ஹுப்புன்நபி (ஸல்) மாநாடு மாபெரும் பொதுக்கூட்டம்

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பில் அன்று 06-02-2016 ஹுப்புன் நபி ஸல் மாநாட்டின்ஒருஅங்கமான மாபெரும்பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரத்தில் ஆட்டுத்தொட்டி மைதானத்தில் மாலை 05:30 மணியளவில் மாநில செயற்குழு உறுப்பினர் மௌலவி செய்யதுமுஹம்மது உஸ்மானி அவர்கள் இறைவசனம் ஓதி துவங்கி வைத்தார்கள் மாநிலபொதுச்செயலாளர்மௌலவி இப்ராஹிம் மிஸ்பாஹி அவர்கள் வரவேற்ப்புரை நிகழ்த்தினார்கள் மாநில தலைவர் மௌலவி ஆபிருத்தீன் மன்பஈ ஹலரத்அவர்கள் தலைமையுரை பேசினார்கள் அதன் பிறகு மகரிப் தொழுகையின் நேரம் வந்துவிட்டதால் முன்னமே தொழுகைக்காக தயார்செய்து வைக்கப்பட்ட தொழுகை திடலில் மகரிப் தொழுகை நடத்தப்பட்டது அதன்பிறகுி் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசிய பொதுச்செயலாளர் மௌலவி ஷாகுல் ஹமீது பாகவி, அவர்கள் செய்யிதா பாத்திமா அறக்கட்டளையின் நிறுவனர் மௌலவி முஹம்மது அலி மன்பஈ ஹலரத் அவர்கள்,பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் முஹம்மது இஸ்மாயில் அவர்கள் மற்றும் தேசியத்தலைவர் மௌலவி உஸ்மான் பெய்க் ரஷாதி அவர்களும் சிறப்புரையாற்றினார்கள் பொதுக்கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது தீர்மானம் ; 1 பள்ளிவாசல் கட்டுவதில் அரசின் இடர்பாடுகளை நீக்கு !முஸ்லிம்களின் வணக்கத்தலங்களான பள்ளிவாயில்கள் கட்டுவதற்கு அரசு அனுமதி அளிக்கும் விஷயத்தில் உள்ள இடர்பாடுகளை களையவும், முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் கபர்ஸ்தானுக்கான இடங்களை அரசு புறம்போக்குகளிலிருந்து ஒதுக்கீடு செய்யவும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.2. வக்ப் சொத்துகளை பாதுகாக்க நடவடிக்கை எடு !தமிழகத்தில் வக்ப் சொத்துகளை தனியார் மற்றும் அரசு ஆக்கிரமிப்புகளிலிருந்து பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது3. சிறுபான்மை கல்வி மற்றும் கல்வி நிறுவனங்களை பாதுகாத்திடு ! சிறுபான்மையாரின் உருது மொழி பள்ளிகளில் தமிழிலேயே தேர்வு எழுத வேண்டும் என கட்டாயப்படுத்துவது சிறுபான்மையினரின் மொழி உரிமைகளை பறிப்பதாக உள்ளது எனவே சுமார் பதினெட்டாயிரம் உருது மாணவர்களின் கல்வி நலன் கருதி அந்த கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் மேலும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களின் சிறுபான்மை அந்தஸ்தை நீக்க முயலும் மத்திய அரசை கண்டிப்பதுடன் பாரம்பரியமான கல்வி நிறுவனங்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.4. பத்து ஆண்டுகளுக்கு அதிகமான ஆயுள் சிறைவாசிகளை நிபந்தனையின்றி வெளியிடு!தமிழகத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத அப்பாவி சிறைவாசிகளை மனிதவிழுமியங்களை கருத்தில் கொண்டு நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்.5. சட்டசபை தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்!எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணையவும் தேச ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் பாசிச பாஜகவை தனிமைப்படுத்த வேண்டும் . 6. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து! நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களை நேரடியாக பாதிக்கும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவேண்டும் கச்சா எண்ணெய் விலை குறைவின் போதும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத மத்திய அரசை இம்மாநாடு கண்டிக்கிறது. 7. பூரண மது விலக்கை அமுல்படுத்து!குடும்பத்தின் அமைதியை சீர்குலைக்கும் சமூக பிரச்சனைகளுக்கு மூல காரணமாக இருக்கும் மதுவை பூரணமாக தடை செய்ய இம்மாநாடு கேட்டுக்கொள்கின்றது இந்த தீர்மானத்தை மாநிலசெயற்குழு உறுப்பினர் மௌலவிஅப்துல்லாஹ் ஸஆதி அவர்களும் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மௌலவி தமிமுல் அன்சாரி காஷிபி அவர்களும் வாசித்தார்கள் இறுதியில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில செயலாளர் மௌலவி அர்ஷத் அஹமது அல்தாபி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள் இம்மாநாட்டில் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்


ஹுப்புன் நபி (ஸல்) மாநாட்டில் ஆலிம்கள் கருத்தரங்கம்

                                     ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பில் பல்லாவரம் மார்ஸ் மஹாலில் இன்று 06-02-2016 ஹுப்புன் நபி ஸல் மாநாடு காலை 09:30 முதல் தேசிய செயலாளர் மௌலவி முஹம்மது பைசல் அஷ்ரபி அவர்கள் கொடியேற்றத்துடன் துவங்கியது நிகழ்ச்சியின் இரண்டாவது பகுதியான கண்காட்சி மார்ஸ் ஹோட்டலின் உரிமையாளர் அல்ஹாஜ் தாஜுதீன் அவர்கள் கண்காட்சி அரங்கத்தை துவங்கி வைத்தார்கள் அதன் பிறகு காலை 10:30 மணியளவில் மார்க்க அறிஞர்களின் கருத்தரங்கம் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில துணைத்தலைவர் மௌலானா ஆதம் ஷபியுல்லாஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினர்களாக ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசிய தலைவர் மௌலானா உஸ்மான் பெய்க் ரஷாதி அவர்கள், வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் P.S.P ஜைனுல் ஆபிதீன் பாகவி அவர்கள்,சென்னை காஷிஃபுல் ஹுதா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் முஹம்மது இப்ராஹிம் பாகவி அவர்கள், சேலம் நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மௌலானா முஹம்மது யஹ்யா தாவூதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்


லால்பேட்டையில் ஹுப்புன் நபி ஸல் பொதுக்கூட்டம்

கடலூர்  மாவட்டம் லால்பேட்டையில்  ஆல் இந்தியா  இமாம்ஸ்‬கவுன்சில் சார்பில் 25-01-2016அன்று நடத்தப்பட்ட ஹுப்புன்நபி ‬ஸல் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் மாநில தலைவர் மௌலவி ஆபிருத்தீன் மன்பஈ ஹலரத் சிறப்புரை நிகழ்த்தினார்கள் இதில் மாநில பொதுச்செயலாளர் மௌலவி முஹம்மது இப்ராஹிம் மிஸ்பாஹி ,மாவட்டத் தலைவர் மௌலவி சயீத் அஹ்மது மிஸ்பாஹி அதிகமான ஆலிம்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர் 


கோவையில் மாபெரும் பொதுக்கூட்டம்

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் நடந்த வாகனப் பிரச்சாரம் நிறைவுப்பொதுக்கூட்டம்   05-02-2014 கோவை கோட்டை வின்சென் ரோட்டில் மௌலானா மௌலவி மர்ஹும் m o அப்துல் காதிர் ஹலரத் திடலில் நடைப்பெற்றது தலைமையுரை : மவ்லவி Aஆபிருத்தீன் மன்பயி மாநில தலைவர் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் வரவேற்புரை : மவ்லவி A R செய்யது முஹம்மது உஸ்மானி மாநில செயலாளர் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சிறப்புரை : மவ்லவி உஸ்மான் பெய்க் ரஷாதி தேசிய தலைவர் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மவ்லவி அப்துல் ரஹ்மான் பாகவி கேரளா மாநில பொதுச்செயலாளர் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் ஜனாப் AS இஸ்மாயில் மாநில தலைவர் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மவ்லவி முஹம்மது இப்ராகிம் பாகவி தலைமை பேஷ் இமாம் கோவை அத்தார் ஜமாஅத் ஜமாஅத்துல் உலமா மவட்ட செயற்குழு உறுப்பினர் நன்றியுரை : மவ்லவி முஹம்மது அலி இம்தாதி மாவட்ட தலைவர் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்


ஹுப்புன் நபி (ஸல்) மாநாட்டில் மகளீர் கருத்தரங்கம்

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பில் பல்லாவரம் மார்ஸ் மஹாலில் இன்று 06-02-2016 ஹுப்புன் நபி ஸல் மாநாடு காலை 09:30 முதல்  கொடியேற்றத்துடன் துவங்கியது நிகழ்ச்சியின் நான்காம் பகுதியாக மதியம் 3 :00 மணியளவில் மகளிர் கருத்தரங்கம் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநிலத் துணைத்தலைவர் மௌலானா முஹம்மது மீரான் முஹியித்தீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது இதில் நேஷனல் விமன்ஸ் பிரண்டின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் சகோதரி ஷர்மிளா பாத்திமா அவர்கள் மற்றும் மதுரை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சகோதரி கைருன்நிஷா ஆலிமா அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள் இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்


சங்கராபுரத்தில் ஹுப்புன் நபி ஸல் கருத்தரங்கம்

 விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் ஹுப்புன் நபி ஸல் கருத்தரங்கம் நடைபெற்றது இதில் மாநில பொதுச்செயலாளர் மௌலவி இப்ராஹிம் மிஸ்பாஹி அவர்கள் மற்றும் விழுப்புரம் மாவட்டம் பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்டச் செயலாளர் மௌலவி அபூபக்கர் பிர்தவ்சி கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள் இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர் 


மதுரையில் ஹுப்புன் நபி ஸல் கருத்தரங்கம்

மதுரை மாவட்டம் அய்யர் பங்களா மலர் மாளிகையில் வைத்து ஆல் இந்தியா ‪#‎இமாம்ஸ்‬ கவுன்சில் மற்றும் பேங் காலனி,திருப்பாலை,பொறியாளர் நகர்,G.R.நகர், பாரதி நகர்,லூர்து நகர் ஜமாஅத் இணைந்து 26-01-2016 அன்று நடத்திய ‪#‎ஹுப்புன்நபி‬ஸல் கருத்தரங்கம் நடைபெற்றது இதில் சிறப்பு பேச்சாளராக நாகர்கோவில் கலாச்சார பள்ளி தலைமை இமாம் மௌலவி ஷவ்க்கத் அலி உஸ்மானி மற்றும் ஆல் இந்தியா #இமாம்ஸ் கவுன்சிலின் மாநில பேச்சாளர் மௌலவி அப்துல் காதர் ஹசனி மற்றும் உலமாக்கள் ,பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்


வாகனப்பிரச்சாரம் மதுரை

    ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் வாகனப்பிரச்சாரம் இன்று 28-01-2014 மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் சென்று நபி(ஸல்)அவர்களின் தூதுச்செய்தியை கொண்டு சென்றது


 • எம்மைப் பற்றி

  சமுதாயத்தின் வழிகாட்டிகளான இமாம்களை ஒன்றிணைத்து சக்தி படுத்துவதின் மூலம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வலிமைப்படுத்து எமது நோக்கமாகும்.

 • தொடர்பு கொள்ள

  எங்களை தொடர்புகொள்ள கீழ்காணும் தொலைபேசி அல்லது மினஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

  (+91) 9894603500

  info@imamscounciltn.com

 • Recent Menu