கடலூர் மாவட்ட ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் புதிய நிர்வாகிகள் தேர்வு

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் கடலூர் மாவட்ட பொதுக்குழு புதிய மாவட்ட மற்றும் வட்டார நிர்வாகிகள் தேர்தல் அல்லாஹ்வுடை மாபெரும் கிருபை யோடு மிகச்சிறப்பாக சேத்தியாத்தோப்பு பள்ளிவாசலில் இன்று 11-03-2017 நடைபெற்றது இதில் அடுத்த இரண்டு ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் மாவட்ட தலைவர் மௌலவி M.Y அப்துல் அலீம் சித்தீக்கி பாஜில் மன்பஈ மாவட்ட துனைத்தலைவர் மௌலவி P.முஹம்மது அப்துல் கனீ மன்பஈ மாவட்ட செயலாளர் மௌலவி R.A.முஹம்மது தய்யூப் பய்யாஜி மாவட்ட துனைச் செயளாளர் மௌலவி S.சலீமுத்தீன் மஃதனி மாவட்ட பொருளாளர் மௌலவி S. அலீ பாதுஷா காஷிஃபி தேர்வு செய்யப்பட்டார்கள்


நெல்லை மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் நெல்லை கிழக்கு யூனிட் தேர்தல் இன்று 25.3.17 மேலப்பாலையத்தில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில செயற்குழு உறுப்பினர் மெளலவி அப்பாஸ் நாஃபிஈ ஹஜ்ரத் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது மேலப்பாளையம் யூனிட் தலைவராக மதரஸா இர்ஃபானுல் ஹுதா அரபிக்கல்லூரின் முதல்வர் மெளலவி ஹாபிழ் மீரான் முஹைதீன் அன்வாரி ஹஜ்ரத் அவர்களும் செயலாளராக மெளலவி ஹாபிழ் காஜா நிஜாமுதீன் தாவூதி ஹஜ்ரத் அவர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள்


மதுரை maavaட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மதுரை மாவட்டத் தேர்தல் மாட்டுத்தாவணி பள்ளி வாசலில் 20.03.2017 அன்று மாநில செயற்குழு உறுப்பினர் மெளலவி M.S ஷம்சுல் இக்பால் தாவூதி ஹஜ்ரத் தலைமையில் நடைபெற்றது வரக்கூடிய மூன்று ஆண்டுகளுக்கு பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள் இதில் மாவட்ட தலைவராக மெளலவி ஹாபிழ் M. அப்துல்லாஹ் ஸஆதி ஃபாஜில் மன்பஈ ஹஜ்ரத் அவர்களும் துணைத்தலைவராக மெளலவி சலீம் ராஜா மன்பஈ ஹஜ்ரத் அவர்களும் செயலாளராக மெளலவி அஹமது ஃபைசல் மக்தூமி ஹஜ்ரத் அவர்களும் துணைச்செயலாளரக மெளலவி முஹம்மது அமீன் மன்பஈ ஹஜ்ரத் அவர்களும் பொருளாளராக மெளலவி முஹம்மது இஸ்ஹாக் ஸஆதி ஹஜ்ரத் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்


அனைத்து உறுப்பினர் இமாம்கள் சந்திப்பு

  ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பில் இன்று 22-10-2015 காலையில் கோவை உக்கடத்தில் அனைத்து உறுப்பினர் இமாம்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது இதில் மாநில பொதுச்செயலாளர் மௌலவி முஹம்மது இப்ராஹிம் மிஸ்பாஹி அவர்கள் தலைமை வகித்தார்கள் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மௌலவி அப்துல் ஸமது சிராஜி அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள் தேசிய பொதுச்செயலாளர் மௌலவி ஷாகுல் ஹமீது பாகவி அவர்கள் இமாம்ஸ் கவுன்சிலின் களம் என்ற தலைப்பில் கருத்தரை நிகழ்த்தினார்கள் மாநில செயலாளர் மௌலவி அபுபக்கர் சித்தீக் ரஷாதி அவர்கள் இமாம்ஸ் கவுன்சிலின் கடந்த ஒரு வருடத்தில் செய்த பணிகள் என்ற தலைப்பில் பேசினார்கள் இறுதியில் கோவை மாவட்ட செயலாளர் மௌலானா முகம்மது சுல்தான் இம்தாதி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள் இதில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலிருந்து அதிகமான ஆலிம்கள் கலந்து கொண்டனர்


மதுரையில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாவட்ட செயற்குழு

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மதுரை மாவட்ட செயற்குழு மாட்டுத்தாவணி பள்ளி வாசலில் 11.04.2017 அன்று நடைபெற்றது அதில் ,1.வருகிற கோடைகாலத்தில் விளாச்சேரி, சர்வேயர் காலனி ஆகிய இரண்டு இடங்களில் கோடைகால பயிற்சி வகுப்புகள் நடந்துவது.2.இமாம்ஸ் கவுன்சில் சார்பாக செயல்படும் இப்னு ஸபீல் என்ற வழிபோக்கர்களுக்கு உதவி செய்யும் திட்டத்தை மாவட்டம் தோறும் அறிமுகம் செய்வது.3.டெல்லில் உள்ள ஜிந்தர்மந்தரில் போராடி வரும் தமிழக விவசாயிகளை பிரதமர் சந்திக்க வேண்டும். 4.ராஜஸ்தானில் பாலுக்காக மாடுகளை வாங்கியவர் பசு பாதுகாப்பு படை என்ற இந்துத்துவ வன்முறையாளர்களால் கொலை செய்ததைஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் வன்மையாக கண்டிக்கிறது. ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   இப்படிக்கு மெளலவி H.சிக்கந்தர் பைஜி செய்தி தொடர்பாளர் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மதுரை மாவட்டம் 


திருவள்ளூர் மாவட்ட யூனிட் தேர்தல் மிகச்சிறப்பாக நடைபெற்றது

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் திருவள்ளூர் மாவட்ட யூனிட் தேர்தல் மிகச்சிறப்பாக நடைபெற்றது இதில் மாநில பொதுச்செயலாளர் மெளலவி J.முஹம்மது இப்ராஹீம் ஃபாஜில் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார் திருவள்ளூர் யூனிட் தலைவராக திருவள்ளூர் படே மக்கான் பள்ளி வாசல் இமாம் ஹாபிழ் S.கலீலுர்ரஹ்மான் ஹஜ்ரத் அவர்களும் செயலாளராக திருவள்ளூர் சின்ன பள்ளி வாசல் இமாம் மெளலவி ஹாபிழ் I.ஹிதாயத்துல்லாஹ் யூசுஃபி ஹஜ்ரத் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்


கோவை மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் புதிய நிர்வாகிகள் தேர்தல் தேசம் முழுவதும் நடை பெற்று வருகின்றது அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தின் அடுத்த இரண்டு ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்   மாவட்ட தலைவர் மௌலவி M.S. ஷம்சுல் இக்பால் தாவூதி   மாவட்ட துணைத்தலைவர் :மௌலவி M.S. அபூபக்கர் சித்திக் சிராஜி   மாவட்ட செயலாளர்: மௌலவி R.M.சுல்தான் இம்தாதி   மாவட்ட துணைச்செயலாளர்: மௌலவி A.செய்யது இப்ராஹீம் புகாரி   மாவட்ட பொருளாளர்: மௌலவி M.S. முஹம்மது இப்ராஹிம் உலூமி


மாநில,மாவட்ட நிர்வாகிகள் பெயர்கள் மற்றும் தொடர்பு நம்பர்கள்


மதுரையில் அனைத்து உறுப்பினர் இமாம்கள் சந்திப்பு நிகழ்ச்சி

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்  நடத்திய அனைத்து உறுப்பினர் இமாம்கள்  சந்திப்பு  நிகழ்ச்சி இன்று முனிச்சாலை மெயின் ரோட்டில் இருக்கும் psp மஹாலில்  வைத்து மாநில தலைவர் மௌலவி ஆபிருத்தீன் மன்பஈ  அவர்களின் தலைமையில் நடைபெற்றது  மாநில செயலாளர் மௌலவி அர்ஷத் அஹ்மது அல்தாபி வரவேற்று பேசினார்கள் தேசியச்  பொதுச் செயலாளர் மௌலவி ஷாகுல் ஹமீது பாகவி மற்றும் தேசிய செயலாளர் மௌலவி பைசல்  பாகவி, தேசிய செயற்குழு உறுப்பினரும் கேரள மாநில தலைவருமான மௌலவி ஈசா பாஜில் மன்பஈ அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் தேசியச்  பொதுச் செயலாளர் மௌலவி ஷாகுல் ஹமீது பாகவி அவர்கள் தன்னுடைய உரையில் தாத்ரியில் அக்லாக் கொலை திட்டமிட்ட மத்திய மதவாத ஆட்சியின் சதியின் வெளிப்பாடே ஹரியான முதல்வர்   மனோகர் லால் கட்டர் மாட்டுக்கறி சாப்பிட்டவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லட்டும் என்று கூறி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது ஒரு மாநிலத்தின் முதல்வர் தொடர்ந்து இது போன்று மதத்துவேஷ கருத்துக்களை சொல்லி வருவது ஜனநாயக நாட்டில் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். மேலும் காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினர் ரஷித் அவர்கள் மீது சட்டமன்ற வளாகத்திலே தாக்கப்பட்டதும் டெல்லி பிரஸ் கிளப்பில் ஹிந்து சேனா அமைப்பை சார்ந்தவர்கள் தாக்க வந்து மையை ஊற்றியது வேதனைக்குரியது இந்த தேசம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற கேள்வி அனைத்து தரப்பு மக்களுடைய கேள்வியாக உள்ளது ? இத்தகைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பிரதமர் நரேந்திரமோடி பொருப்பற்ற முறையில் பேசிவருவது வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது என்று தனது உரையில் குறிப்பிட்டார்கள். இறுதியில் மதுரை மாவட்ட தலைவர் மௌலவி அப்துல்லாஹ் ஸஆதி அவர்கள் நன்றியுரை கூறினார்கள் இந்த கூட்டத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுர மாவட்ட ஆலிம்கள் பெருவாரியாக கலந்து கொண்டனர்


 • எம்மைப் பற்றி

  சமுதாயத்தின் வழிகாட்டிகளான இமாம்களை ஒன்றிணைத்து சக்தி படுத்துவதின் மூலம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வலிமைப்படுத்து எமது நோக்கமாகும்.

 • தொடர்பு கொள்ள

  எங்களை தொடர்புகொள்ள கீழ்காணும் தொலைபேசி அல்லது மினஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

  (+91) 9894603500

  info@imamscounciltn.com

 • Recent Menu