திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு குர்ஆன் வகுப்பு

ஒரே நாளில் குர்ஆன் கற்போம் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மகத்தான நிகழ்ச்சி இமாம்கள் சக்தி பெறுவோம்! சமூகத்தை சக்தி படுத்துவோம்!! என்கிற உன்னத முழுக்கத்தொடு பயணிக்கும் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்அல் ஹம்துலில்லாஹ் திருவள்ளூர் மாவட்ட AIICஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் சார்பில் ஓரே நாளில் குர்ஆன் கற்போம் நிகழ்ச்சி திருத்தணி இஸ்லாம் நகர் அஹ்மத் பின் ஹன்பல் பள்ளிவாசலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது இதில் ஆரம்பமாக ஹாபிழ் காரி யூசுப் ஹஜ்ரத் அவர்கள் கிராஅத் ஓதினார் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மகத்தான பணிகளை மக்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எடுத்துரைத்தார் மாநில செயலாளர் மெளலவி J முஹம்மது இப்ராஹிம் ஃபாஜில் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள்🕌"ஓரே நாளில் குர்ஆன் கற்போம்"🕌 பாடத்தை சாமானிய மக்களுக்கு நடத்தினார் அல் ஹம்துலில்லாஹ்அனைத்து மக்களுக்கும் அல்லாஹ் திருக்குர்ஆன் எந்த அளவுக்கு இலகு என்பதை காட்டித்தந்தான் அனைத்து மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி நாங்கள் இனி அல்லாஹ்விடம் பேசுவோம் என்று உறுதியளித்து சென்றார்கள்அல் ஹம்துலில்லாஹ் திருத்தணி இஸ்லாம் நகர் பள்ளி வாசல் இமாம் மெளலவி ஹாபிழ் முஹம்மது இலியாஸ் ஹஜ்ரத் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார் இறுதியில்மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மெளலவி ஹாபிழ் H. அப்துல் காதிர் ஜைனி ஹஜ்ரத் அவர்கள் துஆவோடு கூட்டம் நிறைவுற்றது  


மேட்டுப்பாளையத்தில் குர்ஆன் கற்போம் நிகழ்ச்சி

கோவை வடக்கு மாவட்டம்  மேட்டுப்பாளையம் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்  (AIIC) சார்பாக 11-10-2015 ஞாயிற்றுக்கிழமை  காலை 10மணிமுதல்  மாலை 5 மணிவரை ஒரே நாளில்  குர்ஆன் ஒத கற்றுக் கொடுக்கும் சிறப்பு வகுப்பு  மதிய விருந்துடன் நடைபெற்றது 


சங்கராபுரத்தில் குர்ஆன் கற்ப்போம் நிழச்சி

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பில் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் குர்ஆன் கற்ப்போம் நிழச்சி  09-11-2015 நடைபெற்றது இதில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில பேச்சாளர் மௌலவி அப்துல் காதர் ஹசனி அவர்கள் வகுப்பு எடுத்தார்கள் இதில் முப்பத்தைந்து நபர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்


திண்டுக்கல்லில்‪ குர்ஆன்‬ கற்போம் நிகழ்ச்சி

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பில் திண்டுக்கல்லில்‪ குர்ஆன்‬ கற்போம் நிகழ்ச்சி  18-10-2015 நடைபெற்றது இதில் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்


  • எம்மைப் பற்றி

    சமுதாயத்தின் வழிகாட்டிகளான இமாம்களை ஒன்றிணைத்து சக்தி படுத்துவதின் மூலம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வலிமைப்படுத்து எமது நோக்கமாகும்.

  • தொடர்பு கொள்ள

    எங்களை தொடர்புகொள்ள கீழ்காணும் தொலைபேசி அல்லது மினஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

    (+91) 9894603500

    info@imamscounciltn.com

  • Recent Menu