கடலூரில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் நடத்திய மாபெரும் தர்ணா

      கடலூர் மாவட்டம் ஆல் இந்தியா இமாம் கவுன்சில் சார்பாக பாபரி மஸ்ஜித் - 21 வருடங்களாக தொடரும் துரோகத்தை கண்டித்து விருத்தாசலத்தில் மாபெரும் தர்ணாநடைபெற்றது. இதில்ஆல் இந்தியா இமாம் கவுன்சில் தேசியசெயற்குழு மற்றும் தமிழ் மாநில பொதுச்செயலாளர் மௌலவி S.அப்துல் கஃபூர்மன்பஈ தலைமை தாங்கினார்.மௌலவி M.நூருல் அமீன் பத்ரியி கடலூர் மாவட்ட பொருளாளர்வரவேற்புரையாற்றினார்.இதை தொடர்ந்து திராவிடர் கழகம் கடலூர்மாவட்ட துனைச்செயலார் திருமுத்து. கதிரவன்,பாப்புலர் ஃப்ரண்ட் கடலூர் மாவட்ட தலைவர் ஜனாப் S.அப்துல்லாஹ், தேசிய மனித உரிமை இயக்கம் தென்னிந்தியா செயலாளர் திரு K.A.மணி,பாட்டாளி முஸ்லிம் சங்கம் நிறுவன தலைவர் ஜனாப் S.M.இக்பால், SDPI கடலூர் மாவட்ட தலைவர் I.ஷர்ஃபுதீன் மற்றும் விடுதலை சிறுத்தை மாநிலகருத்தியல் பரப்பு செயலாளர் சு.திருமாறன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். ஆல்  இந்தியா இமாம் கவுன்சில் கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மௌலவி B.முஹம்மது அப்துல் கனி மன்பஈ அவர்கள் நன்றியுரையாற்றினார்.சுமார் 350 மேற்பட்ட இமாம்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.        


ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தமிழ் மாநில செயற்குழு கூட்டம்

   ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தமிழ் மாநில செயற்குழு கூட்டம் 30-11-2013 சனிக்கிழமை அன்று மதுரையில் நடந்தது  இதில் மாநில தலைவர் மௌலவிஆபிருதீன் மன்பயி அவர்கள் தலைமையில் நடந்தது மாநில செயலாளர் செய்யது முஹமதுஉஸ்மானி அவர்கள் கிராத் ஓதி துவங்கி வைத்தார் ஆல் இந்தியா இமாம்ஸ்கவுன்சிலின் தேசிய செயலாளர் மௌலவி அமானுல்லா பாகவி அவர்களும் மாநில பொதுச்செயலாளர் மௌலவி அப்துல் கபூர் மன்பயி அவர்களும் இன்னும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்                          இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்   டிசம்பர் 6 ம் நாள் பாபரி மஸ்ஜித் 21 வருடங்களாக தொடரும் கடும் சதி  என்ற தலைப்பில் கோவையில் கருத்தரங்கமும் கடலூரில் தர்ணாவும் நடத்துவது      மூன்று மாதத்திற்கு ஒரு முறை இமாம்கள்  சந்திப்பு நடத்துவது   வரக்கூடிய ஜனவரி மாதத்தில் ஹுப்புன் நபி (ஸல்) என்ற தலைப்பில்பொதுக்கூட்டம் ,கருத்தரங்கம்  ,தெருமுனை கூட்டங்கள் போன்ற தொடர் பிரச்சாரத்தை செய்யவேண்டும்   வரக்கூடிய 2014 ம் ஆண்டின் காலண்டரை இமாம்ஸ் கவுன்சிலின் சார்பாக வெளியிடுவது   காபிர்களான காதியானிகளின் பொய் பிரச்சாரத்தை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது இன்னும் சென்னையில் ஷரியத் பாதுகாப்பு பேரவை நடத்தக்கூடிய காதியானிகள் எதிர்ர்பு கூட்டத்தில்இமாம்ஸ் கவுன்சிலின் சார்பாக இமாம்கள் பங்கெடுப்பது ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் பணிகளுக்காக வோர்க்கிங் பன்ட் ஜனவரி மாதம் முழுவதும் செய்வது  என்று பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டது           இறுதியில் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் மன்சூர் ஹளரத் துஆ உடன் கூட்டம் நிறைவுற்றது .  


சென்னையில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் நடத்திய இஸ்லாமிய கலாச்சார பாதுகாப்பு மாநாடு

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக 29.12.2012 அன்று சென்னையில் இஸ்லாமிய கலாச்சார பாதுகாப்பு மாநாடு சென்னை எழும்பூரில் உள்ள ஃபைஸ் மஹாலில் நடைபெற்றது .மாநாட்டின் துவக்கமாக காலை 10.00 மணியளவில் மாநில தலைவர் மௌலவி . செய்யது இபுராஹீம் உஸ்மானி அவர்கள் கொடியேற்றி வைத்தார் .அதனைத் தொடர்ந்து அல்லாமா அமானி ஹழ்ரத் (ரஹ்) அவர்களின் பெயர் சூட்டப்பட்ட கண்காட்சி அரங்கத்தை மாநில தலைவர் திறத்து வைத்தார் . கருத்தரங்கம் : சரியாக 10.30 மணியளவில் கருத்தரங்கம் துவங்கியது. மாநில பொதுச்செயலாளர் மௌலவி.ஆபிருதீன் மன்பஈ அவர்கள் தலைமை தாங்கினார் . மாநில செயற்குழு உறுப்பினர் மௌலவி.செய்யது அஹமது தாவூதி அவர்கள் இறைமறை வசனம் ஓதி துவங்கி வைத்தார் . மாநில செயற்குழு உறுப்பினர் மௌலவி. முஹம்மது இபுராஹீம் மிஸ்பாஹி அவர்கள் வரவேற்புரையாற்றினார். ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசிய பொருளாளர் முஹம்மது ஈஸா மன்பஈ அவர்கள் "தாருல் இஸ்லாம் ஒரு பார்வை " என்ற தலைப்பிலும் , ஜம்மியத்துல் உலமாவின் மாநில பொதுச்செயலாளர் முஹம்மது மன்சூர் காஷிபி அவர்கள் "காதியானி மதம் துவக்கமும் பின்னணியும் " என்ற தலைப்பிலும் , நூருல் இஸ்லாம் அரபிக்கல்லூரியின் பேராசிரியர் அபுதாஹீர் பாகவி அவர்கள் "சமூக தீமைகளும் இஸ்லாமிய " தீர்வுகளும் என்ற தலைப்பிலும் , அடையார் ஜூம்மா மஸ்ஜிதின் தலைமை இமாம் மௌலவி.சதீதுத்தீன் பாகவி அவர்கள் "இன்றைய சூழலில் இஸ்லாமிய கல்வி " என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள் . மாநில செயற்குழு உறுப்பினர் மௌலவி.அப்துல் பாஸித் பைஜி அவர்கள் நன்றியுரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய கலாச்சார பாதுகாப்பு மாநாட்டின் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. மாபெரும் பொதுக்கூட்டம் : மாலையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு மாநில தலைவர் மௌலவி.செய்யது இபுராஹீம் உஸ்மானி அவர்கள் தலைமை தாங்கினார் . மாநில செயலாளர் மௌலவி. செய்யது முஹம்மது உஸ்மானி அவர்கள் வரவேற்புரையாற்றினார். ஜமாஅத்துல் உலமா சபையின் மாநில செயற்குழு உறுப்பினர் மௌலவி .முகம்மது தைய்யிப் தாவூதி , ஐக்கிய சமாதான பேரவையின் மாநில தலைவர் மௌலவி.ஹாமித் பக்ரி , பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் A.S.இஸ்மாயீல் , ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசிய தலைவர் உஸ்மான் பெய்க் , தேசிய செயலாளர் அப்துல் மஜீத் காஸிமி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் மௌலவி.முஜீபுர் ரஹ்மான் ரஹ்மானி அவர்கள் நன்றியுரையாற்றினார் .இம்மாநாட்டில் ஏராளமான இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கலந்து கொண்டனர் . இம்மாநாட்டில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. முஸ்லிம் தனியார் சட்டம்: இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஷரத்து 25ன் படி இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் மத சுதந்திர உரிமையை ( ) வழங்குகின்றது. அதனடிப்படையில் சிவில் விவகாரங்களில் ஒவ்வொரு மதத்தாரும் அவரவர் மதச்சட்டங்களை பின்பற்றிக் கொள்ளலாம். முஸ்லிம்கள் தங்களுடைய ஷரீஅத் சட்டமான "முஸ்லிம் தனியார் சட்டத்தை" பின்பற்றி வருகின்றனர். ஷரீஅத் சட்டத்தின் படி ஒரு பெண் திருமணம் செய்து கொள்வதற்கு பருவமடைந்து விட்டால் போது; 18 வயது பூர்த்தி செய்ய வேண்டிய அவசியமில்லை. முஸ்லிம் மணப்பெண்ணின் திருமணத்தகுதி குறித்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் இதனை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் சிறுமியர் திருமணத்தை தடுத்து நிறுத்துகிறோம் என்ற ஒரு மாயையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி மாவட்ட நிர்வாகத்தைச்சேர்ந்த அரசு அதிகாரிகளும் , காவல்துறை அதிகாரிகலும் முஸ்லிம்களின் திருமணத்தை தடுத்தி நிறுத்தி, மணப்பெண்ணை கைது செய்து சீர்திருத்த இல்லத்திற்கு அழைத்துச் சென்று அடைத்து வைக்கும் அவல நிலை சமீபகாலமாக தமிழகத்தில் தலை தூக்கியுள்ளது. இது முஸ்லிம்களின் ஷரீஅத் சட்டத்தை அவமதிக்கும் செயலாகும். முஸ்லிம் பெயர் தாங்கிளாக அரசுப் பணியாற்றிவரும் அதிகார மட்டத்தில் உள்ள சில கருப்பு ஆடுகளும் இதற்கு துணை போகின்றனர். ஷரீஅத் சட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய அரசு அதிகாரிகளே இது போன்று சட்டத்தை மீறி செயல்படுவதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளின் தாந்தோன்றித்தனமான இந்த செயலை கட்டுப்படுத்துவதும், ஷரீஅத் சட்டத்தை மீறாத வகையில் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. 2. கட்டாய திருமண பதிவுச்சட்டம்:  முஸ்லிம் சமூகத்தின் திருமணங்களை முறையாக பதிவு செய்யும் நடைமுறை ஒவ்வொரு முஹல்லாவில் உள்ள பள்ளிவாசலிலும், ஷரீஅத் சட்டத்தின் அடிப்படையில் திருமணப் பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்கப்பட்டு வருகின்றது. ஆகவே கட்டாய திருமண பதிவுச்சட்டத்திலிருந்து முஸ்லிம்களுக்கென்று தனியாக அரசு விதிவிலக்கு அளிக்க வேண்டும். முஹல்லா பதிவேட்டில் உள்ள பதிவுகளை திருமணம் குறித்தான சான்றாக அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. 3. மத வழிபாட்டுத்தலங்கள் மற்ரும் வக்ஃபு சொத்துக்கள்: தமிழகத்தில் முஸ்லிம்களின் மத வழிபாட்டுத்தலங்கள் மீது சமூக விரோதிகள் தாக்குதல் நடத்துவதும், அவற்றை சேதப்படுத்துவதும், அவற்றின் கண்ணியத்தை குழைக்கும் செயல்கள் சமூக விரோதிகளால் அரங்கேற்றப்பட்டு வருவது கவலைக்குறியது, கண்டிக்கத்தக்கது. மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும், இரு சமூகங்களுக்கிடையே குரோதத்தை ஏற்படுத்தும்  வண்ணம் கெட்ட எண்ணத்துடன் செயல்பட்டு வரும் அத்தகைய‌ சமூக விரோதிகளை இனம் கண்டு, கடும் தண்டனை கிடைக்கும் வகையில் சட்ட நட்வடிக்கை எடுக்குமாறும், பொது அமைதியை சீர்கெடுக்கும் வண்ணம் செயல்பட்டு வரும் இவர்களின் சதிச்செயலை முறியடிக்கவும், சிறுபான்மையினரின் மத வழிபாட்டுத் தலங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறும் இம்மாநாடு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது. 4. வக்ஃபு சொத்துக்கள்: வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான ஏராளமான சொத்துக்கள் நாடெங்கிலும் ஆக்கிரமிக்கப்பட்டிருகின்றன.  அரசுகள் இதனை கண்டும் காணாமல் இருப்பது மாபெரும் அநீதியாகும். அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளிலும், சமூக பொருளாதார ரீதியிலும் முஸ்லிம் சமூகம் மிகவும் பின் தங்கியிருப்பதை சர்ச்சார் அறிக்கை  தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளது. ஆகவே முஸ்லிம்களின் சமூக, பொருளாதார நிலையை முன்னேற்ற இடஒதுக்கீடும், பிரத்யோக நலத்திட்டங்களும் எப்படி முக்கியச் காரணிகளாக அமைகின்றதோ, அதே போன்று வக்ஃபு சொத்துக்கள் முழுவதும் முஸ்லிம் சமூகத்தின் பயன்பாட்டிற்காக அமைத்துக் கொடுப்பதும் மற்றொரு காரணியாக விளங்கும். எனவே நீண்ட காலமாக ஆக்கிரமிப்பில் இருக்கு வக்ஃபு சொத்துக்களை மீட்பதற்கு உரிய செயல்திட்டங்களை வகுத்து, இனியும் தாமதிக்காது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகலை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. 5. திரைப்படம் மற்றும் விளம்பரங்களில் கலாச்சார சீர்கேடு: மனித வாழ்வின் ஒழுக்க விழுமியங்களை தகர்க்கும் வண்ணம் வன்முறைக்காட்சிகளும், ஆபாசமும் திரைப்படங்களிலு நாளுக்கு நால் அதிகரித்து கொண்டே வருவது கலாச்சார சீர்கேட்டின் உச்ச கட்டத்திற்கு மனித சமூகத்தை அழைத்துச் செல்கின்றது. பெண்களை ஆபாசமாகவும், போகப்பொருளாகவும், திரைப்படங்கல் காட்டி வருவதால் நாட்டில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளும், கற்பழிப்புக்களும் நாளுக்கு நால் அதிகரித்து கொண்டே வருவதை காண முடிகிறது. பெண்களை மதித்து போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புணர்வை மறக்கடித்து, பெண்களுக்கெதிரான வக்கிர குணத்தை இந்த ஆபாச காட்சிகள் ஆண்கள் மனதில் விதைக்கின்றன. இதுவே பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு முக்கிய காரணமாக அமைகின்றது. போலிப் பெண்ணுரிமை பேசிவரும் பெண்ணியவாதிகளின் குருட்டுப் பிடிவாதமும், இந்திய துணைக்கண்டத்தின் நாடி   நரம்புகளிலெல்லாம் ஊடுறுவியிருப்பதே திரைப்படங்களின் ஆபாசக் கலாச்சாரத்திற்கான காரணம். திரைப்படங்களில் மட்டுமல்லாமல், தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வரும் விளம்பரங்கலும் ஆபாசக் கலாச்சாரத்தின் துணை காரணிகளாக இருக்கின்றன. கற்பழிப்புக் குற்றங்களுக்கு உச்சபட்சமான கடும் தண்டனைகள் வழங்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை. ஆனால் கலாச்சார சீர்கேட்டின் ஆணி வேர்களாக திரைப்படக் காட்சிகளையும், விளம்பரஙகளையும் கட்டுப்படுத்தாமல் கடும் தண்டனையால் மட்டும் பெண்ணுக் கெதிரான பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை மறுக்க முடியாது. எனவே கலாச்சார சீர்கேட்டை உருவாக்கும் திரைப்படக் காட்சிகளும், தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வரும் விளம்பரங்களையும் அரசு இரும்பு கரம் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும் என இம்மாநாடு மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கின்றது. 6. திரைப்படங்களில் முஸ்லிம் விரோத போக்கு: மனித நேயத்தையும், சகோதரத்துவத்தையும் வளர்க்க வேண்டிய திரைப்படங்கள் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், தேச விரோதிகளாகவும் காட்டி  பொது சமூகத்தின் மனதில் விதைத்து வருகின்றது. இது மிகவும் ஆபத்தான போக்காகும். நாட்டின் ஒருமைப்பாட்டையும், மத நல்லினக்கத்தையும் சீர்குலைக்கும் இச்செயலை திரைப்பட தனிக்கை வாரியம் மிகுந்த கவனத்துடன் கண்காணித்து இது போன்ற காட்சிகள் இடம்பெறா வண்ணம் தனிக்கை செய்ய வேண்டும். மத்திய மாநில அரசுகள் இதனை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. 7. பூரண மதுவிலக்கு மற்றும் கந்துவட்டி ஒழிப்பு: தீமைகளுக்கெல்லாம் தாயாக விளங்குவது மதுவாகும். நாட்டு மக்களின் ஆரோக்கியம் கெடுவது மட்டுமல்லாமல் அனைத்து விதமான குற்றச்செயல்களும் இந்த முக்கிய காரணமாக அமைகின்றது. நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், சட்ட ஒழுங்கு மற்றும் பொது அமைதியினை பாதுகாக்கவும் அரசு பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கின்றது. அதேபோல் கந்துவட்டிக்கொடுமை இன்று ஏராளமான  குடும்பங்கலை சவக்குழியில் தள்ளிக்கொண்டிருக்கிறது. கேட்பதற்கு நாதியில்லாத சமூகமாக கந்து வட்டி தாதாக்களின் பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் ஏழை மற்றும் நடுத்தர வர்கத்து அப்பாவி மக்களை பாதுகாக்க தமிழக அரசு போர்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், மேலும் கந்து வட்டியை ஒழிக்க வேண்டுமென்றும் தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.  


ஏர்வாடியில் ஆல் இந்தியா இமாம் கவுன்சில் சார்பாக மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் ஹூப்புன் நபி(பிரியாமான நபி)என்ற தலைப்பில் நபிகள் நாயகம் சிறப்பை விளக்கும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் ஆல் இந்தியா இமாம் கவுன்சில் சார்பாக நடைப்பெற்றது.  இந்த பொதுகூட்டதிற்கு ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் பெண்கள் அறிவகம் முதல்வர் ஜாபர் ஆலிம் அவர்கள் தலைமை வகித்தார் ,மீரான் முகைதீன் அவர்கள் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார்.இமாம் கவுன்சில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செய்யதலி மஹ்லரி அவர்கள் பிரியமான நபி என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.நபிகள் நாயகம் கூறிய குடும்பம் என்ற தலைப்பில் இமாம் கவுன்சில் மாவட்ட பேச்சாளர் காஜா ஹுசைன் உஸ்மானி அவர்கள் சிறப்புரை ஆற்றினார் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினாராக ஏர்வாடி ஐக்கிய ஜமாஅத் தலைவர் கேப்டன் சாஹிப் மற்றும் பைத்துல் சலாம் செயலாளர் செய்யது அவர்களும் கலந்து கொண்டனர் இறுதியில் ஏர்வாடி நகர தலைவர் காஜா பிர்தௌசி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.இந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட பெண்களும் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஆண்களும் கலந்து கொண்டனர்


இஸ்ரேலை கண்டித்து நெல்லையில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆலிம்களின் தேசிய இயக்கமான ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக பாலஸ்தீன் மீது தொடர் தாக்குதல் நடத்தும் இஸ்ரேலை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 25.11.2012 ஞாயிறு மாலை 5.00 மணியளவில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் சந்தை முக்கில் நடைபெற்றது.இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலை சார்ந்த மௌலவி.சாகுல் ஹமீது உஸ்மானி தலைமை தாங்கினார் . மௌலவி.செய்யது அலி மஸ்லஹி கண்டன உரையாற்றினார் . அவர் தனது உரையில் " பாலஸ்தீன் மீதும் அங்குள்ள குழந்தைகள் , மருத்துவமனைகள் மீதும் தொடர் தாக்குதல் நடத்திய இஸ்ரேலை வன்மையாக கண்டித்தார் . மேலும் இந்தியா இஸ்ரேல் மற்றும் அதற்கு துணை நிற்கும் அமேரிக்கா உடனான அனைத்து ராஜிய உறவுகளையும் முறிக்க வேண்டும் , ஐ.நா.சபை இஸ்ரேல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்றும் வலியுறுத்தினார் . இறுதியாக ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில செயற்குழு உறுப்பினர் மௌலவி.முஸ்தபா ஜாபர் அலி மஸ்லஹி நன்றியுரையாற்றினார் . இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆலிம்கள் , குழந்தைகள் உட்பட 200க்கும் மேற்பட்டவர் கள் கலந்து கொண்டு இஸ்ரேலுக்கு எதிரான தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.


கோவையில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் நடத்திய மாபெரும் கருத்தரங்கம்

  ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்  பாபரி மஸ்ஜித் 21 வருடங்களாக தொடரும் கடும் துரோகம் என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கத்தை  கோவை கரும்புக் கடை ஜே பி மஹாலில் நடத்தியது   இதில் நிகழ்சியின் துவக்கமாக ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின்  கோவை மாவட்டச் துணைச் செயலாளர்  மௌலவி அப்துஸ் சமது சிராஜி  ஹளரத் அவர்கள் குர்ஆன் வசனம் ஓதி துவங்கி வைத்தார் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின்  மாநில செயலாளர் செய்யது முஹமது உஸ்மானி அவர்கள்   வரவேற்புரை நிகழ்த்தினார்கள்                       நிகழ்சிக்கு தலைமை ஏற்ற ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில தலைவர்  மௌலவி ஆபிருத்தீன் மன்பயிஅவர்கள் பாபரி மஸ்ஜிதை மீட்டு எடுப்பது முஸ்லிம்களின் தலையாய கடமையாகும் அதற்கு தகுதியான தலைமையும் தொடர் போராட்டமும் அவசியமாகும் உலக  வரலாற்றில் அநீதிக்கு எதிரான மிகப்பெரிய  எழுச்சியும் புரட்சியும்  ஏற்படுத்தி அதன் மூலம் சமூக மாற்றத்தை கொடுத்த வரலாறு இமாம்களுக்கு அதிகம் உண்டு அதே போல் பாபரி மஸ்ஜிதை இன்ஷா அல்லாஹ் ஒரு மீட்டுவோம் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்று தனது உரையில் கூறினார்   அடுத்து வந்த நாம் தமிழர் கட்சியின் கோவை மண்டல செயலாளர்  திரு கல்யாண சுந்தரம் அவர்கள் பாபரி மஸ்ஜித் பிரச்சனை என்பது முஸ்லிம் சமுதாயத்தின் பிரச்னை மட்டும் கிடையாது ஒட்டுமொத்த இந்தியர்களின் பிரச்னை என்று ஆக்ரோஷமாக பேசினார்   அடுத்து வந்த sdpi கட்சியின் மாநிலச் செயலாளர் அபு தாஹிர் அவர்கள் பாஸிசத்தின் கடுமையான சூழ்சிகளை பற்றியும் அதற்கு தீர்வு தேசிய நீரோட்டத்தில் அரசியல் மாற்றமும் அதிகார மாற்றமும் அவசியம் என்று  தெளிவாக கூறினார் மூத்த வழக்கறிஞர் பவானி ப .மோகன் அவர்கள் தனது வழமையான ஆக்ரோஷமான பேச்சின் மூலம் ஆர் எஸ் எஸ்சயும்      அதன் வகையறாக்களை கடுமையாக சாடினார்                                                        ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசிய பொதுச்செயலாளர்  அவர்கள் தனது உரையில் நாம் நமது வீரமிக்க வரலாற்றை மறந்து விட்டு கோழைகளாகவும் பயந்தவர்களாகவும் வாழ்ந்து வருகின்றோம் இந்நிலையை மாற்றி நாம் அனைத்து துறைகளிலும் முன்னேற்றமடைய வேண்டும் அந்த அடிப்படையில் நமது பள்ளிவாசலை மீட்க வேண்டும் என்று கூறினார் இறுதியாக ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாவட்ட தலைவர் முஹமது அலி இம்தாதி அவர்கள் நன்றியுரை கூறினார்  இந்த கருத்தரங்கத்தில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டார்கள்


ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தேனீ மாவட்ட தலைவர் மௌலவி அபு பக்கர் ரஷாதி அவர்கள் மாணவி ஒருவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார்


மேலப்பாளையத்தில் நடைப்பெற்ற தாவா விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

  நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் வைத்து 16.03.2013 அன்று இஸ்லாத்தை பரப்புவோம் ! மனித  நேயம் காப்போம் என்ற தலைப்பில் மாபெரும் தாவா விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது  இந்த பொதுக்கூட்டத்திற்கு இர்பானுல் ஹூதா மகளிர்  ஷரியத் கல்லூரி முதலவர் மீரான் மொஹைதீன் அன்வாரி தலைமை தாங்கினார்,இர்பானுல் ஹூதா மகளிர்  ஷரியத் கல்லூரி தலைவர் சாகுல் ஹமீத் உஸ்மானி வரவேற்ப்புரை ஆற்றினார்,ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாநில தலைவர்   மவ்லவி செய்யத் இப்ராகிம் உஸ்மானி அறிமுக உரை ஆற்றினார்.   இதில் சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்ட பாபர் மஸ்ஜித் இடிப்பில் முக்கிய பங்கு ஆற்றிய பின்பு தவறை உணர்ந்து இஸ்லாத்தை ஏற்ற பல்பீர் சிங் என்ற முஹம்மத் அமீர் மற்றும் உத்தரபிரதேஷ்சை சேர்ந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை இஸ்லாத்திக்கு அழைத்து வந்த முஹமது கலிம் சித்தீக் அவர்களும் கலந்து கொண்டு  சிறப்புரை ஆற்றினர் .இந்த நிகழ்ச்சிக்கு திரளாக பொதுமக்கள் கலந்து கொண்டனர்


பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டுசென்னையில் இமாம் கவுன்சில் சார்பாக நடைபெற்ற தர்ணா போராட்டம்

பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு அகில இந்திய அளவில் இயங்கி வரும் ஆல் இந்தியா இமாம் கவுன்சிலின் சார்பாக சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.ஆல் இந்தியா இமாம் கவுன்சிலின் மாநில தலைவர் செய்யது இபுராஹிம் உஸ்மானி தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். இப்போராட்டத்திற்கு சென்னையிலுள்ள பல மஸ்ஜிதுகளின் இமாம்கள் கலந்து கொண்டனர். பாபரி மஸ்ஜிதை மீட்க வேண்டும் என்ற அடிப்படையில் தேசம் முழுவதும் ஆல் இந்தியா இமாம் கவுன்சில் போராட்டங்களை நடத்தியுள்ளது.சென்னையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாலர் முஹம்மது ஷேக் அன்சாரி, இமாம் கவுன்சிலின் தேசிய செயலாளர் சாகுல் ஹமீது பாகவி, ஐக்கிய சமாதான பேரவையின் மாநில தலைவர் மெளலவி ஹாமித் பகரி மன்பஈ, புதுவை மாநிலத்தின் முஸ்லிம் லீக் தலைவர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன் கோஷங்களை எழுப்பினர்.


பாபரி மஸ்ஜித் தர்ணா ஆர்ப்பாட்டம்

பாபரி மஸ்ஜித் தர்ணா ஆர்ப்பாட்டம்               டிசம்பர் 6 யை முன்னிட்டு மாபெரும் தர்ணா போராட்டம் கோவையில் இன்ஷா அல்லாஹ் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது


 • எம்மைப் பற்றி

  சமுதாயத்தின் வழிகாட்டிகளான இமாம்களை ஒன்றிணைத்து சக்தி படுத்துவதின் மூலம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வலிமைப்படுத்து எமது நோக்கமாகும்.

 • தொடர்பு கொள்ள

  எங்களை தொடர்புகொள்ள கீழ்காணும் தொலைபேசி அல்லது மினஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

  (+91) 9894603500

  info@imamscounciltn.com

 • Recent Menu