மதரஸாவை மூட முயற்சி! தேனி காவல்துறையும்,சமூக நலத்துறையும் யாருடைய தூண்டுதலால் வேலை செய்கிறது?

  மதரஸாவை மூட முயற்சி!தேனி காவல்துறையும்,சமூக நலத்துறையும் யாருடைய தூண்டுதலால் வேலை செய்கிறது?இமாம்ஸ் கவுன்சில் மாநில செயலாளர் மௌலவி அபுபக்கர் சித்திக் ரஷாதி கேள்வி?ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில செயலாளர் மௌலவி அபூபக்கர் சித்திக் ரஷாதி அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கையில் தேனீ மாவட்டம் பெரியகுளத்தில் சுமையா பெண்கள் மதரசா என்ற பெயரில் இஸ்லாமிய மார்கத்தை போதிக்கும் பெண்கள் மதரசாவும்,பெண்களின் காப்பகமும் நடைபெற்று வருகின்றது இதில் பல நூறு பெண்கள் படித்து தங்களுடைய வாழ்கையை ஒழுக்கமான முறையில் இஸ்லாமிய மார்கத்தை கடைபிடித்து வருகின்றனர்இந்த மதரசாவின் மீது அவதூறு ஏற்படுத்தும் விதமாகவும்,மக்களுக்கு மத்தியில் பதற்றத்தை உண்டு பண்ணும் விதமாகவும் நேற்றைய தினம் காலையிலிருந்தே காவல்துறை குவிந்து மக்களை பீதியில் ஆழ்த்தினார்கள் எதற்காக இந்த திடீர் நடவடிக்கை? இந்த தேசத்தில் முஸ்லிம்கள் தாங்கள் சார்ந்த மார்கத்தை சொல்லி கொடுக்க கூட உரிமையில்லையா?காவல் துறையும் சமூக நலத்துறையும் மக்களுக்கு சேவை செய்வதற்காக உள்ளதா?அல்லது சமூக அமைதியை சீர்கெடுக்க நினைக்கும் சமூக விரோதிகளுக்கு சேவை செய்யவா? காவல்துறை மற்றும் சமூக நலத்துறையின் நடவடிக்கையில் பலத்த சந்தேகங்கள் எழுகின்றது.இஸ்லாமிய சட்டதிட்டங்களை கற்றுக்கொடுக்கும், ஒழுக்க விழுமியங்களை போதிக்கும் மதரசாக்களை சுதந்திரமான முறையில் நடத்துவதற்கு இடையூறாக இருந்தால் இந்த தேசத்தில் நீதியின்பால் ஒன்றினையக்கூடிய அனைவரயும் அணிதிரட்டி ஜனநாயக அடிப்படையில் நீதி கிடைக்கும் வரை போராடுவோம் . என தனது அறிக்கையில் கூறினார்.மௌலவி செய்யது முஹம்மது உஸ்மானி மாநில செய்தி தொடர்பாளர் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ் நாடு


பள்ளிகூடங்கள்,கல்லூரிகள்,வணக்கஸ்தலங்கள் மதுக்கடைகளை முதற்கட்டமாக அகற்றுங்கள்! இமாம்ஸ் கவுன்சில் மாநில பொதுச்செயலாளர் அறிக்கை

                                                                  பத்திரிக்கைச்செய்தி                      24-05-2016      ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில பொதுச்செயலாளர் மௌலவி முஹம்மது இப்ராஹிம் மிஸ்பாஹி அவர்கள்   வெளியிட்ட அறிக்கையில்    விவசாயக்கடன்தள்ளுபடி, டாஸ்மாக்நேரம்குறைப்பு, 500 சில்லறைமதுக்கடைகள்மூடல், மின்கட்டணசலுகைகள்உள்ளிட்டஉத்தரவுகள்அடங்கிய5 கோப்புகளில்முதல்வர்ஜெயலலிதாகையெழுத்திட்டுள்ளார்கள். இந்த முதல் உத்தரவை ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் வரவேற்கின்றது மதுவினால் மக்கள் படும் அவதி என்பது வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒன்று. பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வருவதற்கும்,பல குழந்தைகள் அனாதைகளாக ஆனதற்கும் மது முக்கிய காரணமாக இருந்து வருகின்றது இந்த தருணத்தில் முதல்வரின் உத்தரவை வரவேற்கின்றோம்,பாராட்டுகின்றோம்.தமிழகத்தில் மொத்தம் 6500க்கும் அதிகாமான மதுக்கடைகள் உள்ளன இவையனைத்தையும் விரைவாக மூடுவதற்கும்,   பள்ளிகூடங்கள்,கல்லூரிகள்,வணக்கஸ்தலங்கள் போன்ற பொது ஸ்தாபனத்திற்கு அருகிலுள்ள, மக்கள் அதிகாமாக கூடும் இடங்களில் அமைந்துள்ள  மதுக்கடைகளை முதற்கட்டமாக அகற்றுவதற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். தொழிலாளர்நலத்துறைஅமைச்சராகநிலோபர்கஃபிலை நியமனம் செய்திருப்பதின் மூலம் சிறுபான்மையினரை சார்ந்தவருக்கு அமைச்சரவையில் இடமளித்திருப்பதை இமாம்ஸ் கவுன்சில் வரவேற்கின்றது. வக்ஃப் வாரியம் சரியான பராமரிப்பும்,முறையான கவனிப்பும் இல்லாமல் வக்ஃப் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப் பட்டும்,வீனடிக்கப்பட்டும் வருகின்றது. தமிழக அரசு உடனடியாக வக்ஃப் வாரியத்தை பாதுகாக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அதே போன்று   உலமாக்கள் ஓய்வூதியம் 15௦௦ ரூபாய்  வழங்குவதை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென்று இமாம்ஸ் கவுன்சில் கேட்டுக்கொள்கின்றது. இவ்வாறு   ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில பொதுச்செயலாளர் மௌலவி முஹம்மது இப்ராஹிம் மிஸ்பாஹி அவர்கள் குறிப்பிட்டார்கள்.                                              இப்படிக்கு:                                       மௌலவி செய்யது முஹம்மது உஸ்மானி மாநில செய்தி தொடர்பாளர்   ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ் நாடு


மாற்றம் காண மாற்றி வாக்களிப்போம்! ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில தலைவர் மௌலவி ஆபிருத்தீன் மன்பஈ அறிக்கை

  கண்ணிய மிகு காயிதேமில்லத் அவர்களுக்கு பிறகு நீண்ட நெடும் காலமாக தமிழக முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் வெற்றிடம் இருந்தே வருகின்றது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களை கருவேப்பில்லை போன்றுதான் பயன்படுத்தி வருகின்றது. தேர்தல் நேரத்தில் மட்டும்தான் தமிழகத்தில் முஸ்லிம்கள் இருப்பதே அவர்களின் கண்களுக்கு புலப்படுகின்றது. அதுவரையிலும் முஸ்லிம்களுக்கு ஏற்படும் துன்பகளுக்கு எந்த ஒரு பதிலையும் கொடுப்பதில்லை. அவர்களின் வளர்ச்சி குறித்தும் எந்த ஒரு ஆரோக்கியமான செயல்திட்டங்களையும் செய்ததில்லை. பெயர் சொல்லும் அளவிற்கு முஸ்லிம் கட்சிகள் இருந்தும் எல்லா நிலைகளிலும் திராவிட கட்சிகளை சார்ந்தே இருக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தை தங்களுக்கு தாங்களே விதித்து கொண்டார்கள் அதன் காரணமாகவே நீண்ட காலங்களாக தங்களின் சுய சின்னத்தில் போட்டியிடக் கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்கள் இன்னும் கூட அந்த நிலைகள் தொடர்வது வேதனையளிக்கின்றது. ஒருங்கிணைந்து முஸ்லிம்கள் மட்டும் தேர்தலை தனித்து சந்தித்தால் நிச்சியமாக இன்று இருக்கும் அரசியல் சூழ்நிலையில் 50க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றியும் மற்றுமுள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றியை தீர்மானிக்கும் மக்களாக நாம்தான் இருப்போம். இந்த சூழல்களுக்கு எந்த கட்சிகளும் முன்வராத நிலையில் தேசிய அளவில் அரசியல் களத்தில் மிகப்பெரும் மாற்றங்களும் புரட்சிகளும் செய்து வரும் எஸ் டி பி ஐ கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 33 தொகுதிகளில் தனித்து களம் காணுவது நீண்ட காலமாக ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியாகவே நாம் பார்க்கின்றோம் தேர்தலில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவது யதார்த்தமானது. இந்த தேர்தலில் முஸ்லிம்களின் தனிப்பெரும்பான்மையை நிரூபிப்பது காலத்தின் கட்டாயமாகும் இந்த வாய்ப்பை தவற விட்டுவிடுவோமானால் இன்னும் 5 ஆண்டுகள் காத்திருக்கும் நிலை ஏற்படும். தமிழக தேர்தல் வரலாற்றில் மூன்று ஆலிம்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டது இந்த தேர்தலில்தான். எஸ் டி பி ஐ கட்சியின் இந்த ஆரோக்கியமான அறிவிப்பு அனைத்து மக்களிடத்திலும் நல்ல நன்மதிப்பை பெற்றுள்ளது. இந்திய சுதந்திர போரட்ட வரலாற்றில் முஸ்லிம்களின் பங்களிப்பு யாராலும் மறக்க முடியாது மறுக்கவும் முடியாது அத்தகைய முஸ்லிம்களை வழிநடத்திச் சென்ற ஆலிம்களின் தியாக வரலாற்றையும் யாரும் எளிதில் மறந்து விட முடியாது ஆலிம்கள் சமூக விடுதலைக்கும்,அமைதிக்கும்,முன்னேற்றத்திற்கும் தங்களை முழுமையாக அர்பணிக்க எல்லா நேரத்திலும் தயார் நிலையில் உள்ளவர்கள் என்பதற்கு எத்தனையோ நிகழ்வுள் சாட்சியாக உள்ளது.அது போன்றுதான் தற்போது எஸ் டி பி ஐ கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள மூன்று ஆலிம்களும் தாங்கள் மதரசாக்களில் ஓதும் காலந்தொட்டே சமூக பணிகளில் தங்களை ஈடுபடுத்தி கொண்டவர்கள் ஏறத்தாள 20 ஆண்டுகளாக சமூக எழுச்சிக்கும்,மாற்றத்திற்குமான பல போராட்டங்களை முன்னெடுத்து சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அது மட்டுமல்ல சமூகம் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன?அவலங்கள் என்ன?என்பதையும் அதற்கான சரியான தீர்வு என்ன என்பதையும் தெளிவாக தங்களுடைய 20 ஆண்டு போராட்ட பயணத்தின் மூலம் அறிந்து வைத்துள்ளார்கள். ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலில் அங்கம் வகிக்கும் ஆலிம்களும் ஏனைய அனைத்து ஆலிம் பெருமக்களும் இந்த மூன்று ஆலிம்களையும், இன்னும் எஸ் டி பி ஐ கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்யவைப்பதற்கு முழு வீச்சில் பிரச்சாரத்தில் ஈடுபடவேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். இப்படிக்கு மௌலவி ஆபிருத்தீன் மன்பஈ மாநில தலைவர் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ்நாடு


நாம் சுதந்திரத்தின்‬ பங்காளர்கள். ‎குடியரசின்‬பாதுகாவலர்களாகவும் திகழ வேண்டும்.ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநிலத்தலைவர்

  நாம்  சுதந்திரத்தின்‬ பங்காளர்கள்.  ‎குடியரசின்‬பாதுகாவலர்களாகவும் திகழ வேண்டும்.ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநிலத்தலைவர் மௌலவி ஆபிருத்தீன் மன்பஈ ஹலரத் அவர்கள் இன்று வெளியிட்ட குடியரசு தின அறிக்கை.. டாக்டர் அம்பேத்கர் தலைமையில் சட்ட மேதைகள் பலர் சேர்ந்து அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கினார்கள். இந்த அரசியலமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. அன்றைய தினத்தைக் குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம். அரசியல் அமைப்பு சட்டங்கள் பணக்காரர்களுக்கும், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் மட்டும் சேவை செய்ய பயன்படக் கூடாது. தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட பின்தங்கிய சிறுபான்மை மக்களின் வாழ்க்கை தரம் மேம்படாமல் உரிமைகள் முழுமையாக வழங்கப்படாமல் உண்மையான குடியரசு ஏற்படாது. இந்த நாட்டின் விடுதலைக்காக போராடிய லட்சோபலட்ச போராளிகளின் விலை மதிக்க முடியாத உயிர்களும்,அந்நிய ஆக்கிரமிப்பு சக்திகளிடமிருந்து இந்த தேசத்தை பாதுகாக்க வேண்டும் என்று செய்த தியாகங்களும் இந்திய தேசத்தில் சுதந்திரமான,மதசார்பற்ற,ஜனநாயகமான, நல்லாட்சி அமைய வேண்டும் அதன் மூலம் எமது தேசத்து மக்கள் அமைதியையும், நிம்மதியும் பெற வேண்டும் என்ற உன்னத நோக்கமே அன்றி வேறில்லை. அரசியல் அமைப்பு சட்டமே நமது உரிமைகளை நிலைநாட்டும் அச்சாணியாக இருக்கிறது.குடிமக்களுக்கான உரிமைகளை வழங்கும் அமைப்பு சட்டத்தை வளைப்பதற்கும் சிறுபான்மையினரின் உரிமைகளை நசுக்குவதற்கும் பாசிச சக்திகள் தொடர்ந்து வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் முயற்சித்து வருகின்றன. அவை முழுமையாக முறியடிக்கப்பட்டு குடியரசின் உண்மையான தத்துவம் நிலைநாட்டப்பட நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும். நாம் சுதந்திரத்தின் பங்காளர்கள். குடியரசின் பாதுகாவலர்களாகவும் திகழ வேண்டும். ஏனெனில் இது நமது தேசம்! புரட்சி கவிஞர் அல்லாமா இக்பாலின் கவிதையை நினைவு கூறுவோம். சாரே ஜஹான் ஸே அச்சா .... ஹிந்துஸ்தான் ஹமாரா.... மௌலவி செய்யது முஹம்மது உஸ்மானி  மாநில செய்தி தொடர்பாளர் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ் நாடு


‪மழையால்‬ பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை தமிழக அரசு போர்கால அடிப்பையில் வழங்கவேண்டும்

பத்திரிகைச்செய்தி‪மழையால்‬ பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை தமிழக அரசுபோர்கால அடிப்பையில் வழங்கவேண்டும் ஆல் இந்தியா ‪இமாம்ஸ்‬ மாநில தலைவர் மௌலவி A.‪ஆபிருத்தீன்‬ மன்பஈ அறிக்கை தமிழகத்தில் கடந்த 28-ம் தேதி முதல் பெய்து வரும்‪ ‎கனமழையின்‬ காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளுவர்,கடலூர்,விழுப்புரம் மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக இருநூறுக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர் மேலும் அதிகமான வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர் இன்னும் மழை நீடிப்பதாக வானிலை அறிக்கை சொல்கிறது. தமிழக அரசால் தற்பொழுது செய்யப்பட்டு வரும் நிவாரண உதவிகள் திருப்திகரமாக இல்லை எனவே போர்கால அடிப்படையில் நிவாரணப்பணிகளை மேற்கொள்ளவேண்டும் மழையின் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் பத்து லட்சம் வழங்கவேண்டும். . மழைக்காலத்தில் அதிகமாகத் தேங்கியுள்ள மழைநீர்-கழிவுநீராலும், குடிதண்ணீர் மாசுபட்டிருந்தாலும் பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுக்கிருமிகள் பெருகுவது வழக்கம். இப்படிப் பரவலாகும் நோய்களை கண்டறிய சிறப்பு மருத்துவ முகாம்கள் பரவலாக அமைக்கப்படவேண்டும்.என மாநில அரசை கேட்டுக்கொள்கிறேன். அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் செய்தியாளர் கேள்விக்குப் பதிலளித்த அசாம் மாநில ஆளுநர் பி.பி.ஆச்சார்யா இந்தியா இந்துக்களுகே என்று கூறியுள்ளார். நமது தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்கள் நமது தேசத்தை இவ்வாறு வர்ணித்தார்கள் ஒரு தோட்டத்தில் மலர்ந்த அழகான மலர்கள் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் கூறியபோது பன்முகத்தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை போன்றவையே இந்தியாவின் உயிர்நாடியான பண்புகள் என குறிப்பிட்டார்கள் இந்தியாவின் உயிர்நாடியான பண்பை உரசிப்பார்க்கும் விதத்தில் ஒருமாநிலத்தின் கவர்னரே இவ்வாறு பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது இத்தகைய பேச்சுகள் நாட்டின் அமைதியை சீரழிக்கும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்கள் மௌலவி A.R.செய்யது முஹம்மது உஸ்மானி மாநில செய்திதொடர்பாளர் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ்நாடு 


பள்ளிவாசளையும்,இமாமையும் தாக்கிய ‪‎இந்துமுன்னணி‬பயங்கரவாதிகளை கைது செய்

பத்திரிக்கைச் செய்தி 16-08-2016பாண்டிச்சேரி ‪உருளையன்‬ பேட்டை பள்ளிவாசளையும்,இமாமையும் தாக்கிய ‪‎இந்துமுன்னணி‬பயங்கரவாதிகளை கைது செய்து கடினமான தண்டனை வழங்கு! இமாம்ஸ் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது தய்யூப் பய்யாஜி அறிக்கை! ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினர் மௌலவி முஹம்மது தய்யூப் பய்யாஜி அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கையில் பாண்டிச்சேரி உருளையன் பேட்டை பள்ளிவாசலில் இமாமாக பணிபுரிந்து வரும் மௌலவி நூருல் ஆமீன் பத்ரி அவர்களை 14-08-2016 அன்று இந்துமுன்னனியைச் சார்ந்த பயங்கரவாதிகள் கடிமான முறையில் தாக்கியுள்ளார்கள் மேலும் முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான பள்ளிவாசலையும் அடித்து நொறுக்கி உள்ளார்கள் தற்போது நூருல் ஆமீன் பத்ரி அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ‪#‎புதுவை‬ அரசு உடனடியாக பள்ளிவாசலையும்,இமாமையும் தாக்கிய இந்து முன்னணி பயங்கரவாதிகளை கைது செய்து கடினாமான தண்டனை வழங்கி சமூக அமைதியை ஏற்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு தனது அறிக்கையில் கூறினார்கள். மௌலவி செய்யது முஹம்மது உஸ்மானி மாநில செய்தி தொடர்பாளர் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ் நாடு


மக்களின் நலனின் மீது முழுமையான அக்கறை கொண்டு ஆட்சி அமைத்திட முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் அறிக்கை

    ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் மௌலவி ஆபிருத்தீன் மன்பஈ அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கையில்  1984ம்ஆண்டுக்குபிறகுதொடர்ச்சியாக2வதுமுறையாக ஆட்சி அமைக்கும் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு   வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்    தமிழக  மக்கள்  அதிமுக அரசை மீண்டும் தேர்ந்தேடுத்திருப்பதின் மூலம்   இந்த அரசின் மீது மக்கள்  வைத்திருக்கும் ஆழமான  நம்பிக்கை வெளிப்படுகிறது எனவே   தாங்கள் அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவதுடன்  குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தின்    நீண்ட நாள்   கோரிக்கையான சிறைவாசிகள் விடுதலை,முஸ்லிம்களுக்கு 7%இடஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி     அனைவருக்கும் சமநீதி,மற்றும் சமஉரிமை,முழுமையான பாதுகாப்பு வழங்கி தமிழக மக்கள் தங்கள் மீது வைத்துள்ள ஆழமான நம்பிக்கையை நிறைவேற்றி   மக்களின் நலனின் மீது முழுமையான அக்கறை கொண்டு  ஆட்சி அமைத்திட  வேண்டுமென்றும் வாழ்த்துகின்றோம்.   அதே போன்று வெற்றி பெற்ற  அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களை  வாழ்த்துவதோடு முஸ்லிம்   சட்டமன்றஉறுப்பினர்களாக இருக்கும் சகோதரர் தமீம்அன்சாரி,சகோதரர் மைதீன்கான் ,சகோதரர் அபூபக்கர், சகோதரர் மஸ்தான்  சகோதரி  நிலோஃபர்ஆகியோரையும் வாழ்த்தி  அன்பு கோரிக்கை ஒன்றை சமர்பிக்கின்றோம்  கட்சிகள் வேறு வேறு இருந்தாலும் முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்கு ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும்  இஸ்லாமிய சமூகத்தை  அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைய செய்ய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும்  கேட்டுக்கொள்கின்றோம். என்று தனது அறிக்கையில் மாநில தலைவர் மௌலவி ஆபிருத்தீன் மன்பஈ அவர்கள் கூறினார்கள்.                                                                   இப்படிக்கு:                                                                                மௌலவி செய்யது முஹம்மது உஸ்மானி                                                    மாநில செய்தி தொடர்பாளர்                                               ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்                                                                        தமிழ் நாடு


எவரையும் எங்கள் மாநபியோடு ஒப்பிட்டு பேசுவதை ஒருபொழுதும் அனுமதிக்க முடியாது.

    எவரையும் எங்கள் மாநபியோடு ஒப்பிட்டு பேசுவதை ஒருபொழுதும் அனுமதிக்க முடியாது. ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில தலைவர் மௌலவி ஆபிருத்தீன் மன்பஈ ஹலரத்அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை சேலத்தில் நடந்த கூட்டத்தில் திமுக பேச்சாளர் நாகை நாகராஜன் அவர்கள் பேசும் போது முஸ்லிம்களின் கொள்கையோடு மோதக்கூடிய பேச்சை வரம்புமீறி பேசியுள்ளார் இந்த பேச்சு வன்மையாக கண்டிக்க தகுந்தது மிகவும் கண்டனத்திற்குரியது இத்தகைய வாரத்தை எங்களது கொள்கைக்கு எதிரானது எலும்பில்லாத நாவுதானே எதுவேண்டுமானாலும் சொல்லலாம் மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் அமைதியாக இருந்துவிடுவார்கள் என்று எண்ணினால் அது மாபெரும் தவறு. எவரையும் எங்கள் மாநபியோடு ஒப்பிட்டு பேசுவதை ஒருபொழுதும் அனுமதிக்க முடியாது . திமுக நாகை நாகராஜன் அவர்களை கட்சியின் பொறுப்புகள்,மற்றும் அடிமட்ட உறுப்பினர் என்ற நிலையிலிருந்தும் அவரை நீக்கிவிட வேண்டும்.தமிழக அரசு திமுக பேச்சாளர் நாகை நாகராஜன் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் . பாரத் மாதா விவகாரத்தில் "பாரத் மாதா கீ ஜே' என்று கோஷமிட மறுப்பவர்களின் குடியுரிமை மற்றும் வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று சிவசேனை வலியுறுத்தியுள்ளது. பாரத் மாதா கி ஜெய்’ சொல்லாதவர்களுக்கு இந்நாட்டில் தங்க உரிமை கிடையாது என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் கூறியுள்ளார். யோகா குரு? பாபா ராம்தேவ் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கையில், இந்திய அரசியல் சாசனம் மட்டும் தடுக்காவிட்டால் பாரத் மாதா கீ ஜே என்று முழக்கமிடாதவர்களின் தலைகளை வெட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.தொடர்ந்து தேசத்தில் கலவரத்தை உண்டு பண்ணும் விதமாக பல விஷமக்கருத்துக்களை பரப்பி வரும் தேச விரோதிகளை மத்திய அரசு உடனடியாக கைது செய்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும். பதான்கோட் தாக்குதல் தொடர்பான விசாரணையில் தன்சில் அஹமத் ஈடுபட்டு வந்த தேசிய புலனாய்வுத்துறை அதிகாரி தன்சில் அஹமத் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒரு திருமணத்திற்கு சென்று திரும்பும் போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாக சுடப்பட்டு கொல்லப்பட்டார். இந்த தாக்குதிலில் பலத்த சந்தேகம் வலுக்கின்றது இதில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து அதன் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பதை உலகிற்க்கிற்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என தனது அறிக்கையில் குறிப்பிட்டார் இப்படிக்குமௌலவி செய்யது முஹம்மது உஸ்மானிமாநில செய்தி தொடர்பாளர்ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ்நாடு


இது தமிழகம் இங்கு ‪பாசிசத்திற்கும்‬ வேலையில்லை பயங்கரவாதத்திற்கும் இடமில்லை

 ‎பத்திரிகைச்செய்தி‬ இது தமிழகம் இங்கு ‪பாசிசத்திற்கும்‬ வேலையில்லை பயங்கரவாதத்திற்கும் இடமில்லை ஆல் இந்தியா ‪‎இமாம்ஸ்‬ மாநில தலைவர் மௌலவி A.ஆபிருத்தீன் மன்பஈ அறிக்கை அப்பாவி மக்களையும் பிஞ்சுக்குழந்தைகளையும் ஈவுஇறக்கமின்றி கொலை செய்து உலகின் மிகப்பெரும் ஆபத்தாக வளர்ந்து வரும் தீவரவாத அமைப்பான ‪#‎ஐஎஸ்‬ தீவிரவாதிகள் தங்களை இஸ்லாமிய அமைப்பாகவும் இக்கொடூரச் செயல் புனிதபோர் என்று பெயர் வைத்து செயல்படுவதை உஊடகங்களின் வழியாக நாம் தொடர்ந்து கண்டு வருகிறோம் உண்மையில் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கும் இஸ்லாத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை ஆனால் இதன் பின்னணியில் இஸ்ரேலும்‬ ,அமெரிக்கவும் உள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகி வருகிறது இத்தகைய கொடூர சிந்தனை கொண்ட தீவிரவாத அமைப்பு இந்தியாவில் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் யாரும் இல்லை என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார் இப்படி இருக்கும்போது இலகனேசன் அவர்கள் தமிழகத்தில் 150 இளைஞர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இருப்பதாக கூறியுள்ளார் இந்த தகவலை இவருக்கு கொடுத்தது யார்? எந்த அடிப்படையில் இந்த செய்தியை கூறினார்? மத்திய மாநில அரசுகளுக்கு கூட தெரியாத ஒரு செய்தி இவருக்கு எப்படி தெரிந்தது? இவருக்கும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கும் என்ன தொடர்பு?என்ற பல கேள்விகள் எழும்புகின்றது இப்படி இல்லாத ஒரு செய்தியை சொல்வதின் மூலம் அமைதிபூங்கவான தமிழகத்தில் என்ன நடக்கவேண்டும் என இலகனேசன் எதிர்பார்க்கிறார்? தேசவிரோதிகள் ஒன்றை விளங்கிக்கொள்ளவேண்டும் இது தமிழகம் இங்கு பாசிசத்திற்கும் வேலையில்லை பயங்கரவாதத்திற்கும் இங்கு இடமில்லை. தமிழக அரசு இதுபோன்ற தவறான செய்தியை பரப்பி மக்களை அச்சபடுத்தும் நிலையை உருவாக்கிய இலகனேசனை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் அந்நிய ஆங்கிலேர்களை கடுமையாக எதிர்த்து போராடிய மாவீரன்   திப்பு ‬ சுல்தான் ரஹ் அவர்கள் இந்த தேசத்திற்கு செய்த தியாகங்கள் கொஞ்சமல்ல பல்வேறுப்பட்ட நலத்திட்டங்களை தம் தேசத்து மக்களுக்கு அற்பணம் செய்துள்ளார் இததகைய மாவீரனின் வீர தீர செயல்களை மக்களுக்கு எடுத்து சொல்வதற்கு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது அதனடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் ‪#‎தமிழக‬ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்ட நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்திருப்பது மிகவும் கண்டிக்கத்தகதுதமிழகஅரசின் இந்தபாரபட்சமான போக்கு மிகப்பெரும் ஆபத்தானது இத்தகைய தவறான வழிமுறையை மாற்றி கொள்ளவேண்டும் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டார்கள் மௌலவி A.R.செய்யது முஹம்மது உஸ்மானிமாநில செய்தி தொடர்பாளர் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ்நாடு


இக்லாக் அடித்துக்கொலை மாநில தலைவர் கண்டனம்

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் மௌலான ஆபிருத்தீன் மன்பஈ ஹலரத் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கைநமது தேசத்தை பிஜேபி ஆட்சி செய்ய ஆரம்பித்ததிலிருந்து தொடர்ச்சியாக கலவரங்களும் கலவரத்தை தூண்டும் விதமான சர்ச்சைக்குரிய பேச்சுக்களையும் செய்து வருகின்றது அதன் ஒரு பகுதியாக டெல்லியில் இருந்து சுமார் 56 கி.மீ தொலைவில் உள்ள பிசோதா கிராமம், உபி மாநிலம் தாத்ரி தாலுக்காவில் கடந்த பக்ரீத் பண்டிகைக்காக பசு மாடு பலி கொடுத்து அதன் இறைச்சியை உண்டதாக கிளம்பிய வதந்தியில், 52 வயது இக்லாக் அடித்துக் கொல்லப்பட்டார். மேலும் அவரது குடும்பத்தினரும் அப்பகுதி கிராமத்தினரால் கடுமையாக தாக்கப்பட்டனர்.இக்கொடூரமான மதவெறி படுகொலையை கண்டித்து நாட்டில் உள்ள அத்தனை மக்களும் இந்துக்கள், கிறிஸ்துவர்கள்,முஸ்லிம்கள் என அனைத்து தரப்பு மக்களும் தங்களுடைய கடினமான எதிர்ப்புகளை பதிவு செய்தார்கள் இதற்க்கு பதில் கொடுக்கின்றோம் என்ற பெயரில் நாட்டின் அமைதியை சீரழிக்கும் விதமாக பிஜேபி எம்பிகள் மற்றும் இந்த்துவா தலைவர்கள் கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள். மாட்டிறைச்சி சாப்பிடுவர்களுக்கு அக்லாக்கின் கதி தான் வரும் என விஷ்வ ஹிந்து பரீசத்தின் சர்ச்சைக்குரிய தலைவர் சாத்வி பிராச்சி கூறியுள்ளார் எங்கள் தாயை (பசு மாட்டை) யாராவது கொல்ல நினைத்தால் நாங்கள் வாயை மூடிக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். ஒன்று நாங்கள் அவர்களைக் கொலை செய்வோம் அல்லது உயிரைக் கொடுத்தாவது எங்கள் தாயைக் காப்பாற்றுவோம்.” என்று கூறியுள்ளார் சாக்‌ஷி மகராஜ்.மாட்டு இறைச்சி சாப்பிடுபவர்கள் மனித மலத்தை திங்கட்டும் என இந்துமுன்னணியின் நிறுவனர் ராமகோபாலன் கூறியுள்ளார்.பீகார் மாநில பிஜேபி மாநில தலைவர் கூறுகின்றார் இந்த தேர்தல் பீகாரில் மாட்டுக்கறி சாப்பிடுபவர்களுக்கும் மாட்டை தெய்வமாக வணங்குபவர்களுக்கும் உண்டானது என்று மதவெறியை தூண்டும் விதத்தில் பேசியுள்ளார்.ஜம்மு காஷ்மீரில் லங்கேட் தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏவான ஷேக் அப்துல் ரஷீத் எம்.எல்.ஏ விடுதியில் மாட்டிறைச்சியால் செய்யப்பட்ட உணவுகளை வைத்து விருந்து நடத்தியுள்ளார் இதையடுத்து சட்டபேரவைக்கு வந்த சுயேட்சை எம்.எல்.ஏ மீது பாரதீய ஜனதா எம்.எல்.ஏக்கள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள் இது போன்று ஏராளமான செய்திகள் மக்களை நிம்மதி இழக்கச்செய்துள்ளது ஆர்எஸ்எஸ் வகையறாக்கள் இன்று என்ன பிரச்சனை செய்யப்போகின்றார்களோ என்று ஒவ்வொரு நாளும் மக்கள் பீதி அடைந்தே காணப்படுகின்றார்கள் இத்துனை பிரச்சனைகள் நடைபெற்று வருகிறது இதை பற்றி நாட்டின் பிரதமர் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பது மோடியின் கையாலாகத்தனத்தையும், இதுபோன்ற மதவெறி ஆட்டங்களுக்கு ஆதரவையும்தான் வெளிப்படுத்துகிறார். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் மேலும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவின் சார்பாக உண்பது எனது உரிமை பேசுவது எனது உரிமை என்ற தொடர் பிரச்சாரத்தை வரவேற்கிறோம் நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நாம் தான் முடிவு வேண்டும் வேறு எவரும் அதில் தலையிடமுடியாது அதற்கு அனுமத்திக்கவும் முடியாது அது போன்றுதான் பேசும் உரிமையும் இதிலும் யாரும் தலையிடமுடியாது டில்லியின் மிக அருகில் இருக்கும் க்ரேட்டர் நொய்டாவில் தன்கூர் என்னும் கிராமத்தில் பட்டப்பகலில் பொது இடத்தில் காவல்துறையினரே இரு தலித் பெண்களையும் அவர்களது குடும்பத்தையும் நிர்வாணப்படுத்தி அடித்து துன்புறுத்தியுள்ளது வன்மையாக கண்டனத்திற்குரியது அம்மாநில அரசு உடனயே தலயிட்டு காவல்துறையினர்கள் மீது கடினமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் சார்பாக 10 வருகிற அக்டோபர் முதல் 30 வரை உறுப்பினர் சேர்க்கை நடத்தப்படுகிறது இந்த உறுப்பினர்கள் சேர்க்கையில் ஆலிம் பெருமக்களும் புதிதாக ஆலிம் பட்டம் பெற்றவர்களும் தங்களை இணைத்துக் கொண்டு சமூக சேவையாற்ற அன்புடன் அழைக்கின்றோம்.இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்கள்.மௌலானா செய்யது முஹம்மதுமாநில செய்தி தொடர்பாளர்ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் ‪


 • எம்மைப் பற்றி

  சமுதாயத்தின் வழிகாட்டிகளான இமாம்களை ஒன்றிணைத்து சக்தி படுத்துவதின் மூலம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வலிமைப்படுத்து எமது நோக்கமாகும்.

 • தொடர்பு கொள்ள

  எங்களை தொடர்புகொள்ள கீழ்காணும் தொலைபேசி அல்லது மினஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

  (+91) 9894603500

  info@imamscounciltn.com

 • Recent Menu