சுதந்திர தின வாழ்த்துச்செய்தி

 ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில தலைவர் மௌலானா A.ஆபிருதீன் மன்பயி ஹளரத் அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கை. அனைவருக்கும் நமது தேசத்தின் 69 வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் நமது தேசம் அந்நிய ஆங்கிலேர்யகளின் கரத்திலிருந்து சுதந்திரமடைந்து 69 வருடங்கள் கடந்து விட்டது இந்த சுதந்திரம் கிடைப்பதற்காக அனைத்து மக்களும் மத பேதமின்றி போராடினார்கள் அதில் குறிப்பாக முஸ்லிம்கள் தங்கள் விகிதாச்சாரத்தை விட அதிகமாகவே சுதந்திரதிக்காக போராடி தங்கள் உறவுகளையும், உயிர்களையும், உடமைகளையும் தியாகம் செய்துள்ளார்கள். இந்திய விடுதலைக்கு சிறை சென்றவர்களிலும் உயிர் நீத்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிகமாகவே இருந்தார்கள் அவர்கள் மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம்  அதிகமாகவே இருந்தது (வரலாற்று ஆசிரியர்,குஷ்வத் சிங்,இல்லஸ்ட்ரேட் வீக்லி- 29-12-1975) விடுதலைப் போர் வரலாற்றில் முஸ்லிம்களின் பங்களிப்பை இன்று அரசும்,மீடியாவும்  மறைத்து விட்டது மத்தியில் ஆளும் பிஜேபி அரசு முஸ்லிம்களின் தேசப்பற்றின் மீது சந்தேகம் எழுப்புகிறது இந்த பிஜேபி அரசு முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல தலித்கள்,கிறித்துவர்கள்,சீக்கியர்கள்,ஹிந்துக்கள் என இந்த தேசத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் எதிரானவர்கள்,எதிரான சதித்திட்டங்களை நடைமுறைப்படுத்தி கொண்டிருப்பவர்கள்  அனைத்து மக்களின்  அமைதியை சீர்குலைப்பவர்கள் என்பதை விளங்கி கொள்ளவேண்டும். நமது முன்னோர்கள் உயிர்களை அர்பனித்து பெற்றுத்தந்த  சுதந்திரம் இந்த மக்கள் அமைதியாகவும் நிம்மதியாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் யார் இதற்க்கு எதிராக செயல் படுகிறார்களோ அவர்களுக்கு எதிராக மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்தை  நடத்துவதற்கு தேசத்து மக்களோடு நாம் தயாராக உள்ளோம். முஸ்லிம்கள் பள்ளிவாசல்களிலும்,மதரசாக்களிலும்,தாங்கள் நடத்தக்கூடிய பொது ஸ்தாபனங்களிலும் மூவர்ணக்கொடியை ஏற்றி முன்னோர்களின் தியாகத்தை அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்லவேண்டும். இவ்வாறு மௌலானா A.ஆபிருதீன் மன்பயி ஹளரத் அவர்கள் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்கள்    


பாரபட்சமான நிலை ஒரு பொழுதும் ஆகாது

  ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில தலைவர் மௌலானா ஆபிருத்தீன் மன்பயீ ஹலரத் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை இந்திய நாடு பல்வேறுப்பட்ட இனம், மதம்,மொழி,கொண்ட நாடு இந்த தேசத்தை ஆட்சி செய்யக்கூடிய ஆட்சியாளரும், நீதி சொல்லக்கூடிய நீதிபதிகளும் நடுநிலையை பேணி அனைத்து மக்களுக்கும் சம உரிமை சம நீதி வழங்க வேண்டுமே அல்லாது  அது தேசத்தின் அமைதியை சீர்கொலைத்து விடும். கடந்த 30-7-15 அன்று அதிகாலையில் யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதின் மூலம் இந்த தேசத்தின் மீதும், நீதித்துறையின் மீதும் யாக்கூப் மேமன் மட்டுமல்ல தேசத்தின் ஒட்டுமொத்த குடிமக்களின் நம்ப்பிக்கைகள் தவிடு பொடியாகிவிட்டது.  1994-ல் சி.பி.ஐ-இன் பிடியில் இருந்த யாகூப் மேமனை முதன் முதலில் சந்தித்த பத்திரிகையாளர் மஸீ ரஹ்மான், (தற்போது கார்டியன் பத்திரிகையில் பணியாற்றுகிறார்) அவுட் லுக் வார இதழில் எழுதியுள்ள கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார் இந்திய நீதியின் மீது அப்பாவித்தனமாக பெரு நம்பிக்கை வைத்திருந்த குற்றத்துக்காக யாகூப் தூக்கில் தொங்க வேண்டியவன்தான்!” யாகூப் மேமனின் கருணை மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பப்பட்டதும் மற்றும் அவசரகதியில் அவர் தூக்கிலிடப்பட்டதும் நம் நாட்டின் நீதித்துறை நிர்வாகத்தின் மீது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. பொதுமக்களின் உணர்ச்சிகளை பயன்படுத்தி அரசுத்துறைகளுக்கு மட்டுமல்லாது நீதித்துறைக்கும் நெருக்கடியை கொடுக்கும் ஃபாஸிச சக்திகளின் திட்டத்திற்கு இச்சம்பவம் மற்றுமொரு உதாரணம். யாகூப் மேமனை மிகவிரைவாக தூக்குமேடைக்கு அனுப்புவதில் பி.ஜே.பி அரசு எந்தஅளவிற்கு மும்முரமாக செயல்பட்டது. நமது கேள்வி பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு எப்பொழுது தூக்குத்தண்டனை? 3000க்கும் அதிகமான உயிர்களை குஜராத்தில் கொன்று குவித்த குற்றவாளிகளுக்கு எப்பொழுது தூக்குத்தண்டனை? 2000க்கும் அதிகமான உயிர்களை மும்பையில்  கொன்று குவித்த குற்றவாளிகளுக்கு எப்பொழுது தூக்குத்தண்டனை? இது போன்ற ஏராளமான கேள்விகள் இந்திய தேசத்தில் வாழும் மக்களின் மனங்களில் தேங்கி கிடக்கிறது ஜனநாயகத்தில் மரணதண்டனைக்கு இடம் கிடையாது என்ற எங்களின் நிலைபாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். பிற்படுத்தப்பட்ட பிரிவினர், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராகவே பெரும்பாலான மரணதண்டனைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை பல்வேறு ஆய்வுகள் உணர்த்துகிறது. அரசியல் இலாபத்திற்காக பொதுசமூகத்தின் உணர்ச்சிகளை திருப்திபடுத்திடும் நோக்கோடு மரண தண்டனைகளை வழங்கும் இக்கலாச்சாரத்தினால் மத சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நீதித்துறை மீது கொண்டிருக்கும் நம்பிக்கை வலுவிழக்கும். நமது நாட்டின் சட்ட புத்தகங்களில் இருந்து மரண தண்டனையை நீக்க வேண்டுமென்றும், நீதித்துறை நிர்வாகத்தினை வகுப்புவாத மற்றும் ஜாதி சார்ந்த பாரபட்சங்களில் இருந்து விடுபட வேண்டுமென்றும் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் வலியுறுத்துகிறது.   இப்படிக்கு மௌலானா செய்யது முஹ‌ம்ம‌து உஸ்மானி   மாநில செய்தி தொடர்பாளர் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்


பெருநாள் வாழ்த்துக்கள்

       பெருநாள் வாழ்த்துக்கள் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில தலைவர் மௌலானா ஆபிருத்தீன் மன்பயீ ஹலரத் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இறைவன் இந்த அடியார்கள் மீது வைத்துள்ள கருணையின் வெளிப்பாடுதான் ரமலான் இந்த மாதம் குறைந்த செயல்களுக்கு அதிகமான நற்கூலிகளை தருவதோடல்லாமல் ஏராளமான பயிற்சியையும் கொடுத்துள்ளது.        இந்த ரமலான் மாதம் சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கு காரணமாக இறைவன் குறிப்பிடுவது அல்குர்ஆன் என்று கூறுகின்றான் இந்த சிறப்பு மிகு குர்ஆன் போதிக்கப்படும் மதரஸாக்கள் மீது தவறான பிரச்சாரங்களையும் மதராஸாவின் அங்கீகாரத்தை ரத்து செய்யப்படுவதும் என்று இன்றைய ஆட்சியாளர்கள் குர்ஆனிற்கு எதிரான சதி வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர் மேலு‌ம் முஸ்லீம்களுக்கு எதிராக பல சதிவேலைகளை தொடர்ந்து இந்த ஆட்சியாளர்களால் அரங்கேற்றப்பட்டு வருகிறது.      ரமலான் தந்த பயிற்சிகளில் இரண்டு பயிற்சிகள் மிக முக்கியமானது ஒன்று ஹுகூகுல்லாஹ் எனப்படும் இறைவனுக்கு செய்யும் கடமைகள் மற்றொன்று ஹுகூகுல் இபாதத் எனப்படும் சமூகத்திற்கு செய்யும் கடமைகள் இரண்டு பயிற்சிகளுமே மிகமுக்கியமானதுதான்.மேலே குறிப்பிட்ட பிரச்சினைகளும் ரமலான் நமக்களித்த பயிற்சிகளும் அது சார்ந்துதான் எனவேதான்  அநீதிக்கெதிரான போராட்டங்கள் ரமலான் மாதத்தில் அதிகமாக நடைபெற்றுள்ளது ரமலான் நமக்கு கற்றுத் தந்த இந்த பாடங்களை நமது வாழ்நாள் முழுவதும்  இறைசிந்தனையோடும் போராட்ட சிந்தனையோடும் பின்பற்றுவதற்கு அல்லாஹ் அருள்புரிவானாக.                        உள்ளத்தில் மகிழ்சியும்                     இல்லத்தில் சந்தோஷத்தையும்                 சமூக வாழ்வில் மாற்றத்தையும்             அமல்களில் முன்னேற்றத்தையும்       கொண்டு வந்த ரமலானை கொண்டாடுவோம்                                       வாழ்துகளுடன்                     மௌலானா ஆபிருத்தீன் மன்பயீ ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில தலைவர்


ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில தலைவர் அறிக்கை

  ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில தலைவர் மௌலானா ஆபிருத்தீன் மன்பயீ ஹலரத் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள கண்ணியங்களில் மிக முக்கியமானது பர்தா என்பது குறிப்பிடத்தக்கது ஏனெனில் இன்று பெண்களை அரை குறை ஆடையுடன் வெளியில் நடக்க வைத்து ரசித்து கொண்டிருக்கும் கேடுகெட்ட கலாச்சாரம் பரவலாகிவிட்டது அதனால்தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பெருகி விட்டது இந்த நிலையிலிருந்து பெண்கள் சமூகத்தை பாதுகாக்கும் வகையிலும் அவர்களை கண்ணியப்படுத்தும் வகையிலும் இஸ்லாம் பர்தாவை பெண்களுக்கு வழங்கியுள்ளது.  பிஜேபியின் ஆட்சி அமைத்ததிலிருந்தே முஸ்லீம்களின் மத உணர்வுகளை தூண்டி விடும் விதமாக மத துவேஷ வார்த்தைகளை பயன்படுத்தி வருகின்றனர் அந்த வரிசையில் பிஜேபியின் தேசிய செயலாளர் எச் ராஜா பர்தாவை பற்றி தவறாகவும் இழிவுபடுத்தும் வகையிலும் பேசியுள்ளார் இத்தகைய பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது தமிழக அரசு உடனடியாக எச் ராஜாவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொ‌ள்கிறோம்.   பள்ளி கொண்டாவில் காவல்துறையின் அடாவடித்தனம் வன்மையாக கண்டிக்கத்தக்கது காவல் கொட்டடியில் இது போன்ற கொலைகள் அதிகரித்து வருகிறது கடையநல்லூரில் மசூது,ராமநாதபுரத்தில் செய்யது முஹ‌ம்ம‌து என்ற பட்டியல் தொடர்வது மிகவும் ஆபத்தானது காவல்துறை மக்களை பாதுகாக்க வேண்டியது தானே தவிர கொலை செய்வதற்கு அல்ல எனவே தமிழக அரசு உடனடியாக இத்தகைய கயவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொ‌ள்கிறோம்.   இப்படிக்கு: ஆபிருத்தீன் மன்பயீ மாநில தலைவர் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ் நாடு  


பத்திரிக்கை செய்தி

                                  பத்திரிக்கை செய்தி               ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில செயற்குழு கூட்டம் 4-6-2015. வியாழக்கிழமை அன்று கோவை சுந்தராபுரத்தில் நடைபெற்றது மாநில தலைவர்   மௌலானா A.ஆபிருத்தீன் மன்பயீ அவர்கள் தலைமை வகித்தார்கள் சிறப்பு விருந்தினராக தேசிய பொதுச்செயலாளர் மௌலானா ஷாகுல் ஹமீது பாகவி மற்றும் தமிழகத்தின் தேசிய பொறுப்பாளர் பைசல் மௌலவி கலந்து கொண்டனர்          மாநில பொதுச்செயலாளர் மௌலானா முஹ‌ம்ம‌து இப்ராஹிம் மிஸ்பாஹி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள் இதில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் தேசிய பொதுச்செயலாளர் மௌலானா ஷாகுல் ஹமீது பாகவி அவர்கள் அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது எப்படி ?என்று உரை நிகழ்த்தினார் மேலும் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன            1, பர்மாவில் புத்த மத பயங்கரவாதிகளால் முஸ்லீம்கள் படுகொலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதனை வன்மையாக கண்டிப்பதோடு மத்திய அரசு அங்கு அமைதியான சூழல் உருவாக முயற்சி மேற்கொள்ள வேண்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவி செய்ய வேண்டும் .             2, சுத்தமற்ற சுகாதாரமற்ற மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உணவுப் பொருளான மேகி நூடுல்ஸை தமிழக அரசு தடை விதித்தது பாராட்டிற்குறியது இன்னும் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் உள்ள அனைத்து பொருள்களையும் தடை செய்ய வேண்டும்.            3, ஐஐடியில் செயல்பட்டு வந்த மாணவர்கள் அமைப்பை தடை செய்திருப்பது ஜனநாயக நாட்டில் உள்ள கருத்து சுதந்திரத்தை பறிப்பதாகும் யாரையும் விமர்சனம் செய்யும் உரிமையை தந்துள்ள ஜனநாயக நாட்டில் இது போன்ற செயல்பாடுகள் கண்டனத்துக்குரியது.           4, தேசத்திற்கும், மக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் மதுவை தமிழக அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும்.            5, விபத்தில் ஷஹீதான பள்ளபட்டி உலமாக்களின் குடும்பத்தினருக்கு அரசு கூட கவனம் செலுத்தாத போது  தாயுள்ளத்தோடு துரித நடவடிக்கை எடுத்து உதவி செய்த ஜமாத்துல் உலமா சபையினை பாராட்டுகிறது. போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இறுதியில் மாநில செயலாளர் மௌலானா அபுப‌க்க‌ர் சித்தீக் ரஷாதி அவர்கள் நன்றியுரைடன் கூட்டம் நிறைவு பெற்றது.   செய்யது முஹ‌ம்ம‌து உஸ்மானி   மாநில செய்தி தொடர்பாளர் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ்நாடு            


தர்ணா போராட்டம் குறித்து பத்திரிக்கை செய்திகள்

         


டாக்டர் அப்துல் கலாமின் ஜனாஸாவில்

      எளிமையாய் இருந்து, உலக அரங்கில் இந்தியாவை ஏற்றம் பெற வைத்த மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் உடல் அவரின் சொந்த ஊரானா இராமஸ்வரத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் மௌலவி A.ஆபிருதீன் மன்பயி மறைந்த டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் உடல் வைக்கப்பட்டிருக்கும் திடலுக்கு சென்று அவரின் மறுமை வாழ்க்கைக்காக பிரார்த்தித்ததோடு, அவரின் பேரன் சலீம் மற்றும் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.  


பெருநாள் வாழ்த்துக்கள்

  ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில தலைவர் மௌலானா ஆபிருத்தீன் மன்பயீ ஹலரத் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கைஇறைவன் இந்த அடியார்கள் மீது வைத்துள்ள கருணையின் வெளிப்பாடுதான் ரமலான் இந்த மாதம் குறைந்த செயல்களுக்கு அதிகமான நற்கூலிகளை தருவதோடல்லாமல் ஏராளமான பயிற்சியையும் கொடுத்துள்ளது. இந்த ரமலான் மாதம் சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கு காரணமாக இறைவன் குறிப்பிடுவது அல்குர்ஆன் என்று கூறுகின்றான் இந்த சிறப்பு மிகு குர்ஆன் போதிக்கப்படும் மதரஸாக்கள் மீது தவறான பிரச்சாரங்களையும் மதராஸாவின் அங்கீகாரத்தை ரத்து செய்யப்படுவதும் என்று இன்றைய ஆட்சியாளர்கள் குர்ஆனிற்கு எதிரான சதி வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர் மேலு‌ம் முஸ்லீம்களுக்கு எதிராக பல சதிவேலைகளை தொடர்ந்து இந்த ஆட்சியாளர்களால் அரங்கேற்றப்பட்டு வருகிறது. ரமலான் தந்த பயிற்சிகளில் இரண்டு பயிற்சிகள் மிக முக்கியமானது ஒன்று ஹுகூகுல்லாஹ் எனப்படும் இறைவனுக்கு செய்யும் கடமைகள் மற்றொன்று ஹுகூகுல் இபாதத் எனப்படும் சமூகத்திற்கு செய்யும் கடமைகள் இரண்டு பயிற்சிகளுமே மிகமுக்கியமானதுதான். மேலே குறிப்பிட்ட பிரச்சினைகளும் ரமலான் நமக்களித்த பயிற்சிகளும் அது சார்ந்துதான் எனவேதான்  அநீதிக்கெதிரான போராட்டங்கள் ரமலான் மாதத்தில் அதிகமாக நடைபெற்றுள்ளது ரமலான் நமக்கு கற்றுத் தந்த இந்த பாடங்களை நமது வாழ்நாள் முழுவதும்  இறைசிந்தனையோடும் போராட்ட சிந்தனையோடும் பின்பற்றுவதற்கு அல்லாஹ் அருள்புரிவானாக. உள்ளத்தில் மகிழ்சியும் இல்லத்தில் சந்தோஷத்தையும் சமூக வாழ்வில் மாற்றத்தையும் அமல்களில் முன்னேற்றத்தையும் கொண்டு வந்த ரமலானை கொண்டாடுவோம் வாழ்துகளுடன் மௌலானா ஆபிருத்தீன் மன்பயீ ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில தலைவர்


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் எங்கள் மனதில் என்றும் நீங்காதவரும் நபியின் வாரிசும் திப்புவின் நல் குணம் கொண்ட   மெளலவி பஷீர் அஹமது பைஜி அவர்கள் இன்று அதிகாலை உடல் நிலை குறைவால் வபாத் ஆகி விட்டார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் மஃபிரத்திற்க்காகவும் அவர்களை பிரிந்து வாழும் குடும்பங்கள் பொருந்திக் கொள்வதற்க்காவும் அனைவரும் துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் இறைவாஇந்த ஆலிமை பொருந்திக் கொள்வாயாக அவர்களின் குடும்பத்தையும் பொருந்திக் கொள்வாயாக அவர்களின் குழந்தைகளுக்கு நல்ல எதிர் காலத்தை வழங்குவாயக அவர்களை பிரிந்து வாடும் அவர்கள் குடும்பத்திற்கு பொருமையை தருவாயாக ஆமீன்இப்படிக்கு ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்தமிழ்நாடு


பர்மாவில் தொடர்ந்து முஸ்லீம்கள் படுகொலை

 


 • எம்மைப் பற்றி

  சமுதாயத்தின் வழிகாட்டிகளான இமாம்களை ஒன்றிணைத்து சக்தி படுத்துவதின் மூலம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வலிமைப்படுத்து எமது நோக்கமாகும்.

 • தொடர்பு கொள்ள

  எங்களை தொடர்புகொள்ள கீழ்காணும் தொலைபேசி அல்லது மினஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

  (+91) 9894603500

  info@imamscounciltn.com

 • Recent Menu