான்     الله في عون العبد ما كان العبد في عون أخيه   ارحَموا من في الأرض يرحمكم من في السماء»؛ رواه أبو داود.   நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: “பூமியில்உள்ளோர்மீதுகருணைகாட்டுங்கள், வானத்தில்உள்ளவன்உங்கள்மீதுகருணைகாட்டுவான்.”  (அபூதாவூத் )   من لا يرحَمُ لا يُرحَم»؛ متفق عليه.   “எவர்இரக்கம்காட்டவில்லையோஅவர்இரக்கம்காட்டப்படமாட்டார்” என்றுகூறினார்கள். (ஸஹீஹுல்புகாரி)   அல்லாஹ்வின் கருணை     «خلقَ الله مائةَ رحمةٍ، فوضعَ واحدةً بين خلقِه وخبَّأَ عنده مائةً إلا واحدة »؛ رواه مسلم   அல்லாஹ் அன்பை நூறாக பங்கிட்டான்.   அதில்தொண்ணூற்றுஒன்பதுபங்கைத்தன்னிடம்வைத்துக்கொண்டான். (மீதிமிருக்கும்) ஒன்றையேபூமியில்இறக்கினான். இந்தஒருபங்கினால்தான்படைப்பினங்கள்பரஸ்பரம்பாசம்காட்டுகின்றன.   وَاَيُّوْبَ اِذْ نَادٰى رَبَّهٗۤ اَنِّىْ مَسَّنِىَ الضُّرُّ وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ‌   இன்னும், அய்யூப் தம் இறைவனிடம் “நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது; (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்”என்று பிரார்த்தித் போது   நபி ஸல் அவர்களின் கருணை لَـقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِيْزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِيْنَ رَءُوْفٌ رَّحِيْمٌ   (முஃமின்களே!) நிச்சயமாகஉங்களிலிருந்தேஒருதூதர்உங்களிடம்வந்திருக்கின்றார்; நீங்கள்துன்பத்திற்குள்ளாகிவிட்டால், அதுஅவருக்குமிக்கவருத்தத்தைக்கொடுக்கின்றது; அன்றி, உங்(கள்நன்மை)களையேஅவர்பெரிதும்விரும்புகிறார்; இன்னும்முஃமின்கள்மீதுமிக்ககருணையும்கிருபையும்உடையவராகஇருக்கின்றார்.   وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا رَحْمَةً لِّـلْعٰلَمِيْنَ   (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. ஒருநாள்கிராமவாசிஒருவர்நபி (ஸல்) அவர்களிடம்“நீங்கள்உங்கள்குழந்தைகளைமுத்தமிடுகிறீர்களா? நாங்கள்முத்தமிடுவதில்லை”என்றுகூறினார். அதற்குநபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: “அல்லாஹ்உமதுஇதயத்திலிருந்துஅன்பைநீக்கியிருப்பதற்குநான்பொறுப்பாளியா?” (ஸஹீஹுல்புகாரி, ஸஹீஹ்முஸ்லிம்)      நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: “நான்தொழவைக்கஆரம்பிக்கிறேன், அதைநீளமாக்கவிரும்புகிறேன். அப்போதுகுழந்தையின்அழுகுரலைக்கேட்கிறேன். நான்குழந்தையின்  அழுகையால்அதன்தாய்க்குஎற்படும்சிரமத்தைஎண்ணிஎனதுதொழுகையைசுருக்கிக்கொள்கிறேன்.” (ஸஹீஹுல்புகாரி, ஸஹீஹ்முஸ்லிம் மனிதர்கள் மீது கருணை நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: “பூமியில்உள்ளோர்மீதுகருணைகாட்டுங்கள், வானத்தில்உள்ளவன்உங்கள்மீதுகருணைகாட்டுவான்.”  (அபூதாவூத் )   பெற்றோர்கள் மீது கருணை     وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰنِىْ صَغِيْرًا   இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!”என்று கூறிப் பிரார்த்திப்பீராக! குழந்தைகள் மீது கருணை என்னிடம்ஏதேனும் (தரும்படி) கேட்டுஒருபெண்மணிவந்தார். அவருடன்இரண்டுபெண்குழந்தைகள்இருந்தனர். அப்போதுஒரேஒருபேரீச்சம்பழத்தைதவிரவேறெதுவும்அவருக்குஎன்னிடம்கிடைக்கவில்லை. எனவே, நான்அதைஅவருக்குக்கொடுத்தேன். உடனேஅதனைஅவர்இரண்டாகப்பிட்டுகுழந்தைகள்இருவருக்கும்பங்கிட்டுக்கொடுத்தார்கள். பிறகுஅப்பெண்மணிஎழுந்துசென்றார். பின்னர்நபி(ஸல்) அவர்கள்வந்தார்கள். அவர்களிடம்இதுபற்றிநான்சொன்னேன். அதற்குநபி(ஸல்) அவர்கள், 'யார்இந்தப்பெண்குழந்தைகளில்ஒன்றுக்குப்பொறுப்பேற்றுநன்மைபுரிவாரோஅவருக்குஅந்தக்குழந்தைகள்நரகத்திலிருந்துதடுக்கும்திரையாகஇருப்பார்கள்' என்றார்கள்.  ஒருகிராமவாசிநபி(ஸல்) அவர்களிடம்வந்து, 'நீங்கள்சிறுகுழந்தைகளைமுத்தமிடுகிறீர்களா? நாங்களெல்லாம்அவர்களைமுத்தமிடுவதில்லை' என்றார். அதற்குநபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்உம்முடையஇதயத்திலிருந்துஅன்பைக்கழற்றிவிட்டபின்னர்உமக்காகநான்என்னசெய்யமுடியும்?' என்றுகேட்டார்கள்.    அனாதைகளின் மீது கருணை     'நானும்அநாதையின்காப்பாளரும்சொர்க்கத்தில்இப்படிஇருப்போம்' என்றுகூறியபடிநபி(ஸல்) அவர்கள்தங்களின்சுட்டுவிரலாலும்நபி(ஸல்) விரலாலும் (சற்றேஇடைவெளிவிட்ட) சைகைசெய்தார்கள்   விதவைகளின் மீதும் ஏழையின் மீதும்  கருணை     கணவனைஇழந்தகைம்பெண்ணுக்காகவும்ஏழைக்காகவும்பாடுபடுகிறவர்'இறைவழியில்அறப்போர்புரிபவரைப்போன்றவராவார்' அல்லது'இரவில்நின்றுவணங்கிபகலில்நோன்புநோற்பவர்போன்றவராவார்.    அண்டைவீட்டார் மீது கருணை     'அல்லாஹ்வீன்மீதாணையாக! அவன்இறைநம்பிக்கையாளன்அல்லன். அல்லாஹ்வின்மீதாணையாக! அவன்இறைநம்பிக்கையாளன்அல்லன். அல்லாஹ்வின்மீதாணையாகஅவன்இறைநம்பிக்கையாளன்அல்லன்' என்று (மூன்றுமுறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள்கூறினார்கள். 'அவன்யார்? இறைத்தூதர்அவர்களே!' என்றுகேட்கப்பட்டது. அதற்குநபி(ஸல்) அவர்கள்'எவனுடையநாசவேலைகளிலிருந்துஅவனுடையஅண்டைவீட்டார்பாதுகாப்புஉணர்வைப்பெறவில்லையோஅவன்தான்' என்றுபதிலளித்தார்கள்.    பணியாளர் மீது கருணை     ”மூவருக்கெதிராககியாமத்நாளில்நான்வழக்குரைப்பேன்! என்பெயரால்சத்தியம்செய்துமோசடிசெய்தவன்சுதந்திரமானவனை (அடிமையாக) விற்றுஅந்தக்கிரயத்தைச்சாப்பிட்டவன்கூலிக்குஒருவரைஅமர்த்தி, அவரிடம்வேலைவாங்கிக்கொண்டுகூலிகொடுக்காமல்இருந்தவன் (ஆகியஇவர்கள்தான்அந்தமூவர்)!’ என்றுஅல்லாஹ்கூறினான். என்றுஇறைத்தூதர் (ஸல்) அவர்கள்கூறினார்கள்எனஅபூஹுரைரா(ரலி) அறிவித்தார்.புகாரி: 2270. ஒருமனிதர்நபி(ஸல்)அவர்களிடம்வந்துஅல்லாஹ்வின்தூதரேநான்என்னுடையபணியாளரிடம்அவர் (ஏதாவதுதவறிழைத்துவிட்டால்) எத்தனைமுறைமன்னிப்பைமேற்கொள்வது?என்றுகேட்கநபியவர்கள்மௌனம்காத்தார்கள்பிறகுஅம்மனிதர்மீண்டும்அதேபோன்றுகேட்கஒவ்வொருநாளும்எழுபதுமுறைமன்னிப்பைமேற்கொள்வீராகஎன்றுநபியவர்கள் பதிலளித்தார்கள்.திர்மிதீ: 1949.   நோயாளிகள் மீது கருணை பசித்தவருக்குஉணவளியுங்கள்; நோயாளியை(ச்சந்தித்து) உடல்நலம்விசாரியுங்கள்; (போர்க்) கைதியை (எதிரியிடமிருந்துவிடுவியுங்கள்.  ஸஅத்இப்னுஅபீவக்காஸ்(ரலி) கூறினார்  நான்மக்காவில்கடுமையாகநோய்வாய்ப்பட்டிருந்தேன். நபி(ஸல்) அவர்கள்என்னைஉடல்நலம்விசாரிப்பதற்காகஎன்னிடம்வந்தார்கள். நான், 'அல்லாஹ்வின்நபியே! நான்செல்வத்தைவிட்டுச்செல்கிறேன். (ஆனால்,) ஒரேயொருமகளைத்தான்நான் (என்வாரிசாக)விட்டுச்செல்கிறேன். எனவே, என்செல்வத்தில்இரண்டிலொருபங்கை (தானம்செய்யும்படி) மரணம்சாசனம்செய்துவிட்டு (வாரிசானஎன்மகளுக்கு) மூன்றிலொருபங்கைமட்டும்விட்டுச்செல்லட்டுமா?' என்றுகேட்டேன்.  நபி(ஸல்) அவர்கள், 'வேண்டாம்' என்றுகூறினார்கள். நான், 'பாதியைமரணசாசனம்செய்துவிட்டுப்பாதியை (என்மகளுக்கு)விட்டுச்செல்லட்டுமா?' என்றுகேட்டேன். அதற்கும்நபி(ஸல்) அவர்கள், 'வேண்டாம்' என்றுகூறினார்கள். நான், 'அப்படியென்றால்மூன்றிலொருபங்கு (தானம்செய்யும்படி) மரணசாசனம்செய்துவிட்டுஇரண்டிலொருபங்கைஅவளுக்காகவிட்டுச்செல்லட்டுமா?' என்றுகேட்டேன். நபி(ஸல) அவர்கள், 'மூன்றிலொருபங்கா? மூன்றிலொருபங்கேஅதிகம்தான்' என்றுகூறினார்கள்.18  பிறகுதம்கையைஎன்நெற்றியின்மீதுவைத்துப்பிறகுஅதைஎன்வயிற்றின்மீதும்என்முகத்தின்மீதும்தடவினார்கள். பின்னர், 'இறைவா! ஸஅதுக்குக்குணமளிப்பாயாக. அவரின்ஹிஜ்ரத்தைமுழுமைப்படுத்துவாயாக!' என்றுபிரார்த்தித்தார்கள். அவர்களின் (கரத்தின்) குளிர்ச்சியைஎன்ஈரலில்இப்போதும்கூடநான்உணர்வதைப்போன்றுஇருக்கிறது   மிருகங்களின் மீது கருணை     நபி(ஸல்)அவர்கள்கூறினார்கள்: “ஒருமனிதன்பாதையில்நடந்துசென்றபோதுகடுமையானதாகம்எற்பட்டது. ஒருகிணற்றைக்கண்டுஅதனுள்இறங்கிதண்ணீர்அருந்திவிட்டுவெளியேறினான். அப்போதுஅங்குஒருநாய்தாகத்தால்நாக்கைத்தொங்கவிட்டபடிஈரமண்ணைநக்கிக்கொண்டிருந்தது. அம்மனிதன்“எனக்குஏற்பட்டதாகத்தைப்போன்றேஇந்தநாய்க்கும்ஏற்பட்டுவிட்டது’ என்றுநினைத்தவனாககிணற்றினுள்இறங்கிதோலாலானதனதுகாலுறையில்நீரைநிரப்பிக்கொண்டுஅதைதனதுவாயில்கவ்வியபடிமேலேவந்துநாய்க்குத்தண்ணீர்புகட்டினான். அல்லாஹ்அவனின்நற்செயலுக்கபகரமாகஅவனைமன்னித்துவிட்டான்” என்றுநபி (ஸல்) அவர்கள்கூறியபோதுநபித்தோழர்கள்“விலங்குகளுக்குஉதவும்விஷயத்திலும்எங்களுக்குநற்கூலிகிடைக்குமா?” என்றுவினவினர். நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள், “உயிருள்ளஒவ்வொருபிராணியின்விஷயத்திலும்நற்கூலிஉண்டு.” (ஸஹீஹுல்புகாரி, ஸஹீஹ்முஸ்லிம்) நபி (ஸல்) அவர்கள்கூறியதாகஅப்துல்லாஹ்இப்னுஉமர் (ரழி) அவர்கள்அறிவிக்கிறார்கள்: “ஒருபூனையின்விஷயத்தில்ஒருபெண்வேதனையளிக்கப்பட்டாள். அவள்அதைஅடைத்துவைத்துவிட்டாள். அதுபசியால்செத்துவிட்டது. அதன்காரணமாகஅவள்நரகத்தில்நுழைந்தாள். அப்போது (மலக்குகள்) கூறினார்கள், நீஅதற்குஉணவளிக்காமல், தண்ணீர்புகட்டாமல்அதைஅடைத்துவிட்டாய். அதைநீவெளியேவிட்டிருந்தால்பூமியிலுள்ளபூச்சிகளைசாப்பிட்டிருக்கும்.” (ஸஹீஹுல்புகாரி, ஸஹீஹ்முஸ்லிம்)   கருணை இல்லாதவன் பதவிக்கு தகுதி இல்லாதவன்     உமர் (ரழி) அவர்கள்ஒருமனிதரைமுஸ்லிம்களுக்குத்தலைவராக்கவிரும்பினார்கள். அம்மனிதர்அக்ரஃஇப்னுஹாபிஸ் (ரழி) அவர்கள்கூறியதுபோல“குழந்தைகளைமுத்தமிடமாட்டேன்’ என்றுசொல்வதைக்கேட்டார்கள். அவரைப்பொறுப்பாளராக்குவதைரத்துசெய்தவர்களாகக்கூறினார்கள்: “உமதுமனம்உமதுகுழந்தைகளிடம்கருணைகாட்டவில்லையானால்எப்படிநீர்மற்றமனிதர்களிடம்கருணையுடன்நடந்துகொள்வீர்? அல்லாஹ்வின்மீதுஆணையாக! உம்மைஒருபோதும்தலைவராக்கமாட்டேன்” என்றுகூறிவிட்டுஅவரைத்தலைவராக்குவதற்கானஅதிகாரப்பத்திரத்தைக்கிழித்தெறிந்தார்கள்.   மறுமையில் வெற்றி     ஒரு முஸ்லிமின் ஒருதுன்பத்தைநீக்குகிறவரைவிட்டுஅல்லாஹ்வும்மறுமைநாளின்துன்பங்களில்ஒருதுன்பத்தைநீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளைமறைக்கிறவரின்குறைகளைமறுமைநாளில்அல்லாஹ்வும்மறைக்கிறான். ஸஹீஹ்புகாரி நபி அவர்கள் கூறினார்கள்: "நரகத்திற்கு ஹராமாக்கப்பட்ட ஒருவரைப் பற்றி அல்லது எவர் மீது நரகம் ஹராமாக்கப்படுமோ அவரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? மக்களை நெருங்கியிருக்கும் மென்மையான, இலகுவான, நளினமான ஒவ்வொருவர் மீதும் நரகம் ஹராமாக்கப்படும்.'' (ஸுனனுத் திர்மிதி)   முடிவுரை:   முன்னுரையில் கூறப்பட்ட முஸ்லிம்களின் அத்துணை சேவைகளுக்கும் குர்ஆன், மற்றும் ஹதீஸும் நபி ஸல் அவர்களின் வாழ்வும்தான் காரணமாகும் அல்லாஹ் நம்மை கருணை உள்ளாவரகவே வாழவைத்து மறுமையில் அவனது கருணையின் மூலம் சுவனம் செல்லும் நற்பாக்கியத்தை தந்தருள்வானாக ஆமீன்  


நோன்பு ஒரு கேடயம்

                   நோன்பு ஒரு கேடயம்   இஸ்லாத்தின் ஒவ்வொரு கோட்பாடுகளும் கடமைகளும் மனித ஒரு பரிசுத்த தன்மையை உண்டாக்கும் விதத்திலேயே அமைந்துள்ளது அப்படிப்பட்ட இஸ்லாமிய செயல்பாடுகளில் மிக முக்கியமான இடத்தை பிடித்திருப்பதுதான் நோன்பு எனும் கடமை அரபியில் ஸவ்ம் எனும் வார்த்தைக்கு தடுத்துக் கொள்ளுதல் என்று பொருள். அதாவது காலை முதல் மாலை வரை இறைவனுக்காக பல்வேறு செயல்களை செய்வதை தடுத்துக் கொள்வதே நோன்பு. அத்துடன் மனிதனுடைய ஆன்மாவையும், உள்ளத்தையும் பரிசுத்த படுத்தி, உண்மையான இறையடியானாக மாற்றுவதற்கான அழகிய செயல் திட்டமாகவும் நோன்பு அமைந்துள்ளது. அதனால்தான் நபி ஸல் அவர்கள் நோன்பை இவ்வாறு அறிமுகம் செய்கிறார்கள்   நோன்பு ஒரு கேடயமாகும்  நூல்.,புகாரி   நோன்பு என்பது எவ்வாறு கேடயமாக அமைகிறது?  என்பதற்கு அறிஞர்கள் பல விளக்கங்களை தருகிறார்கள்.   மனோ இச்சைகளை தடுக்கும் கேடயம்   மனிதனது வாழ்வு பெரும் நஷ்டத்தை சந்திப்பது மனோ இச்சைகளுக்கு அடிமைப்படுவதினாலயே!  எனவே அப்படிப்பட்ட கெட்ட இச்சைகளை உடைத்தெரியும் சக்தி நோன்பிற்கு உன்டு. இக்கருத்தை பின்வரும் நபி மொழி உணர்த்துகிறது   வாலிபர்களே!  உங்களில் திருமணத்திற்கு சக்தி பெற்றவர் திருமணம் செய்து கொள்ளட்டும் திருமணத்திற்கு அவர்களில் யார் சக்தி பெற வில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும்!  காரணம் அது அவரை கெட்ட செயல்களிருந்து பாதுகாத்து விடுகிறது  புகாரி, முஸ்லிம்   மேற்கூறிய நபிமொழி, ஒருவன் தன்னை அருவருக்கத்தக்க செயல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள திருமணமும் அது முடியாவிட்டால் நோன்பு தீர்வாகிரது என்று உணர்த்துகிறது. கெட்ட குணங்களை விட்டும் பாதுகாக்கும் கேடயம் : நபி ஸல் அவர்கள் கூறினார்கள்   நோன்பு ஒரு கேடயமாகும் எனவே நோன்பாளி கெட்ட பேச்சுகளிளோ, செயல்களிளோ ஈடுபடவேண்டாம் அவனை யாரேனும் ஏசினாலோ அல்லது அவனிடம் சண்டையிட முயற்சித்தாலோ நான் நோன்பாளி என்று கூறிவிடவும் ( புகாரி, முஸ்லிம்)   இந்த நபிமொழியின் படி அடுத்தவர்களுடனான நமது பரிமாற்றங்களில் எந்த கெட்ட நடவடிக்கைகளும் வந்து விடக்கூடாது என்பதற்கான பயிற்சியை நோன்பு உண்டாக்கி தருகிறது.   பாவங்களிலிருந்து பாதுகாக்கும் கேடயம் :   உணவு, தண்ணீர் இல்லாமல் பசித்திருப்பது மட்டும்தான் இன்றைக்கு உள்ள நோன்பின் பலனாக மக்கள் அனுபவிப்பது, ஆனால் இதை வைத்து அல்லாஹ்விடம் எந்த அந்தஸ்தையும் நம்மால் பெறவே முடியாது, மாறாக சொல்லாலும், செயலாலும் உள்ள எல்லா பாவச் செயல்களிருந்தும் தன்னை பாதுகாத்துக் கொள்வது நோன்பின் முக்கிய அம்சமாகும். நபி ஸல் அவர்கள் கூறினார்கள்  கெட்ட பேச்சுகளையும் செயல்களையும் விடாத நிலையில் ஒருவன் தனது உணவையும் குடிப்பையும் விட்டு விடுவதால் அல்லாஹ்விற்கு எந்த தேவையும் இல்லை. ( புகாரி )   நகரிலிருந்து பாதுகாக்கும் கேடயம் :   ஒரு இறைவிசுவாசியின் உண்மையான வெற்றி என்பது  அவன் நரகின் கொடிய வேதனையிலிருந்து பாதுகாப்பை பெறுவது ;இந்த உன்னத வெற்றியை, நோன்பை பரிசுத்த நிலையில் கடைபிடிக்கும் ஒரு அடியான் அடைந்து கொள்கிறான்   நபி ஸல் அவர்கள் கூறினார்கள்   உங்களில் ஒருவருடைய கேடயம் போர்களத்திலிருந்து அவரை பாதுகாப்பது போன்று நோன்பு (ஒருவனை) நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கிறது. (அஹ்மது)   இன்னும் இவை போன்ற ஏராளமான பலன்களை நோன்பு ஏற்படுதிதுவதாலயே, அது மனித வாழ்விற்கு எல்லா கெட்ட நிலைகளிருந்தும் பாதுகாப்பை உருவாக்கும் ஒரு கேடயம் என நபி ஸல் அவர்கள் வர்ணித்தார்கள்.   நன்மையும்  சிறப்பும்     > ஏராளமான நன்மைகளையும், சிறப்புகளையும் உள்ளடக்கிய ஒரு உன்னத அமல்தான் நோன்பு.   >  பல்வேறு நபிமொழிகளில் நோன்பின் மான்புகள் உணர்த்தப் படுகின்றன.   >    நோன்பு இஸ்லாத்தின் ஐந்து அடிப்படை கடமைகளில் ஒன்று.   > மற்ற கடமைகளுக்கு பத்து முதல் எழுநூறு மடங்கு வரை கூலி கிடைக்கிறது ; நோன்பிற்கோ நானே கூலி என்கிறான் இறைவன்.   > நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சி உண்டு ஒன்று நோன்பு திறக்கும் போது மற்றொன்று அல்லாஹ்வை சந்திக்கும் போது.   > நோன்பாளியின் வாயிலிருந்து வெளிவரும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரி மனத்தை விட சிறந்தது.   > நோன்பாளிக்கென்றே சுவனத்தில் ரய்யான் என்ற வாசல் உண்டு.இப்படி பல்வேறு ஹதீஸ்கள் நோன்பின் பலன்களை எடுத்துக் கூறுகின்றது இந்த நோன்பின் உன்னத நன்மைகளை முழுமையாக அடைந்து கொள்ள, அதன் இலக்கு நோக்கி அதனை கடைபிடிக்க வேண்டும் . நோன்பின் முப்பெரும் இலக்குகள் :   மனதை கட்டுப்படுத்துதல் திருமறை குர்ஆன் நஃப்ஸை மூன்று வகை படுத்துகிறது கெட்டதை தூண்டும் மனம் -  குத்திக் காட்டும் மனம் -   திருப்தி அடைந்த மனம் -   இம்மூன்று மனங்களில் முத்மஇன்னா என்பது முழுமையான நிம்மதியோடு, அல்லாஹ்வின் பொருத்தம் பெற்ற நிலையில் சுவனம் செல்லக்கூடிய ஆன்மா. இப்படிப்பட்ட மனதை பெற நமது நஃப்ஸை நமது பிடியிலையே வைத்திருக்க வேண்டும் இல்லையென்றால் அது هوىஎனப்படும் மனோ இச்சையாக மாறிவிடும்.எனவே நஃப்ஸை கட்டுபாடான நிலையில் வைத்திருக்க ஒரு அழகிய பயிற்சியாக நோன்பு அமைந்துள்ளது.   இறையச்சத்தை ஏற்படுத்துகிறது. திருமறை குர்ஆன் கூறுகிறது   இறைநம்பிக்கையாளர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது விதியாக்கப் போல உங்கள் மீதும் நோன்பு நோற்பது விதியாக்கப் பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் பயபக்தி உடையவராக ஆகலாம். அல்குர்ஆன்  2:183   இறையச்சம் என்பது அல்லாஹ் ஏவியதை செய்வதும், தடுத்தவற்றை விட்டும் விலகுவதுமாகும். இப்படிப்பட்ட இறையச்சத்தை நோன்பின் மூலம் நாம் பெற முடிகிறது. இன்று உலகம் முழுக்க பாவச் செயல்கள் பரவி கிடக்கிறது குற்றங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது குற்றங்களை குறைப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ள படுகின்றது ஆனால் எந்த முயற்சியும் பலன்தராத சூழலையே பரவலாக நாம் காண்கிறோம.எனவே குற்றங்கள் இல்லாமல் ஆக்க படைத்த இறைவனை அஞ்சி நடப்பது ஒன்றே நிரந்தர தீர்வாக அமையும். இறையச்சத்தை முழுமையாக அடைந்து கொள்ள நோன்பு சிறந்த ஒரு பயிற்சி ஆகும்.   பசியை உணர்தல். நோன்பின் இலக்குகளில் பசியை உணர்தல் என்பதும் ஒன்றாகும் அடுதிதவர்களின் கஷ்டங்களையும் உணர்வுகளையும் நினைத்து பார்க்க வழிவகுக்கிறது. இதன் மூலம் சமூகத்திற்கு உதவும் மனப் -பான்மையை நோன்பாளி பெற்று கொள்கிறான். அது மட்டுமல்ல, பசித்திருப்பதாலும் தாகித்திருப்பதாலும் இறைவனிடம் பல்வேறு சிறப்புகளை நோன்பாளி அடைந்து கொள்கிறான்.   நபி ஸல் அவர்கள் கூறினார்கள் பசித்திருத்தல், தாகித்திருத்தல் இவைகளின் மூலம் உங்கள் நஃப்ஸை பயிற்றுவியுங்கள். நிச்சயமாக அதற்கு கிடைக்கும் கூலி அல்லாஹ்வின் பாதையில் போராடும் போராளிக்கு கிடைக்கும் கூலி போன்றதாகும் நிச்சயமாக பசித்திருப்பது தாகித்திருப்பதை விட அல்லாஹ்விற்கு பிடித்த விஷயம் வேறு இல்லை.          ( இஹ்யா)   அதே சமயம் உணவு அதிகமாகுவதால் ஏற்படும் இழப்பையும் பின் வரும் நபிமொழியில் நபி ஸல் அவர்கள் விளக்கியுள்ளார்.   அதிக உணவு, தண்ணீரை கொண்டு உங்கள் உள்ளங்களை மரணிக்க செய்து விடாதீர்கள் நிச்சயமாக உள்ளம் என்பது விவசாயத்தை போன்றது அதன் மீது தண்ணீர் அதிகமானால் அது மரணித்து போகும். ( இஹ்யா )   பசித்திருப்பதால் உண்டாகும் பலன்கள்   1,  உள்ளம் பரிசுத்தமடைகிறது. 2, இரக்கத்தண்மை அதிகமாகின்றது. 3, மனோ இச்சைகளை உடைத்தெரிகின்றது 4, அல்லாஹ்வை மறக்காத நிலை உருவாகிறது. 5, பாவங்களின் சிந்தனை குறைகிறது. 6, தூக்கத்தை குறைக்கிறது. 7, அதிகம் வணங்குவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது காரணம் உணவு தயாரிப்பதற்கான நேரம் குறைவாகின்றன. 8, ஆரோக்கிய வாழ்வு கிடைக்கிறது, உணவுதான் எல்லா வித நோய்களுக்கும் அடித்தளம் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 9, உணவிற்கான செலவுகள் குறைகிறது. 10, செலவுகள் குறைவதால் தர்மத்திற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. (இஹ்யா உலூமித்தீன்)    இறுதியாக.......   மேலே நாம் அறிந்து கொண்டது போன்ற ஏராளமான மகத்துவங்கள் நோன்பிற்கு உண்டு. எனவே நோன்பை ஏதோ ஒரு அமல் என்று மட்டும் பார்க்காமல், அது மனித வாழ்வினை நேர்த்தியாக வடிவமைத்து கொள்ள இறைவனால் வழங்கப்பட்ட அழகிய செயல் திட்டம் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும் இஸ்லாம் காட்டித்தந்த இந்த வழிகாட்டலில் நாம் நோன்பை கடைபிடிக்கும் பொழுது நிச்சயம் அது கேடயமாக நமக்கு பாதுகாப்பளிக்கும் என்பதில் ஐயமில்லை  


அலட்சியப் படுத்தப்படும் அண்ணலாரின் நடைமுறைகள்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களின் வாழ்க்கைதான் உலக மக்கள் அனைவரும் பின் பற்றி வாழ்வதற்கு சரியானதும் தகுதியனதுமாகும் இன்று மனிதர்கள் பேஷன் என்ற அடிப்படையில் கண்ட கண்ட செயல்களில் ஈடுபட்டுக் கொடிருக்கின்றர்கள் அதனால் அவர்களுக்கு நோயும் ,கண்ணியக்குறைவும் ஏற்படுகின்றது நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந் நடைமுறைகள் மனிதனுக்கு அணைத்து விதத்திலும் ஆரோக்கியத்தையும் கண்ணியத்தையும் கொடுக்கின்றது ஏனெனில் அல்லாஹ் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை ஒட்டு மொத்த மனித சமூகத்திற்கும் அருள் கொடையாக அனுப்பியுள்ளான் . சுன்னத் இந்தச்சொல்லிற்கு அகராதியில் பொதுவாக ”வழி” என்று பொருள் இருந்தாலும், இஸ்லாமிய பழக்கத்தில் அது நபி வழிக்குத்தான் பயன் படுத்தப்படுகிறது. அதாவதுநபி அவர்களுடைய சொல், செயல், அங்கீகாரம் ஆகியவைகளுக்கு ”சுன்னத்” என்றுசொல்லப்படுகிறது “யார் எனது வழி முறையைப் புறக்கணிக்கின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவரில்லை.”                            அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல் : முஸ்லிம்   “وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ ۚ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ لَا تَعْتَذِرُوا قَدْ كَفَرْتُم بَعْدَ إِيمَانِكُمْ ۚ إِن نَّعْفُ عَن طَائِفَةٍ مِّنكُمْ نُعَذِّبْ طَائِفَةً بِأَنَّهُمْ كَانُوا مُجْرِمِينَ அல்லாஹ்வையும், அவனது வசனங்களையும், அவனது தூதரையுமா நீங்கள்பரிகசிக்கின்றீர்கள்…, நீங்கள் விசுவாசம் கொண்டதற்குப் பின்னர் நிச்சயமாக (அதனை) நிராகரித்தே விட்டீர்கள்.” (9:65,66) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையேச் சார்ந்தவர்.    அறிவிப்பவர் : இப்னு உமர் (ர­) அவர்கள் நூல் : அபூதாவுத் (3512)   நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்)உங்களு(டைய முடிவு)க்கு விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்)நீங்களும் விட்டுவிடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம்அவர்கள் தங்கள் இறைத்தூதர்கüடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன்கருத்து வேறுபாடு கொண்டதும்தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான்தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச்செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்தஅளவிற்குச் செய்யுங்கள்.                அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (7288) இந்த ஹதீஸ்கள் மூலம் நபி(ஸல்)அவர்களின் சுன்னத்களை பின்பற்றுவதின் முக்கியத்வம் விளக்கப்பட்டுள்ளது அதிலதான் அல்லாஹ்வின் நேசமமும் உள்ளது قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين                                                                                                                                        அல்குர்ஆன் 3: 31,32 சுன்னத்கள் ஸலாம் சொல்லுதல் இன்று ஒரு நபரை சந்திக்கும் போது சலாம் சொல்லும் பழக்க வழக்கம் குறைந்து விட்டது لا تدخلون الجنة حتى تؤمنوا ، ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم : أفشوا السلام بينكم   ஈமான் கொள்ளாதவரை உங்களில் ஒருவர் சுவனம் செல்ல முடியாது நீங்கள் ஒருவருக்கொருவர் பிரியம் கொள்ளாதவரை மூமீனாக முடியாது உங்களுக்கு மத்தியில் நேசத்தை அதிகரிக்கும் ஒன்றை சொல்லித் தரட்டுமா?அதுதான் உங்களுக்கு மத்தியில் சாலாமை பாரப்பிக்கொல்லுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் ، وتقرأ السلام على من عرفت ومن لم تعرف உணவு : பிஸ்மி சொல்லி சாப்பிடுதல் إذا أكل أحدكم فليذكر اسم الله ، فإن نسي أن يذكر اسم الله في أوله فليقل بسم الله أوله உங்களில் ஒருவர் சாபிட்டால் அல்லாஹ்வின் பெயரை நினைவு கூறட்டும் அதன் ஆரம்பத்திலே அல்லாஹ்வின் பெயர் கூற மறந்துவிட்டால் அவர் பிஸ்மில்லாஹி அவ்வலஹுவ ஆகிறகு என்று கூறட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்                                                    ஆயிஷா(ரலி) திர்மிதி வலது புறம் سَمَّ الله وكُلْ بيمينك وكُلْ مما يليك பிஸ்மிசொல்வீராக வலது கையில் சாப்பிடுவீராக உமக்கு அருகில் சாப்பிடுவீராக மூன்று விரலால்சாபிட்டு விரலை சூப்புவது رأيت رسول الله – صلى الله عليه وسلم-يأكل بثلاث أصابع فإن فرغ لعقها நான் நபி(ஸல்)அவர்கள் சாப்பிடுவதை பார்த்தேன் மூன்று விரல்களால் சாபிடுவார்கள் முடிந்ததும் விரலை சூப்புவார்கள் தண்ணீர் குடித்தல் : வலது புறம் : إذا أكل أحدكم فليأكل بيمينه وإذا شرب فليشرب بيمينه ، فإن الشيطان يأكل بشماله ويشرب بشماله நீங்கள் சாபிட்டால் வலது கையால் சாப்பிடுங்கள் குடித்தால் வலது கரத்தால் குடியுங்கள் ஏனெனில் ஷைத்தான் இடது கையால் சாப்பிடுவான் குடிப்பான் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் நின்று குடிக்க வேண்டாம் لا يشربن أحدكم قائماًقال - صلى الله عليه وسلم- ஆடை لا ينظر الله يوم القيامة إلى من جر إزاره بطراً   தன் வேட்டியை தரையில் இழுத்து நடப்பவனை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்கமாட்டன் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்   ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم: ... وذكر منهم: المسبل رواه مسلم   மூன்று நபர்களிடம் அல்லாஹ் பார்க்க மாட்டான் பேசமாட்டான் அவர்களை தூய்மை படுத்தமாட்டன் அவர்களுக்கு கடும் வேதனை உண்டு ........அதில் ஒருவன் வேட்டியை தரையில் படுமாறு பூமோயில் தொங்க விட்டுச் செல்பவன் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் ما أسفل من الكعبين من الإزار ففي النار ) رواه البخاري. ”இயற்கை மரபுகள் ஐந்தாகும். விருத்த சேதனம் செய்து கொள்வது, மர்ம உறுப்பின்முடிகளைக் களைவது, மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள்முடிகளை அகற்றுவது ஆகியவை தாம் அவை” என்றுமுகமதுநபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 5891     இது போன்ற அதிகமான சுன்ன்த்கள் உண்டு அதை நமது வாழ்வில் அனைவரும் ஒருமாதிரியாக பார்ப்பர்கள் என்று என்று வெட்கம் இல்லாமல் சொல்லுகின்றோம் ஆனால் இதில்தான் மருத்துவமும் கண்ணியமும் உள்ளது     சுன்னத்தில் மருத்துவம் தண்ணீரை, டம்ளரில் நன்றாக வாய் வைத்துக்குடிக்க வேண்டும். அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும்.வாய் நிறையதண்ணீரை வைத்திருந்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும்.அப்பொழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது உண்ட உணவுஜீரணிக்கும். அண்ணாந்திச் சாப்பிடுவது காது நோய் ஏற்படுத்தும் *டம்ளரில் வாய்வைத்துக் குடித்தால், காதில் வருகிற நோய்கள் தள்ளிப் போகும்.தண்ணீரைத் தலை அண்ணாந்திச்சாப்பிடுவது காது நோய்களுக்கு வழிவகுக்கும்.தண்ணீரை அண்ணாத்திக்குடித்தததால் ஏற்பட்ட பாதிப்பால் சிலருக்கு விரைந்து காது நோய்கள்தோன்றுகின்றன. நமது உடம்பில் காது,மூக்கு,தொண்டை வழிகள் ஒரே பாதையில்அடுத்தடுத்து உள்ளன                                                          நன்றி தமிழ் .நெட்   உலகெங்கும்மூன்று கோடியே முப்பது லட்சத்துக்கும் அதிகமானோர் எச் ஐ வியினால்பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் சஹாராபாலைவனத்துக்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். இந்தஎச் ஐ வி மற்றும் எயிட்ஸை குணமாக்குவதற்கான வழிகளை விஞ்ஞானிகள்தேடிக்கொண்டிருக்கும் அதேவேளை, அதனை தொற்றாமல் தடுப்பதற்கான வழிகள்குறித்தும் பெரும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த நோய் பெண்களில்இருந்து ஆண்களுக்கு பரவுவதை ஆண்கள் விருத்தசேஷனம் செய்து கொள்வதன் மூலம் 60 வீதத்தால் குறைக்க முடியும் என்று அண்மைய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.அதாவது முஸ்லிம்கள் உட்பட சில சமூகத்தினர் செய்துகொள்வது போன்றுஆண்குறியின் முன் தோலை அகற்றுவதே விருத்த சேஷனம் ஆகும். இதனால், பல ஆப்பிரிக்க நாடுகளில் ஆண்கள் விருத்த சேஷனத்தை செய்து கொள்வதை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜிம்பாப்பேவேயிலும்அரசாங்கம் இப்படியான திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. 2025 ஆம்ஆண்டுக்குள் பத்து லட்சம் ஆண்களுக்கு விருத்த சேஷனம் பண்ண முடியும் என்றுஅந்த நாட்டின் அரசாங்கம் நம்புகிறது. பிபிசியில் சமீபத்தில் விருத்த சேதனம் சம்பந்தமாக வநத செய்தி   சஹாபாக்கள் நபி(ஸல்)அவர்களின் சுன்னத்களை முழுமையாக பின்பற்றியவர்கள் சஹாபாக்கள் பெரிய பெரிய மன்னர்களுக்கு முன்னாலும் சரி எனது சுன்னத் எங்கள் நபிகள் காட்டித்தந்த சுன்ன்த்தான் என்று முழங்கிய சஹாபாக்கள் அதே போல் நபியவர்கள் இந்த இடத்தில் குனிந்து சென்றார்கள் அதனால் நானும் குனிந்து செல்கின்றேன் என்ற தோழர்களும் ஒரு வினடிப்பொழுது கூட நபியவர்களின் சுன்னத்தை விட்டுவிடாத தோழர்களும் தான் சஹாபாக்கள் அதே போன்று நாமும் நபி அவர்களின் வழிகாட்டுதலை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் அதற்கு நாம் நபியவர்களை நேசிக்க வேண்டும் நாம் நபியவர்களை நேசிப்பது உண்மையெனில் அதை நமது நடைமுறையில் காட்டவேண்டும் நாம் யாரை நேசிக்கின்றோமோ அவர்களுடனேயே எழுப்பபடுவோம் அல்லாஹ் நம்மை நபியவர்களின் சுன்னத்களை முழுமையாக பின்பற்றி நடக்க உதவி செய்வானாக ஆமின்!                 


நல்ல நண்பன்

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ   ஒரு குழந்தை பிறந்து, வளர்ந்து, படிக்கும்போது பல உறவுகளை சந்திக்கின்றது. அவ்வாறான உறவுகளில் மிகவும்கண்ணியமான உறவே நட்பாகும் .ஒருவன் தனது வாழ்வில் நடக்கும் பல விடயங்களை பெற்றோர். உறவினர்களுக்குசொல்கிறானோ, இல்லையோ தனது நண்பனுக்கு சொல்கிறான் . காரணம் அது ஒரு புனிதமான உறவு.ஒரு மனிதனுடைய வாழ்க்கையை தீர்மானிக்கின்ற சக்தியாகவும் இந்த நட்புவிளங்குகிறது. ஒரு மனிதனுக்கு இந்த உலகில் க கிடைக்கின்ற சிறப்புகளில் ஒன்றுதான் அவனுக்கு நல்ல நண்பன் கிடைப்பதாகும். இவ்வாறு ஒருவனுக்கு நல்லநண்பன் கிடைத்தால் அவனது வாழ்வு ஒளிமயமானதாக இருக்கும்.   இன்றைய நட்பு   இன்று நண்பர்கள் மூலமாகத்தான் மிகப்பெரிய தவறுகள் நடைபெறுகிறது எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஒருவனை ஒவ்வொரு தீய பழக்கத்தையும் கற்றுக் கொடுக்கும் இடம் இந்த மோசமான நட்பு வட்டாரம்தான் சிகரட்டில் ஆரம்பித்து படிப்படியாக மது ,மாது ,என வளர்ந்து கொலை ,கொள்ளை வரை கொடிகட்டி பறக்கின்றார்கள்   இஸ்லாமும் நட்பும்   இஸ்லாம் நட்பிற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றது நண்பனை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் அவனது தேவைகளை பூர்த்தி செய்வதில் எத்துணை நன்மைகள் உள்ளது அவன் மீது அன்பு வைப்பதினால் எவ்வளவு உயர்ந்த அந்தஸ்து உள்ளது என்பதை நமக்கு தெளிவாக விளக்குகின்றது   அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்கூறினார்கள்: அல்லாஹ் மறுமை நாளில் எனக்காக நேசம் வைத்துக் கொண்டவர்கள்எங்கே? என்னுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இந்நாளில் நான்அவர்களுக்கு எனது நிழலைத் தருகிறேன் என்றுக் கூறுவான்                                                          (அபூஹூரைரா(ரலி)முஸ்லிம் 4655)   அல்லாஹ் கூறுவதாக, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்விஷயத்தில் ஒருவருக் கொருவர் நேசித்துக் கொள்பவர்களுக்கும், என் விஷயத்தில்அமர்பவர்களுக்கும் என் விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டு செலவு  செய்பவர்களுக்கும் எனது பிரியம் உறுதியாகி விட்டது. ரலி முஆத்                                        )அஹ்மத்(21114)   நண்பர்களை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?   பொதுவாக நண்பர்களை தேர்வு செய்தல் என்பது பணத்திற்காகவும் ,பதவிக்காகவும் ஜாலிக்காகவும் பொழுதுபோக்கிர்காகவும் தான் அதிகமாக உள்ளது இஸ்லாம் கூறும் இந்த நன்மைகளை அடைய வேண்டுமெனில் நமது நட்பை இவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும்   அல்லாஹ்விற்காக பெரும்பாலானநண்பர்கள் வீணாக பேசுவது ஊர் சுத்துவது திரையரங்குகளுக்குச் செல்வது போன்ற தீயகாரியங்களில் ஒன்றுபடுகிறார்கள். அனைவரும் அல்லாஹ்வுடைய மார்க்கம்மேலோங்குவதற்காக ஒன்று கூடுவது அரிதிலும் அரிதாகிவிட்டது. இஸ்லாத்தை பரப்புவதற்காக அறிமுகமில்லாத பலரிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்தி நட்பைஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இறைவனுக்காக நட்பு வைத்தவர் களுக்கு ஏராளமான சிறப்புகள் இருப்பதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.   அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் அல்லாஹ்விற்காக நேசிக்கிறாரோ அல்லாஹ்விற்காக வெறுக்கிறாரோ அல்லாஹ்விற்காக கொடுக்கிறாரோ அல்லாஹ்விற்காகமறுக்கிறாரோ அவர் ஈமானை பூரணப்படுத்திக்கொண்டார். அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)  நூல்: அபூதாவூத் (4061)   நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வேறொரு ஊரில் இருக்கும் தன் சகோதரனைசந்திப்பதற்காக ஒருவர் சென்றார். அவர் செல்லும் வழியில் ஒரு வானவரை அல்லாஹ்அவரிடத்தில் அனுப்பினான். அந்த வானவர் அவரிடத்தில் வந்த போது நீங்கள் எங்கே செல்ல நினைக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர் இந்த ஊரில் உள்ளஎனது சகோதரனை (சந்திக்க) நாடிச் செல்கிறேன் என்று கூறினார். உங்களுக்குசொந்தமான எதையாவது அவர் உங்களுக்கு தர வேண்டியுள்ளதா? என்று கேட்டனர்.அதற்கு அவர், இல்லை. கண்ணியமானவனும் சங்கையான வனுமான அல்லாஹ்விற்காக அவரைநேசிக்கிறேன் என்று கூறினார். அந்த வானவர் நீங்கள் யாருக்காக அவரைநேசித்தீர்களோ அவன் உங்களை நேசிக்கிறான் என்பதை உங்களிடம் (கூற வந்த)அல்லாஹ்வின் தூதராவேன் நான் என்று கூறினார். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் (4656)   அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் விஷயத்தில் ஒருவருக்கொருவர்நேசித்துக் கொள்பவர்களுக்கும் என் விஷயத்தில் அமர்பவர்களுக்கும் என்விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டு செலவு செய்பவர்களுக்கும் எனது பிரியும்உறுதியாகிவிட்டது என்று அல்லாஹ் கூறுகிறான். அறிவிப்பவர்: முஆத் (ரலி)  நூல்: அஹ்மத் (21114)   அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமை நாளில் எனக்காக நேசம்வைத்துக் கொண்டவர்கள் எங்கே? என்னுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாதஇந்நாளில் நான் அவர்களுக்கு எனது நிழலைத் தருகிறேன் என்று கூறுவான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  நூல்: முஸ்லிம் (4655) அல்லாஹ்வின்அடியார்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் நபிமார்களும் அல்ல. இறைவனின்பாதையில் உயிர் நீத்தவர்களும் அல்ல. இவர்களுக்கு அல்லாஹ் விடத்தில்கிடைக்கும் அந்தஸ்த்தைப் பார்த்து நபிமார்களும் தியாகிகளும்பொறாமைப்படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் அவர்கள்யார் என எங்களுக்குக் கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள்.அதற்கு நபியவர்கள் தங்களுக்கிடையே இரத்த உறவிற்காகவோ, கொடுத்து வாங்கிக்கொள்ளும் செல்வங்களுக்காகவோ அல்லாமல் அல்லாஹ்விற்காக ஒருவரையொருவர்நேசித்துக் கொண்டவர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக அவர்களுடையமுகங்கள் ஒளியாக இருக்கும். அவர்கள் ஒளியின் மீது இருப்பார்கள். மக்கள்அஞ்சும் போது அவர்கள் அஞ்சமாட்டார்கள். மக்கள் கவலைப்படும் போது அவர்கள்கவலைப்பட மாட்டார்கள் என்று கூறி விட்டு அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தபயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்ற வசனத்தை படித்துக்காட்டினார்கள்.  அறிவிப்பவர்: உமர் பின் அல்ஹத்தாப்(ரலி) நூல்: அபூதாவூத் (3060)   யார் அல்லாஹ்விற்காக நேசிக்கிறாரோ அல்லாஹ்விற்காக வெறுக்கிறாரோ அல்லாஹ்விற்காக கொடுக்கிறாரோ அல்லாஹ்விற்காக மறுக்கிறாரோ அவர் ஈமானைபுரணப்படுத்திக் கொண்டவர்   (அபூஉமாமா(ரலி) அபூதாவூத்  4061)   மார்க்கம் நட்புவிஷயங்களில்மார்க்கம்மிகமுக்கியமாக கவனிக்கப்படஒன்றாகும்நமதுஉற்றநண்பர்கள் நமதுகொள்கையைசார்ந்தவராகத்தான்இருக்க வேண்டும் ولا تتخدالكافرين اولياءஎன்பதாக அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான் وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ ۚ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَيُطِيعُونَ اللَّهَ وَرَسُولَهُ ۚ أُولَٰئِكَ سَيَرْحَمُهُمُ اللَّهُ ۗ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ நம்பிக்கைக் கொண்ட ஆண்களும் பெண்களும் ஒருவருக் கொருவர் உற்ற நண்பர்கள்.அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையை தடுப்பார்கள். தொழுகையைநிலைநாட்டுவார்கள். ஜகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும் அவனதுதூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள் புரிவான்.அல்லாஹ் மிகைத்தவன். ஞானமிக்கவன்.      (அல்குர்ஆன்: 9: 71)   நற்குணம் & ஒழுக்கம் நற்குணம் உள்ள மனிதர்களைத்தான் நண்பராகத் தேர்வு செய்ய வேண்டும் ஏனெனில் இன்று அதிகமானவர்கள்வழிகெட்டுதறுதலைகளாக சுற்றுவதற்கு இந்த இரண்டு குனங்ககலும் இல்லாத நண்பர்களை தேர்வு செய்ததுதான் காரணம் وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَىٰ يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَىٰ لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا لَّقَدْ أَضَلَّنِي عَنِ الذِّكْرِ بَعْدَ إِذْ جَاءَنِي ۗ وَكَانَ الشَّيْطَانُ لِلْإِنسَانِ خَذُولًا அந்தநாளில்அக்கிரமக்காரன்தன்இருகைகளையும் கடித்துக்கொண்டுநம்தூதருடன்நானும்நேரானவழியில் சென்றிருக்கவேண்டாமா? என்றுகூறுவான். அன்றிஅய்யோபாவம்செய்யும்படிதூண்டியஇன்னமனிதனைஎன்னுடையசிநேகிதனாகஆக்கிக்கொள்ளாதிருக்க வேண்டுமே ? என்னிடம்நல்லுபதேசம்வந்தது. பின்னரும்அதிலிருந்துஅவன்தன்என்னைவழிகெடுத்துவிட்டான். அந்தஷைத்தான்மனிதனுக்குப்பெரும்சதிகாரனாகஇருந்தான் (என்றும்கைசேதப்படுவான்).”                                                  (சூராஅல்ஃபுர்கான் : 27 ,28,29) நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும்கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும்கிடைக்காமல் போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம். அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக் கொள்ளலாம். கொல்லனின் உலை உமது வீட்டையோ அல்லதுஉனது ஆடையையோ எரித்து விடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர்பெற்றுக் கொள்வீர்                                                                    . (அபூமூசா (ரலி) புகாரி   3336   ஆணும்-பெண்ணும்   மேற்கத்திய கலாச்சரத்தின் மோகத்தினால் ஆணும் பெண்ணும் பேசுவதினாலோ நட்பு கொள்வதினாலோ தவறில்லை நட்புதானே வேறு தவறான விஷயம் இல்லேயே என்ற அடிப்படையில் பல சமூக சீரழிவான நிகழ்வுகள் அதிகமாகவே நடை பெறுகிறது இந்த கேடுகெட்ட நட்பிற்கு இஸ்லாத்தில் அனுமதி கிடையாது                                                        உங்களில் ஒருவர் அவருக்கு ஹலால் இல்லாத பெண்ணை தொடுவதை விட அவரது தலையில் இரும்பு ஊசியால் குத்துவதே சிறந்தது என நபி(ஸல்) கூறினார்கள் மஅகல் இப்னு யாசர் (ரலி) தப்ரானி மணமுடிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட ஆண் துணையுடன் அல்லாது ஒரு பெண் பயணம் செய்ய வேண்டாம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்                              இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி, முஸ்லிம்   நண்பர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?   நண்பர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு அல்லாஹ்வின் தூதருடைய உதாரனத்தை விட சிறந்த ஒரு உதாரனத்தை கூறி விட முடியாது நபி (ஸல்)-அபூபக்கர் (ரலி) முழு நம்பிக்கை   நபித்துவம் கேட்ட உடன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுதல் வானுலக பயணத்தை உண்மை படுத்துதல் உயிர்கொடுப்பான்தோழன் மக்காவாசிகள் நபி(ஸல்) அடித்த சமயம் அதனை விளக்கி தான் அடி வாங்கிய நிகழ்வு ஹிஜ்ரத்தின் போது தவ்று குகையில் இது போன்ற அதிகமான உதாரணங்கள் நபி (ஸல்)-அபூபக்கர் (ரலி) வாழ்கையில் நடைபெற்றுள்ளது   நட்பை முறிப்பது எப்போது?   நாம் நமது தோழனிடத்தில் மார்கத்திற்கு புறம்பான செயல்கள் காணும்போது அதை நம்மால் முடிந்தவரை தடுக்க வேண்டும் திருந்தாத பட்சத்தில் அவனது தோழமையை முறித்து விட வேண்டும் அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்விற்காக நேசிக்கிறாரோஅல்லாஹ்விற்காக வெறுக்கிறாரோ அல்லாஹ்விற்காக கொடுக்கிறாரோ அல்லாஹ்விற்காகமறுக்கிறாரோ அவர் ஈமானை பூரணப்படுத்திக்கொண்டார்.                      அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)  நூல்: அபூதாவூத் (4061)   நட்பின் வரம்பு        நமது நண்பன் எத்துணை நம்பிக்கை உள்ளவனாக இருந்தாலும் அவர்களுக்கு ஒரு எல்லை உண்டு நமது வீட்டிற்குள் நாம் இல்லாத போது அனுமதிப்பது ,நமது பருவம் அடைந்த நமது பெண்பிள்ளைகளை சகஜமாக பேசவிடுவது ,நமது மனைவியை சகஜமாக பேசவிடுவது போன்ற இஸ்லாம் தடை வித்தத வரம்புக்குள் நமது நட்பை தொடர வேண்டும் يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ ۚ وَمَن يَتَّبِعْ خُطُوَاتِ الشَّيْطَانِ فَإِنَّهُ يَأْمُرُ بِالْفَحْشَاءِ وَالْمُنكَرِ ۚ وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ مَا زَكَىٰ مِنكُم مِّنْ أَحَدٍ أَبَدًا وَلَٰكِنَّ اللَّهَ يُزَكِّي مَن يَشَاءُ ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ                                                     &nbs


நாமும் குடும்பத்தின் பொறுப்பும்

                   நாமும் குடும்பத்தின்பொறுப்பும்    முன்னுரை ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஏதாவது ஒரு பொறுப்பு உள்ளது அந்த பொறுப்பை சரியான முறையில் நடைமுறை படுத்தினால் உலகம் சீரான முறையில் இயங்கும் ஆனால் எவரும் தங்களுடைய பொறுப்பை உணர்வதில்லை அவ்வாறு உணராததின் விளைவு உலகம் பல சீரழிவுகளை சந்திக்கின்றது  இஸ்லாம் பொறுப்பை பற்றி                                                                                                                                              அல் குரான் 3: 159                                                                                                                                            அல் குர்ஆன் 26 :215 எவர் ஒருவர் முஸ்லிம் உம்மத்திற்கு பொறுப்பாளராக ஆக்கப் படுகிறாரோ பிறகு அதில் மோசடி செய்கிறாரோ அவருக்கு இறைவன் சுவனத்தை ஹராம் ஆக்கி விடுவான் என நபி (ஸல் )அவர்கள் கூறினார்கள்                                                                                                                                                  புகாரி ,முஸ்லிம குடும்பம் இன்று கணவன் மனைவியின் பிரச்சனையின் காரணமாக விவாகரத்துகள் பெருகி இருப்பதும், வயது முதிர்ந்த பெற்றோர்களை பராமரிக்க முடியாமல் முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விடுவதும் , சிறார் ஜெயலில் சிறுவர்கள் நிரம்பி இருப்பதற்கும் காரணம் குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களுடைய பொறுப்புகளை சரியான முறையில் பின்பற்றாமல் இருப்பதே காரணம் அனைவரும் பொறுப்பாளரே உங்களில் அனைவரும் தங்களுடைய பொறுப்பு பற்றி கேட்க்கப்படுவீர்கள் தலைவரும் பொறுப்பாளரே அவர் தனது பொறுப்பை பற்றி கேட்க்கப்படுவார் ஒரு மனிதர் தனது குடும்பத்திற்கு பொருப்புதாரியவார் ஒரு பெண் தனது கணவனின் வீடு மற்றும் குழந்தைகளுக்கு பொறுப்பாளியாக உள்ளாள் நீங்கள் அனைவரும்         பொறுபாளியாவீர்கள் உங்களில் அனைவரும் தங்கள் பொறுப்புகள் பற்றி கேள்வி கேட்க்கபடுவீர்கள் என நபி (ஸல் )அவர்கள் கூறினார்கள்                                                                                                                                                 புகாரி ,முஸ்லிம் கணவனின் பொறுப்பு இறை தூதர் அவர்களே எங்களில் ஒரவரிடம் அவரது மனைவியின் உரிமைகள் என்ன என்று கேட்டேன் நீர் சாப்பிடும் போது அவளையும் சாப்பிட செய்ய வேண்டும் நீர் புதிய ஆடை உடுத்தும் போது அவளுக்கு உடுத்த கொடுக்க வேண்டும் முகத்தில் அடிக்காதீர் இழிவாக பேசாதீர் வீட்டிலேயே தவிர வெளியில் அவளை கண்டிக்காதீர் என நபி (ஸல் )அவர்கள் கூறினார்கள்                                                                                                                                                              அபூதாவூத் ஈமானால் முமீன்களில் பரிபூரனமவர் அவர்களில் அழகிய குணமிக்கவர்தான் உங்களில் சிறந்தவர் மனைவியரிடம் சிறந்தவராக நடந்தவர் தான் என நபி (ஸல் )அவர்கள் கூறினார்கள்                                                                                                                                                                    திர்மிதி      يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّ مِنْ أَزْوَاجِكُمْ وَأَوْلَادِكُمْ عَدُوًّا لَّكُمْ فَاحْذَرُوهُمْ ۚ وَإِن تَعْفُوا وَتَصْفَحُوا وَتَغْفِرُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ                                                                                                                                                                                                                                                                                            அல்குரான் 64-14 பெண்களிடம் நயமாக நடந்தது கொள்ளுங்கள் பெண்கள் விலா எளும்பிளிருந்து படைக்கப்பட்டுள்ளார்கள் விழாவின் மேற்பகுதி கோணலாக இருக்கும் அதை நிமிர்த்த முற்ப்பட்டால் அது உடைந்து விடும் அதனை அவ்வாறே விட்டு விட்டால் அது கோணலாக இருக்கும் எனவே பெண்களுடன் அழகான முறையில் நடந்தது கொள்ளுங்கள் என நபி (ஸல் )அவர்கள் கூறினார்கள்                                                                                                                                                 புகாரி ,முஸ்லிம் நபி (ஸல்)அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவின் போது கூறினார்கள் மக்களே கேட்டுக்கொள்ளுங்கள் பெண்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் ஏனனில் அவரகள் உங்களிடம் கைதிகளை போன்று இருக்கின்றார்கள் நீங்கள் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள யாதொரு உரிமையும் இல்லை வெளிப்படையாக மாறு செய்தாலே தவிர அவர்கள் அவ்வாறு செய்தால் படுக்கையை விட்டு தனிமை படுத்துங்கள் தேவை பட்டால் காயம் ஏற்படாதவாறு லேசாக அடியுங்கள் அவர்கள் உங்களுடைய சொல் படி நடந்தால் அவர்களை துன்புறுத்த சாக்கு போக்கு தேடாதீர்கள் என நபி (ஸல்) கூறினார்கள்   மனைவிக்கு மார்க்கத்தை கற்றுக் கொடுத்தல் يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ                                                                                                                                                  அல்குர்ஆன் 66.6 وَاذْكُرْنَ مَا يُتْلَىٰ فِي بُيُوتِكُنَّ مِنْ آيَاتِ اللَّهِ وَالْحِكْمَةِ ۚ إِنَّ اللَّهَ كَانَ لَطِيفًا خَبِيرًا                                                                                                                                                அல்குர்ஆன் 33.34 وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا ۖ لَا نَسْأَلُكَ رِزْقًا ۖ نَّحْنُ نَرْزُقُكَ ۗ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَىٰ                                                                                                                                               அல்குர்ஆன் 20.132 கணவன் தன் மனைவியை இரவில் எழச் செய்கிறான் பிறகு இருவரும் சேர்ந்து இரண்டு ரகஅத் தொழுகையை தொழுகிறார்கள் எனில் கணவன் மனைவி இருவரின் பெயரும் திக்ரு செய்பவர்களின் பட்டியலில் சேர்க்கப்படும் என நபி (ஸல்) கூறினார்கள்                                                                                                                                                            அபூதாவூத்   இந்த அடிப்படையில் ஒரு கணவன் தனது மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகளை முழுமையாக செய்து விட்டால் எங்கே கணவன் மனைவி பிரச்சனைகளை பார்க்க முடியும்   மனைவின் கடமை َلِكُلٍّ جَعَلْنَا مَوَالِيَ مِمَّا تَرَكَ الْوَالِدَانِ وَالْأَقْرَبُونَ ۚ وَالَّذِينَ عَقَدَتْ أَيْمَانُكُمْ فَآتُوهُمْ نَصِيبَهُمْ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدًا                                                                                                                                                        அல்குர்ஆன் 4.34 ஒரு பெண் 5 வேளை தொழுகையை தொழுது தனது மானத்தையும் பாதுகாத்து தம் வாசலில் வேண்டுமென்றாலும் கணவனுக்கு கீழ் படிந்தது நடந்தால் எனில் அவள் சுவனத்தின் வாசல்களில் எந்த வாசலில் வேண்டுமென்றாலும் நுழைந்து கொள்ளலாம் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் யார் தனது வீட்டிற்கு வருவது கணவனுக்கு அருவருப்பாக இருக்குமோ அத்தகையோரை வீட்டிற்கு வர அனுமதிக்க கூடாது மேலும் தன் வீட்டிலிருந்து வெளியே செல்வது கணவனுக்கு பிடிக்க வில்லை என்றால் வீட்டை விட்டு வெளியே செல்லக்க் கூடாது கணவரோடு உள்ள விவகாரங்களில் மற்றவரின் பேச்சை கேட்கக்கூடாது இத்தகைய செயல் ஒரு மூமீனான பெண்ணுக்கு ஆகுமானது இல்லை .        எந்த மனைவி தன் கணவனுடன் மகிழ்ச்சியாகவும் ராசியாக உள்ள நிலையில் மரணம் அடைகிராளோ அவள் சுவனத்தில் நுழைவாள் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்                                                                                                                                   திர்மிதி   கணவனின் அந்தஸ்து ஒரு மனிதர் மற்றொரு மனிதருக்கு சஜ்தா செய்ய கட்டளை இடுவதாக இருந்தால் ஒரு பெண்ண அவளது கணவருக்கு சஜ்தா செய்யும் படி கட்டளையிட்டுருப்பேன் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்      திர்மிதி   பெற்றோர்களின் கடமை     இன்று குழந்தைகளிடத்தில் ஒழுக்க சீரழிவு அதிகமாகி விட்டது அதற்கு காரணம் பெற்றோர்கள் சரியான முறையில் வளர்க்காதே காரணம்   அன்பை கொட்டுங்கள் ஒரு முறை அகரா இப்னு ஹபீஸ் (ரலி)அவர்கள் நபி (ஸல்)அவர்களின் சமூகம் வருகை தந்தார் அப்போது நபி (ஸல்)அவர்கள் ஹசன் (ரலி)அவர்களை முத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள் தாங்கள் குழந்தையை முத்தமிடுகிறீர்களா எனக்கு பத்து குழந்தைகள் உள்ளது அவர்களில் யாரையும் முத்த்கமிட்டது இல்லை நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் உமது உள்ளத்தில் கருணையை எடுத்து விட்டால் நான் என்ன செய்ய முடியும் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்           மார்க்கத்தை கற்றுக் கொடுங்கள் தந்தை தனது பிள்ளைகளுக்கு வழங்கும் அன்பளிப்புகள் சிறந்தது அவர்களுக்கு வழங்கும் நல்ல கல்வியும் நல்லொழுக்க பயிர்சியுமே ஆகும் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்              மிஷ்காத் உங்களின் குழந்தைக்கு 7 வயது ஆகும் போது தொழுகையை கற்றுக் கொடுங்கள் பத்து வயதாகும் போது தொழாவிட்டால் அதற்காக அவர்களை அடியுங்கள்   என நபி (ஸல்)அவர்கள் கூறினார                                                             திர்மிதி   பிள்ளைகளின் கடமை எப்படி பெற்றோர்கள் குழந்தைகளிடத்தில் தங்களுடைய பொறுப்புகளை சரியான முறையில் செய்ய வேண்டுமோ அதே போல் பிள்ளைகளும் தங்களுடைய பொறுப்புகளையும் சரியான முறையில் நிறைவேற்ற வேண்டும் அல்லாஹ்விற்கு மிக விருப்பமான செயல் எதுவென்று கேட்டேன் உரிய நேரத்தில் தொழுவது என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் பின்பு எது என்று கேட்டேன் பெற்றோர்களுக்கு நன்மை செய்யுதல் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் பின்பு எது என்று கேட்டேன் ஜிஹாது என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்                                                                                                                   புகாரி ,முஸ்லிம்   முதிய வயதுடைய பெற்றோர்கள் இருவரோ அல்லது ஒருவரோ இருந்தும் சுவர்க்கம் நுழைய முடியாமல் போனவன் நாசாமடைவனாக நாசாமடைவனாக நாசாமடைவனாக என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்                                                                                                                                                                 முஸ்லிம் இதுப்போன்று குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பை இஸ்லாம் காட்டிய வழியில் நடைமுறை படுத்தினால் அந்த குடும்பத்தில் அமைதி மட்டுமே நிலைத்திருக்கும் முடிவுரை ஒரு கும்பத்தில் உள்ளவர்களை போன்று சமூகத்தில் உள்ள ஒவ்வொரு தனி நபரும் தங்களின் பொறுப்புகளை உணர்ந்து செயல் பட்டால் உலகம் அமைதி என்ற சுவாசத்தை சுவாசிக்கும் அல்லாஹ் அருள் புரிவனாக ஆமின்


இஸ்லாமிய வளர்ச்சியில் முதியோர்கள்

  இஸ்லாமிய வளர்ச்சியில்  முதியோர்கள் முன்னுரை: முதியோர் இல்லத்திற்கு பணம் கொடு பொருள் கொடு உணவு கொடு உடை கொடு உன் பெற்றோரை கொடுத்து விடாதே! இந்த கவிதை படித்ததில் பிடித்தது உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் மரணத்தை நோக்கிச் செல்கின்ற தன் பயணத்தின் இறுதியில் சந்திக்கின்ற காலகட்டம் தான் முதுமை! அதன் காரணமாகவே வயோதிகம் மரணத்தின் முன்னறிவிப்பு போன்றதாகும் என்றும் நரையும் மூப்பும் மரணத்தின் தூதுவர்கள் என்றும் சொல்லப்படுகின்றது. எல்லா நாடுகளிலும் பன்னெடுங்காலமாக முதுமைக்கும், முதியவர்களுக்கும் கொடுத்து வந்த முக்கியத்துவம், கண்ணியம், மரியாதை ஆகியவை நாகரீக உலகம் என்று சொல்லப்படுகிற இன்றைய அவசர காலகட்டத்தில் பெயரளவுக்குக் கூட கொடுக்கப்படாமல் முதியவர்கள் தங்களுடைய பிள்ளைகளாலேயே ஓரங்கட்டப்பட்டு, இறைவா! எங்களை சீக்கிரமாக அழைத்துக் கொள்! என்று மரணத்தை வேண்டி துஆச் செய்பவர்களாக இருப்பதைக் காணமுடிகிறது. பிள்ளைகளும், உற்றார் உறவினர்களும் கவனிக்காத காரணத்தால் ஏராளமான முதியவர்கள் பிச்சை எடுப்பவர்களாக மாறி வருவதும் நாம் அறிந்திருக்கின்ற எதார்த்த உண்மையாகும்.    இன்றைய  இலவச முதியோர் இல்லங்களில் இடமே இல்லை என்பது நிதர்சனமான உண்மை. அந்த அளவுக்கு எல்லா இலவச முதியோர் இல்லங்களும் நிரம்பி வழிகின்றன. மதுரையில் அதிகபட்சம் 50 பேர் வரை தங்க முடியும் ஒரு இலவச முதியோர் இல்லத்துக்கு தினந்தோறும் குறைந்தது 50 பேர் வரை தங்களை சேர்த்துக்கொள்ளும்படி கோரி முதியவர்கள் வந்து திரும்பிச் செல்வதாக கூறுகிறார் அந்த இலவச முதியோர் இல்லத்தின் காப்பாளர் ஷர்மிளா. இஸ்லாமும் முதியவர்களும்        முதுமை அனைவருக்கும் சொந்தம் நமது வாழ்க்கையை உடலியல் அடிப்படையில் குழந்தைப் பருவம், இளமை, முதுமை என மூன்று பிரதானப் பிரிவுகளாக வகுக்கலாம் இந்த மூன்று பருவத்தையும் மனிதர்கள் அனைவரும் சந்தித்தாக வேண்டும்   அல்லாஹ் உங்களை (ஆரம்பத்தில்) பலவீனத்திலிருந்து உங்களை படைத்தான். பிறகு பலவீனத்திற்குப் பின் (உங்களுக்குச்) சக்தியை (வாலிபத்தை) உண்டாக்கினான். அந்தப் பலத்திற்குப் பின் பலவீனத்தையும் (முதுமையின்) நரையையும் இறைவன் ஆக்கினான். திருக்குர்ஆன் (30:54) அதிகாலையிலும், அந்தி மாலையிலும் ஒரு சில குறிப்பிட்ட பிரார்த்தனைகளை வழமையாக செய்பவர்களாக இருந்தார்கள். அதிலே ‘இறைவா, மோசமான முதுமையை விட்டு உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்’எனவும் தினம் தினம் பிரார்த்தனை செய்துவந்தார்கள் செய்தார்கள்   முதியவர்களை கண்ணியப்படுத்துதல்   وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ ؕ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا‏  அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக   நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் சிலர் வந்திருந்தபோது அவர்களில் சிறிய வயதுடைய அப்துர் ரஹமான் இப்னு ஸஹல் (ரழி) பேச ஆரம்பித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''பெரியவர்களுக்கு மரியாதை கொடு''என்றார்கள். அப்துர் ரஹமான் (ரழி) அவர்கள் மெªனமானார். பிறகு வயதில் மூத்தவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பேசினர். ஸமுரா இப்னு ஜுன்துப் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ''நான் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சிறுவனாக இருந்தேன். அவர்களிடமிருந்து (ஹதீஸ்களை) மனனமிட்டிருந்தேன். அதை நான் வெளியே சொல்லத் தடையாக இருந்ததெல்லாம் அங்கு என்னைவிட வயதில் மூத்த பெரியவர்கள் இருந்தார்கள் என்பதுதான்''. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)   யார் நம்மில் பெரியவருக்கு மரியாதை செய்யாமலும் சிறியவருக்கு இரக்கம் காட்டாமலும் (மார்க்க) அறிஞரின் தகுதியை அறிந்து (அதற்குத்தக்கவாறு அவரிடம் நடந்து) கொள்ளாமல் இருக்கிறார்களோ அவர்கள் எனது சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் அல்ல என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.   நிகழ்வு-1 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சபையில் இருந்தார்கள். அங்கு அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) இருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் கேட்ட கேள்விக்கான பதிலைத் தெரிந்திருந்தும் அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) அவர்களை கண்ணியப்படுத்தும் விதமாக இப்னு உமர் (ரழி) மெªனமாக இருந்து விட்டார்கள்.   இது பற்றி இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ''எனக்கு ஒரு மரத்தைப்பற்றி அறிவியுங்கள். அது முஸ்லிமுக்கு உதாரணமாகும். இரட்சகனின் உத்தரவுப்படி எல்லா நேரங்களிலும் கனிகளை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதன் இலைகள் உதிர்வதில்லை (அது என்ன மரம்)'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். என் மனதில் அது 'பேரீச்ச மரம்' என்று தோன்றியது. அந்த இடத்தில் அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) இருந்ததால் அதைக் கூறத் தயங்கினேன். அந்த இருவரும் பேசாமலிருந்ததால் நபி (ஸல்) அவர்கள் ''அது பேரீச்ச மரம்'' என்று கூறினார்கள். என் தந்தையுடன் வெளியே வந்தபோது ''எனது தந்தையே என் மனதில் 'பேரீச்சமரம்' என்று தோன்றியது'' என்றேன். அவர்கள் ''அதைச் சொல்லாமல் உன்னைத் தடுத்தது எது?'' அதை நீ கூறியிருந்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்குமே'' என்றார்கள். ''உங்களையும், அபூபக்கர் (ரழி) அவர்களையும் பேசாமலிருக்கக் கண்டேன். எனவே நான் அதைக் கூற விரும்பவில்லை என்று கூறினேன்'' என இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்   நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''முஸ்லிமான வயோதிகரையும், குர்ஆனை அறிந்து அதில் வரம்பு மீறாமலும்,அதைப் புறக்கணிக்காமலும் இருப்பவரையும், நீதம் செலுத்தும் அதிகாரியையும் கண்ணியப் படுத்துவது அல்லாஹவைக் கண்ணியப்படுத்துவதில் கட்டுப்பட்டதாகும்.'' (ஸுனன் அபூதாவூத்) ஒரு தடவை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அருளியதாக கஃப் இப்னு உஜ்ரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்; எங்களை நோக்கி அனைவரும் மிம்பருக்கருகில் வாருங்கள்! என்று கூறினார்கள். நாங்கள் அங்கு ஓடினோம். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மிம்பரின் முதல் படியில் கால்வைத்து ஏறியவுடன் ஆமீன் என்று கூறினார்கள். பிறகு இரண்டாவது படியில் எரிய பிறகும் ஆமீன் என்று கூறினார்கள். பின்னர் மூன்றாவது படியில் ஏறிய போதும் ஆமீன் என்று கூறினார்கள்.நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தங்களுடைய உபதேசத்தை முடித்துக்கொண்டு கீழே இறங்கிய போது, யா ரஸுலுல்லாஹ்! இன்று நாங்கள் தங்களிடமிருந்து என்றும் செவியுறாத ஒரு விஷயத்தை செவியுற்றோமே! என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் நான் முதற்படியில் கால்வைத்து ஏறியபோது ஹஸ்ரத் ஜிப்ரயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் என் முன்தோற்றமளித்து, எந்த மனிதன் ரமழான் மாதத்தை அடைந்தும் தன் பாவங்களுக்கு மன்னிப்பைப் பெறவில்லையோ, அவன் நாசமடைவானாக! என்று கூறினார்கள். நான் ஆமீன் என்று கூறினேன். பிறகு இரண்டாவது படியில் ஏறிய போது (நபியே!) தங்களின் திருநாமம் கூறப்பட்டு தங்களின் மீது ஸலவாத்துச் சொல்லாத மனிதன் நாசமடைவானாக! என்று கூறினார்கள். நான் ஆமீன் என்றேன். மூன்றாவது படியில் ஏறிய போது எந்த மனிதன் வயோதிகம் அடைந்த தன் தாய், தந்தை இருவரையோ அல்லது இருவரில் ஒருவரையோ அடைந்திருந்து அவர்கள் அவனை சொர்க்கத்தில் நுழைவிக்கச் செய்யவில்லையோ அவன் நாசமடைவானாக! என்று கூறினார்கள். நான் ஆமீன் என்று கூறினேன் எனப் பதிலளித்தார்கள். ‘ஒரு இளைஞன் ஒரு முதியவரின் வயதிற்கு கண்ணியம் செய்தால், அந்த இளைஞனுக்கு அவனின் வயோதிகத்தில் அவனை கண்ணியம் செய்யக் கூடிய ஒரு நபரை இறைவனே ஏற்படுத்துகிறான்’ என்றார்கள் நாயகம். நிகழ்வு-2 ஒரு நாள் ஹஸ்ரத் அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் வந்த பொழுது அவருடைய முகம் சற்று மாறுதல் ஏற்பட்டுள்ளதே! என்ன காரணம்? என்று கேட்டார்கள். ஒன்றுமில்லையே இறைவனின் தூதரே! என்றார்கள் அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள். இல்லை! ஏதோ ஒரு சம்பவம் ஏற்பட்டுள்ளது போன்று தெரிகிறதே! என்ன அது? என்று மீண்டும் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கேட்ட பொழுது அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்: நான் இங்கு வந்து கொண்டிருக்கும் பொழுது வழியில் எனக்கு முன்னாள் ஒரு யூதப் பெரியவர் நடந்து சென்று கொண்டிருந்தார். முஸ்லிமல்லாத இந்த யூதருக்குப் பின்னால் எவ்வளவு நேரம் சென்று கொண்டிருப்பது என்று நினைத்து அவரை முந்திக் கொண்டு வந்தேன். வழி குறுகலாக இருந்ததால் அவர் மீது என் உடல் மோதிவிட்டது. இதுதான் நடந்தது என்று கூறினார்கள்.இதனைக் கேட்ட அவர்கள் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்; அலியே! நீர் பெரிய தவறு செய்து விட்டீர். உம்மை விட வயதில் மூத்தவருக்கு மரியாதை தராமல் அவரை உராய்ந்து கொண்டு முந்தி வந்திருக்கிறீர்கள். அந்த நேரத்தில் அவருடைய மனம் வருத்தமடைந்திருக்கும் எனவே, உடனே அவரிடம் சென்று மன்னிப்புக் கேட்டு வருவீராக! என்று பணித்தார்கள்.   முதியவர்களிடம் ஆலோசனை செய்தல்   மூத்தோர் சொல் அமிழ்தம்’ என்பது பழமொழி. உண்மை தான். ‘அறிவாளியிடம் கேட்பதை விட ஒரு அனுபவசாலியிடம் கேள்’ என அரபியிலே ஒரு பழமொழி உண்டு. இவ்வுலகத்தின் சகல காரியங்களிலும் முதிர்ச்சியை நல்ல அனுபவத்தைக் கொண்டவர்கள் முதியோர்கள் மட்டுமே. முதியோர்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்வது உலகிற்கான உயிர் நாடியாகும். சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.3: 159   இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள் - அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள். 42:38.   முதியவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் இருப்பதும் அவர்களை பாதுகாப்பதும்   ஒரு முறை அபூபக்கர் (ரலி) அவர்கள் வயது முதிர்ந்த தனது தந்தை அபூகுஹாபா அவர்களை இஸ்லாத்தைத் தழுவும் பொருட்டு பெருமானாரிடம் அழைத்து வருகிறார்கள். அபூபக்கர் (ரலி) அவர்களின் வயது முதிர்ந்த தந்தையைப் பார்த்த நாயகம் (ஸல்) அவர்கள் உதிர்த்த வார்த்தைகள் நம் ஆழ்மனதில் பதித்துக் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.‘அபூபக்கரே, வயது முதிர்ந்த இவர்களை வீட்டிலே விட்டு விட்டு வந்திருக்கலாமே? நான் வந்து சந்தித்து இருப்பனே’ என்றார்கள் நாயகம்.‘யா ரசூலல்லாஹ், நீங்கள் என் தந்தையை வந்து சந்திப்பதை விட என் தந்தை உங்களை வந்து சந்திப்பது தான் ஏற்றமான செயலாகும்’ என அபூபக்கர் (ரலி) அவர்கள் பதிலுரைத்தார்கள்.   ஒரு நாள் வயது முதிர்ந்த முதியவர் ஒருவர் பெருமானாரை சந்திக்க வருகைத் தருகிறார். அங்கு கூட்டமாக அமர்ந்திருந்த நபர்களோ அம்முதியவருக்கு வழி விடாமல் தாமதப்படுத்தினார்கள். இதை பார்த்துக் கொண்டிருந்த நாயகம் (ஸல்) அவர்கள் உடனே நபித்தோழர்களுக்கு ஓர் உபதேசம் செய்தார்கள். ((مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيَعْرِفْ حَقَّ كَبِيرِنَا فَلَيْسَ مِنَّا‘யார் சிறியோர்களுக்கு இரக்கமும், முதியோருக்கு மரியாதையும் செய்யவில்லையோ அவர் நம்மை சார்ந்தவர் அல்ல’ என்றார்கள் நாயகம்.   பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) “எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக; எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக; இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக” என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.  4:75.   முதியவர்களுக்கு உதவி செய்தல்   தனது பெற்றோருக்கு - (முதியோராகிவிட்ட நிலையில்) நன்மை செய்து வருமாறு மனிதனுக்கு நாம் உபதேசம் செய்தோம். அவனது தாய் அவனை பலவீனத்தி்ன் மீது பலவீனமாகச் சுமந்திருந்தாள்.மேலும், அவனுக்கு பால்குடி மறத்தல் இரண்டு ஆண்டுகளில் உள்ளது. (ஆகவே) எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே மீளுதல் உள்ளது“.(அல்குர்ஆன் - 31 : 14)   பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் வரலாற்றில் இன்னொரு சம்பவம்,


உள்ளத்தை தூய்மையாக்குவோம்

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم   إِنَّ فِي ذَٰلِكَ لَذِكْرَىٰ لِمَن كَانَ لَهُ قَلْبٌ أَوْ أَلْقَى السَّمْعَ وَهُوَ شَهِيدٌ அல்லாஹ் கூறுகின்றான்: “எவருக்கு உள்ளம் இருக்கிறதோ அவருக்கும், அல்லது மன ஒருமைப்பாடுடன் செவியேற்கின்றாரோஅவருக்கும் நிச்சயமாக இதில் நல்லுபதேசம் இருக்கின்றது.” (காப்: 37) மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: “நீங்கள் எதில் தவறு செய்தீர்களோ, அதில்உங்கள் மீது குற்றமில்லை எனினும், உங்களது உள்ளங்கள் வேண்டுமென்றே கூறுவது (உங்கள் மீது குற்றமாகும்). (அல் அஹ்ஸாப்: 5) உள்ளத்தை தூய்மைப்படுத்தியவர் திட்டமாகவெற்றி அடைந்து விட்டார்.(87:14) நபியவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக உடம்பில் ஒரு சதைப்பிண்டம்இருக்கின்றது, அது சீர் பெறுமானால் உடம்பு பூராகவும் சீர் பெற்றுவிடும், அது கெட்டுவிட்டால் உடம்பு பூராகவும் கொட்டுவிடும், அதுவே உள்ளமாகும்.” (புகாரி, முஸ்லிம்)   உள்ளத்தின் வகைகள்   பொதுவாக உள்ளத்தை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். சீரானது தடுமாற்றம் உடையது மரணித்தது நோய்வாய்ப்பட்டது சீராண உள்ளம் இத்தகைய உள்ளமானது, மனோஇச்சைக்கு க்குக்கட்டுப்படுதல் மற்றும் மேலும், இவ்வுள்ளமானதுமுழுமையாக அல்லாஹ்வின் ஏவல் விலக்கல்களுக்கு சிரம் தாழ்த்தக்கூடியதாகஇருக்கும். அத்தோடு மார்க்கத்திலிருந்து ஒரு கட்டளை பிறப்பிக்கப்படும் போதுஅதற்கெதிராகத் தன்னுடைய அபிப்பிராயத்தையோ, மனோஇச்சையையோவெளிப்படுத்தாது இருக்கும். இத்தகைய உள்ளம் படைத்தவர்களே நிச்சயமாக மறுமைநாளில் ஈடேற்றம் பெறக்கூடியவர்களாக இருப்பர். இது குறித்து இப்றாஹீம் (அலை)அவர்களின் ஒரு பிரார்த்தனைபற்றி அல்லாஹுத்தஆலா கூறும் போது: يَوْمَ لَا يَنفَعُ مَالٌ وَلَا بَنُونَ |إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيم “அல்லாஹ்விடம் தூய உள்ளத்துடன் வருபவரைத் தவிர அந்நாளில் செல்வமோ, பிள்ளைகளோ பயன்தராது”என்கிறான். (அஷ்ஷூஅரா: 88,89)   தடுமாற்றம் உடையது   உள்ளமானது எப்போதும் ஒரே நிலையில் இருக்காது. அவ்வப்போது நிலை மாறக்கூடியதன்மையைப் பெற்றிருக்கும். . عن أَنَسٍ رضى الله عنه قَالَ: ((كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُكْثِرُ أَنْ يَقُولَ: ((يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ))، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، آمَنَّا بِكَ، وَبِمَا جِئْتَ بِهِ، فَهَلْ تَخَافُ عَلَيْنَا؟ قَالَ: ((نَعَمْ، إِنَّ الْقُلُوبَ بَيْنَ أُصْبُعَيْنِ مِنْ أَصَابِعِ اللَّهِ، يُقَلِّبُهَا كَيْفَ يَشَاءُ)). “ஒரு சமயம் நபியவர்கள், “உள்ளங்களைப் புரட்டக்கூடியவனே என்னுடைய உள்ளத்தை உனது மார்க்கத்தில் நிலைத்திருக்கச் செய்வாயாக!”எனப் பிரார்த்தித்தார்கள். இதனைச் செவியுற்ற சிலர்: அல்லாஹ்வின் தூதரே!நாங்கள் உங்களையும், நீங்கள் கொண்டுவந்ததையும் விசுவாசம் கொண்டுள்ளோம்இப்படியிருக்க எங்கள் மீது அச்சப்படுகிறீர்களா? எனக் கேட்க, அதற்குநபியவர்கள்: ஆம், நிச்சயமாக உள்ளங்கள் அல்லாஹ்வின் விரல்களில் இருவிரல்களுக்கு மத்தியில் உள்ளன. அவன் நாடிய பிரகாரம் அதனைப்புரட்டுகின்றான்” என பதிலளித்தார்கள். (திர்மிதி, அஹ்மத்) இப்படி உள்ளமானது நிலைமாறும் தன்மையைக் கொண்டிருப்பதால், அதனைச் சீர்செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது எமது கடமையாகும். அல்குர்ஆனிலும்நபி மொழியிலும் அதற்கான பிரார்த்தனைகள் நிரம்பக் காணப்படுகின்றன.   رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنتَ الْوَهَّابُ      அல்லாஹ் கூறுகின்றான்: “எங்கள் இரட்சகனே! எங்களுக்கு நீ நேர்வழிகாட்டிய பின்னர் எங்கள் உள்ளங்களை தடம்புரளச் செய்து விடாதே!” (ஆலஇம்ரான்: 5) இறைவா! உள்ளங்களை மாற்றியமைக்கக்கூடியவனே! எங்களது உள்ளங்களை உன்னைவழிப்படுவதின் பால் மாற்றியமைப்பாயாக!” என நபியவர்கள் பிரார்த்தனைசெய்துள்ளார்கள். (முஸ்லிம்)    “  மேலும், உன்னிடத்தில் சாந்தியான உள்ளத்தைக் கேட்கிறேன்” எனவும் நபியவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். (ஹாகிம்)       ஹன்ழலா(ரலி) அவர்கள் திடீரென்று ஹன்ழலா முனாபிக் ஆகிவிட்டான் ஹன்ழலா முனாபிக் ஆகிவிட்டான் என்று சப்தமிட்டவர்களாக வீட்டை விட்டு வெளியே வருவார்கள் அப்ப்தோ அபு பக்கர் (ரலி) அவர்கள் என்ன ஆச்சு ? அதற்க்கு ஹன்ழலா (ரலி) அவர்கள் நான் நபியவர்களின் சபையில் இறக்கும் போது எனது ஈமான் நல்ல முறையில் உள்ளது அனால் வீட்டிற்கு வந்தால் ஈமானில் குறைவு ஏற்படுகின்றது இது இரட்டை நிலைதானே இது நிபாக்கின் வெளிப்பாடுதானே என்று பயந்தவர்களாக கூறினார்கள் அதைகேட்ட அபூபக்கர்(ரலி)அவர்கள் எனக்கும் இதே நிலை உண்டு எனகூறி நபி(ஸல்)அவர்களிடத்தில் சென்று கேட்பார்கள் அதற்கு நபியவர்கள் இது நிபாக்கின் அடையாளமில்லை ஈமானின் ஏற்றத்தாழ்வு என்று கூறினார்கள்         இந்த நிலையில் நாம் மிகவும் கவனமாகவே இருக்க வேண்டும் இல்லையெனில் நமது உள்ளம் மரணித்த உள்ளமாகி விடும்   3 .மரணித்த உள்ளம்        இவ்வுள்ளமானது சீராண உள்ளத்திற்கு மாற்றமானதாகும். மேலும், இவ்வுள்ளமானது தன்னுடைய இரட்சகனை அறியாத நிலையிலும் அவனை வணங்காதநிலையிலும் காணப்படும். அத்தோடு தனது இரட்சகனின் எதிர்பார்ப்புக்குமாற்றமாக முழுமையாக மனோஇச்சைக்குக்குவழிப்பட்டதாக இருக்கும். இத்தகைய உள்ளம் குறித்து நபியவர்கள் கூறும் போது: “அல்லாஹ்வை திக்ரு செய்பவனுக்கும் செய்யதவனுக்கும் உதாரணம் உயிரோடுஇருப்பவனும் மரணித்தவனும் ஆவார்;கள்.” (புகாரி, முஸ்லிம்)   4. நோய்வாய்ப்பட்ட உள்ளம்          இந்த உள்ளம் மிகவும் மோசமான தன்மையுடையது இது தான் நிபாக் தன்மை கொண்டது இத்தகைய நிலையில் இருந்து அல்லாஹ் நம்மை முற்றிலும் பாதுகாப்பானாக فِي قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَهُمُ اللَّهُ مَرَضًا ۖ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ     உள்ளத்தை சரி செய்யும் வழிமுறைகள்   அல்லாஹ்வை நினவு கூறுதல் தக்வா இபாதத்தை அதிகப்படுத்துதல்   அல்லாஹ்வை நினவு கூறுதல்   அல்லாஹ்வை நினவு கூறுதல் எனபது வார்த்தையால் நினைவு கூறுவதும் நமது ஒவ்வொரு செயல்களிலும் நினைவு கூறுவதாகும் يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا                                              وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا                                                                                       அல்குர்ஆன் 33:41,42   إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ                                                                                     அல்குர்ஆன் 8:2        الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللَّهِ ۗ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ                                                                                     அல்குர்ஆன் 13:28     நாம் என்ன நன்மை செய்தாலும் தீமை செய்தாலும் அல்லாஹ் நம்மை கண்காணித்து கொண்டிருக்கின்றான் அவனது பார்வையிலிருந்து விலகி நம்மால் ஒரு சிறிய செயலைக்கூட செய்ய முடியாது என்ற எண்ணம் முழுமையைக் வந்திடும் போது நமது உள்ளத்தை நிச்சயம் சரி செய்ய முடியும் وَلَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ ۖ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيد                                                                                     அல்குர்ஆன் 50:16 தக்வா وعن أبي عبد الرحمن عبد الله بن عمر بن الخطاب رضي الله عنهما قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : قال الآخر اللهم إنه كانت لي ابنة عم كانت أحب الناس إلي وفي رواية : كنت أحبها كأشد ما يحب الرجال النساء فأردتها على نفسها فامتنعت مني حتى ألمت بها سنة من السنين فجاءتني فأعطيتها عشرين ومائة دينار على أن تخلي بيني وبين نفسها ففعلت ، حتى إذا قدرت عليها وفي رواية فلما قعدت بين رجليها قالت اتق الله ولا تفض الخاتم إلا بحقه ، فانصرفت عنها وهى أحب الناس إلي وتركت الذهب الذي أعطيتها اللهم إن كنت فعلت ذلك ابتغاء وجهك فافرج عنا ما نحن فيه ، فانفرجت الصخرة முந்தய காலத்தில் மூன்று நபர்கள் குகையில் அகப்பட்ட சம்பவத்தில் அதில் ஒருவர் கூரியதை நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் இறைவா எனக்கு சிறிய தந்தை மகள் இருந்தாள் அவள் எனக்கு மிகப்பிரியமானவளாக இருந்தாள் (மற்றொரு அறிவிப்பில் ஆண்கள் பெண்களை விரும்புவதில் கூடுதல் நிலை இருப்பது போலவே ) அவளை அடைய நான் விரும்பினேன் ஏன் ஆசைக்கு இணங்க மருத்தவளாக என்னிடமிருந்து விலகி விட்டாள் பிறகு பஞ்சம் ஏற்பட்ட ஆண்டுகளில் ஒரு ஆண்டு என்னிடம் உதவி கேட்டு என்னிடம் வந்தாள் அவளும் நானும் தனியாக இருப்பது (அதாவது எனது ஆசைக்கு இணங்குதல்)என்ற நிபந்தனைக்கு நூரி இருபது தீனார்கள் கொடுத்தேன் அவளும் சம்மத்திதாள் அவளை நான் நெருங்கினேன் (மற்றொரு அறிவிப்பில் அவளின் இரண்டு கால்களிகிடையே உட்கார்ந்தேன் ) அந்த நேரத்தில் அந்த பெண் அல்லாஹ்வை பயந்து கொள் உரிமையின்றி முத்திரையை நீக்கிவிடாதீர் என்று கூறினாள் எனக்கு அவள் மற்றவர்களை விட பிரியமான நபராக இருந்தும் நான் அவளை விட்டும் நீங்கி விட்டேன் அவளுக்கு நான் கொடுத்த தங்க காசுகளையும் திரும்ப பெற்றுக்கொள்ள வில்லை இறைவா உனது திருப்தியை நாடி இதைச் செய்திருந்தால் இந்த சிரமத்தை எங்களை விட்டும் நீக்குவாயாக என்று துவாச் செய்தார் உடனே பாறை விலகியது   இந்த ஹதீஸின் மூலம் தக்வா இருந்தால் மனதை கட்டுப்படுத்த முடியும் என்பது தெளிவாகின்றது   இபாதத்தை அதிகப்படுத்துதல்   நமது உள்ளத்தை கட்டுப்படுத்த இபாதத்தை அதிகப்படுத்த வேண்டும் ஏனெனில் இபாதத் தீமைகளை தடுக்கும் ஆற்றல் கொண்டது اتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلَاةَ ۖ إِنَّ الصَّلَاةَ تَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ ۗ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ ۗ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ அல்குர்ஆன் 29:45   முடிவுரை :     மனதை கட்டுப்படுத்தாமையின் விளைவுதான் உலகம் பல சீரழிவுகளை சந்தித்து கொண்டுள்ளது நமது கண்ணியம் நமது உண்மை நிலை எல்லாம் மனதை கட்டுப்படுத்துவதின் மூலமே உள்ளது அனை த்து நிலையிலும் மனதை தனது பிடிக்குள் வைத்திருப்பவன் இரு உலகிலும் வெற்றியை நிச்சயம் அடைவான் இஸ்லாம் அதற்கான வழிமுறைகளைத்தான் கற்றுத்தந்துள்ளது அதனை சரியான முறையில் நடைமுறைப்படுத்தி மனதை கட்டுப்படுத்தி கண்ணியமான வாழ்கை வாழ்வதற்கு அல்லாஹ் அருள் புரிவனாக ஆமீன்!  


மாமனிதர் முஹம்மத் (ஸல்) சொல்லும் செயலும்

                                                       பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிரஹீம் முன்னுரை   உலகில் எத்தனையோ பெரிய மனிதர்கள், தலைவர்கள் வாழ்ந்து சென்றுள்ளனர் அவர்கள் வாழ்வில் எல்லாத்துறைகளிலும் முன்மாதிரி என்ற ஒன்றை பார்க்க முடியாது எதாவது ஒரு துறைக்கு முன்மாதிரியாக வாழ்ந்து இருப்பார்கள் அதே போல் அவர்கள் மக்களுக்கு பல அறிவுரைகள் வழங்கி இருப்பார்கள் அனால் அதனை தங்கள் வாழ்வில் நடைமுறை படுத்துவதில் தோல்வி அடிந்து இருப்பார்கள்       அனால் நமது கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் அனைத்து துறைகளிலும் முன்மாதிரியாகவும் அதே போல் மக்கள் அனைவருக்கும் போதிக்கும் ஒன்றை முதலில் தங்கள் வாழ்வில் நடைமுறை படுத்தியும் காண்பித்துள்ளார்கள் . நாம் அவர்களின் வாழ்கையில் ஒவ்வொரு சொல்லையும் செயலையும் பின் பற்றி வாழ்ந்தால் நமக்கு இந்த உலகிலும் நாளை மறு உலகிலும் நிம்மதி கிடைக்கும் . وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا كَافَّةً لِّلنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ            அல்குர்ஆன் 34:28   وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ                    அல்குர்ஆன் 68:4 பெற்றோர்: சொல் : நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன் இறைவனுக்கு அதிக விருப்பமான செயல் எது ? தொழுகை அதற்குரிய நேரத்தில் தொழுவது மீண்டும் கேட்டேன் இதற்கு பிறகு எது ? தாய் தந்தையருடன் நல்ல முறையில் நடந்து கொள்வது என்று கூறினார்கள்                                                                  அப்துல்லா இப்னு மஸ்வூத் (ரலி) புகாரி. முஸ்லிம் யாரசூலுல்லாஹ் பிள்ளைகள் மீது பெற்றோர்களுக்கு உண்டான உரிமை என்ன? பெற்றோர்கள் உனது சுவனமும் நரகமும் ஆவார்கள் .                                                                                                   அபு உமாமா (ரலி) இப்னு மாஜா செயல் : நபி(ஸல்)அவர்களின் பால்குடித்தாய் ஹலிமா அம்மையார் அவர்கள் வந்ததும் எழுந்து மரியாதை   மனைவி: சொல் :   இறைத்தூதர் அவர்களே எங்களில் ஒருவரிடம் அவரது மனைவியின் உரிமை என்ன? என்று கேட்டேன் நீர் சாபிடும் போது அவளையும் சாப்பிடச் செய்ய வேண்டும் நீர் புதிய ஆடை உடுத்தும் போது அவளுக்கும் நீர் உடுத்தக் கொடுக்க வேண்டும் .முகத்தில் அடிக்காதீர் இழிவாக பேசாதீர் வீட்டிலே தவிர வெளியில் கண்டிக்காதே என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் முஆவியா இப்னு ஹய்தா (ரலி) அபூதாவூத் இறை விசுவாசிகளில் ஈமானை முழுமை படுத்தியவர் அவர்களில் குனமிக்கவர்தான் உங்களில் சிறந்தவர் மனைவியாரிடம் சிறந்தவர்தான் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் அபு ஹுரைரா (ரலி) திர்மிதி   செயல்:   தம்வீட்டாரிடம் இருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்ன செய்வார்கள்? என்று நான் (அன்னை) ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள், ‘தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளை நபி(ஸல்) அவர்கள் செய்து வந்தார்கள். தொழுகை (நேரம்)வந்துவிட்டால் தொழுகைக்காக எழுந்து (சென்று) விடுவார்கள்' என்றுபதிலளித்தார்கள்.   அறிவிப்பாளர் : அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்).ஆதாரம்: புகாரி                நபித்துவம் கிடைத்த ஆரம்பத்தில் கதீஜா (ரலி) அவர்களின் கூற்று அல்லாஹ் உங்களை ஒரு போதும் இழிவு படுத்தமட்டான் தங்கள் உறவினர்களோடு இணங்கி வாழ்கின்றீர்கள் சிரமப்படுவோரின் சுமைகளை சுமக்கின்றீர்கள் வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள் விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள் உண்மையான சோதனையில் சிக்குண்டவர்க்கு உதவி செய்கிறீர்கள் என்று கூறினார்கள் தலைவர்: சொல்:   ஒரு கூட்டத்தின் தலைவர் அவர்களின் பணியாளர் ஆவார் செயல்: நபி (ஸல்) அவர்களிடத்தில் பேரீச்சம்பழத்தை மென்று ஊட்டுவதற்காக அப்துல்லா இப்னு அபீ தல்ஹா என்ற குழந்தையை அழைத்துச் சென்றேன் அப்போது நபியவர்கள் சதக்கா ஒட்டகத்திற்கு தம் கையால் அடையாளம் இட்டுக்கொண்டு இருந்ததை கண்டேன்                                                                                                 அனஸ் இப்னு மாலிக் (ரலி) புகாரி அறுக்கப்பட்ட ஆட்டின் தோலை இளைஞர் ஒருவர் உறித்துக்கொண்டிருந்தார் அவரை கடந்தது சென்ற நபி (ஸல்) அவர்கள் ஒதுங்கிகொள் எவ்வாறு உரிக்க வேண்டும் என்று உனக்கு காட்டித்தருகிறேன் என்று சொல்லி விட்டு தோலுக்கும் இறைச்சிக்கும் இடையே தமது கையை அக்குள் வரை விட்டு உரித்தார்கள்                                                                                                                                                 அபு தாவூத் அகழ் போரில் சஹாபாக்களோடு குழி தோண்டுதல்   வேலைக்காரர்: சொல்:   உங்களில் ஒருவருக்கு அவரது உணவைக் கொண்டு வந்து கொடுத்துதும் அவரை தன்னோடு உட்கார வைக்கக இயலவில்லை என்றால் அவருக்கு அதில் ஒரு கவளமோ அல்லது இரண்டு கவளமோ கொடுத்து விடட்டும் ஏனெனில் அவர்தாம் உங்களது உணவை சமைக்க சிரமப் படுகிறார் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்                                                                                                                அபு ஹுரைரா (ரலி) புகாரி செயல்: நான் நபி(ஸல்)அவர்களித்தில் பத்து வருடம் பணி செய்து இருக்கின்றேன் நபியவர்கள் என்னை திட்டியதுமில்லை அடித்ததுமில்லை என்னிடத்தில் கோபமாக பேசியதுமில்லை என அனஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள்    உலக வாழ்வு: சொல்:   உலகில் ஒரு அந்நியனை போலவோ அல்லது ஒரு பயணி போலவோ வாழ்ந்திடு                                                                                                                                 புகாரி எனக்கும் இந்த உலகத்துக்கும் என்ன உறவு?மரத்தின் நிழலில் சற்று இளைப்பாறிச் செல்லும் பயணிக்கும் அந்த மரத்திற்கும் என்ன உறவோ அதுதான் எனக்கும் உலகத்திற்கும் உள்ளது . என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்                                                                                                                                                                                                          திர்மிதி செயல்: நபி(ஸல்) அவர்கள் விரிப்பு இல்லாத ஈச்சம் பையில் படுத்து இருந்தார்கள் ஈச்ச னார்கள் நிரம்பிய தோல் தலையணை வைத்து இருந்தார்கள் அவர்களது கால் மாட்டில் தோல் பதனிடப்பயன்படும் இலைகள் குவிக்கப் பட்டிருந்தன தலைமாட்டில் பதனிடப்படாத தோல் தொங்கிக்கொண்டு இருந்தது அப்போது அவர்களது விலாப்புறத்தில் ஈச்சம்பாயின் சுவடு பதிந்திருந்திருப்பத்தை கண்டு அலுத்து விட்டேன் ஏன் அழுகின்றீர்கள்?அல்லாஹ்வின் தூதரே மன்னர்கள் சீசரும் குஸ்ருவும் வலமாக இறுக்கிறார்கள் அல்லாஹ்வின் தூதரான தங்கள் இப்படியா?நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் அவர்களுக்கு இம்மையும் நமக்கு மறுமையும் கிடப்பது உமக்கு திருப்தி இல்லையா?                                                                                                                                             உமர் (ரலி) புகாரி மன்னிப்பும் ,தள்ளுபடியும்: சொல் :   அறியாமை கால வழக்கங்கள் அனைத்தும் எனது காலுக்கு கீழே போட்டு மிதித்து பொதைத்து விடுகின்றேன் அறியாமைக்கால கொலைகள் அனைத்திற்கும் பொது மன்னிப்பு தரப்படுகிறது முதலில் எங்கள் குடும்பத்தை சார்ந்த ராபியாவின் மகனுடைய கொலையை மன்னிக்கின்றேன் அறியாமைக்கால வட்டிகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது முதலில் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த அப்பாசின் வட்டியை தள்ளுபடி செய்கின்றேன் அவரது வட்டி அனைத்தும் அசலுடன் தள்ளுபடி ஆகின்றது `                                                                                                                                                        முஸ்லிம் முடிவுரை: இத்தகைய ஒரு மனிதரை இதுவரை இந்த உலகம் கண்டதில்லை தான் எதை செய்ய வேண்டும் என்று மக்களுக்கு கட்டளையிட்டார்களோ அதனை முதலில் செய்பவர்கள் அவர்களாகத்தான் இருக்கும் இத்தகைய தூய மனிதரின் வாழ்வில்தான் அழகிய முன்மாதிரி இருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான் لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا  


இழிவு தரும் ஓரினச் சேர்க்கை

                                                      முன்னுரை இன்று நமது தேசம் முழுவதும் பரவலாகவும்காரசரமாகவும் விவாதிப்பது உச்ச நீதி மன்றம்வழங்கிய 377 ன் கீழ் ஓரினச் சேர்க்கை என்பதுஅது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்றவரவேற்கத்தக்க தீர்ப்புதான் சிலர் சுதந்திரமானகருத்தை சொல்கின்றோம் என்ற அடிப்படையில்சீரழிவிற்கு காரணமான இந்த இழிச் செயலைஆதரித்து பேசுகின்றனர் ஆண் – பெண் அல்லாஹ் மனிதர்களை படைக்கும் போதேஆசை உள்ளவனாகவே படைத்துள்ளான் அந்தஆசையில் ஒன்றுதான். உடல் இச்சை அந்தஆசையை அடையும் விதமாக ஆணையும்பெண்ணையும்திருமணம் என்ற உயர்வானஒரு பந்தத்தின் மூலம் அதை நிவர்த்திசெய்கின்றான் ஆண் தனது மனைவியிடத்தில்அந்த இன்பத்தை முழுமையாக பூர்த்தி செய்யும்விதமாக அவன் விரும்பியவாறு சென்று கொள்ளலாம்أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَىٰ نِسَائِكُمْ ۚ هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُنَّ ۗ         அல்குர்ஆன் 2:187 نِسَاؤُكُمْ حَرْثٌ لَّكُمْ فَأْتُوا حَرْثَكُمْ أَنَّىٰ شِئْتُمْ ۖ وَقَدِّمُوا لِأَنفُسِكُمْ ۚ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّكُم مُّلَاقُوهُ ۗ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ       அல்குர்ஆன் 2:223 வரை முறை மீற வேண்டாம் மேற்கூறிய வசனம் மனைவியிடத்தில்விரும்பியபடி செல்வதற்கு அனுமதிஅளித்துள்ளது. இன்பம் என்பது இருபாலாரும்அதாவது அந்த நேரத்தில் கணவன் மனைவிஇரண்டு நபர்களுக்கு இன்பம் கிடைக்கவேண்டுமென்றால் இறைவன் காட்டியவழிமுறைப்படி ஈடுபட்டால் தான் கிடைக்கும் இதற்கு மாற்றமாக பின்துவாரத்தில் ஈடுபடுதல்என்பது மனைவிக்கு இன்பம் இல்லாமலும் அதேநேரத்தில்வேதனையை அவருக்கு ஏற்படுத்தும்ஏனெனில் பின்துவாரம் என்பது கழிவுகளைவெளியாக்க வேண்டி அமைக்கப்பட்டுள்ளதேதவிர இன்பத்தை நிறைவேற்றும் இடமாகஇல்லை. அவ்வாறு செய்வதினால் இரண்டுநபர்களுக்கும் உடல் ரீதியான பாதிப்பு உள்ளது. “பெண்ணின் பின் துவாரத்தில் புணர்பவன்சாபத்திற்குரியவன் என அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி). நூல் : அஹ்மத் “மாதவிடாய் ஏற்ப்பட்ட பெண்ணிடம் அல்லதுபெண்ணின் பின் துவாரத்தில் உடலுறவு கொண்டவன்அல்லது குறிகாரனிடம் சென்றவன் முஹம்மதிற்குஇறக்கியருளப்பட்ட வேதத்தை நிராகரித்து விட்டான்எனவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி). நூல் : திர்மிதி தன்பாலின புணர்ச்சி இந்த கேடுகெட்ட இழி செயல் மேற்கத்தியகலாச்சாரத்தை பின்பற்றுபவர்களும் அதனைஆதரிப்பவர்களும் இதனை குற்றமற்றதாகவும்அதே நேரத்தில் தனிமனித சுதந்திரமாகவும்எண்ணிக் கொண்டு செயல்படுத்துக் கொண்டிருக்கிறனர். இன்னும் சிலர் அதனை குற்ற உணர்வோடு செயல்படுத்திஅடிமையாகி விட்டனர். இறைவனின் வரை முறைகளைமீறி கேடுகெட்ட இந்த செயலை செய்வதினால் அவனுக்கும்அல்லது அவளுக்கும் மிகப்பெரிய பாதிப்பும் அவனை சார்ந்துஇருக்கக் கூடிய அரசாங்கதிற்கும் ஒட்டுமொத்த மனிதசமூகத்திற்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. தகாத உறவு ஏற்படுத்தும் விளைவுகள் இளைஞர்களில் தற்கொலை செய்பவர்களில் இந்தசெயல் உள்ளவர்கள் தான் அதிகம் உள்ளனர்          3௦% இந்த பழக்கம் உள்ளவர்கள் போதைக்குஅடிமையாகி உள்ளனர்.        50% இந்த பழக்கம் உள்ளவர்களை பெற்றோர்கள்கடுமையாக வெறுப்பதுடன்    புறக்கணித்து விடுகின்றனர்            26% இந்த பழக்கம் உள்ளவர்கள் வீட்டை விட்டுநிர்பந்தமாக விரட்டபடுகின்றனர். .           2௦௦1 புள்ளிவிவர கணக்குபடி எயிட்ஸ் நோயாளிகளில்64% பேர் இந்த ஒருபால்    உறவு கொண்டவர்கள் தான்   இஸ்லாத்தின் பார்வையில் இந்த இழிவான படுமோசமான குற்றத்திற்காகஅதை செய்தவர்களை அல்லாஹ் நான்குவகையான தண்டனைகளை கொடுத்து தண்டித்தான்வேறு எந்த சமூகத்தையும் அல்லாஹ் இவ்வாறுதண்டித்ததில்லை அவை:              அவர்களின் கண்களை குருடக்க்கினான்            அவர்கள் வசித்த ஊரை தலைகீழாக புரட்டினான்             அவர்களின் மீது சுட்ட கற்களை தொடர்ந்துபொழிய செய்தான்.             அவர்கள் மீது பேரிடியை விழச் செய்தான் وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ إِنَّكُمْ لَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنْ أَحَدٍ مِّنَ الْعَالَمِينَ           அல்குர்ஆன் 29:28   . أَئِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ وَتَقْطَعُونَ السَّبِيلَ وَتَأْتُونَ فِي نَادِيكُمُ الْمُنكَرَ ۖ فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلَّا أَن قَالُوا ائْتِنَا بِعَذَابِ اللَّهِ إِن كُنتَ مِنَ الصَّادِقِينَ                        அல்குர்ஆன் 29:29 فَلَمَّا جَاءَ أَمْرُنَا جَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهَا حِجَارَةً مِّن سِجِّيلٍ مَّنضُود ٍ அல்குர்ஆன் 11.82,83 “லூத் (அலை) சமுதாயத்தினர் செய்த செயலைசெய்யக்கூடியவர்களை நீங்கள் செய்தவனையும் செய்யப்பட்டவனையும்கண்டால்கொன்று விடுங்கள் அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள்                                                     அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி). நூல் : அஹ்மத் முடிவுரை இன்று உலகில் நடக்கக்கூடிய பெரிய பெரியகுற்றங்கள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு , போன்று மிக கடுமையான குற்றங்களை விடஇந்த குற்றம் மிக அதிகமான முறையில் மனிதசமுதாயத்தை பாதிக்க கூடியது 377 ன் கீழ் உள்ளஆயுள் தண்டனை குற்றம் என்ற என்ற இந்தசட்டத்தை பாராளமன்றத்தில் விவாதிக்கப்பட்டுநீக்கி விட்டால் (மத்திய அரசு   அதற்கான முயற்சியைஎடுத்துக்கொண்டிருக்கிறது ) நமது தேசம் மோசமானநிலையில் சிக்கிவிடும் கேடு கெட்ட மேற்கத்தியநாடுகளில் உள்ளது போன்று ஓரின திருமண முறைநடைமுறையாகும் எய்ட்ஸ் என்ற ஆட்கொல்லி நோய்அதிகரிக்கும் (ஒரு புள்ளி விவர கணக்கின் படி இந்தபழக்கம் உள்ளவர்கள் ஒருநபரை கொண்டு திருப்திஅடைய மாட்டார்கள் பல நபர்களிடத்தில் செல்வார்கள்)   ஒரு கட்டத்தில் இவர்களுக்கு வாரிசுகள் இல்லாமையினகாரணத்தினால் இவர்கள் பலகீனமாகி விட்டாலோ அல்லதுநோய் பட்டு படுக்கையில் கிடந்தலோ அல்லது விபத்தில்அடிபட்டு மரணமடைந்து விட்டாலோ அரசாங்கத்திற்குமிகப்பெரிய பாரமாக மாறிவிடுவார்கள்நமது நாட்டின் வளர்ச்சிக்கு காரணமான மக்கள்தொகை வளர்சியும் நாளுக்குநாள் குறைந்து நாட்டைபாலைவனமாக மாறி விடும்எனவே இத்தகைய கொடூரமான குற்றத்தைதடுக்க நாடும் மக்களும் கடினமாக முயற்சிக்கஆதரிப்பவர்களையும் கடினமாக தண்டிக்கவேண்டும் அல்லாஹ் இத்தகைய தீமையைவிட்டு நம்மையும் நமது குடும்பத்தயும் உலகமக்கள் அனைவரையும் பாதுகாப்பானாக ஆமீன் !                       .


  அன்பார்ந்த நண்பர்களே     ஜும்ஆ  உரைகளை     pdf பதிவிறக்கத்தில் பார்க்கவும்


 • எம்மைப் பற்றி

  சமுதாயத்தின் வழிகாட்டிகளான இமாம்களை ஒன்றிணைத்து சக்தி படுத்துவதின் மூலம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வலிமைப்படுத்து எமது நோக்கமாகும்.

 • தொடர்பு கொள்ள

  எங்களை தொடர்புகொள்ள கீழ்காணும் தொலைபேசி அல்லது மினஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

  (+91) 9894603500

  info@imamscounciltn.com

 • Recent Menu