இந்திய நாட்டின் விடுதலைக்கு போராடிய சுதந்திரப் போரட்டத்தியாகி அமீர் ஹம்சா அவர்கள்  மரணமடைந்த செய்தி நமக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது சுதந்திர போராட்டத்தில் பிரிட்டீஷ் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட நேதாஜியின் ‘இளமையின் கனவு’, ‘நேர்வழி’ ஆகிய இரண்டு புத்தகங்களைப் படித்து தேசிய உணர்வால் தூண்டப்பட்டு தனது 21 வயதில் இந்திய தேசிய ராணுவத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர்,‘இந்திய சுதந்திர லீக்’ அமைப்பில் தன்னை முதல் நபராகப் பதிவு செய்தார். நேதாஜி புரட்சிப் படைக்குத் தலைமை ஏற்ற போது அதிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர்தான்    எம்.கே.எம்.அமீர் ஹம்சா அவர்கள் நேதாஜியின் படையில் இணைந்தது முதல் ஆங்கிலேர்களுக்கு எதிராக பல போராட்டங்களில் பங்கெடுத்து தன்னுடைய இளமையை தேச விடுதலைக்கு தியாகம் செய்தார்கள் இதுமட்டும்மல்ல தேச விடுதலைக்கு பல லட்சங்களை அன்றைய காலத்திலே அள்ளிக்கொடுத்தார்கள் இதன் காரணத்தினால் கடேசி நேரத்தில் தனது மருத்துவச் செலவுக்கும் கூட பொருளாதாரம் இல்லாமல் இருந்ததை மறுக்க முடியாது வறுமையில் இருக்கும் போது அவருக்கு உதவிட இந்த அரசு முன்வரவில்லை என்பதிலிருந்து  இந்திய விடுதலைக்கு போராடிய போராளிகளுக்கு இந்த அரசு  கொடுக்கும்  மதிப்பை புரிந்து கொள்ள முடிகின்றது இங்கு அவருக்கு கிடைக்க வேண்டிய மதிப்பு கிடைக்கவில்லையானாலும் வல்ல இறைவனிடம் அநீதத்திற்கு எதிராக போராடியதிற்கு அல்லாஹ் சுவர்க்கத்தை நிச்சியம் கொடுப்பான். அல்லாஹ் அவருடைய தியாகங்களை ஏற்றுக்கொள்வானாக அவர்களுடைய கப்ரை விசலமாக்குவனாக,சுவர்க்கத்தில் உயர்ந்த சுவனமான ஜன்னத்துல் பிர்தவ்சை கொடுப்பானாக அவர்களை இழந்து நிற்கும் அவர்களின் குடும்பத்தார்களுக்கு அழகிய பொறுமையை கொடுப்பானாக