மதுரையில் தடையை மீறி இமாம்ஸ் கவுன்சிலின் ஆர்பாட்டம்

இஸ்லாமிய கடமையை நிறைவேற்ற தடை விதித்த தீர்ப்பை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளது ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் நடத்தும் உயர் நீதி மன்றம் ஒட்டகம் குர்பானி கொடுக்க தடை விதித்த தீர்ப்பை கண்டித்து மாபெரும் ஆர்பாட்டம் மாநில பொதுச்செயலாளர் மௌலவி முஹம்மதுஇப்ராஹிம் மிஸ்பாஹி அவர்களின் தலைமையில் நடைபெற்றது இதில் கலந்து கொண்டவர்களை மாநில தலைவர் மௌலவி ஆபிருத்தீன் மன்பஈ மற்றும் ஆலிம்கள் பொதுமக்களை காவல்துறை கைது செய்து மாலையில் விடுவித்தார்கள்


பாபரி‬ மஸ்ஜித்‬ ‪மீட்பு தர்ணா போராட்டம்

ஆல் இந்தியா இமாம்ஸ்‬ கவுன்சில் சார்பில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில்  பாபரி‬  மஸ்ஜித்‬ ‪மீட்பு  தர்ணா போராட்டம் நடைபெற்றது இதில் மாநில தலைவர் மௌலவி ஆபிருத்தீன் மனபயி அவர்கள் தலைமை தாங்கினார்கள் வரவேற்புரை மாநில செயலாளர் மௌலவி அபூபக்கர் சித்திக் ரஷாதி அவர்களும் சிறப்புரை  பாப்புலர்‬ பிரன்ட் ஆப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஜனாப் இஸ்மாயில் அவர்கள் மற்றும் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்ன் மாநில பொதுச்செயலாளர் மௌலவி இப்ராஹிம் மிஸ்பாஹி அவர்கள் ‪ ‎எஸ்டிபிஐ‬ கட்சியின் மாவட்டதலைவர் ஜனாப் இப்ராஹீம் அவர்களும் சிறப்புரையாற்றினாரகள் இறுதியாக மாவட்டச்செயலாளர் மௌலவி இஸ்மாயில் ஜைனி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள் இதில் அதிகமான ஆலிம்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்


பாபரி‬ மஸ்ஜித் கட்டி எழுப்புவதே நீதி தஞ்சையில் தர்ணா‬

ஆல் இந்தியா ‪‎இமாம்ஸ்‬ கவுன்சில் சார்பில்தஞ்சையில் வைத்து ‪பாபரி‬ மஸ்ஜித் கட்டி எழுப்புவதே நீதி என்ற தலைப்பில் மாபெரும் ‪‎தர்ணா‬  போராட்டம் நடைபெறுகிறது


மாபெரும் வக்பு மீட்பு ஆர்பாட்டம்

  ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பில் இன்று 28-09-2016 காலை 10:00 am மணிக்கு தமிழகம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்பு சொத்துக்களை உடனடியாக மீட்டெடு, வக்பு வாரியத்தை முறைப்படுத்தி வக்பு சொத்துக்களை முஸ்லிம் சமூகத்திற்கு முழுமையாக பயன்படுத்து என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில தலைவர் மௌலவி Dr.A.ஆபிருத்தீன் மன்பஈ அவர்கள் தலைமை தாங்கினார்கள். மாநில பொதுச்செயலாளர் மௌலவி J.முஹம்மது இப்ராஹிம் மிஸ்பாஹி வரவேற்புரை நிகழ்த்தினார்கள்  இதில் சிறப்பு அழைப்பாளராக தேசிய பொதுச்செயலாளர் மௌலவி A.ஷாகுல் ஹமீது பாகவி அவர்களும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் ஜனாப் A.காலித் முஹம்மது B.com B.L அவர்களும் மற்றும் SDPI கட்சியின் மாநில செயலாளர் ஜனாப் S.அமீர் ஹம்ஸா ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள் மேலும் அதிகமான ஆலிம்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு செயல்படாத வக்பு வாரியத்தை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். தேசிய பொதுச்செயலாளர் மௌலவி A.ஷாகுல் ஹமீது பாகவி அவர்கள் பேசும் போது இந்தியா முழுவதும் பல லட்சம் ஏக்கர் வக்பு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டும், பராமரிப்பு இல்லாமல் வீணடிக்கப்பட்டும், இருக்கின்றது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் வக்பு கட்டிடங்கள் மிக குறைந்த வாடகைக்கு பெரும் பண முதலைகளின் கைகளில் உள்ளது. இது மட்டுமல்லாமல் வக்பு இடங்களில் அதிகமானவை ஆக்கிரமிக்கபட்டு தவறாக பயன்படுத்தப்படுகின்றது. வக்பு சம்பந்தமாக தகவல் உரிமை சட்டத்தில் கீழ் எந்த எந்த ஊரில் எத்துனை வக்பு நிலங்கள் உள்ளது? அது எவ்வாறு பராமரிக்கப்படுகின்றது? என்ற தகவலை கேட்டால் அதற்க்கான சரியான பதில் இதுவரையிலும் தரப்படவில்லை வில்லை அது பற்றிய தகவல்கள் எங்களிடத்தில் இல்லை என்று பதில் தருகிறார்கள் இந்த நிலையை தமிழக அரசு மாற்றவேண்டும் வக்பு சொத்துக்கள் முறைப்படுத்த படவேண்டும் அதன்மூலம் வரும் வருமானத்தை முஸ்லிம் சமூகத்திற்கே முறையாகவும்,முழுமையாகவும் பயன்படுத்தவேண்டும் வேண்டும் என்று கூறினார். இறுதியில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில செயலாளர் மௌலவி R.M.அபூபக்கர் சித்திக் ரஷாதி நன்றியுரையுடன் ஆர்பாட்டம் நிறைவுற்றது.        இப்படிக்கு: மௌலவி A.R.செய்யது முஹம்மது உஸ்மானி        மாநில செய்தி தொடர்பாளர் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ்நாடு


குல்பர்கா மாவட்டத்தில் ஆர்பாட்டம்

    நமது உயிரிலும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்த இந்திய பயங்கரவாத அமைப்பான RSSன்  இந்து மஹா சபா நிர்வாகி சமூக விரோதி கமலேஷ் திவாரியை கண்டித்து நாடு முழூவதும் போராட்டத்தை முன்னெடுத்த முஸ்லீம்கள் கர்நாடகத்தில் குல்பர்கா மாவட்டத்தில்   ஆல் இந்தியா இமாம்ஸ்  கவுன்சில் நடத்திய ஆர்பாட்டங்கள்


உ.பி.யில்(தாத்ரி) சட்ட விழிப்புணர்வு முகாம்

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக உ.பி.யில்(தாத்ரி) சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.மாட்டிறைச்சி சம்பவத்தால் கொல்லப்பட்ட முஹம்மது அஹலக் சம்பவத்தை தொடர்ந்து அங்கு சட்ட ஆலோசனை முகாம் நடத்தப்பட்டது இம்முகாமிற்கு தமிழ்நாட்டை சேர்ந்த சகோதரர் அட்வகேட் யூசுப் சட்ட ஆலோசனை வழங்கினார் ..


  • எம்மைப் பற்றி

    சமுதாயத்தின் வழிகாட்டிகளான இமாம்களை ஒன்றிணைத்து சக்தி படுத்துவதின் மூலம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வலிமைப்படுத்து எமது நோக்கமாகும்.

  • தொடர்பு கொள்ள

    எங்களை தொடர்புகொள்ள கீழ்காணும் தொலைபேசி அல்லது மினஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

    (+91) 9894603500

    info@imamscounciltn.com

  • Recent Menu