புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு

  ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தமிழ்நாடு மாநில பொதுக்குழு திருச்சி மௌலவி டாக்டர் A.ஆபிருத்தீன் மன்பஈ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆரம்பமாக இறைவசனம் மௌலவி S.அப்துல் காதர் ஹசனி அவர்கள் ஓதி துவங்கி வைத்தார்கள் வரவேற்புரை மாநில செயலாளர் மௌலவி R.M.அபூபக்கர் சித்திக் ரஷாதி அவர்கள் நிகழ்த்தினார்கள்.ஆண்டறிக்கையை மாநில பொதுச்செயலாளர் மௌலவி இப்ராஹீம் மிஸ்பாஹி அவர்கள் வாசித்தார்கள். அதன் பின்பு தேசிய பொதுச் செயலாளர் மௌலவி ஹனிஃப் அஹ்ரார் மற்றும் தேசிய செயலாளர் மௌலவி அப்துல் கஃபூர் மன்பஈ அவர்கள் புதிய மாநில நிர்வாகிகளை தேர்வு செய்வதற்க்காக எலக்சன் நடத்தினார்கள். இதில் கீழ் வரும் நபர்கள் பொறுப்பாளியாக தேர்வு செய்யப்பட்டார்கள். தலைவர்: மௌலவி A.ஆபிருத்தீன் மன்பஈ துணைத்தலைவர்: 1. மௌலவி மீரான் முஹைதீன் அன்வாரி 2. மௌலவி ஆதம் ஷஃபியுல்லாஹ் இல்ஹாமி பொதுச்செயலாளர்: மௌலவி M.S.ஷம்சுல் இக்பால் தாவூதி செயலாளர்: 1. மௌலவி j.இப்ராஹீம் மிஸ்பாஹி 2. மௌலவி k.அரசத் அஹமது அல்தாபி பொருளாளர்: மௌலவி R.M.முஹம்மது அபூபக்கர் சித்திக் ரஷாதி மாநில செயற்குழு உறுப்பினர்கள்: 1. மௌலவி செய்யது முஹம்மது உஸ்மானி 2. மௌலவி அப்துல் காதர் ஹசனி 3. மௌலவி முஹம்மது நாஃபி 4. மௌலவி நூர் முஹம்மது ரியாஜ் தாவூதி 5. மௌலவி முஹம்மது யஹ்யா தாவூதி 6. மௌலவி தமீமுல் அன்சாரி காஷிபி 7. மௌலவி செய்யது இப்ராஹீம் உஸ்மானி 8. மௌலவி முஹம்மது பைசல் மக்தூமி இந்த பொதுக்குழுவில் கீழ்காணும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம்:1 வக்பு வாரியத்தை முறைப்படுத்த வேண்டும். வக்பு சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். வக்பு வாரியத்திற்கு சேர்மன் நியமனம் செய்யவேண்டும்.என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் பல்வேறு போராட்டங்களும், ஆர்பாட்டங்களும் நடத்தி வருகின்றது ஆனால் இதுவரையிலும் தமிழக அரசு ஒரு முயற்சியை கூட எடுக்கவில்லை என்பது வேதனையான ஒன்று.வக்பு வாரியம் குறித்த முஸ்லிம்களின் கோரிக்கையை நடைமுறைப்படுத்த தமிழக அரசு உடனடியாக முன்வரவேண்டும். தீர்மானம்: 2 தமிழக நலனில் அக்கரை காட்டாமல் தொடர்ந்து பாரபட்சம் காட்டி வரும் மத்திய, அரசை கண்டிக்கிறோம். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுப் புறத்தையும் நாசக் காடாய் மாற்றிய வர்தா புயல் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி சென்றது தமிழக அரசு பிரதமரை சந்தித்து ஆயிரம் கோடி தமிழகத்திற்கு நிவாரணமாக தேவை கோரிக்கை வைத்தது ஆனால் அதற்க்கான முழுமையான எந்த ஒன்றையும் மத்திய அரசு வழங்க வில்லை விவசாயிகள் தங்களது வாழ்வாதார பிரச்சனைகளை முன்னிறுத்தி 22 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றார்கள் அனால் பிரதமர் அவர்களை முகம் கொடுத்து கூட பார்க்காமல் புறக்கணித்து வருகின்றார் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை ராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்டு வருகிறார்கள் இதனை கண்டித்து மத்திய அரசு சரியான நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்து வருகின்றது இதுபோன்று தமிழக நலனில் அக்கரை காட்டாமல் தொடர்ந்து பாரபட்சம் காட்டி வரும் மத்திய, அரசை கண்டிக்கிறோம். தீர்மானம்: 3 பாபர் மசூதியை கட்டி எழுப்புவதே நீதி! 500 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் அடையாள சின்னமாகவும் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலமாகவும் விளங்கி வரும் பாபர் மசூதி பாசிச பயங்கரவாதிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது அப்போதைய காங்கிரஸ் அரசால் நியமனம் செய்யபட்ட லிபர்ஹான் கமிஷன் 18 வருடம் கழித்து அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி உட்பட 67 நபர்கள் இந்த பாதக செயலுக்கு காரணம் என சொல்லியது ஆனால் அவர்கள் தண்டிக்கப்படவில்லை. முஸ்லிம்கள் நீதி மன்றத்தில் நீதியை எதிர்பார்த்தார்கள். அடுத்து 2009 ம் ஆண்டு செப்டம்பர் 3௦ ம்தேதி அலகாபாத் நீதி மன்றம் முஸ்லிம்களின் பூர்வீக சொத்தான பாபர் மசூதி நிலத்தை மூன்றாக பிரித்து ஒரு பங்கை முஸ்லிம்களிடத்தில் கொடுத்தது அப்போதும் இந்த முஸ்லிம்கள் உச்ச நீதி மன்றத்தை நாடி நீதியை எதிர் பார்த்தார்கள் ஆனால் இப்பொழுது நீதி மன்றம் நீதிமன்றத்திற்கு வெளியே இந்த பிரச்சனையை பேசி தீர்த்து கொள்ள சொல்வதில் என்ன அர்த்தம் உள்ளது என்பது புரிய வில்லை இத்தகைய அறிவிப்பு தேசத்தின் நீதியை அவமதிக்க கூடியதாக மாறிவிடும் எனவே உரிய நீதியை உச்ச நீதி மன்றம் வழங்க வேண்டும் லிபர்ஹான் சுட்டிக்காட்டிய குற்றவாளிகள் தண்டிக்கபடவேண்டும். தீர்மானம் -4 நமது இந்திய தேசம் பன்முகத்தன்மை கொண்ட மதசார்பற்ற அரசியலமைப்பு கொண்ட தேசம் இந்த தேசத்தில் வாழும் அனைவருக்கும் அவர்களன் விரும்பிய அடிப்படையில் மதத்தை பின்பற்ற ஷரத்து எண் 25 கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது ஆனால் அந்த சுதந்திரத்தை பறிக்கும் விதத்தில் மத்திய அரசு முஸ்லிம்களின் ஷரியத் சட்டமான முத்தலாக் விஷயத்தில் மூக்கை நுழைப்பது கண்டனத்திற்குரியது. இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும், மதசார்பற்றதன்மைக்கு எதிராகவும் செயல்படுவது தேசநலனிற்கு எதிரானது, தேசவளர்ச்சிக்கு எதிரானது எனவே மத்திய அரசு இத்தைகைய செயல்பாட்டினை விட்டுவிட்டு தேசத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்தவேண்டுமென கேட்டுக்கொள்கின்றது. தீர்மானம் – 5 விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு இந்தியாவின் முதுகுதண்டே விவசாயம் இன்றைய நமது உணவும்,நாளைய நமது சந்ததிகளின் உணவும்,விவசாயத்தின் மூலமே கிடைக்கப்பெறுகின்றது அத்தகைய விவசாயத்தை அழிக்கும் விதத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம் மீத்தேன் எரிவாயு திட்டம் என விவசாயத்தையும்,விவசாய நிலத்தயும்நாசமாக்கும் பல்வேறு திட்டத்தை நடைமுறைப்படுத்த எத்தனித்து வருகின்றது இதனை கண்டித்தும்,விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றது இத்தகைய போராட்டத்தை முழுமையாக வரவேற்பதுடன் இமாம்ஸ் கவுன்சில் ஆதரவையும் தெரிவித்து கொள்கின்றது மேலும் தமிழக நலனில் அக்கறையுள்ள அனைத்து கட்சிகளும் அமைப்புகளும்,ஆதரவையும்,ஒத்துழைப்பையும் வழங்குமாறு இந்த பொதுக்குழு கேட்டுகொள்கின்றது. மேற்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியில் மாநில செயலாளர் மௌலவி K.அர்ஷத் அஹமது அல்தாபி நன்றியுரை நிகழ்த்தினார்கள். இப்படிக்கு: மௌலவி A.R.செய்யது முஹம்மது உஸ்மானி மாநில செய்தி தொடர்பாளர் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ்நாடு


முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தி குளிர்காய நினைக்கும் சங்கப்பரிவாரத்தின் சூழ்ச்சியினை முறியடியப்போம் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சூளுரை

  பத்திரிக்கைச் செய்தி                                             முஸ்லிம்களுக்கு மத்தியில்  பிரிவினையை ஏற்படுத்தி குளிர்காய நினைக்கும் சங்கப்பரிவாரத்தின் சூழ்ச்சியினை முறியடியப்போம் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சூளுரை   ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பில் 24-04-16ஞாயிற்றுக்கிழமை அன்று கோவை கோட்டைமேடு வின்சன் ரோட்டில் வைத்து முஸ்லிம் பிரிவினையை அனுமதியோம் என்ற தலைப்பில் ஒற்றுமைக்கான பொதுக்கூட்டம் கோவை  மாவட்ட தலைவர் மௌலவி செய்யது முஹம்மது உஸ்மானி அவர்கள் தலைமையில் நடைபெற்றது  இறைவசனம் கோவை  மாவட்ட பொருளாளர் மௌலவி நூர் முஹம்மது ரியாஜ் தாவூதி அவர்கள் ஓதினார்கள் வரவேற்ப்புரை மாவட்ட செயலாளர் மௌலவி சுல்தான் இம்தாதி அவர்கள் நிகழ்த்தினார்கள் சிறப்புரை ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் மௌலவி ஆபிருத்தீன் மன்பஈ ஹலரத் அவர்கள் மற்றும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் ஜனாப் முஹியித்தீன் அப்துல் காதர் அவர்கள் மற்றும் சேலம் நூருல் இஸ்லாம் அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மௌலவி முஹம்மது யஹ்யா தாவூதி ஹலரத் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்   இதில் மாநில தலைவர் ஆபிருத்தீன் மன்பஈ அவர்கள் தனது உரையில் மத்தியில் ஆளும் பிஜேபி அரசாங்கத்தோடு கைகோர்த்துக்கொண்டு ஆர் எஸ் எஸ் மற்றும் அதன் வகையறாக்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் உள்ள சின்ன சின்ன கருத்துவேறுபாடுகளை பயன்படுத்தி பிரிவினையை உண்டுபண்ணக்கூடிய மாபாதகச் செயலை செய்து வருகின்றது இதுபோன்ற கீழ்த்தரமான,தரங்கெட்ட செயலை பாசிச பரிவாரங்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ளவேண்டும் அனைத்து மக்களுக்கும் சமமாக இருக்கவேண்டிய மத்திய அரசு இதுபோன்ற சதிவேலைகளுக்கு துணைபோவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தனது உரையில் குறிப்பிட்டார்கள்   இறுதியில் மாவட்ட துணைச்செயலாளர் மௌலவி இப்ராஹிம் உலூமி அவர்கள் நன்றியுரையுடன்  கூட்டம் நிறைவு பெற்றது இப்படிக்கு மௌலவி முஹம்மது சுல்தான் இம்தாதி   மாவட்டச் செயலாளர்  ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் கோவை


  • எம்மைப் பற்றி

    சமுதாயத்தின் வழிகாட்டிகளான இமாம்களை ஒன்றிணைத்து சக்தி படுத்துவதின் மூலம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வலிமைப்படுத்து எமது நோக்கமாகும்.

  • தொடர்பு கொள்ள

    எங்களை தொடர்புகொள்ள கீழ்காணும் தொலைபேசி அல்லது மினஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

    (+91) 9894603500

    info@imamscounciltn.com

  • Recent Menu