அரக்கோணத்தில் இமாம்கள் கருத்தரங்கம்

 


ஒட்டகம் குர்பானி தடையை கண்டித்து


நமது முன்னோர்கள் பெற்றுத்தந்த சுதந்திரத்தை நினைவுகூறுவோம்! தேசத்தையும்,மக்களையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றினைவோம்!.

  பத்திரிக்கைச் செய்தி 15-08-2016 நமது முன்னோர்கள் பெற்றுத்தந்த சுதந்திரத்தை நினைவுகூறுவோம்! தேசத்தையும்,மக்களையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றினைவோம்!. இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் அறிக்கை! ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் மௌலவி ஆபிருத்தீன் மன்பஈ அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கையில் அனைவருக்கும் நமது இந்திய தேசத்தின் 7௦ வது சுதந்திர தின வாழ்த்துக்கள். இந்த தேசத்தை அந்நிய ஆங்கிலேயர்களிடமிருந்து மீட்டெடுப்பதற்காக இந்த நாட்டில் உள்ள நமது முன்னோர்கள் அனைவரும் ஜாதி,மதம் பார்க்காமல் அனைவரும் ஒற்றுமையாக போராடி பெற்றது. அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் இந்த நாட்டிற்க்கு சுதந்திரம் வாங்கி கொடுப்பதற்காக செய்த தியாகங்கள் வார்த்தைகளால் வர்ணனை செய்ய முடியாதது. ஆனால் இன்றைய இந்தியாவின் நிலை சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு இருந்ததை காட்டிலும் மிக மோசமாக உள்ளது அதிலும் குறிப்பிட்டு சொல்வதானால் மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பின்பு ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் பாதுகாப்பற்ற சூழலயே உருவாக்கிவிட்டது. அக்லாக் படுகொலையும்,தலித்களின் மீது கண்மூடித்தனமான தாக்குதலும்,அடிமை கல்வி முறையை நடைமுறைப்படுத்த முனைவதும்,தனக்கு எதிரானவர்களை தேசத்துரோகிகளாக சித்தரிப்பதும்,கலவரத்தை தூண்டும் மததுவேஷ கருத்துக்களை பேசுவதும்,காஷ்மீரில் ரத்தஆறை ஓட்டுவதும் இன்னும் எண்ணற்ற தீய செயல்களை நடைமுறைபடுத்திவருகின்றது. இந்த நிகழ்வை எல்லாம் பார்க்கும் போது சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளின் கனவுகள் தவிடுபொடியாகி விட்டதை உணர முடிகின்றது இந்த நிலையை காண்பதற்காகவா தங்களின் உடலாலும்,பொருளாலும்,உயிராலும் போராடி அநியாயக்காரர்களான ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் வாங்கி கொடுத்தார்கள்?நமது இந்திய தேசமும், மக்களும் நிம்மதியாக இருக்க வேண்டுமெனில் புதிய சுதந்திர போராட்டத்தை நோக்கிய பயணத்தை அனைத்து மக்களும் ஜாதி,மதங்கள் கடந்து முன்னெடுக்க வேண்டும் ஒன்றிணைந்து போராடினாலே தவிர அமைதி திரும்பாது. நமது இந்திய தேசத்தையும்,மக்களையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றினைவோம்!இந்தியாவை வல்லரசாக மாற்றுவோம்! மௌலவி செய்யது முஹம்மது உஸ்மானி மாநில செய்தி தொடர்பாளர் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ் நாடு


வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சி முஸ்லிம் சமூகத்தின் தலையாய பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கின்றதோ அவர்களுக்கே எங்களின் ஆதரவு ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

                                               பத்திரிக்கைச் செய்தி                                                        31-03-2016      ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை மண்ணடி மாநில தலைமையகத்தில் மாநில தலைவர் மௌலவி ஆபிருத்தீன் மன்பஈ ஹலரத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக தேசிய பொதுச்செயலாளர் மௌலவி ஷாகுல் ஹமீது பாகவி அவர்கள் கலந்து கொண்டார்கள் துவக்கமாக மதுரை மாவட்ட செயலாளர் மௌலவி முஹம்மது பைசல் அவர்கள் துஆச் செய்தார்கள் வரவேற்ப்புரை மாநில பொதுச்செயலாளர் மௌலவி இப்ராகிம் மிஸ்பாஹி அவர்கள் நிகழ்த்தினார்கள் இந்நிகழ்ச்சியில்   அந் நுபுவ்வா மக்தப் பாடத்திட்டத்தின் கீழ் உருவான அழகிய முறையில் குர்ஆனை ஓதும் துரூஸுல் குர்ஆன் கிதாப் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில துணைத்தலைவர் மௌலவி ஆதம் ஷபியுல்லாஹ் ஹலரத் அவர்கள்  வெளியிட தேசியபொதுச்செயலாளர் ஷாகுல் ஹமீது பாகவி ஹலரத் அவர்கள் பெற்று கொண்டார்கள் மேலும் இந்நிகழ்ச்சியில்    கீழ்க்கண்ட விசயங்கள் பேசப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது தேசிய அளவில் நடத்தக்கூடிய முஸ்லிம் பிரிவினையை அனுமதியோம் என்ற ஒற்றுமைக்கான பிரச்சாரத்தை தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 1ம் தேதி முதல்  ஏப்ரல் 24ம் தேதிவரை பொதுக்கூட்டங்கள்,கருத்தரங்குகள்,மஹல்லா பயான்கள்,இமாம்கள் சந்திப்புகள், இதுவல்லாமல் போஸ்டர்,துண்டு பிரசுரங்கள் என பலவகையில் பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்வது.   அந் நுபுவ்வா மக்தப் பாடத்திட்டத்தின் கீழ் உருவான மக்தப்           பாடத்திட்டத்தை தமிழகம் முழுவதும் பரவலாக கொண்டு செல்லவேண்டும் குறிப்பாக மக்தப் நடைபெறாத இடங்களில் இந்த பாடத்திட்டத்தை கொண்டு சேர்க்கவேண்டும்.   வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சி முஸ்லிம் சமூகத்தின் தலையாய பிரச்சனைகளான சிறைவாசிகள் விடுதலை,7சதவீத இடஒதுக்கீடு,கல்வி,வேலைவாய்ப்பு,பொருளாதார வளர்ச்சி போன்ற முஸ்லிம் சமூகத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வதற்கான வாக்குறுதிகள் கொடுக்கின்றார்களோ அதே போன்று முஸ்லிம் சமூகத்திற்கு சட்டமன்ற தேர்தலில் போட்டயிடுவதர்க்கு அதிக பிரதிநிதித்வம் கொடுக்கின்றார்களோ அவர்களுக்கு விரைவில் நமது ஆதரவை தெரிவிப்பது  என தீர்மானிக்கப்பட்டது.  வருடந்தோறும் நடத்தி வரும் கோடைகால பாட வகுப்பை இந்த வருடமும் சிறப்பான முறையில் நடத்த வேண்டும் அதற்க்கான பாட நூல்கள் தேவைப்படுவோர் நமது மாநில நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது    இந்நிகழ்ச்சியின் இறுதியாக மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக் ரஷாதி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்                                                                                                  இப்படிக்கு மௌலவி செய்யது முஹம்மது உஸ்மானி மாநில செய்தி தொடர்பாளர் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ்நாடு


பாஜகவின் பீகார் தோல்வி மததுவேஷ கருத்துக்களை பேசிய பாசிச சக்திகளுக்கு மக்கள் கொடுத்திருக்கும் மரண அடியாகும்

பாஜகவின் பீகார் தோல்வி மததுவேஷ கருத்துக்களை  பேசிய பாசிச சக்திகளுக்கு   மக்கள் கொடுத்திருக்கும் மரண அடியாகும் ஆல் இந்தியா இமாம்ஸ் மாநில தலைவர்  மௌலவி A.ஆபிருத்தீன் மன்பஈ அறிக்கை பீகார் சட்ட மன்ற தேர்தலின் முடிவு வரலாற்று சிறப்புமிக்கது நிதிஷ்குமார்,லல்லுபிரசாத்,காங்கிரஸ் மதச்சார்பற்ற  கூட்டணியின் ஒற்றுமைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இதனை வாழ்த்துவதுடன்  தொடர்ந்து பீகார் மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதற்கு திட்டங்கள் தீட்டி நடைமுறை படுத்த நிதிஷ் அரசு முனைப்புடன் செயல்படவேண்டும். இது மததுவேஷ கருத்துக்களை  பேசிய பாசிச சக்திகளுக்கு   மக்கள் கொடுத்திருக்கும் மரண அடியாகும் தோல்விக்கு காரணம் இந்த நாட்டின் பிரதமர் நரேந்திரமோடியும் அமித்ஷாவும் ஆர் எஸ் எஸும்  மற்ற பிஜேபி தலைவர்கள் தேர்தலின்போது பேசிய பேச்சுக்கள் மட்டுமல்ல கடந்த 18 மாத  ஆட்சியில் இந்த நாட்டின் கண்ணியத்தையும் இறையான்மையும் குழிதோண்டி புதைத்து இந்த தேசத்து மக்களை சின்னபின்னமாக்கிய பாசிச பயங்கரவாதிகளின் ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த கோபத்தின் வெளிப்பாடுதான் இந்த தோல்வி ராகுல்காந்தி சொன்னதுபோன்று இந்த நாட்டில் இந்து முஸ்லிம்களை பிளவுபடுத்தி நாட்டை ஆளும் கனவு ஒருபோதும் நடக்காது என்பதற்கு இது சாட்சியாகும் இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டார்கள் . மௌலவி A.R.செய்யது முஹம்மது உஸ்மானி மாநில செய்திதொடர்பாளர் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ்நாடு          


ஐந்து அம்ச கோரிக்கை தர்ணா போராட்டம்

                     


மாநில பொதுக்குழு 2017


முரட்டு மௌனத்தை மோடி எப்போது கலைப்பார்? இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் கேள்வி

பத்திரிக்கைச்செய்தி 09-06-2016   முரட்டு மௌனத்தை மோடி எப்போது கலைப்பார்? இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் கேள்வி ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் மௌலவி ஆபிருத்தீன் மன்பஈ அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கையில் ‪‎விஸ்வ‬ ஹிந்து பரிஷத் தலைவர் ‪ சாத்வி‬பிராச்சி உத்தரகண்ட் மாநிலம், ரூர்க்கி நகரில், நேற்று நடந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்ற, சாத்வி முஸ்லிம்கள் இல்லாத இந்தியாவை விரைவில் உருவாக்குவோம் என்று வாந்திஎடுத்துள்ளார். இந்த பேச்சை இமாம்ஸ் கவுன்சில் வன்மையாக கண்டிக்கின்றது. இந்த பேச்சு இந்திய இறையாண்மைக்கும், ஜனநாயக அமைதிக்கும் எதிரானது. மத்தியில் பிஜேபி ஆட்சி அமைத்த பின்பு பீகார்,டெல்லி,தமிழ்நாடு,கேரளா,மேற்குவங்கம்,புதுச்சேரி போன்ற மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் ஆர்.எஸ்.எஸ்,விஹெஜ்பி,பிஜேபி,போன்ற சங்கப்பரிவாரங்களை மக்கள் சவுக்கடி கொடுத்து துரத்தி பாசிசம் இல்லாத தூய்மையான மாநிலங்களாக மாற்றியது மறந்து விட்டதா?இன்னும் சில நாட்களில் இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸ்,விஹெஜ்பி,பிஜேபி,போன்ற சங்கப்பரிவாரங்கள் இல்லாத இந்தியாவை வெகுவிரைவில் மக்கள் உருவாக்கிவிடும் காலம் வெகுதொலைவில் இல்லை. தொடர்ந்து இது போன்ற விஷமக்கருத்துக்களை பிஜேபியும் அதன் வைகையராக்களும் பேசி வருகின்றார்கள் இதனை கண்டிக்கவேண்டிய மோடியோ தொடர்ந்து முரட்டு மௌனம் காப்பது ஏன்? மோடியின் இரண்டு வருட சாதனையான தொடர் சுற்றுலா நாயகன் தனது பயணத்தில் தீவிரவாதத்தை ஒழிப்போம் என்று பேசுகின்ற மோடி இதுபோன்ற தீவிரவாதத்தை தூண்டும் பேச்சுகளுக்கு தனது மௌனத்தின் மூலம் ஆதரவு தெரிவிப்பது சரியா? விஷமக்கருத்தை பேசிய சாத்விக்கு தகுந்த தண்டனை வழங்கி இந்தியாவின் இறையாண்மையும், ஜனநாயக தேசத்தில் அமைதியையும் நிலைநாட்டிட வேண்டும் இல்லையனில் பிஜேபியும் அதன் வைகையராக்களையும் இந்தியாவை விட்டு மக்கள் சாட்டையடி கொடுத்து துரத்தும் படலம் தொடரும். இவ்வாறு தனது அறிக்கையில் கூறினார். இப்படிக்கு: மௌலவி செய்யது முஹம்மது உஸ்மானி மாநில செய்தி தொடர்பாளர் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ் நாடு


சிறைக்கொட்டடியில் வாடி வதைங்கி கொண்டிருக்கும் அப்பாவி ‪‎சிறைவாசிகளை‬ உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் ஆல் இந்தியா ‪இமாம்ஸ்‬ கவுன்சிலின் மாநில செயற்குழுவில் தீர்மானம்

  ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில செயற்குழு (16-01-2016 ) ம் தேதி மதுரையில் கூடியது இதற்க்கு மாநில தலைவர் மௌலவி ஆபிருத்தீன் மன்பயி அவர்கள் தலைமை தாங்கினார்கள் மாநில பொதுச்செயலாளர் மௌலவி இப்ராஹிம் மிஸ்பாஹி அனைவரையும் வரவேற்று பேசினார்கள் இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள்,மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர் இந்த செயற்குழுவில் கீழ் கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 1. நீண்ட காலமாக விசாரணை என்ற பெயரிலும்,பொய்வழக்கு போடப்பட்டும், தண்டனை காலங்கள் முடிந்தும் சிறைக்கொட்டடியில் வாடி வதைங்கி கொண்டிருக்கும் அப்பாவி சிறைவாசிகளை உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.2. பாபர்மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவிலை கட்டப்போவதாக அவ்வப்போது பிரச்சனைகளை தூண்டிக்கொண்டே இருக்க கூடிய ஆர்.எஸ்.எஸ்.மற்றும் வி.ஹெச்.பி.போன்ற பயங்கரவாத அமைப்புகளை மத்திய அரசு உடனடியாக தடைசெய்யவேண்டும்.3. வருகின்ற 6-02-2016 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரத்தில் ஹுப்புன்நபி ஸல் மாநாடு நடைபெறுகிறது இதில் ஆலிம்கள், மற்றும் பெண்களுக்கான கருத்தரங்குகள், மற்றும் நபி ஸல் அவர்களின் வாழ்க்கை வழிகாட்டுதலை நினைவு படுத்தும் கண்காட்சி,இறுதியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது இதில் அனைத்து உலமாக்களும், அனைத்து மக்களும் பாகுபாடு இல்லாமல் கலந்து கொள்ளவேண்டும். என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இறுதியாக மாநில செயலாளர் மௌலவி அர்ஷத் அஹமது அல்தாஃபி நன்றியுரை நிகழ்த்தினார்கள். மௌலவி செய்யது முஹமது உஸ்மானி மாநில செய்தி தொடர்பாளர் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ் நாடு    


மதுரையில் மாநில செயற்குழு

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின்  மாநில செயற்குழு கடந்த 30-09-2015அன்று மதுரையில் நடைபெற்றது இதில்    மாநில தலைவர் மௌலானா ஆபிருத்தீன் மன்பயி அவர்கள் தலைமை தாங்கினார்ககள் இறைவசனம்  மாநில செய்தி தொடர்பாளர் மௌலானா செய்யது முஹம்மது உஸ்மானி ஓதினார்கள் வரவேற்புரை மாநில பொதுச்செயலாளர் மௌலானா இப்ராஹிம் மிஸ்பாஹி அவர்கள் நிகழத்தினார்கள் இதில் சிறப்பு அழைப்பாளராக தேசிய துணைத்தலைவர் மௌலானா அஷ்ரப் அலி கரமணா பாகவி அவர்களும் தேசிய பொதுச்செயலாளர் மௌலானா ஷாகுல் ஹமீது பாகவி அவர்கள் மேலும் தேசிய விரிவாக்கத்துறை பொறுப்புதாரி மௌலானா இப்ராஹிம் ஹசனி மேலும் தென்மாநிலங்களின் பொறுப்புதாரி பைசல் மௌலவி அவர்களும் கலந்துகொண்டனர் இதில் தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர்களும்  மாவட்டத்தலைவர்களும் கலந்துகொண்டனர்


 • எம்மைப் பற்றி

  சமுதாயத்தின் வழிகாட்டிகளான இமாம்களை ஒன்றிணைத்து சக்தி படுத்துவதின் மூலம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வலிமைப்படுத்து எமது நோக்கமாகும்.

 • தொடர்பு கொள்ள

  எங்களை தொடர்புகொள்ள கீழ்காணும் தொலைபேசி அல்லது மினஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

  (+91) 9894603500

  info@imamscounciltn.com

 • Recent Menu